Untitled Document
November 2, 2026 [GMT]
திலீபன் நினைவாலயத்தை அகற்றுமாறு உத்தரவிட்ட பொலிஸ்- கஜேந்திரன் கண்டனம்!
[Sunday 2026-11-01 16:00]


யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

  

இந்த நிலையில் குறித்த விடயத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவிடத்தில் எஞ்சியிருக்கின்ற பகுதிகளை இடித்து அகற்றுமாறு யாழ். மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு அறிவித்திருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது.

அந்த இடத்திலே 1988ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாநகர சபையின் அப்போதைய ஆணையாளரின் தலைமையில் மாநகர சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நிதிப்பங்களிப்பில் அந்த தூபியானது சட்டபூர்வமாக அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த தூபி சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் 2003 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டதையடுத்து மீளவும் அந்த தூபி அமைக்கப்பட்டது.

தூபி அமைக்கின்ற செயற்குழுவில் முன்னாள் ஆணையாளரான சி.வி.கே சிவஞானம் ஐயாவும் இருந்ததாகவும் பல தடவைகள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருக்கின்றார்.

இவ்வாறிருக்கின்ற போது சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட ஒரு தூபியை இடித்து அகற்றுமாறு யாழ். மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் உத்தரவிட்டிருப்பது பொது மக்களுடைய அடிப்படை நினைவேந்தல் உரிமையை மீறுகின்ற செயற்பாடாகும்.

இந்த செயற்பாட்டை நாங்கள் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் இனவாதத்தை பிரதி காவல்துறைமா அதிபருடைய அறிவித்தல் வெளிப்படுத்துகின்றது.

2003 ஆம் ஆண்டு இந்த தூபி மீளவும் அமைக்கப்படுகின்ற போது யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டிலே இருந்தது. காவல்துறையினர் இங்கே நிர்வாகத்திலே ஈடுபட்டிருந்தார்கள், அத்துடன் சமாதான உடன்படிக்கையின் பிரகாரம் தமிழீழ விடுதலைப்புலிகள் இங்கே அரசியல் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். சிவில் அமைப்புக்களினாலே தான் இந்த தூபி மீளவும் அமைக்கின்ற செயற்பாடு மேற்கொள்ளப்பட்ட போது சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு இங்கே கடமையில் ஈடுபட்டிருந்தது.

அந்த தூபி அமைக்கப்பட்ட பிற்பாடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காவல்துறையினரிடமோ, சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரிடமோ குறித்த தூபி சட்டவிரோதமானாதோ அல்லது ஆத்திரமூட்டுவதாக இருக்கின்றதோ என்பது குறித்து எந்த முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை.

அந்த தூபி 2006ஆம் ஆண்டு போர் ஆரம்பித்த பிற்பாடு சட்டவிரோதமான முறையில் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் அந்த எஞ்சியிருக்கின்ற இடத்திலே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் நிதியொதுக்கீட்டின் கீழ் 2016ஆம் ஆண்டு தூபி இருக்கின்ற இடத்தைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த வேலி அமைக்கப்படுவதற்கு வடக்கு மாகாண சபையிடமும் அனுமதி பெறப்பட்டிருக்கின்றது.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் அந்த வேலைத்திட்டம் நடைபெற்றிருக்கின்றதென்றால் ஒரு சட்டவிரோதமான இடத்திற்கு நிதியொதுக்கீடு செய்ய முடியாது. ஒதுக்கப்பட்ட நிதி அங்கே செலவிடப்பட்டிருக்க முடியாது.

இது ஒரு சட்டவிரோதமான கட்டிடம் கிடையாது. ஆகவே இது ஒரு சட்டபூர்வமான கட்டிடம். காவல்துறையினர் இனவாதக் கோணத்தில் இதனை அகற்றுவதற்கு எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது. யாழ்ப்பாணம் மாநகர சபை அதற்கு இடமளிக்கக்கூடாது.” என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



எரிபொருள் விலைகளை உயர்த்தியது பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
[Monday 2026-11-02 06:00]

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை லீற்றருக்கு 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 490 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



லங்கா ஐஓசியும் எரிபொருள் விலைகளை உயர்த்தியது!
[Monday 2026-11-02 06:00]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையினை அதிகரித்த நிலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.



அளவெட்டியில் கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி!
[Monday 2026-11-02 06:00]

யாழ்ப்பாணம், அளவெட்டி - அழுக்கை சந்தி பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்!
[Monday 2026-11-02 06:00]

மட்டக்களப்பில் மாவீரர் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி ஞாயிற்றுக்கிழமை (01) ஆரம்பித்து மாவீர்களின் கல்லறைக்கு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன். தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



எரிவாயுவைப் பதுக்கினால் கடும் நடவடிக்கை!- லிட்ரோ எச்சரிக்கை.
[Monday 2026-11-02 06:00]

எரிவாயு சிலிண்டர்களைப் பதுக்கி வைத்தல், விற்பனையைக் கட்டுப்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் அனுமதியற்ற மேலதிக கட்டணங்களை அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அங்கீகரிக்கப்பட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் லிட்ரோ நிறுவனம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.



பெண்களின் உடலமைப்பு பற்றிய அமைச்சர் லால் காந்தவின் கருத்துக்கு சம உரிமை இயக்கம் கண்டனம்!
[Monday 2026-11-02 06:00]

பெண்களின் உடலமைப்பு, உடல் அங்கங்கள் மற்றும் வெளித்தோற்றம் தொடர்பில் பொது மேடைகளில் தெரிவிக்கப்படும் பாலியல் தன்மையிலான கருத்துகள் வெறுமனே அசௌகரியத்தை ஏற்படுத்தும் பேச்சுகளாக மட்டும் கருதப்பட முடியாது. மாறாக, அவை பெண்களைத் தாழ்த்தி ஆணாதிக்க அதிகாரத்தை நிலைநாட்டும் உத்தியாகவும் அமைகின்றன என சம உரிமை இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.



கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்!
[Monday 2026-11-02 06:00]

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழ்த் தேசிய மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கான ஆரம்ப நாள் நிகழ்வும், விசேட கலந்துரையாடலும் நேற்றையதினம் நடைபெற்றன.



சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கைதி பலி!
[Monday 2026-11-02 06:00]

பல்லேகலை - தும்பறை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டம் ஒருமாதத்திற்குள் நிறைவேற்றப்படும்!
[Monday 2026-11-02 06:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலத்துக்கு சாதாரண மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருளுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாயின் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இன்னும் ஒருமாத காலத்துக்குள் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



ஆற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி!
[Monday 2026-11-02 06:00]

பொகவந்தலாவ பகுதியில் 10 வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவ, லின்பொட் தோட்டப் பகுதியில் வசித்து வந்த 5 ஆம் தரத்தில் கல்வி கற்ற மாணவரொருவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.



பலாலி, வசாவிளான் மக்கள் காணிகளுக்காக போராட்டம்!
[Sunday 2026-11-01 16:00]

தமது காணிகளை விடுவிக்கக்கோரி வலி. வடக்கு மக்கள், பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது, கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.



அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய ஜேவிபியினரே அவற்றை நியாயப்படுத்துவது வெட்கக்கேடு!
[Sunday 2026-11-01 16:00]

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் தொழிற்சங்கச் செயற்பாடுகள், தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கான முயற்சியாகும். ஒரு காலத்தில் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் விடுதலை முன்னணியினரே தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அதேபோன்ற சட்டமூலத்தை ஆதரித்து நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.



கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது குறித்த அறிக்கை டிசம்பர் 21 ஆம் திகதிக்கு முன்!
[Sunday 2026-11-01 16:00]

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற குழுவின் அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வௌியிட எதிர்பார்த்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.



9 மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு 4,400 மில்லியன் டொலர்!
[Sunday 2026-11-01 16:00]

இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 9 மாத காலத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 4,400 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.



அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் சிசிரிவி!
[Sunday 2026-11-01 16:00]

நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்களை (CCTV) பொருத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.



லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
[Sunday 2026-11-01 16:00]

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.



தலைமன்னார் கடற்பரப்பில் 7 தமிழக மீனவர்கள் கைது!
[Sunday 2026-11-01 16:00]

தலைமன்னாருக்கு வடக்கே உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 7 தமிழக மீனவர்கள் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (01) காலை தலைமன்னார் கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, அவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.



சுனில் வடகல, குமார ஜெயக்கொடியின் சொத்துக்கள் குறித்து விசாரணை!
[Sunday 2026-11-01 16:00]

பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல மற்றும் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.



தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்!
[Sunday 2026-11-01 16:00]

முல்லைத்தீவு - விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலியை தொடர்ந்து சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.



மயிலத்தமடு, மாதவனை நிலங்களை மீட்க கோரி போராட்டம்!
[Sunday 2026-11-01 06:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரை மற்றும் விவசாய நிலங்களை மீட்கக் கோரியும், அங்கு இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான உரிமைகள் மீறல்களுக்கு எதிராக நீதி கோரியும் எதிர்வரும் திங்கட்கிழமை (02) பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா