Untitled Document
June 22, 2026 [GMT]
இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றும் வீழ்ச்சி!
[Monday 2026-06-22 16:00]


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று  சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

  

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 328.8515 ரூபாயில் இருந்து 329.30 ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 338.7004 ரூபாயில் இருந்து 339.06 ரூபாயாக அதிகரித்துக் காணப்படுகின்றது.

அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய சில முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



இலங்கை எப்போதும் நடுநிலையாக செயற்படும்- அமெரிக்க உதவி இராஜாங்க செயலரிடம் தெரிவிப்பு!
[Monday 2026-06-22 16:00]

இலங்கை எப்போதும் நடுநிலையாகவும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவும் செயற்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



முன்னாள் எம்.பி ஜெயானந்தமூர்த்தி காலமானார்!
[Monday 2026-06-22 16:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, தனது 61ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் உயிரிழந்ததாக குடும்பத்தினரும் நெருங்கிய வட்டாரங்களும் தெரிவித்துள்ளனர்.



அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் கொழும்பு வருகை!
[Monday 2026-06-22 16:00]

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ்.போல் கபூர் கொழும்பை வந்தடைந்துள்ளார்.



அடுத்தடுத்து மோதிய 7 வாகனங்கள் - பெண் பலி, 10 பேர் காயம்!
[Monday 2026-06-22 16:00]

கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



அமெரிக்காவின் பசுபிக் விமானப்படை தளபதி இலங்கை வருகை!
[Monday 2026-06-22 16:00]

அமெரிக்க-இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையின் வளர்ந்துவரும் பலத்தினைப் பிரதிபலிக்கும் மூன்று நாள் விஜயமொன்றை ஆரம்பிப்பதற்காக அமெரிக்க பசிபிக் விமானப் படைகளின் (PACAF) கட்டளைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் நேற்று இலங்கையை வந்தடைந்தார். PACAFஇன் கட்டளைத் தளபதியாக, இப்பிராந்தியத்திலுள்ள அனைத்து அமெரிக்க விமானப்படை அதிகாரிகளையும், சொத்துக்களையும் ஜெனரல் ஷ்னைடர் மேற்பார்வை செய்யவுள்ளார் .



சொந்த வளாகத்திற்கு இடம்மாறுகிறது கனடிய தூதரகம்!
[Monday 2026-06-22 16:00]

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதரகம் கொழும்பு 07 இல் உள்ள 5ஆம் லேனிலிருந்து (5th Lane) புதுப்பிக்கப்பட்ட தனது சொந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.



ஆனந்த விஜேபாலவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அனுமதி!
[Monday 2026-06-22 16:00]

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்குத் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.



மே மாத பணவீக்கம் 5.4% ஆக அதிகரிப்பு!
[Monday 2026-06-22 16:00]

நாட்டின் மே மாத பணவீக்க வீதம் 5.4% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



புதுக்குடியிருப்பு விபத்தில் ஒருவர் பலி!
[Monday 2026-06-22 16:00]

முல்லைத்தீவு - பரந்தன் வீதியின் கைவேலி பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்று, அதே திசையில் முன்னால் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.



செம்மணிப் புதைகுழியில் எலும்புக்கூடுகள் 400ஐ தாண்டியது! Top News
[Sunday 2026-06-21 18:00]

செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



குற்றவாளிகளை பாதுகாக்க முனையும் அடிப்படைவாதிகள்!
[Sunday 2026-06-21 18:00]

குற்றவாளிகளை பாதுகாக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில அடிப்படை வாதிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.



ஹெய்டிக்கு 1089 படையினரை அனுப்புகிறது அரசாங்கம்!
[Sunday 2026-06-21 18:00]

வன்முறைக் கும்பல்களின் ஆதிக்கத்தினால் சீர்குலைந்துள்ள கரீபியன் நாடான ஹெய்டியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, 900 இற்கும் மேற்பட்ட முப்படை வீரர்களையும், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 189 பொலிஸ் அதிகாரிகளையும் கொண்ட விசேட பாதுகாப்புப் படையணியை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



உயர்தரப் பரீட்சையை பிற்போடும் தேவை இல்லை!
[Sunday 2026-06-21 18:00]

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கங்களை அளித்துள்ளார்.



ஐ.நா உபகுழு சமர்ப்பிக்கவுள்ள இரகசிய அறிக்கை!
[Sunday 2026-06-21 18:00]

இலங்கைக்கு ஒன்பது நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சித்திரவதைத் தடுப்புக்கான உபகுழுவின் பிரதிநிதிகள் தமது கள ஆய்வுகளின் அடிப்படையிலான இரகசிய முதற்கட்ட அவதானிப்பு அறிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளனர்.



அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என தடுத்தார் மைத்திரி!
[Sunday 2026-06-21 18:00]

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தின் போது பாதுகாப்புத் துறையினரிடையே முறையான ஒருங்கிணைப்பு இருக்கவில்லை என்றும், அலரி மாளிகைக்குச் செல்ல வேண்டாம் என அதிகாரிகளுக்கு அன்றைய ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதுடன், குண்டுத்தாக்குதல் அரங்கேறிய உடனே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது கைபேசிக்கு நேரடியாக அழைத்து இரங்கல் தெரிவித்ததோடு, எப்.பி.ஐ புலனாய்வு அமைப்பின் ஒத்துழைப்பை பெற்றுக் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



டீசல் விலை குறைந்தாலும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணம் குறையாது!
[Sunday 2026-06-21 18:00]

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் எதிர்வரும் 6 மாதங்களுக்கு பஸ் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



சீன ஆயுதக் களஞ்சியங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்!
[Sunday 2026-06-21 18:00]

இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஜகநாத் கொலம்பகேயை சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை செய்ய வேண்டுமென பொத்துவில் பொலிகண்டி ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் கோரிக்கை முன்வைத்தார்.



மூன்று நிபந்தனைகளுக்கு இணங்குவதாக தமிழரசுக் கட்சி கடிதம்!
[Sunday 2026-06-21 18:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டிணைவதற்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முன்வைத்திருந்த ஆறு நிபந்தனைகளில் இணைந்த கட்டமைப்பு ஒன்றின் அடிப்படையாக, சுருக்கமான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்தப்படுதல் உட்பட மூன்று நிபந்தனை முதற்கட்டமாக ஏற்றுச்செயற்படுவதற்கு தயார் என்று தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது.



பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக கூறுகிறார் சோமரத்ன ராஜபக்ஷ!
[Sunday 2026-06-21 08:00]

மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில் சென்று சந்தித்ததாகவும், அதன்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.



அடுத்த வாரம் வருகிறது ஐஎம்எவ் குழு!
[Sunday 2026-06-21 08:00]

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அதன்படி, அவர்கள் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் தங்கியிருந்து இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா