Untitled Document
May 20, 2026 [GMT]
பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!
[Tuesday 2026-05-19 16:00]


யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற ஒருவர், அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியை சேர்ந்த பங்கிராசா சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற ஒருவர், அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் - நாவாந்துறை பகுதியை சேர்ந்த பங்கிராசா சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

  

உயிரிழந்த நபருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் இடையே வீதி (ஒழுங்கை) எல்லை தொடர்பான பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதற்கமைய, பொலிஸார் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து, சமாதானப்படுத்த முயன்றனர். இரு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்து, சமாதானமாக போவதாக ஒப்புக்கொண்ட தருணத்தில், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த குறித்த நபர் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

உடனடியாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம்!
[Wednesday 2026-05-20 03:00]

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.



நாட்டு மக்களிடம் ஜனாதிபதி பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்!
[Wednesday 2026-05-20 03:00]

இராணுவ வீரர்களின் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு ஜனாதிபதி நாட்டுக்கு ஆற்றும் உரையில், பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவதற்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பம் குறித்து ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும். தான் ஆட்சியில் இருக்கும் வரை இனி ஒருபோதும் இந்த நாட்டில் விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதற்கு இடமளிப்பதில்லை என்ற உறுதிமொழியை அவர் வழங்கவேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.



அரச வங்கியில் டொலரின் விற்பனை விலை 341.68 ரூபாயாக அதிகரிப்பு!
[Wednesday 2026-05-20 03:00]



தமிழக முதல்வர் இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!
[Wednesday 2026-05-20 03:00]

புதிய தமிழக முதலமைச்சர் யோசப் விஜய் இந்திய மீனவர்கள் எமது கடல் வளத்தை சுரண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனங்களின் தலைவர் மரியதாஸ் தெரிவித்தார்.



போருக்கான மூலோபாயத் திட்டமிடல்கள் அனைத்தும் எனது தலைமையகத்திலேயே வகுக்கப்பட்டன!
[Wednesday 2026-05-20 03:00]

இறுதிப் போரின் திருப்புமுனையான மனிதாபிமான நடவடிக்கைக்கான முழுமையான மூலோபாயத் திட்டமிடல்கள் அனைத்தும் எனது அலுவலகத்திலேயே வகுக்கப்பட்டன என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார்.



ரில்வின் சில்வாவின் கருத்துக்கள் ஆணைக்குழுவுக்கு பெரும் களங்கம்!
[Wednesday 2026-05-20 03:00]

நிலக்கரி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அண்மையில் நடைபெற்ற மே தினப் பேரணியில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வெளியிட்ட கருத்துக்கள் ஆணைக்குழுவின் ஒட்டுமொத்த செயற்பாடுகளுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நிலக்கரி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தும் நீதிபதிகளுக்கும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.



ரின் இலக்கம் இல்லா விட்டால் 6 மாதம் சிறையா?
[Wednesday 2026-05-20 03:00]

பலவந்தமான வகையில் வரி கொள்கையை அமுல்படுத்த முடியாது. ஜனநாயக ரீதியிலான வரி கொள்கை தான் நிலையானதாக அமையும். வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெற்றுக்கொள்ளாவிடின் 06 மாத காலம் சிறைச் செல்ல நேரிடும் என்று உண்ணாட்டரசிறைச் (திருத்தச் ) சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது டயங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.



ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைவிலகல்!
[Wednesday 2026-05-20 03:00]

2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.



அரச ஓய்வு விடுதியில் குண்டுவெடிப்பு!
[Wednesday 2026-05-20 03:00]

கெகிராவ பகுதியில் உள்ள அரசினர் விடுதியில் (Kekirawa Rest House) செவ்வாய்க்கிழமை (19) திடீர் வெடிப்புச்ம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டம்!
[Tuesday 2026-05-19 17:00]

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு, முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் குழு ஒன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது .



இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றும் பாரிய வீழ்ச்சி!
[Tuesday 2026-05-19 17:00]

இலங்கை நாணயச் சந்தையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்றும் (செவ்வாய்க்கிழமை) பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளதுடன், டொலரின் விற்பனை விலை 338 ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.



ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும்!
[Tuesday 2026-05-19 16:00]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வீழ்ச்சியை வரும் நாட்களில் கட்டுப்படுத்த முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



ஜெனீவாவில் தீர்வு இல்லை - சஜித் திட்டவட்டம்!
[Tuesday 2026-05-19 16:00]

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் பல்வேறு இனப் பிரிவினர்கள் காணப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வுகளை வழங்க வேண்டும். அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க வேண்டியது ஜெனீவாவில் அல்ல. எமது நாட்டு பிரச்சினைகளை எமது நாட்டுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



கொழும்பில் இந்திய விமானப்படைத் தளபதி!
[Tuesday 2026-05-19 16:00]

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக நேற்று திங்கட்கிழமை (18) இலங்கை வந்தடைந்தார். அவர் மே 21ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று (19) காலை பத்தரமுல்லவில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (IPKF) நினைவிடத்தில் அவர் மலரஞ்சலி செலுத்தினார்.



QR குறியீட்டு முறை தொடரும்!
[Tuesday 2026-05-19 16:00]

எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறை தொடர்ந்தும் அமல்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த செவ்வாய்க்கிழமை (19) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.எரிபொருள் நுகர்வை இயன்றவரை குறைக்கும் நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.



பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி!
[Tuesday 2026-05-19 16:00]

பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதைத் ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டத்தின் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்புக்கு முரணானதல்ல, சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.



அர்ச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும்!
[Tuesday 2026-05-19 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



வடமராட்சியில் அறுத்த சங்கிலியுடன் சிக்கிய திருடர்கள்!
[Tuesday 2026-05-19 16:00]

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள், நெல்லியடி ஊடாக தப்பி செல்லும் போது நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்!
[Tuesday 2026-05-19 08:00]

பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்தத் தீர்மானங்கள் மாத்திரம் போதாது. மாறாக சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.



ஏதோவொரு வடிவில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவேண்டும்!
[Tuesday 2026-05-19 08:00]

சர்வதேச பங்களிப்புடன்கூடிய வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையைக் கோரி சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் அலைன் பியர்ஸன் தெரிவித்துள்ளார்.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா