Untitled Document
June 16, 2024 [GMT]
பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகளுடன் வருகிறது ஐஸ்!
[Thursday 2024-05-23 05:00]


பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகள் ஊடாக இலங்கைக்கு ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் சூட்சுமமான முறையில் கடத்தப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ  தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகள் ஊடாக இலங்கைக்கு ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் சூட்சுமமான முறையில் கடத்தப்படுகிறது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிரணியின் உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டில் மரக்கறி வகைகளை அதிக விலைக்கு மக்கள் வாங்க வேண்டியுள்ளது. 3000 ரூபா வரையில் கரட்டின் விலை உயர்வடைந்தது.

மரக்கறி உற்பத்தியில் உருளைக்கிழங்கு உற்பத்தியே மிகவும் கடினமானது. ஒரு மூட்டை உருளைக்கிழங்கு 35000 ரூபா வரையில் சந்தையில் விற்பனையாகின்றது. உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் விவசாயிகளே அதிக கஸ்டங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

இப்போது உருளைக்கிழங்கு அறுவடை இடம்பெறுகின்ற நேரத்தில் வெளிநாட்டில் இருந்தும் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. அவ்வாறு வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் உருளைக் கிழங்குகள் பாவனைக்கு உகந்ததாக இல்லை.

இதேவேளை எனக்கு தகவலொன்று கிடைத்ததுள்ளது. இது புலனாய்வு அதிகாரிகளுக்கு முக்கியமான தகவலாக இருக்கும். அதாவது பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்கு ஊடாக போதைப்பொருள் வர்த்தகம் மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் பாவனைக்கு எடுக்கும் உருளைக்கிழங்கு உள்ளே, ஐஸ் போன்ற போதைப் பொருட்களை வைத்து கொண்டுவரும் வியாபாரமொன்று நடக்கின்றது. மிகவும் வெற்றிகரமாக இந்த வியாபாரம் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயாராக இல்லை!
[Sunday 2024-06-16 18:00]

இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



மன்னார் ஆயரைச் சந்தித்தார் ஜனாதிபதி ரணில்! Top News
[Sunday 2024-06-16 18:00]

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இன்று மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலை 10 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மன்னார் ஆயர் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது ஜனாதிபதி ரணில் மன்னார் ஆயரிடம் ஆசி பெற்றார்.



வழக்கை முடிவுறுத்துவதற்கு தமிழ் அரசுக் கட்சி மத்திய குழுவில் தீர்மானம்!
[Sunday 2024-06-16 18:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



வீரமுனையில் வரவேற்பு கோபுரம் அமைப்பதில் முறுகல்!
[Sunday 2024-06-16 18:00]

சம்மாந்துறை - வீரமுனை கிராம வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.



ஒக்டோபர் 5 தேர்தலா?- மறுக்கிறது தேர்தல் ஆணைக்குழு.
[Sunday 2024-06-16 18:00]

எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்ட அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க முற்றாக மறுத்துள்ளார்.



ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித்தனியே பேசவுள்ளாராம் சம்பந்தன்!
[Sunday 2024-06-16 18:00]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.



வாள்வெட்டுக் கும்பலை விரட்டிப் பிடித்து தாக்கிய பொதுமக்கள்!
[Sunday 2024-06-16 18:00]

கொடிகாமம் - மீசாலையில், விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் வாள்வெட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதன் போது சிவகுமார் ராகுலன் 25 வயதான இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



ஆலயத்துக்குச் சென்றவர் வாய்க்காலில் சடலமாக மீட்பு! - யானை தாக்கியதாக சந்தேகம்.
[Sunday 2024-06-16 18:00]

மட்டக்களப்பு - வெல்லாவெளி, ஆயிரம்கால் மண்டப வீதியில் உள்ள வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனைத் தொடர்ந்து குறித்து இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.



வட்டுக்கோட்டை வாள்வெட்டு - சந்தேக நபர்கள் இருவர் கைது!
[Sunday 2024-06-16 18:00]

வட்டுக்கோட்டை - துணவிப் பகுதியில், கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



வெள்ளை ஈ தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதி வீழ்ச்சி!
[Sunday 2024-06-16 17:00]

வெள்ளை ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதியில் 30 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



மாத்தறை கூட்டத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் அறிவிப்பார்!
[Sunday 2024-06-16 05:00]

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதற்காக விசேட மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னெடுக்கவுள்ளார்.



காரைதீவில் அடுத்த சோகம்- உகந்தைக்கு சென்று திரும்பிய வைத்தியர் கடலில் விழுந்து மரணம்!
[Sunday 2024-06-16 05:00]

அம்பாறை - காரைதீவில் நேற்று இரவு வைத்தியர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருந்து வருகின்ற வழியில் பாணமை கடலில் தவறி வீழ்ந்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அடுத்த வருடம் முதல் வீடுகளுக்குப் புதிய வரி- ஐஎம்எவ் அறிவுறுத்தல்!
[Sunday 2024-06-16 05:00]

இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வாடகை வீடு மற்றும் வெறுமையாக குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரி ஒன்றை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது.



13வது திருத்தத்தை தேர்தல் பிரசாரமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்!
[Sunday 2024-06-16 05:00]

தேர்தல் கால பிரசாரமாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை பயன்படுத்துவதை அரசியல் தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஜனநாயக ரீதியில் அரசியல் உரிமையை வழங்கினார் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.



எம்.பி வாகனம் மீது துப்பாக்கிச் சூடு - பொலிஸ் உயர் அதிகாரி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்!
[Sunday 2024-06-16 05:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மஹாநாமவை கைது செய்வதற்காக நீதிமன்ற உத்தரவுக்கமை செயற்படவுள்ளதாக என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



தீபச்செல்வனுக்கு ரிஐடி மீண்டும் அழைப்பாணை!
[Sunday 2024-06-16 05:00]

எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்துள்ளதாக தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.



அழகுசாதனப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் புதிய சட்டங்கள்!
[Sunday 2024-06-16 05:00]

தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு தடைவிதிக்கும் புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைமை பரிசோதகர் அமித் பெரேரா தெரிவித்துள்ளார்.



சஜித்துடன் இனி விவாதம் இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி முடிவு.
[Sunday 2024-06-16 05:00]

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இனி எந்தவொரு விவாதமும் இல்லையென தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு மதிப்பெண் முறை அறிமுகம்!
[Sunday 2024-06-16 05:00]

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.



விறகு எடுக்கச் சென்றவரை அடித்துக் கொன்ற காட்டு யானை!
[Sunday 2024-06-16 05:00]

திருகோணமலை - சம்பூர் தங்கபுரம் காட்டுப் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் பள்ளிக்குடியிருப்பு - தங்கபுரத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து திருமகன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா