Untitled Document
June 17, 2024 [GMT]
பொருளாதார அபிவிருத்திகளை திணிப்பதன் மூலம் ஐக்கியத்தை ஏற்படுத்தி விட முடியாது! - ஜனாதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்
[Thursday 2018-07-12 07:00]

அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.

அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தெரிவித்துள்ளார்.   

முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்திலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாண முன்னேற்றப் பணிகள் பற்றி ஆராய, அண்மையில் நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில் வடமாகாண முதலமைச்சர் இடம்பெற்றிருந்தார். 14.06.2018 அன்று நியமித்த ஜனாதிபதியின் நியமனக் கடிதம், 05.07.2018 லேயே இருபத்தியொரு நாள்களின் பின்னர் முதலமைச்சரின் கைகளுக்குக் கிடைத்தது.அந்தத் தாமதத்தையும் சுட்டிக்காட்டி, நீண்தொரு கடிதத்தை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்.

அவரின் கடிதத்தில்,

தங்களால் தலைமை தாங்கப்படவிருக்கும் செயலணி பிரதமர், மத்திய அமைச்சர்கள் 15 பேர், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள், வடமாகாண முதலமைச்சராகிய என்னையும், தற்போது வெற்றிடமாகவுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரையும், இராஜாங்க அமைச்சர் ஒருவர், முன் கூறிய பிரதமர் அடங்கிய மத்திய அமைச்சர்கள் அனைவரதும் அமைச்சுகளின் செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், இராணுவம், கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றின் கட்டளைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர், யாழ் பாதுகாப்புப் படையின் தளபதி, கிழக்குப் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேலும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.

என்னையும் எமது பிரதமசெயலாளரையும் தவிர வட மாகாணத்தை அங்கத்துவம் வகிக்க வேறெவரும் அதில் இல்லை. செயலணியின் செயலாளர் சிவஞான சோதி, வடமாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் மத்திய அரசின் அலுவலர் ஆவார்.

செயலணியின் வடக்கு, கிழக்கு பற்றிய முன்னேற்றச் செயற்பாடுகள், நாட்டின் ஐக்கியத்தையும் ஒன்றிணைவையும் ஏற்படுத்தி, சமமான சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் வருமான வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்றிட்டங்களின் மீளாய்வு உள்ளடங்கிய பல விதப் பணிகள் குறித்த செயலணிக்கு அடையாளப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கில் நடைபெற்றுவரும் முன்னேற்றப் பணிகள் அனைத்தையும் நடத்துவிக்கும், ஒருங்கிணைக்கும், மேற்பார்வை பார்க்கும் பணி ஜனாதிபதி செயலணியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

என்னையும் எமது பிரதம செயலாளரையும் இந்தச் செயலணியினுள் உள்நுழைத்தமைக்காக நான் உங்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பல மத்திய அமைச்சர்களும் அவர்களின் அமைச்சுச் செயலாளர்களும் இந்தச் செயலணியில் சேர்க்கப்பட்டிருப்பினும் எமது வடமாகாண அமைச்சர்கள் இதில் விடுபட்டுள்ளார்கள். எமது அமைச்சர்களின் மற்றைய செயலாளர்களும் விடுபட்டுள்ளார்கள். உங்கள் தேர்வில் இது ஒரு பாரிய தவறாக எனக்குப்படுகின்றது.

அடுத்து வடக்கு, கிழக்கின் பொருளாதார விருத்தி நாட்டின் ஐக்கியத்தை உறுதி செய்யும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு இடந்தவறியதாகவே எனக்குப்படுகின்றது. அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளைத் திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்திவிடமுடியாது. எமது வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப் பணிகள் செயற்படுத்தப்பட வேண்டும். தென்னாபிரிக்காவில் அரசியல் தீர்வு பெற்ற பின்னரே உண்மைக்கும் சமரசத்துக்குமான ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

தெற்கானது வடக்கு, கிழக்குக்கு இவ்வாறான அபிவிருத்திப் பணிகளை செய்திருப்பதாக ஜெனிவாவிலோ வேறெங்குமோ உலக சமுதாயத்துக்கு நாம் எடுத்துக் காட்டினாலும் போர் முடிந்து ஒன்பது வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு மக்களின் அடிப்படை அரசியல்ப் பிரச்சனைகளைத் தொடர்ந்து வந்துள்ள மத்திய அரசாங்கங்கள் தீர்க்கவில்லை என்ற விடயத்தை நாம் மூடி மறைக்கமுடியாதிருக்கும்.

உங்களால் இதுவரை தரப்பட்டுள்ள பொருளாதார நன்மைகள் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்களால் எமது மக்கள் மீது ஏற்படுத்தப்பட்ட பொறுப்பற்ற சிதைவுகளுக்கும் பெரும் அழிவுகளுக்கும் செய்யப்படும் பிராயச்சித்தமே. மேற்படி அழிவுகளை நீங்கள் ஏற்படுத்தியமைக்குக் காரணம் தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் கௌதம புத்தர் காலத்துக்கு முன்பிருந்து அடையாளப்படுத்தக் கூடிய இந்நாட்டின் ஒரு பகுதியின் பெரும்பான்மையினராய் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளுக்கு செவிமடுக்காமையே. வட, கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளையும் உரித்துகளையும் ஏற்றுக் கொள்ளாமையே போருக்குக் காரணமாக இருந்தன.

எனவேதான் பொருளாதார அபிவிருத்தியால் இன ஐக்கியத்தையும் தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தலாம் என்று நீங்கள் நினைப்பதின் தாற்பரியம் என்னவென்றால் எம்மக்கள் தமது அரசியல் உரித்துகளையும் மனித உரிமைகளையும் நீங்கள் தரும் பொருளாதார அபிவிருத்தியின் பொருட்டு கைவிட்டுவிடுவார்கள் என்று நீங்கள் எண்ணுவதே.

மூன்றாவதாக மேற்படி செயலணியின் அமைப்புருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக இருக்கின்றது. கிட்டத்தட்ட முழுமையாக மத்திய அரசாங்க அணியினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள இந்தவ் செயலணியால் வட, கிழக்கில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்கள். அதுவும் அரசாங்க அமைச்சர்கள், அவர்களின் செயலாளர்கள், படையினர், ஆளுநர்கள் சேர்ந்து இவ்வாறான சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்று நினைப்பது வேடிக்கைமிக்கது.

மத்திய அரசாங்கம் அதற்கான நிதியையும் அறிவுரைகளையும் அனுசரணைகளையும் வழங்கவேண்டும். அதிகாரப் பகிர்வென்பது இதுவே! இல்லையேல் தற்போது காண்பது போல் அபிவிருத்தியும் அதிகாரப்பகிர்வும் கண்காட்சிப் பொருட்கள் ஆகிவிடுவன.

எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் கூறியவாறு, இந்த வருட முடிவுக்குள் எமது அரசியல் பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்படவேண்டும். அதன் பின்னரே, அபிவிருத்திச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அரசியல் பிரச்சினைகளை ஜனாதிபதியாகிய நீங்கள் விரைவில் தீர்த்து வைத்த பின்னர் நாம் சம அந்தஸ்துடையவர்களாக உட்கார்ந்து, இந்த நாட்டைக் கட்டி எழுப்ப இடமளிப்பீர்கள் என்று நம்புகின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



தமிழ் பொதுவேட்பாளரைக் களமிறக்க கிளிநொச்சி மாவட்ட அமைப்புக்கள் ஆதரவு!
[Monday 2024-06-17 17:00]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான தமது ஆதரவை கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளன.



முல்லைத்தீவில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!
[Monday 2024-06-17 17:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சுமத்தியுள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



நாளை இந்திய துணைத் தூதரகம் முற்றுகை! - மீனவர்கள் அறிவிப்பு.
[Monday 2024-06-17 17:00]

இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறல் செயற்பாட்டை தடுத்து நிறுத்த கோரி நாளை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர் பிரதிநிதிகள், எமக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிடில் பாராளுமன்றத்தையும் முற்றுகையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .



சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பிக்கு கைது!
[Monday 2024-06-17 17:00]

12 மற்றும் 13 வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தனமல்வில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.



துட்டகைமுனு சிங்கள மன்னன் இல்லை - அவன் வாழ்ந்த காலத்தில் சிங்கள மொழியே இல்லை!
[Monday 2024-06-17 17:00]

மரபணு பரிசோதனைகளின் மூலம் சிங்களவர்கள் தென்னிந்திய திராவிடர்களின் வழித்தோன்றல்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.



வாக்குப்பெட்டிகளைத் தயார்படுத்த உத்தரவு!
[Monday 2024-06-17 17:00]

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகளை தயார்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.



10 நிபந்தனைகளுக்கு அமைய போட்டியிடத் திட்டம் தயார்! - தம்மிக்க பெரேரா
[Monday 2024-06-17 17:00]

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் 50% வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.



இத்தாலியில் இலங்கையரை கொலை செய்ய முயன்ற மற்றொரு இலங்கையர் கைது!
[Monday 2024-06-17 17:00]

இத்தாலியில் இலங்கையர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்த சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



பொலிஸ் பிடியில் இருந்து தப்பித்த கைதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
[Monday 2024-06-17 17:00]

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.



அல்லைப்பிட்டியில் 18 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
[Monday 2024-06-17 17:00]

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டார பகுதியில் கடற்கரையில் மறைத்து வைத்திருந்த 18 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



ஊடகவியலாளர் வீடு மீதான தாக்குதலின் பின்னால் இராணுவத்தின் மறைகரம்! - சிறிதரன் குற்றச்சாட்டு. Top News
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீடு தாக்குதலுக்குள்ளாகி மூன்று தினங்களாகியும் இதுவரை எவரையும் பொலிஸார் கைது செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், குறித்த தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தின் மறைகரங்கள் உள்ளதென தெரிவித்தார்.



பழக்கதோசத்தில் போட்டியிடுவார் சிவாஜிலிங்கம்!- என்கிறார் சுமந்திரன்.
[Monday 2024-06-17 05:00]

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பொது வேட்பாளர் நிறுத்தும் விடயத்தில் ஆதரவு வழங்குவதில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், பழக்கதோசத்தில் சிவாஜிலிங்கம் போட்டியிடுவார் என்றார்.



மாதகல் யுவதிக்கு கொரோனா தொற்று!
[Monday 2024-06-17 05:00]

மாதகலில் 20 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு உறவினர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து சென்ற பின்னர், காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.



ரணிலை தவிர வேறு வழியில்லை!
[Monday 2024-06-17 05:00]

தற்போதைய ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தொடர்வதன் மூலம் நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளச்செய்ய முடியும் எனவும், பரிசோதனை முயற்சி ஒன்றை செய்து பார்க்கப் பொருத்தமான சூழல் நாட்டில் இல்லை என்பதால் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக பதவியில் அமர்த்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



தொல்புரத்தில் மாணவன் வீதியில் மயங்கி விழுந்து மரணம்!
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணம், தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும் இலங்கையில் குறையாதாம்!
[Monday 2024-06-17 05:00]

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.



பிரித்தானியா செல்ல முயன்ற திருகோணமலை யுவதி கட்டுநாயக்கவில் கைது!
[Monday 2024-06-17 05:00]

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற இளம்பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் வசிக்கும் 24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.



கிளிநொச்சி எரிபொருள் நிலையத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள்! Top News
[Monday 2024-06-17 05:00]

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எரிபொருள் நிரப்ப வந்திருந்த நபர் அலைபேசியில் பேசியவாறும் மோட்டார் சைக்கிளை இயங்குநிலையில் வைத்திருந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டிருக்கும் வேளை அதில் தீ பற்றியது. பணியாளர்கள் உடனடியாக விரைந்து தீயை அணைத்தனர்.



அனலைதீவில் மிதந்து வந்த மர்மப்பெட்டி! - திறந்து பார்த்த போது ஆச்சரியம்.
[Monday 2024-06-17 05:00]

யாழ்ப்பாணம் - அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி பொலிசாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.



ஆபாச காணொளிகளை பதிவேற்றிய இளம் தம்பதி கைது!
[Monday 2024-06-17 05:00]

ஆபாச காணொளிகளை இணையத்தில் நேரடியாகப் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கும் மோசடியில் ஈடுபட்ட இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா