Untitled Document
November 28, 2026 [GMT]
உலகம் முழுவதும் பிறந்தநாளில் கேக் வெட்டுவது ஏன்?
[Friday 2026-11-27 16:00]

பொதுவாகவே உலகளாவிய ரீதியில்  ஒருவரின் பிறந்தநாள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அழகான கேக், அதன் மீது ஒளிரும் மெழுகுவர்த்திகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்துப் பாடல்கள்தான். கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படும் வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்தப் பழக்கம் எப்போது தொடங்கியது, கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுவதன் பின்னணி பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா? இது குறித்த விரிவான  விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாகவே உலகளாவிய ரீதியில் ஒருவரின் பிறந்தநாள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அழகான கேக், அதன் மீது ஒளிரும் மெழுகுவர்த்திகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்த்துப் பாடல்கள்தான். கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது இன்று உலகம் முழுவதும் பின்பற்றப்படும் வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்தப் பழக்கம் எப்போது தொடங்கியது, கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுவதன் பின்னணி பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா? இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

  

பிறந்தநாள் கேக்கின் வரலாறு பண்டைய கிரேக்கத்துடன் தொடர்புடையது. அக்காலத்தில் சந்திரனின் தெய்வமாகக் கருதப்பட்ட ஆர்டெமிஸுக்கு காணிக்கையாக வட்ட வடிவிலான இனிப்புக் கேக்குகளை மக்கள் படைத்தனர்.

அவை முழு நிலவைப் போலக் காட்சியளிக்க கேக்கின் மீது மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால், இன்றைய பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் போன்ற கேக் வெட்டும் வழக்கம் பின்னர் உருவானது.

நவீன பிறந்தநாள் கேக் கொண்டாட்டத்தின் வளர்ச்சியில் ஜெர்மனிக்கு முக்கியப் பங்கு உள்ளது. அங்கு குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடும் 'கிண்டர்ஃபெஸ்ட்' என்ற மரபில் கேக் மற்றும் மெழுகுவர்த்திகள் இடம்பெற்றன.

குழந்தையின் வயதுக்கு ஏற்ப மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டதுடன், வரப்போகும் புதிய ஆண்டைக் குறிக்கும் வகையில் கூடுதலாக ஒரு மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டது.

பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, ஒரே மூச்சில் ஊதி அணைக்கும்போது மனதில் நினைத்த ஆசை நிறைவேறும் என்பது பழங்கால நம்பிக்கையாகும். மெழுகுவர்த்தியின் புகை மூலம் தங்களுடைய ஆசைகள் வானத்தைச் சென்றடையும் என்று மக்கள் நம்பினர்.இந்த நம்பிக்கையே காலப்போக்கில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முக்கியமான பகுதியாக மாறியது.

இன்று எளிதாகக் கிடைக்கும் கேக், ஒரு காலத்தில் செல்வந்தர்களால் மட்டுமே வாங்கக்கூடிய ஆடம்பர உணவாக இருந்தது. 17 மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் சர்க்கரை, வெண்ணெய், மாவு போன்ற பொருட்கள் அதிக விலையில் இருந்ததே இதற்குக் காரணம்.

பின்னர் தொழிற்புரட்சியால் இந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து, விலை குறைந்தது. பேக்கரிகளும் பெருகின. இதனால் சாதாரண மக்களும் பிறந்தநாளுக்குக் கேக் வாங்கிக் கொண்டாடும் பழக்கம் உலகம் முழுவதும் பரவியது.

ஒவ்வொரு நாட்டிலும் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குத் தனித்துவமான மரபுகள் உள்ளன. மெக்சிகோவில் பிறந்தநாள் கொண்டாடுபவரின் முகத்தை கேக்கில் அழுத்தும் வேடிக்கையான பழக்கம் உள்ளது.

சீனாவில் நீண்ட ஆயுளைக் குறிக்கும் வகையில் நீளமான நூடுல்ஸ் பரிமாறப்படுகின்றன.

இந்தியாவிலும் கேக் வெட்டிக் கொண்டாடும் வழக்கம் மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது. இன்று சாக்லேட், வெண்ணிலா, ஸ்ட்ராபெரி எனப் பல சுவைகளிலும், குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் வடிவங்கள் முதல் பிரம்மாண்டமான பல அடுக்கு வடிவமைப்புகள் வரையிலும் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

பண்டைய கிரேக்கத்தில் வழிபாட்டுக் காணிக்கையாகத் தொடங்கிய கேக் மரபு, இன்று அன்பு, மகிழ்ச்சி, ஒற்றுமை ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது.

வயது எத்தனை ஆனாலும், பிறந்தநாள் கேக்கின் முன் நின்று மனதில் ஓர் ஆசையை நினைத்துக்கொண்டு மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கும் அந்தத் தருணம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை என்றால் மிகையாகாது.

  
   Bookmark and Share Seithy.com



பிரபஞ்ச அழகிப் போட்டியில் புதிய வரலாறு படைத்த 7 வயது சிறுமியின் தாய்!
[Thursday 2026-11-26 16:00]

உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 75ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டி, போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவான் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதியில், போட்டியை நடத்திய நாடான போர்ட்டோ ரிகோவைச் சேர்ந்த ஜெனிபர் பாரெட்டோ 2026ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாகத் தெரிவு செய்யப்பட்டு மகுடம் சூடினார். திருமணமானவரும், 7 வயதில் பெண் குழந்தையொன்றின் தாயுமான ஜெனிபர் பாரெட்டோ, இந்தப் பட்டத்தை வென்றதன் மூலம் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.



ஜீன்ஸில் ஏன் இந்தச் சிறிய பை இருக்கிறது?
[Wednesday 2026-11-25 15:00]

பொதுவாகவே தற்காகலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி அணியும் ஆடையாக ஜீன்ஸ் கால்சட்டை விளங்குகிறது. தினசரி அதை பயன்படுத்தினாலும், அதன் முன்பக்கத்தில் பெரிய பைக்கு அருகில் அமைந்திருக்கும் சிறிய பை எதற்காக உருவாக்கப்பட்டது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? பார்ப்பதற்கு பெரிதாகப் பயன்படாத அந்தச் சிறிய பைக்குப் பின்னால் சுவாரஸ்யமான வரலாறு ஒன்று இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? பலரும் அறிந்திராத அந்த சுவாரஸ்யமான பின்னணி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.



36 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலத்திற்கு வரும் மைக்கேல் ஜாக்சனின் அரிய ஓவியம்!
[Monday 2026-11-23 16:00]

கிங் ஆஃப் பாப்’ எனப் போற்றப்படும் மறைந்த பாடகர் மைக்கேல் ஜாக்சனின் அரிய உருவப்படம், வரும் நவம்பர் 26ஆம் தேதி பிரான்சில் ஏலத்திற்கு வரவுள்ளது. 1989ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓவியக் கலைஞர் பிரெட் லிவிங்ஸ்டன் ஸ்ட்ராங் வரைந்த ‘The Book’ என்ற இந்த ஓவியம், மைக்கேல் ஜாக்சன் நேரடியாகப் போஸ் கொடுத்து வரையப்பட்ட ஒரே அதிகாரப்பூர்வ உருவப்படம் எனக் கூறப்படுகிறது.



இரட்டை சகோதரிகள் படைத்த விசித்திர கின்னஸ் சாதனை!
[Friday 2026-11-20 16:00]

ஜெர்மனியை பூர்வீகமாகக் கொண்ட இரட்டை சகோதரிகள், தங்களது உடலில் சராசரியாக 70 சதவீதப் பகுதிகளில் பச்சை குத்திக்கொண்டு, 'உலகின் அதிக பச்சை குத்திக்கொண்ட பெண் இரட்டையர்கள்' என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர். ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட இரட்டை சகோதரிகள் அலைன் காலியானோ மற்றும் அலீனா ஹான்லே.



பன்றிக்காக கணவரை விவாகரத்து செய்த பெண்!
[Thursday 2026-11-19 16:00]

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பன்றி வளர்ப்பதற்கு தடை விதித்த தனது கணவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பெரும் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த கெய்லா தாம்சன் என்ற பெண், தனது வீட்டில் பன்றிகளை வளர்ப்பதில் அதிகமான ஆர்வம் கொண்டுள்ளார். ஆனால் இவரது கணவருக்கு வீட்டில் விலங்குகளை வளர்ப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது.



25000 எலிகள் நிறைந்த கோவில்: பல நூற்றாண்டுகளைக் கடந்த வினோதமான வழிபாட்டு மரபு!
[Monday 2026-11-16 16:00]

இந்தியாவில் இலட்சக்கணக்கான கோவில்கள் உள்ளன. அவற்றில் பல கோவில்கள் தனித்துவமான வரலாறு, வியக்க வைக்கும் கட்டடக்கலை மற்றும் வித்தியாசமான வழிபாட்டு மரபுகளால் புகழ்பெற்றவை என்றால் மிகையாகாது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இவை அனைத்தையும் தாண்டி, உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதற்குக் காரணம், அந்தக் கோவிலில் தாராளமாகச் சுற்றித் திரியும் ஆயிரக்கணக்கான எலிகள்தான். சற்று வியப்பாக இருந்தாலும் இது தான் உண்மை.



வெளி உலக மக்கள் போனால் கதை முடிந்தது: இந்தியாவில் இருக்கும் மர்ம தீவு!
[Saturday 2026-11-14 16:00]

மின்சாரம் கிடையாது.. இண்டர்நெட் கிடையாது.. அடிப்படை வசதிகள் எதுவுமே கிடையாது.. சொல்லப்போனால் வெளி உலக மக்கள் தொடர்பு அறவே இல்லாமல் இந்தியாவில் ஒரு தீவில் மக்கள் வசிக்கிறார்கள்.. யாராவது அந்த தீவுக்கு செல்ல முயன்றாலும் உயிர் மிஞ்சாது.. இப்படி ஒரு மர்மமான தீவு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உலகின் மர்மமான பகுதிகளில் ஒன்றாக அறியப்படும் இந்த தீவு இந்தியாவில் எங்கே இருக்கிறது?, இந்த தீவில் எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். தனியாக வசிக்கும் மக்கள் வங்காள விரிகுடா கடலில் உள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் அருகே வடக்கு சென்டினல் தீவு உள்ளது.



தூங்கினால் இவ்வளவு பணமா? - 60 நாட்களில் லட்சாதிபதியான பெண்!
[Wednesday 2026-11-11 16:00]

தூங்குவதற்கே சம்பளம் கிடைத்தால் எப்படி இருக்கும்? இது வெறும் கற்பனை அல்ல, உண்மையாகவே இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், 60 நாட்கள் நடைபெற்ற வித்தியாசமான தூக்கப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.9.63 லட்சம் பரிசுத் தொகையையும் இலவச சுற்றுலா பேக்கேஜையும் வென்றுள்ளார். இந்த வினோதப் போட்டியை இந்தியாவின் பிரபல மெத்தை தயாரிப்பு நிறுவனமான Wakefit நடத்தியது. 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஐந்தாவது சீசனில், நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.பல்வேறு கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு 10 பேர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகினர்.



போருக்கு மத்தியிலும் 250 பேருக்கு திருமண விழா!
[Tuesday 2026-11-10 16:00]

இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு மத்தியிலும், காசா பகுதியில் 250 பாலஸ்தீன இளைஞர் - யுவதிகளுக்காகப் பிரமாண்டமான கூட்டுத் திருமண நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலையின்மை, கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் பல தசாப்த கால போர் பாதிப்புகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பு அம்சமாகும்.



இந்தியாவில் மாந்திரீகத்திற்கு பெயர் பெற்ற கிராமம்!
[Monday 2026-11-09 17:00]

இந்தியாவில், மாந்திரீகம் மற்றும் பில்லி சூனியத்திற்குப் பெயர் பெற்ற ஒரு கிராமம் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. அசாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் மாயோங் கிராமம் அமைந்துள்ளது. இது இந்தியாவின் "கருப்பு மந்திரத்தின் தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக மாந்திரீக மரபுகள், பழங்கால மருத்துவ முறைகள் மற்றும் மர்மமான நாட்டுப்புற கதைகளுக்கு இந்த கிராமம் பெயர் பெற்றுள்ளது.



கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு!
[Sunday 2026-11-08 16:00]

லாட்டரி சீட்டுக்காகத் தனியாக அமைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் மூலம் இணைந்த நான்கு நண்பர்கள், தற்போது கனடாவின் வரலாற்றிலேயே மிக அதிகப்படியான லொட்டோ மெக்ஸ் ஜக்பாட் பரிசான 90 மில்லியன் டொலர் தொகையை வென்று தங்களது கனவை நனவாக்கியுள்ளனர். ஐடெல்சன் எல்சிகோ, லவ்லின் மால்வர், ஹேஸலின் ஓங் மற்றும் வெல்னா ராமிரெஸ்ஆகிய நால்வரும் அக்டோபர் 20-ஆம் திகதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த குலுக்கலில் இமாலயப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளனர்.



இறந்தவர்களின் சாம்பலில் சூப்: குடும்பமாக குடிக்கும் பழங்குடியினர்!
[Saturday 2026-11-07 08:00]

தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடியினர் மிகவும் வினோதமான சடங்கினை பின்பற்றி வருவது விசித்திரமாக உள்ளது. ஒவ்வொரு பகுதியில் இருக்கும் மக்கள் தங்களுக்கென தனித்துவமான பழக்கங்களையும், பாரம்பரியங்களையும் கடைபிடிப்பது வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் பழங்குடி இன மக்கள் கடைபிடிக்கும் பழக்கம் சற்று விசித்திரமாகவே இருக்கும். ஆனால் தென் அமெரிக்காவில் வாழும் யனோமாமி பழங்குடி இன மக்களைக் குறித்து பல விடயங்களை தெரிந்து கொள்வோம்.



2 மாத குழந்தையின் வயிற்றில் இருந்த முழு வளர்ச்சியடைந்த கரு!
[Monday 2026-10-26 16:00]

2 மாத குழந்தையின் வயிற்றில், முழு வளர்ச்சியடைந்த கரு இருந்த அரிதான நிகழ்வு கண்டறியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், சிந்துனூரை சேர்ந்த 2 மாத ஆண் குழந்தையின் வயிறு வழக்கத்தை விட அதிகமாக வீங்கியிருந்தது. மேலும், சாப்பிட்டதை ஜீரணிக்க முடியாததால், குழந்தை தொடர்ந்து வாந்தி எடுத்ததால் கவலையடைந்த பெற்றோர், சிகிச்சைக்காக குழந்தையை சிந்தானூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.



நீல நிறத்தில் ஒளிரும் கடல்: மும்பை அருகே ஒரு அரிய காட்சி!
[Friday 2026-10-23 17:00]

மும்பை அருகிலுள்ள கடல் ஒன்று இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிர்கிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள மும்பையின் அருகே அமைந்துள்ள கடல் ஒன்றின் நீர், இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிரும் காட்சிகள் வைரலாகிவருகின்றன. மும்பை அருகிலுள்ள அர்னாலா என்னுமிடத்தில் அமைந்துள்ள கடல் நீர், இரவு நேரத்தில் நீல நிற மின்மினிப்பூச்சிகள் நீந்துவதைபோல் ஒளிர்வதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.



உலகிலே முதல்முறை: இந்திய சிறுவனுக்கு கண்ணுக்கு மேல் வளர்ந்த பல்!
[Tuesday 2026-10-20 17:00]

இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, வரலாற்றில் முதல்முறையாக கண்ணுக்கு மேல் வளர்ந்த பல் வளர்ந்துள்ளது. இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது இடது கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் உள்ள கண் குழியின் மேற்பகுதியில் கடந்த சில மாதங்களாக வலியற்ற வீக்கம் இருந்து வந்தது. முதலில் ஒரு லேசான கட்டியாக இருந்தது, விரைவில் இரண்டு கடினமான, வெள்ளை நிறப் புள்ளிகள் தோலைத் துளைத்துக்கொண்டு வெளிவரத் தொடங்கியது.



60 ஆண்டுகளாக வெட்டப்படாத பாட்டியின் 6 மீட்டர் நீள முடி!
[Saturday 2026-10-17 17:00]

வியட்நாமைச் சேர்ந்த 83 வயது பாட்டி ஒருவர் நீண்டு ஆண்டுகளாக முடியை வெட்டாமல் 6 மீற்றர் நீளத்திற்கு வளர்த்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமைச் சேர்ந்த நெஹூயென் தி தின் என்ற பெண், தனது 19 வயதில் ஏற்பட்ட தலைவலிக்கு மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.



90 நிமிடங்கள் தூங்கி ரூ.12 லட்சம் சம்பாதித்த நபர்!
[Friday 2026-10-09 16:00]

ஜப்பானில் நடைபெற்ற 90 நிமிட தூக்க போட்டியில் விரைவாகவும், ஆழ்ந்தும் தூங்கிய சுய்மி ரூ.12 லட்சம் பரிசு வென்றுள்ளார். ஜப்பான், பொதுவாக நீண்ட வேலை நேரம், நீண்ட பயண நேரம் மற்றும் பரபரப்பான இரவு நேரப் பொருளாதாரம் ஆகியவை கொண்ட நாடாக உள்ளதால் அந்த நாட்டு மக்கள் குறைந்த நேரமே தூங்குவதாக கூறப்படுகிறது.



3 மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைவுகளை மீட்டெடுக்கும் சிறுவன்!
[Saturday 2026-09-26 17:00]

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர்.



தெஹ்ரான் வானில் இரவு நேரத்தில் தெரிந்த மர்ம பொருள்!
[Tuesday 2026-09-22 16:00]

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட குறித்த மர்மப் பொருளை, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களது கைத்தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.



1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா!
[Saturday 2026-09-19 07:00]

பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசிடம் உள்ள UFO தொடர்பான கோப்புகளை வெளியிடுமாறு நிர்வாக உத்தரவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த உத்தரவின் கீழ் அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையமான பென்டகன், UFO தொடர்பான வரலாற்று ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது. இதுவரை 6 தொகுப்புகளாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 6 தொகுப்பில் 1952ம் ஆண்டை சேர்ந்த பழமையான காட்சிகள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா