Untitled Document
November 28, 2026 [GMT]
நாளை தீபம்: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 9 உத்தரவுகள் என்னென்ன?
[Friday 2026-11-27 16:00]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நாளை மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்பரங்குன்றம் கோவில், தர்கா மற்றும் மலை முழுவதையும் மத்தியப் பாதுகாப்புப் படையின் (CRPF) கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவும், கோவில் நிர்வாகிகளாக இரண்டு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. நாளை மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்பரங்குன்றம் கோவில், தர்கா மற்றும் மலை முழுவதையும் மத்தியப் பாதுகாப்புப் படையின் (CRPF) கட்டுப்பாட்டில் ஒப்படைக்கவும், கோவில் நிர்வாகிகளாக இரண்டு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

  

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள 9 முக்கிய அதிரடி உத்தரவுகள்

1. நாளை மாலை தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு: கடந்த நவம்பர் 24-ம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாத நிலையில், நாளை (நவம்பர் 28) மாலை மலை உச்சியில் உள்ள கல் தூணில் (தீபத்தூண்) தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

2. சிஆர்பிஎஃப் (CRPF) கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம் மலை: உள்ளூர் போலீசாரின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், திருப்பரங்குன்றம் கோவில், தர்கா மற்றும் ஒட்டுமொத்த மலையின் பாதுகாப்பையும் மத்தியப் பாதுகாப்புப் படையான சிஆர்பிஎஃப் (CRPF) தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

3. கோவில் நிர்வாகிகளாக 2 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க இரண்டு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை நிர்வாகிகளாக உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இவர்களது மேற்பார்வையிலேயே தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். Recommended for you திருப்பரங்குன்றம்..திமுக ரூட் வேறு, தவெக ரூட் வேறு! கோர்ட்டை ஏமாற்றியதால் விஜய் அரசுக்கு பேராபத்து?

4. நீதிபதிகளின் வேதனை: "தற்போதைய சூழ்நிலைக்கு 'அந்தோ பரிதாபம்' (Alas!) என்ற வார்த்தையே பொருத்தமாக இருக்கும்" எனத் தெரிவித்து, உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதற்கு நீதிபதிகள் தங்களது கடும் வேதனையையும், அதிருப்தியையும் பதிவு செய்துள்ளனர்.

5. அதிகாரிகளின் போன் கால் ரெக்கார்ட் (CDR) தாக்கல்: உச்ச நீதிமன்ற உத்தரவை மீறத் திட்டமிட்டதில் தொடர்புடைய நபர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் (CDR) மற்றும் அனைத்துத் தகவல் பரிமாற்ற ஆவணங்களையும் இணைத்துத் தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அந்த ஆவணங்களுடன் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

6. 8 உயர்மட்ட அதிகாரிகளுக்கு அவமதிப்பு நோட்டீஸ்: "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் வேண்டுமென்றே மீறியுள்ளனர் என்பதற்கு முதல் கட்ட ஆதாரங்கள் உள்ளன" எனக் கூறிய நீதிபதிகள், கீழ்க்கண்ட 8 தரப்பினருக்கும் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்: தமிழகத் தலைமைச் செயலாளர் சாய் குமார் (IAS) தமிழக காவல்துறைத் தலைவர் (DGP) மகேஷ் குமார் அகர்வால் (IPS) இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ராஜாராமன் (IAS) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மதுரை காவல் துணை ஆணையர் இனிகோ விஜயன் திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் செல்வி திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர்கள் (Trustees) இவர்கள் அனைவரும் 3 நாட்களுக்குள் தங்களது பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

7. டிசம்பர் 15-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும், கோவில் அறங்காவலர்களும் வரும் டிசம்பர் 15-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

8. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பொதுமக்களும், பக்தர்களும் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

9. தர்காவுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவு: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் நடைபெறும் மத வழிபாடுகள் மற்றும் சடங்குகள் எவ்வித இடையூறுமின்றி அமைதியாகத் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தர்காவுக்குத் தேவையான முழுப் பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்!
[Saturday 2026-11-28 07:00]

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் இன்று திமுக எம்பிக்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்ட ம் , 28ம் தேதி(இன்று)காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.



"சிறையிலேயே இருங்க" - கைதான தவெக எம்எல்ஏவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்!
[Saturday 2026-11-28 07:00]

கலெக்டராக இருக்கும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் நேற்று மாலையில் கைதானார். நள்ளிரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அருள் விக்னேஷ் சாலை மார்க்கமாக கள்ளக்குறிச்சியில் இருந்து கடலூர் சிறைக்கு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்கின்றனர். மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.



தாஜ்மகாலிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட 200 ஆண்டு பழமையான பளிங்குக்கல் பிரித்தானியாவில் ஏலம்!
[Saturday 2026-11-28 07:00]

தாஜ்மகாலிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பழமையான பளிங்குக்கல் பிரித்தானியாவில் ஏலம் விடப்படவுள்ளது. உலகின் புகழ்பெற்ற நினைவுச் சின்னங்களில் ஒன்றான தாஜ்மகாலிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 200 ஆண்டு பழமையான பளிங்குக் கல் ஒன்று, அடுத்த மாதம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஏலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த அரிய பொருள் வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் கலை சேகரிப்பாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.



பள்ளியில் துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன்: லியோ படம் பார்த்து சுட்டதாக வாக்குமூலம்!
[Friday 2026-11-27 16:00]

கேரளாவின் பாலக்காட்டில், லியோ படம் பார்த்து அதை போல் ரீலிஸ் எடுக்க முயற்சித்த 9 ஆம் வகுப்பு மாணவன், பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு வந்து சுட்டதில் சக மாணவரின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது. லியோ படம் பார்த்து துப்பாக்கியால் சுட்ட 9 ஆம் வகுப்பு மாணவன் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருத்தலா பருத்தூர் மேல்நிலைப் பள்ளியில், 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளிக்கு துப்பாக்கியை கொண்டு வந்து தவறுதலாக சக மாணவர் ஒருவரின் தோள்பட்டையில் சுட்டுள்ளார்.



100 வயதை கடந்த முன்னாள் அமைச்சர்கள்: காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற முதல்வர் விஜய்!
[Friday 2026-11-27 16:00]

முன்னாள் அமைச்சர்கள் எச்.வி.ஹண்டே மற்றும் வி.வி.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் முதல்வர் விஜய் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றார். தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த மூத்த அரசியல்வாதிகள் எச்.வி.ஹண்டே, வி.வி.சுவாமிநாதன் ஆகிய இருவரும் நூறு வயதை எட்டியுள்ளனர். மூத்த அரசியல் ஆளுமைகளான இருவரையும் போற்றும் விதமாகவும், சட்டமன்ற ஜனநாயகத்திற்கும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கும் அவர்கள் ஆற்றிய பங்கினை நினைவு கூறும் விதமாகவும் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய் இருவருக்கும் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்.



தமிழகத்தில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி!
[Friday 2026-11-27 16:00]

அம்பாசமுத்திரம், பெருந்துறை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல், கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.



தமிழகத்தை உலுக்கிய கோவை சிறுமி பாலியல் கொலையில் இன்று தீர்ப்பு!
[Friday 2026-11-27 07:00]

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. கடந்த திமுக ஆட்சி, அதற்கு முந்தைய அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை முக்கிய காரணமாக இருந்தது. ஆட்சிகள் மாறினாலும், மாறாத காட்சியாக தவெக ஆட்சியிலும் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதைத்தடுப்பதற்கு காவல்துறை திணறி வருகிறது. கோவை சூலூரில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கோவை போக்சோ நீதிமன்றம் அறிவித்துள்ளது இன்று தீர்ப்பு அறிவிக்கவுள்ளது.



கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு இன்று விசாரணை!
[Friday 2026-11-27 07:00]

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாக கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த முறை நீதிமன்ற கண்டிப்புக்கு பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பெண் மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதாக புகார் எழுந்தது. மேலும், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.



5 தொகுதி இடைத்தேர்தல் தடை வழக்கில் இன்று தீர்ப்பு!
[Friday 2026-11-27 07:00]

தவெக ஆட்சி 6 மாதங்களை கடந்துவிட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்று என சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக ஏராளமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தவெக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் மீதான புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் 6 தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க தவெக தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம். 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கவுள்ளது.



இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடு, மாதாந்திர பணக்கொடை உயர்வு: தொடங்கி வைத்த முதல்வர் விஜய்!
[Thursday 2026-11-26 16:00]

கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 148 புதிய வீடுகளை திறந்து வைத்த முதல்வர் விஜய், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திரப் பணக்கொடையை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு, தமிழ்நாடு அரசால் மாதாந்திரப் பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



7 மாவட்டங்களில் இன்று இரவு கனமழை பெய்யும்!
[Thursday 2026-11-26 16:00]

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை சுமார் 1.5 கி மீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.



அரசு ஆண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
[Thursday 2026-11-26 16:00]

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஆண் ஊழியர்களுக்கும் முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறு விடுப்பு வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஆண் அரசு ஊழியர்களுக்கும் தந்தையர் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.



"தவெக அரசு மீது நம்பிக்கையில்லை" - ஆளுநரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் மனு!
[Thursday 2026-11-26 16:00]

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மனு அளித்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில், தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், மனு அளிக்க வந்த நபரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.



கார்த்திகை தீபத்தில் கருகிய உயிர்: சென்னையை உலுக்கிய சோகம்!
[Thursday 2026-11-26 07:00]

சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன்மேடு கணபதி நகர் பகுதியில் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காப்பாற்ற முயன்ற தந்தைக்கு சுமார் 85 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ள ந்லையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன்மேடு கணபதி நகர் பகுதியில் குறுகிய சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் அமைந்துள்ள நிலையில், பொதுமக்கள் கார்த்திகை தீபத்திற்காக விளக்குகள் ஏற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.



ஏஐ போலி புத்தக விவகாரம்: ஐகோர்ட் அதிருப்தி!
[Thursday 2026-11-26 07:00]

நூலகங்களில் ஏஐ புத்தகங்கள் தயாரிக்கப்பட்ட வழக்கு விசாரணை இப்போது நீதிமன்றத்தில் தீவிரமடைந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இனி முன்னாள் லஞ்ச ஒழிப்புத்துறை தலைவர் ஜி. வெங்கட்ராமன் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்வார் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏஐ புத்தகங்கள் தொடர்பாகவும் சில முக்கிய வாதங்கள் நடந்தன. கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் ஏஐ மூலம் தயாரிக்கப்பட்ட போலியான புத்தகங்கள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பல்வேறு போலி பெயர்களில் புத்தகங்கள் எழுதப்பட்டதாகவும் இதில் மிக பெரிய மோசடி நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.



ஆபாச மெசேஜ் விவகாரத்தை கையில் எடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம்!
[Thursday 2026-11-26 07:00]

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக புகார் எழுந்தது.



கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு வக்காலத்து வாங்கியதால் சிக்கல்?
[Wednesday 2026-11-25 15:00]

கள்ளக்குறிச்சி சர்ச்சைகளில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ. பாவம் என்று வக்காலத்து வாங்கியிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர். அவரது ஸ்டேட்மெண்ட் அப்போதே கடும் அதிர்ப்திகளை காங்கிரஸ் கட்சியில் வெளிப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமான போது, ஆளும் தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். கடந்த நவம்பர் 11-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல்முறை எம்.எல்.ஏ-வான அருள் விக்னேஷ் பாவம்.



தீபத்தூண் மோதலில் திணறும் தவெக அரசு!
[Wednesday 2026-11-25 15:00]

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் பரபரப்பு இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. இந்த பரபரப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடுமா? அடுத்த கார்த்திகை தீபத்தின்போதும் இதே பிரச்சினை வருமா? இந்த வருடம் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இங்கே சுருக்கமாக ஆராய்வோம்..!! ஒருபக்கம் நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு, இன்னொரு பக்கம் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாடு. இதற்கிடையே சட்டப்பேரவையில் மெஜாரிட்டி தொடர்பான ஆதரவு கணக்குகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இருக்கிறது.



உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: 'கரப்பான் பூச்சி' கட்சி போட்டியா?
[Wednesday 2026-11-25 15:00]

உத்தர பிரதேச மாநிலத்தின் தேர்தல் என்பது தேசிய அளவில் கவனிக்கத்தக்க ஒன்றாகும். இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியே, ஒன்றியத்திலும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வரும் ஒன்றாகும். எனவே தான், இந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் மிகவும் கவனிக்கத் தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.



தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை!
[Wednesday 2026-11-25 15:00]

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., குமரிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக ராயலசீமா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. மேலும், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா