Untitled Document
November 25, 2026 [GMT]
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல்: 'கரப்பான் பூச்சி' கட்சி போட்டியா?
[Wednesday 2026-11-25 15:00]

உத்தர பிரதேச மாநிலத்தின் தேர்தல் என்பது தேசிய அளவில் கவனிக்கத்தக்க ஒன்றாகும். இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியே, ஒன்றியத்திலும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வரும் ஒன்றாகும். எனவே தான், இந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் மிகவும் கவனிக்கத் தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தின் தேர்தல் என்பது தேசிய அளவில் கவனிக்கத்தக்க ஒன்றாகும். இந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் கட்சியே, ஒன்றியத்திலும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வரும் ஒன்றாகும். எனவே தான், இந்த மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் மிகவும் கவனிக்கத் தக்க ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

  

இந்நிலையில், வருகின்ற மே (மே-2027) மாதம் உத்தர பிரதேச சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. எனவே, அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் ’இந்தியா’ கூட்டணிக்கும் ’என்.டி.ஏ’ கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, மூன்றாவதாக புதியதாக ஒரு அணியும் களத்தில் இறங்க இருப்பதால் எந்த அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில், தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள ’கரப்பான் பூச்சி மக்கள் கட்சி’யும் (சிஜேபி) தேர்தலில் போட்டியிடுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே, “நாங்கள் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. யார் ஆட்சி அமைக்க வேண்டும்? என்பது குறித்தும் கருத்தும் தெரிவிக்கப் போவதில்லை. ஆனால், தேர்தல்கள் இளைஞரளை மையப்படுத்தியதாகத் தான் இருக்க வேண்டும். குறிப்பாக, சாதி, மதம் சார்ந்த அரசியலைத் தாண்டி, இளைஞர்கள் நலன், வேலைவாய்ப்பு மற்றும் தரமான கல்வி ஆகியவற்றை மையப்படுத்தித் தேர்தல் நடைபெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு வக்காலத்து வாங்கியதால் சிக்கல்?
[Wednesday 2026-11-25 15:00]

கள்ளக்குறிச்சி சர்ச்சைகளில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ. பாவம் என்று வக்காலத்து வாங்கியிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர். அவரது ஸ்டேட்மெண்ட் அப்போதே கடும் அதிர்ப்திகளை காங்கிரஸ் கட்சியில் வெளிப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமான போது, ஆளும் தவெகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு ஆதரவாகக் களமிறங்கினார். கடந்த நவம்பர் 11-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல்முறை எம்.எல்.ஏ-வான அருள் விக்னேஷ் பாவம்.



தீபத்தூண் மோதலில் திணறும் தவெக அரசு!
[Wednesday 2026-11-25 15:00]

மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தின் பரபரப்பு இன்னும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.. இந்த பரபரப்பு இந்த ஆண்டுடன் முடிந்துவிடுமா? அடுத்த கார்த்திகை தீபத்தின்போதும் இதே பிரச்சினை வருமா? இந்த வருடம் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. இங்கே சுருக்கமாக ஆராய்வோம்..!! ஒருபக்கம் நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு, இன்னொரு பக்கம் கோயில் நிர்வாகத்தின் நிலைப்பாடு. இதற்கிடையே சட்டப்பேரவையில் மெஜாரிட்டி தொடர்பான ஆதரவு கணக்குகளையும் கவனிக்க வேண்டிய நிலையில் விஜய் தலைமையிலான தவெக அரசு இருக்கிறது.



தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை!
[Wednesday 2026-11-25 15:00]

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., குமரிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக ராயலசீமா வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. மேலும், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது.



திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தமிழக அரசு எதிர்கொள்ள இருக்கும் பெரிய நெருக்கடி!
[Wednesday 2026-11-25 07:00]

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இப்படி இருக்கையில் தமிழக அரசு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது என வலதுசாரி அமைப்புகள் எச்சரித்துள்ளன. 150 ஆண்டுகளுக்கும் மேல் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தூணில்தான் நேற்றும் தீபம் ஏற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்து அமைப்புகள் கோரிய தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவாகும்.



கள்ளக்குறிச்சி MLA ஆபாச மெசேஜ்: இரவு முழுக்க 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை!
[Wednesday 2026-11-25 07:00]

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிரான விசாரணையைப் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள மூன்று வருவாய்த்துறை அதிகாரிகளிடம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஷாநவாஸ் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இவ்வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங்கிடம், இந்த விசாரணை ஆவணங்கள் அனைத்தும் இன்று அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகின்றன.



சரியான இடத்தில் திருப்பரங்குன்றம் தீபம்: முறியடிக்கப்பட்ட பாஜக கும்பலின் சதி!
[Wednesday 2026-11-25 07:00]

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்பட்ட இடம் தான் மரபு. கலவரத்தை தூண்டும் வகையில், வட மாநிலங்களில் சங் பரிவார் கும்பல் செயல்பட்டது போல இங்கும் முயற்சி செய்தார்கள். அது முறியடிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அமைதியாக, மதச்சார்பின்மையோடு வாழும் மண் என்பது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டப்பட்ட அரசு அலுவலகங்களை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இன்று திறந்து வைத்தார்.



நயினார் நாகேந்திரன் கைது: திருப்பரங்குன்றம் நோக்கி சென்றபோது போலீசார் அதிரடி!
[Tuesday 2026-11-24 16:00]

கார்த்திகை தீபத்திருநாளான இன்று (24-11-26) தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் தீபம் ஏற்றப்படுகிறது. குறிப்பாக திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்வி தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. 100 வருடங்களுக்கு மேலாக உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றுவது வழக்கமாக கொண்டிருக்கும் வேளையில், தர்கா அருகே உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி, பா.ஜ.கவினர் கடந்தாண்டு கோரிக்கை வைத்தனர்.



'பகிரங்கமா மன்னிப்பு கேளுங்க விஜய்' - வானதி சீனிவாசன் காட்டம்!
[Tuesday 2026-11-24 16:00]

பெண் கலெக்டருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்எல்ஏ அருள் விக்னேஷைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், எம்எல்ஏ அருள் விக்னேஷைக் கைது செய்து, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.



விபத்தில் உயிர்பலி வாங்கிவிட்டு நிம்மதியாக தூங்கச் சென்ற அரசியல்வாதியின் மகன்!
[Tuesday 2026-11-24 16:00]

அரசியல்வாதி ஒருவரின் மகன் குடிபோதையில் ஏற்படுத்திய விபத்தில் இருவர் பலியாகியுள்ளார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில், மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள கோஹல்பூர் என்னுமிடத்தில், உறவினர்களான உமேஷ் (Umesh Vilas Patharut, 32) மற்றும் கணேஷ் Ganesh Sunil Patharut, 34) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. கார் மோதியதில் வெகு தூரத்துக்கு தூக்கி வீசப்பட்ட உமேஷும் கணேஷும் உயிரிழந்துவிட்டார்கள். அவர்கள் தூக்கி வீசப்படும் பயங்கர காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.



கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!
[Tuesday 2026-11-24 16:00]

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பெண் மாவட்ட ஆட்சியர் நேற்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!
[Tuesday 2026-11-24 07:00]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி இன்று இன்று அதிகாலையில் அண்ணாமலையார சன்னத்தில் அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா' என கோஷமிட்டு பரவசத்துடன் தரிசனம் செய்தார். தமிழகத்தில் உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும் பிரபலம். ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை நாளில் தீபத்திருவிழா நடக்கும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் திருவிழாவில் மகாதீபம் ஏற்றப்படும்.



இன்று கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா?
[Tuesday 2026-11-24 07:00]

இன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா அல்லது முந்தைய திமுக அரசைப் போலவே தவெக அரசும் அதைத் தடுத்து நிறுத்துமா என்ற பெரும் கேள்வி தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு ஒருபுறம் இருக்க, திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுமார் 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



கொளத்தூர் இடைத் தேர்தலில் ஸ்டாலினா? - ஒரே வார்த்தையில் முடித்த துரைமுருகன்!
[Tuesday 2026-11-24 07:00]

6 சட்டமன்றத் தொகுதி காலியாக இருக்கும் நிலையில், இடைத் தேர்தக் தி.மு.க நிர்வாகிகள் முதற்கொண்டு அடிமட்டத் தொண்டன் வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஒரு நிகழ்வு.. மீண்டும் கொளத்தூர் தொகுதியில ஸ்டாலின் களமிறங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, மு.க. ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டுமென திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கூறியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்துத்துப் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.



கூட்டணி எம்.எல்.ஏ-க்களுடன் முதலமைச்சர் விஜய் திடீர் ஆலோசனை!
[Monday 2026-11-23 16:00]

சென்னை பசுமைவழி சாலையில் உள்ள பொதிகை வளாகத்தின் பாமணி இல்லத்தில், கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



சென்னை தூய்மை பணியாளர்களின் ஊதியம் திடீர் குறைப்பு: பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு!
[Monday 2026-11-23 16:00]

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கான ஒருநாள் ஊதியத்தை 832 ரூபாயிலிருந்து, 762 ரூபாயாக குறைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 24 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கு 2026 ஏப்ரல் முதல் 2027 மார்ச் வரை தினக்கூலியாக 832 ரூபாயாக நிர்ணயித்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.



காவிரி டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு!
[Monday 2026-11-23 16:00]

மேகதாது அணையைக் கட்டினால் யாரும் கேட்க முடியாது என்று துணிச்சலாக கர்நாடக முதலமைச்சர் சவால் விடுகிறார். அவருக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து டெல்டா மாவட்ட உழவர்கள், பொதுமக்கள் கருத்தை அறியவும், அவர்களது கோரிக்கைகளை கேட்கவும் திமுக சார்பில் ஒரு குழு அமைக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.



தமிழக மக்களின் உரிமைக்காக திரிஷா பெயரில் பேரவை தொடங்கிய ரசிகர்கள்!
[Monday 2026-11-23 16:00]

இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற பெயரில் நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் முதல்வரான பின்னர், நடிகை திரிஷாவும் விரைவில் அரசியலுக்கு வருவார் என பேச்சு எழுந்துள்ளது. முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் திரிஷா பங்கேற்றிருந்தார். விரைவில் த்ரிஷாக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்திருந்தார்.



கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு தொல்லை: 7 நாட்கள் முடிந்தும் பதிலில்லை? - டிஜிபிக்கு மகளிர் ஆணையம் கேள்வி!
[Monday 2026-11-23 07:00]

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள விவகாரத்தில், தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. முதல் கடிதமும் 7 நாட்கள் கெடுவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஜே.இ. பத்மஜாவுக்கு, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் தனது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் மாவட்ட ஆட்சியரின் அரசு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று தொல்லை கொடுத்ததாகவும் கடந்த நவம்பர் மாதத் தொடக்கத்தில் தகவல்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.



பிஸ்லெரி தண்ணீர் பாதுகாப்பற்றது: புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கண்டுபிடிப்பு!
[Monday 2026-11-23 07:00]

நாம் வெளியில் செல்லும்போது தாகம் எடுத்தால், பாதுகாப்பான குடிநீர் என்று நம்பி உடனடியாக வாங்குவது பிஸ்லெரி போன்ற பாட்டில் குடிநீரைத்தான். ஆனால், தற்போது அந்த நம்பிக்கையை உடைக்கும் அளவிற்கு பெரிய அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி பாட்டில் குடிநீர் நிறுவனமான பிஸ்லெரி இன்டர்நேஷனல் தயாரிக்கும் குடிநீர், மனிதர்கள் குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறிவித்துள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி வழக்குத் தொடரவும் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.



8 உயிரை காவு வாங்கிய கோர விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!
[Monday 2026-11-23 07:00]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 8 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் சிலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கோர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா