Untitled Document
November 20, 2026 [GMT]
விஎஸ் பாபு இறுதி ஊர்வலம்: உடலை சுமந்து சென்று மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்!
[Friday 2026-11-20 16:00]

கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் தோளில் சுமந்து சென்று இறுதி அஞ்சலியை செலுத்தி இருக்கிறார். விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலகத்தில் அமைச்சர்கள், தவெக எம்எல்ஏ-க்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். சுமார் 100 மீட்டர் தூரம் வரை விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் சுமந்து சென்ற காட்சிகள் தவெகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு நேற்று மதியம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் தோளில் சுமந்து சென்று இறுதி அஞ்சலியை செலுத்தி இருக்கிறார். விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலகத்தில் அமைச்சர்கள், தவெக எம்எல்ஏ-க்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். சுமார் 100 மீட்டர் தூரம் வரை விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் சுமந்து சென்ற காட்சிகள் தவெகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு நேற்று மதியம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

  

செப்டம்பர் 9ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஎஸ் பாபு, 72 நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை தொடர்பாக செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பின் எந்தவொரு மருத்துவ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. நேற்று முன்தினம் விஎஸ் பாபு உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கையை வெளியிட சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, நேற்று விஎஸ் பாபு உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

விஎஸ் பாபுவின் மறைவு தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் பல்வேறு கட்சிகள் சார்பாக நிர்வாகிகள் நேரில் சென்று இறுதி மரியாதையை செலுத்தினர். இந்த நிலையில் விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலம் 4 மணியளவில் தொடங்கியது.

அப்போது விஎஸ் பாபுவின் உடலுக்கு முதல்வர் விஜய் இறுதி மரியாதையை செலுத்தினார். தொடர்ந்து விஎஸ் பாபுவின் உடலை சுமார் 100 மீட்டர் தூரம் தூக்கி சுமந்து சென்ற விஜய், பின்னர் வாகனத்தில் ஏற்றினார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் உடனிருந்தனர். அதேபோல் சென்னை தவெக எம்எல்ஏ-க்களும் உடன் இருந்தனர்.

விஎஸ் பாபுவின் உடல் திருவிக நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. விஎஸ் பாபுவின் மறைவையொட்டி தவெகவின் கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது விஎஸ் பாபு இறுதி ஊர்வலகத்தில் விஜய் பங்கேற்று உடலை சுமந்து சென்ற காட்சிகள் தவெகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அமைச்சர் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
[Friday 2026-11-20 16:00]

Guidance Tamilnadu விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது Guidance Tamilnadu அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.



நகை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன சம்பந்தம்? - வாய்திறந்த நிஷாந்த்!
[Friday 2026-11-20 16:00]

மதுரை நகைக்கடை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நிஷாந்த் கூறியுள்ளதை குறித்து தெரிந்து கொள்வோம். மதுரை காளாவாசல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலை சுமார் 3 மணிக்கு அரங்கேறிய கொள்ளையில் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. போலிசார் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சியினை சோதனை செய்த போது, ஒரு மாதமாக இளைஞர் ஒருவர் பல கெட்டப்பில் வந்து நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஆனால் கையில் இருந்த டாட்டூ இளைஞரைக் காட்டி கொடுத்தது.



டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி!
[Friday 2026-11-20 16:00]

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, தனக்கு எதிராக ஏதேனும் 'லுக்-அவுட் சுற்றறிக்கை' (LOC) பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில், அமலாக்க இயக்குநரகம் (ED), குடிவரவு பணியகம் (Bureau of Immigration) மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) ஆகிய அமைப்புகளிடம் டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விளக்கம் கோரியுள்ளது.



விஎஸ் பாபு மரணத்தில்கூட அரசியல்?
[Friday 2026-11-20 07:00]

விஎஸ் பாபு மரணத்திற்கு இடையே சிலர் இது தொடர்பாக அருவெறுக்கத்தக்க வகையில் வதந்திகளை பரப்பி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக உறுப்பினர் வி.எஸ். பாபு (வயது 75) 71 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலமானார். ஒரு எம்எல்ஏவின் மறைவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் நேரில் சென்றும் அறிக்கைகள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் பரப்பி வரும் பொய்யான தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.



கொளத்தூர் இடைத்தேர்தலில் முக ஸ்டாலின் வெற்றி பெறுவார்: அடித்து சொன்ன மூத்த பத்திரிகையாளர்!
[Friday 2026-11-20 07:00]

கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் மு.க ஸ்டாலின் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என பத்திரிகையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தவெக அவ்வளவு சுலபமாக வெற்றி பெறும் என நான் நம்பவில்லை.. என அவர் தெரிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ், முஸ்லீம் லீக்கை தவிர மற்ற கட்சிகள் தவெகவுக்கு உறுதியாக ஆதரவு தெரிவிக்குமா என கூற முடியாது. தவெகவுக்கும் பொதுத்தேர்தலில் இருந்த ஆதரவு அலை இப்போது இல்லை என்றே கூற முடியும். எனவே இனி நடைபெறும் இடைத்தேர்தல் பொதுத்தேர்தல் அளவுக்கு பரபரப்புடன் இருக்கும் என ரமேஷ் கூறினார்.



விஎஸ் பாபு மரணத்தில் சந்தேகம்: காவல் நிலையத்தில் தேவராஜன் புகார்!
[Friday 2026-11-20 07:00]

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தேவராஜன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் விஎஸ் பாபுவின் மருத்துவ அறிக்கைகளை பாதுகாத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே விஎஸ் பாபு உடல்நிலை குறித்து முறையாக தமிழக அரசு வெளியிடவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.



தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மாரடைப்பால் உயிரிழப்பு!
[Thursday 2026-11-19 16:00]

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ-வான வி.எஸ். பாபு இன்று மாரடைப்பினால் காலாமாகியுள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் தவெக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் 75 வயதான வி.எஸ். பாபு. இவரது வெற்றி ஒட்டுமொத்த தமிகமே கொண்டாடப்பட்டு வந்தது. அதிலும் ஸ்டாலிக்கு இவர் காட்டிய செய்கை இன்று வரை சரியான செயலாக மக்கள் செயல்படுத்தி வருகின்றனர்.



"தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறியுள்ளது" - மு.க.ஸ்டாலின்!
[Thursday 2026-11-19 16:00]

தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் சுமார் ரூ. 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கடந்த மாதம் நாகப்பட்டினத்தில் நடந்த ரூ. 270 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கை குறிப்பிட்டுள்ளார். கேம் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிடிஏ 6 இன்று வெளியான நிலையில் டிரெண்டில் இணைந்து இதனை அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இலங்கைக்குக் கடத்தவிருந்த பீடி இலை மூட்டைகள்: க்யூ பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
[Thursday 2026-11-19 16:00]

இலங்கைக்கு கடத்தவிருந்த 60 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்; க்யூ பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை. கடந்த நவம்பர் 17 அன்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி நகர் பகுதி வெள்ளபட்டி கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜகுமார், இசக்கிமுத்து காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



பள்ளி மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை!
[Thursday 2026-11-19 16:00]

பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. இதனை மீறி மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.



நிஷாந்த்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு!
[Thursday 2026-11-19 07:00]

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ். எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை தனுஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்த யூ டியூபர் நிஷாந்த் (25), அதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழி மீனாட்சி (22), நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் (54), ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திமுக தலைவர்கள் குறித்து ஆபாச பதிவு: போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி!
[Thursday 2026-11-19 07:00]

திமுக தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் சிலர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவுகள் வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் 17 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த புகார்கள் மீதான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி திமுக சட்டப்பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.



“தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பே கடனை செலுத்திய விவசாயிகள் அக்கவுண்டில் பணம் வரும்” - அரசு அறிவிப்பு!
[Thursday 2026-11-19 07:00]

விவசாயிகள் அனைவரும் முழுமையாகப் பயனடையும் வகையில் கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரூ.3,038.83 கோடி கூடுதல் நிதியில் ரூ.2,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய விவசாயிகளுக்கு தள்ளுபடித் தொகை திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபடியின்றி ரூ. 75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. மார்ச் 31 ஆம் தேதி வரை கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி என அறிவிப்பு வெளியிடப்பட்டது.



அண்ணன் சீர்: விண்ணப்பிப்பது எப்படி? - விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
[Tuesday 2026-11-17 16:00]

அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும், மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணன் சீர் திட்டத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டு புடவை வழங்கப்படும்.



கழிவுகளை தமிழகத்திற்கு அனுப்பும் கேரள முதன்மை ஏஜெண்ட் கைது: எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி!
[Tuesday 2026-11-17 16:00]

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளாவிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டி.எஸ்.பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், 'ஐஷர்' (Eicher) ரக சரக்கு வாகனத்தில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டது தெரியவந்தது.



தமிழகத்தில் ஆரஞ்சு அலெர்ட்!
[Tuesday 2026-11-17 16:00]

தமிழகத்தில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு மழை தொடரும். இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



உலக அதிசய பட்டியலில் தஞ்சாவூர் பெரிய கோவில்: மத்திய அரசு பரிந்துரை!
[Tuesday 2026-11-17 16:00]

தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்க உள்ளதாக சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத்​துக்​கான நாடாளு​மன்ற நிலைக் குழுத் தலை​வரும், எம்.பி.யுமான சஞ்​சய்​குமார் ஜா தெரிவித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில், சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.



நகைகளை பிரித்து பதுக்கி வைத்திருந்த இடத்தை சொன்ன நிஷாந்த்!
[Tuesday 2026-11-17 07:00]

கைது செய்து விசாரித்தபோது பதுக்கி வைத்திருந்த இடத்தை நிஷாந்த் கூறியதை அடுத்து, எஞ்சிய 6.2 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். ஏற்கனவே நகைகள் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலும், கபாலீஸ்வரர் மலையிலும் பிரித்துப் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகைக் கடை திறக்கப்பட்டது. மேல் தளங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.



சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!
[Tuesday 2026-11-17 07:00]

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் நவம்பர் 17, 20, 21, 24 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை புறநகர் மின்சார ரயில் (EMU) சேவையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நவம்பர் 17, 20, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் காலை 11.40 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை மின்சாரத் தடை செய்யப்படுகிறது.



ஆதவ் அர்ஜுனா - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணம் என்ன?
[Tuesday 2026-11-17 07:00]

டெய்சி மார்ட்டின் குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சியில் பயணிப்பதும், ஆதவ் அர்ஜுனா தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணித்து வருவதும் ஆதவ் - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மாவுமான திலகவதி கூறியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா