Untitled Document
November 21, 2026 [GMT]
நகை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன சம்பந்தம்? - வாய்திறந்த நிஷாந்த்!
[Friday 2026-11-20 16:00]

மதுரை நகைக்கடை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நிஷாந்த் கூறியுள்ளதை குறித்து தெரிந்து கொள்வோம். மதுரை காளாவாசல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலை சுமார் 3 மணிக்கு அரங்கேறிய கொள்ளையில் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. போலிசார் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சியினை சோதனை செய்த போது, ஒரு மாதமாக இளைஞர் ஒருவர் பல கெட்டப்பில் வந்து நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஆனால் கையில் இருந்த டாட்டூ இளைஞரைக் காட்டி கொடுத்தது.

மதுரை நகைக்கடை கொள்ளைக்கும், மீனாட்சிக்கும் என்ன தொடர்பு என்பதை நிஷாந்த் கூறியுள்ளதை குறித்து தெரிந்து கொள்வோம். மதுரை காளாவாசல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் கடந்த 12ம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாலை சுமார் 3 மணிக்கு அரங்கேறிய கொள்ளையில் 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. போலிசார் சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சியினை சோதனை செய்த போது, ஒரு மாதமாக இளைஞர் ஒருவர் பல கெட்டப்பில் வந்து நோட்டமிட்டது தெரியவந்துள்ளது. ஆனால் கையில் இருந்த டாட்டூ இளைஞரைக் காட்டி கொடுத்தது.

  

இந்நிலையில் மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த சுரேஷ் மகன் நிஷாந்த்(25) கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்த போலிசார், அவர் தலைமறைவாகி இருந்த நிலையில், நிஷாந்தின் தந்தை சுரேஷைக் கைது செய்தனர்.

மேலும் நிஷாந்தின் காதலியும், இன்ஸ்டா பிரபலமுமான மீனாட்சியும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாடக்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட நகைகளையும் மீனாட்சி உதவியால் மீட்டனர்.

பின்பு நிஷாந்த்தும் பேருந்து ஓட்டுநர் மூலமாக கைது செய்யப்பட்டு, நவம்பர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்ட நிலையில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் மாவட்ட முதலாவது விரைவு நீதித்துரை நடுவர் நீதிமன்றத்தில் நிஷாந்த் ஆஜர்படுத்தப்பட்ட போது, தனது தந்தைக்கும், மீனாட்சிக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட நீதிபதி, கொள்ளை வழக்கில் யாருக்கு தொடர்பு என்பதை இப்போது பேசக்கூடாது என்றும் போலிஸ் காவல் குறித்த மனு மீதான விசாரணையே தற்போது நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

காவல்துறை தரப்பில், நிஷாந்த் சுயநினைவுடன் பல நாட்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தினை செய்துள்ளார், ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டுள்ளனர். அப்பொழுது ஒருநாள் மட்டும் நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நிஷாந்தை துன்புறுத்தவோ, அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதி மறுக்கவோ கூடாது என்று நிபந்தனையுடன் அனுமதி அளித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், நிஷாந்தை விசாரணை முடித்து சிறைக்கு அழைத்து செல்ல போலிசார் வேனில் ஏற்றிய போது, நிருபர்கள் கேள்வி எழுப்பினர். நிஷாந்த் ப்ரொ எதாவது சொல்லனுமா? என்று கேட்டனர்.

அதற்கு நிஷாந்த் மீனாட்சிக்கு இந்த சம்பவத்தில் எந்தவித தொடர்பு இல்லை என்று கூறினார். உடனே அருகிலிருந்து காவலர் அவரை பேசவிடாமல் இழுத்து தனது பக்கம் வைத்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



‘முதல்வருக்கு அரோகரா’ - அமைச்சர் மற்றும் பாடகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு!
[Saturday 2026-11-21 18:00]

திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் 'முதல்வருக்கு அரோகரோ' என கோஷம் எழுப்பிய விவகாரத்தில் அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் பாடகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹார விழா கடந்த 15 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின்போது, ஒலிபெருக்கி வழியாக நேரடி வர்ணனை செய்தவர்கள் மற்றும் பக்திப் பாடல் குழுவினர் முருகப்பெருமானுக்கு 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என முழக்கமிட்டனர்.



விஜய் ஆட்சி தானாகவே கவிழும்: எடப்பாடி பழனிசாமி சூசகம்!
[Saturday 2026-11-21 18:00]

தவெக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை.. அது தானாகவே கவிழ்ந்துவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுகவிடம் 41 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருக்கும் போது, நாங்கள் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக ஆட்சி மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக கைடன்ஸ் அமைப்பில் இருந்து ஒரே நேரத்தில் ஊழியர்கள் பணி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கைடன்ஸ் அமைப்பில் பணியாற்றிய ஊழியர்கள் ஆந்திரா அரசுக்காக பணியாற்றி வருகின்றனர்.



மணிப்பூரில் கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் உயிரிழப்பு!
[Saturday 2026-11-21 18:00]

இந்தியாவின் வட கிழக்கு மாகாணம் மணிப்பூரில் நச்சுத்தன்மை கொண்ட கள்ளச்சாராயத்தை அருந்தியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் 11 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயத்தை அருந்தியதாக சந்தேகிக்கப்படும் 180 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை? - உச்சநீதிமன்றம் பரிந்துரை!
[Saturday 2026-11-21 18:00]

இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை விதிக்குமாறு கோரிய மனுவில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்தை மகன், மாமா மகள் என நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து கொள்வது இந்தியாவில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. ஆனால், இத்தகைய திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைக்கு, மரபணு நோய்கள், பிறவிக் குறைபாடுகள் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.



"செஞ்சி சிறுமி சீக்கிரம் கிடைக்கணும்" - யாகம் நடத்திய போலீஸ்!
[Saturday 2026-11-21 07:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமாகி 40 நாட்களாகியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் போலீசார் யாகம் நடத்தி பூஜை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், இது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு. இவரது 7 வயது மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11ம் தேதி இரவு சிறுமி தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.



திருப்பரங்குன்றம் விவகாரம்: விஜய் முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் - மாணிக்கம் தாகூர்!
[Saturday 2026-11-21 07:00]

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தவெக கூடணி அரசு நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நவம்பர் 24 கார்த்திகை தீப நாளன்று தீபம் ஏற்றிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீபத்தை ஏற்ற தேவஸ்தான நிர்வாகிகள், அதிகாரிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது? - நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு!
[Saturday 2026-11-21 07:00]

காவல்துறை காவலில் எடுக்கப்பட்டிருந்த நிஷாந்த் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர், போலீஸ் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளார். மதுரை பைபாஸ் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், கடந்த நவம்பர் 11ம் தேதி நள்ளிரவு சுமார் ₹15 கோடி மதிப்பிலான 11.384 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கட்டிடத்தின் லிஃப்ட் பகுதி வழியாக உள்ளே புகுந்து, சிசிடிவி கேமராக்களை மறைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றார்.



விஎஸ் பாபு இறுதி ஊர்வலம்: உடலை சுமந்து சென்று மரியாதை செலுத்திய முதல்வர் விஜய்!
[Friday 2026-11-20 16:00]

கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் தோளில் சுமந்து சென்று இறுதி அஞ்சலியை செலுத்தி இருக்கிறார். விஎஸ் பாபுவின் இறுதி ஊர்வலகத்தில் அமைச்சர்கள், தவெக எம்எல்ஏ-க்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். சுமார் 100 மீட்டர் தூரம் வரை விஎஸ் பாபுவின் உடலை முதல்வர் விஜய் சுமந்து சென்ற காட்சிகள் தவெகவினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு நேற்று மதியம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.



அமைச்சர் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி!
[Friday 2026-11-20 16:00]

Guidance Tamilnadu விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது Guidance Tamilnadu அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.



டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடிய அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி!
[Friday 2026-11-20 16:00]

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, தனக்கு எதிராக ஏதேனும் 'லுக்-அவுட் சுற்றறிக்கை' (LOC) பிறப்பிக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் அடிப்படையில், அமலாக்க இயக்குநரகம் (ED), குடிவரவு பணியகம் (Bureau of Immigration) மற்றும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO) ஆகிய அமைப்புகளிடம் டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை விளக்கம் கோரியுள்ளது.



விஎஸ் பாபு மரணத்தில்கூட அரசியல்?
[Friday 2026-11-20 07:00]

விஎஸ் பாபு மரணத்திற்கு இடையே சிலர் இது தொடர்பாக அருவெறுக்கத்தக்க வகையில் வதந்திகளை பரப்பி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தவெக உறுப்பினர் வி.எஸ். பாபு (வயது 75) 71 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலமானார். ஒரு எம்எல்ஏவின் மறைவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் நேரில் சென்றும் அறிக்கைகள் வாயிலாகவும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் பரப்பி வரும் பொய்யான தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.



கொளத்தூர் இடைத்தேர்தலில் முக ஸ்டாலின் வெற்றி பெறுவார்: அடித்து சொன்ன மூத்த பத்திரிகையாளர்!
[Friday 2026-11-20 07:00]

கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் மு.க ஸ்டாலின் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என பத்திரிகையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தவெக அவ்வளவு சுலபமாக வெற்றி பெறும் என நான் நம்பவில்லை.. என அவர் தெரிவித்தார். ஏற்கனவே காங்கிரஸ், முஸ்லீம் லீக்கை தவிர மற்ற கட்சிகள் தவெகவுக்கு உறுதியாக ஆதரவு தெரிவிக்குமா என கூற முடியாது. தவெகவுக்கும் பொதுத்தேர்தலில் இருந்த ஆதரவு அலை இப்போது இல்லை என்றே கூற முடியும். எனவே இனி நடைபெறும் இடைத்தேர்தல் பொதுத்தேர்தல் அளவுக்கு பரபரப்புடன் இருக்கும் என ரமேஷ் கூறினார்.



விஎஸ் பாபு மரணத்தில் சந்தேகம்: காவல் நிலையத்தில் தேவராஜன் புகார்!
[Friday 2026-11-20 07:00]

கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தேவராஜன் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் விஎஸ் பாபுவின் மருத்துவ அறிக்கைகளை பாதுகாத்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ஏற்கனவே விஎஸ் பாபு உடல்நிலை குறித்து முறையாக தமிழக அரசு வெளியிடவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.



தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மாரடைப்பால் உயிரிழப்பு!
[Thursday 2026-11-19 16:00]

கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ-வான வி.எஸ். பாபு இன்று மாரடைப்பினால் காலாமாகியுள்ளார். திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் தவெக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் 75 வயதான வி.எஸ். பாபு. இவரது வெற்றி ஒட்டுமொத்த தமிகமே கொண்டாடப்பட்டு வந்தது. அதிலும் ஸ்டாலிக்கு இவர் காட்டிய செய்கை இன்று வரை சரியான செயலாக மக்கள் செயல்படுத்தி வருகின்றனர்.



"தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறியுள்ளது" - மு.க.ஸ்டாலின்!
[Thursday 2026-11-19 16:00]

தமிழ்நாடு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் சுமார் ரூ. 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மற்றும் கடந்த மாதம் நாகப்பட்டினத்தில் நடந்த ரூ. 270 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கை குறிப்பிட்டுள்ளார். கேம் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிடிஏ 6 இன்று வெளியான நிலையில் டிரெண்டில் இணைந்து இதனை அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



இலங்கைக்குக் கடத்தவிருந்த பீடி இலை மூட்டைகள்: க்யூ பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை!
[Thursday 2026-11-19 16:00]

இலங்கைக்கு கடத்தவிருந்த 60 லட்சம் மதிப்பிலான பீடி இலை மூட்டைகள் பறிமுதல்; க்யூ பிரிவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை. கடந்த நவம்பர் 17 அன்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி நகர் பகுதி வெள்ளபட்டி கடற்கரை பகுதியில் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர், தலைமை காவலர் இருதயராஜகுமார், இசக்கிமுத்து காவலர்கள் பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.



பள்ளி மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது - தமிழக அரசு எச்சரிக்கை!
[Thursday 2026-11-19 16:00]

பள்ளிகளில் தூய்மைப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. மீறினால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் கழிவறைகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. இதனை மீறி மாணவர்களை தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.



நிஷாந்த்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு!
[Thursday 2026-11-19 07:00]

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ். எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை தனுஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்த யூ டியூபர் நிஷாந்த் (25), அதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழி மீனாட்சி (22), நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் (54), ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.



திமுக தலைவர்கள் குறித்து ஆபாச பதிவு: போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி!
[Thursday 2026-11-19 07:00]

திமுக தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் சிலர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவுகள் வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் 17 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த புகார்கள் மீதான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி திமுக சட்டப்பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.



“தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பே கடனை செலுத்திய விவசாயிகள் அக்கவுண்டில் பணம் வரும்” - அரசு அறிவிப்பு!
[Thursday 2026-11-19 07:00]

விவசாயிகள் அனைவரும் முழுமையாகப் பயனடையும் வகையில் கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரூ.3,038.83 கோடி கூடுதல் நிதியில் ரூ.2,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய விவசாயிகளுக்கு தள்ளுபடித் தொகை திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபடியின்றி ரூ. 75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. மார்ச் 31 ஆம் தேதி வரை கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி என அறிவிப்பு வெளியிடப்பட்டது.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா