Untitled Document
November 19, 2026 [GMT]
நிஷாந்த்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் மனு!
[Thursday 2026-11-19 07:00]

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ். எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை தனுஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்த யூ டியூபர் நிஷாந்த் (25), அதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழி மீனாட்சி (22), நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் (54), ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ். எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை தனுஷ்க் நகைக்கடையில் கொள்ளையடித்த யூ டியூபர் நிஷாந்த் (25), அதற்கு உடந்தையாக இருந்த அவரது தோழி மீனாட்சி (22), நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் (54), ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  

மதுரையில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகைக் கடை திறக்கப்பட்டது. மேல் தளங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நகைக்கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. நகைக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி போலீசார் சோதனை நடத்தினர்.

கொள்ளைக்கு முன்பாக ஒரு மர்ம நபர் வாடிக்கையாளரை போல பலமுறை கடைக்கு வந்து சென்றதைக் கண்டறிந்தனர். கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபர் மதுரையைச் சேர்ந்த நிஷாந்த் என்பது கண்டறியப்பட்டது. நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் மீனாட்சி, நிஷாந்த்தின் தந்தை சுரேஷ் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்த் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். தலைமறைவாக இருந்த நிஷாந்த்தை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்தில் நிஷாந்த் பயணம் செய்தது தெரியவந்தது.

சந்தேகப்படும்படியாக இருந்த அவரை பேருந்து நடத்துனர் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து தருமபுரி அதியமான் கோட்டை காவல்துறையினர் பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேஷம்பட்டி என்ற இடத்தில் நிஷாந்த்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நிஷாந்தை, போலீசார் மதுரைக்கு அழைத்து வந்தனர். நிஷாந்த்தை 17 ஆம் தேதி காலை, 9 மணிக்கு மதுரை குற்றவியல் மாஜிஸ்திரேட் எண் 5ல் நீதிபதி லட்சுமி பிரியா முன்னிலையில், அவரது வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். டிசம்பர் 1 ஆம் தேதி வரை அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் நிஷாந்த் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தோழி மீனாட்சியிடம் இருந்து 5.5 கிலோ நகைகள் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 11 கிலோ 900 கிராம் நகைகள் மொத்தமாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்த்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ்.எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இந்த விசாரணையின் போது பகல் 12 மணி அளவில் நிஷாந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, தனது கடன்களை அடைக்கவும், யூடியூப் சேனலை மேம்படுத்துவதற்காகவும் தான் நகைக்கடையில் கொள்ளை அடித்ததாகவும், மீனாட்சிக்கு இதில் தொடர்பு இல்லை என்றும் நிஷாந்த் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது. நிஷாந்த் உண்மையைச் சொல்கிறாரா அல்லது மீனாட்சியை காப்பாற்றுவதற்காக மாற்றிச் சொல்கிறாரா என போலீசார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.com



திமுக தலைவர்கள் குறித்து ஆபாச பதிவு: போலீசாருக்கு ஐகோர்ட் கேள்வி!
[Thursday 2026-11-19 07:00]

திமுக தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை பதிவிட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழிவுபடுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக சமூக வலைதளங்களில் தவெக ஆதரவாளர்கள் சிலர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவுகள் வெளியிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் 17 புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்த புகார்கள் மீதான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி திமுக சட்டப்பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.



“தள்ளுபடி அறிவிப்புக்கு முன்பே கடனை செலுத்திய விவசாயிகள் அக்கவுண்டில் பணம் வரும்” - அரசு அறிவிப்பு!
[Thursday 2026-11-19 07:00]

விவசாயிகள் அனைவரும் முழுமையாகப் பயனடையும் வகையில் கூட்டுறவுப் பயிர்க் கடன் தள்ளுபடிக்கான ரூ.3,038.83 கோடி கூடுதல் நிதியில் ரூ.2,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதிக்கு முன்னர் கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்திய விவசாயிகளுக்கு தள்ளுபடித் தொகை திரும்ப அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபடியின்றி ரூ. 75,000 வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்தது. மார்ச் 31 ஆம் தேதி வரை கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி என அறிவிப்பு வெளியிடப்பட்டது.



அண்ணன் சீர்: விண்ணப்பிப்பது எப்படி? - விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!
[Tuesday 2026-11-17 16:00]

அண்ணன் சீர் திட்டத்திற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. திருமணத்திற்கான மணமக்கள் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதை நிறைவு செய்திருக்க வேண்டும், மணப்பெண்னின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும், திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து திருமண நாள் வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அண்ணன் சீர் திட்டத்தில் திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டு புடவை வழங்கப்படும்.



கழிவுகளை தமிழகத்திற்கு அனுப்பும் கேரள முதன்மை ஏஜெண்ட் கைது: எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி!
[Tuesday 2026-11-17 16:00]

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே சின்னக்கோவிலான்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கேரளாவிலிருந்து கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டி.எஸ்.பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், 'ஐஷர்' (Eicher) ரக சரக்கு வாகனத்தில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டது தெரியவந்தது.



தமிழகத்தில் ஆரஞ்சு அலெர்ட்!
[Tuesday 2026-11-17 16:00]

தமிழகத்தில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு நாட்களுக்கு மழை தொடரும். இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



உலக அதிசய பட்டியலில் தஞ்சாவூர் பெரிய கோவில்: மத்திய அரசு பரிந்துரை!
[Tuesday 2026-11-17 16:00]

தஞ்சாவூர் பெரிய கோவிலை உலக அதிசய பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்க உள்ளதாக சுற்​றுலா மற்​றும் கலாச்​சா​ரத்​துக்​கான நாடாளு​மன்ற நிலைக் குழுத் தலை​வரும், எம்.பி.யுமான சஞ்​சய்​குமார் ஜா தெரிவித்துள்ளார். மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில், சோழர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.



நகைகளை பிரித்து பதுக்கி வைத்திருந்த இடத்தை சொன்ன நிஷாந்த்!
[Tuesday 2026-11-17 07:00]

கைது செய்து விசாரித்தபோது பதுக்கி வைத்திருந்த இடத்தை நிஷாந்த் கூறியதை அடுத்து, எஞ்சிய 6.2 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். ஏற்கனவே நகைகள் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலும், கபாலீஸ்வரர் மலையிலும் பிரித்துப் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி அன்று மூன்று மாடியுடன் கட்டப்பட்ட தனிஷ்க் தங்க நகைக் கடை திறக்கப்பட்டது. மேல் தளங்களில் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கடைக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.



சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!
[Tuesday 2026-11-17 07:00]

சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகளில் நவம்பர் 17, 20, 21, 24 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கல்பட்டு - சென்னை கடற்கரை புறநகர் மின்சார ரயில் (EMU) சேவையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னை - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நவம்பர் 17, 20, 21 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - விழுப்புரம் வழித்தடத்தில் காலை 11.40 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை மின்சாரத் தடை செய்யப்படுகிறது.



ஆதவ் அர்ஜுனா - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணம் என்ன?
[Tuesday 2026-11-17 07:00]

டெய்சி மார்ட்டின் குடும்பத்தினர் வெவ்வேறு அரசியல் கட்சியில் பயணிப்பதும், ஆதவ் அர்ஜுனா தனது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணித்து வருவதும் ஆதவ் - டெய்சி மார்டின் பிரிவுக்கு காரணமாக இருக்கலாம் என தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியும், ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மாவுமான திலகவதி கூறியுள்ளார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மகள் டெய்சி மார்ட்டினை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2012 ஆம் ஆண்டு இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.



“புயல் எப்போது கரையைக் கடக்கும்” - வானிலை ஆய்வு மையம் தகவல்!
[Monday 2026-11-16 16:00]

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் இன்று (16.11.2026) மதியம் 01:15 மணி நிலவரப்படி வெளியிட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறவுள்ள நிலையில், நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



செக்கானூரணி காவல் நிலைய சம்பவம்: மருத்துவ பரிசோதனை அறிக்கையில் வெளியான பகீர் தகவல்கள்!
[Monday 2026-11-16 16:00]

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான பாலகிருஷ்ணன், செக்கானூர் காவல் நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காணப்பட்ட காயங்கள் குறித்த விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.



விரைவில் திமுக ஆட்சி உதயமாகத்தான் போகிறது: மு.க.ஸ்டாலின்!
[Monday 2026-11-16 16:00]

திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் சகோதரர் இல்லத் திருமண விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக விமர்சித்தார். மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்குப் பதிலாக ஏமாற்றமே கிடைத்துள்ளதாகக் கூறினார்.



அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - டெய்சி விவாகரத்து!
[Monday 2026-11-16 16:00]

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் ஆதவ் அர்ஜூனா. இவர் லொட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதியின் மகள் டெய்சி என்பவரை 2012 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்திருந்தார். Arise Investments நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வரும் டெய்சியின் சொத்து மதிப்பு, ரூ.162.14 கோடி என ஆதவ் அர்ஜுனா 2026 தேர்தல் பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.



மதுரை போலீஸிடமே கண்ணாமூச்சி ஆடும் 21 கோடி கொள்ளையன்!
[Monday 2026-11-16 07:00]

மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த நபரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். காதலியும், தந்தையும் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியான நிஷாந்த் மட்டும் இடத்தை மாற்றி மாற்றி பதுங்கி வருகிறார். 4 நாட்களாகியும் அவரைப் பிடிக்க முடியாததால், தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் தொடர்ந்து போலீசார் தேடுதல் நடத்தி வருகின்றனர். மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலையில் நேரு நகர் பகுதியில் தனிஷ்க் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் உள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இந்தக் கடை திறக்கப்பட்டது.



கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம்!
[Monday 2026-11-16 07:00]

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்திருக்கும் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கட்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தவெக அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்து குறித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை அறிக்கை கேட்டிருப்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.



புத்தக கொள்முதல் முறைகேடு: கமிட்டியில் இடம்பெற்றிருந்த 5 பேர் அதிரடி சஸ்பெண்ட்!
[Monday 2026-11-16 07:00]

புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக துணை தலைமை நூலகர் உள்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது. அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் ஆகிய பெயர்களில் போலி புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 1,800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.



சூரனை வதம் செய்யும் முருகப்பெருமான்: திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!
[Sunday 2026-11-15 15:00]

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளது. முருகர் சூரபத்மனை வதம் செய்வதை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கியது.



தனிஷ்க் கொள்ளை: நிஷாந்த் பதுங்கியுள்ள இடத்தை போட்டுக்கொடுத்த மீனாட்சி?
[Sunday 2026-11-15 15:00]

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், போலீசாரின் விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி கொடுத்த முக்கியத் தகவலின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி நிஷாந்தை போலீசார் மிக நெருங்கிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாலை நகைக்கடையின் லிப்ட் பராமரிப்புப் பகுதி வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர், சுமார் 10 கிலோ தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார்.



செக்கானூரணி காவல் நிலைய விவகாரம்: 3 போலீசாருக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்!
[Sunday 2026-11-15 15:00]

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், கடந்த 2ஆம் தேதி (02.11.2026) தேவாரத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டி – மதுரை சாலையில் லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாந்தூர் அருகே லாரியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் ஏலக்காய் 60 மூட்டைகள் தீக்கிரையானதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.



பேருந்து நடத்துநர் மீது தாக்குதல் : இருவர் கைது!
[Sunday 2026-11-15 15:00]

சென்னை கொடுங்கையூரில் அரசு பேருந்து நடத்துநரை நான்கு இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி, முன்விரோதம் காரணமாக 2சி வழித்தட அரசுப் பேருந்தின் நடத்துநர் நித்தியானந்தன் என்பவருக்கும் நான்கு இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், இளைஞர்கள் நடத்துநர் நித்தியானந்தனைத் தாக்கியதுடன், அவரது காதைக் கடித்தும், முதுகில் கத்தியால் தாக்கியும் உள்ளனர்.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா