Untitled Document
November 15, 2026 [GMT]
”இணையத்தால் இதயங்களை இணைப்போம்”: தமிழகத்தில் 2100 பேர் பங்கேற்பு!
[Saturday 2026-11-14 16:00]

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ’இணையத்தால் இதயங்களை இணைப்போம்’ நிகழ்ச்சியை தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தொடங்கி வைத்தார். திருச்சி சமயபுரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இணையத்தால் இதயங்களை இணைப்போம் நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்  தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தில் இருந்து 2100 பேர்கள் பங்கேற்றார்கள்.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், ’இணையத்தால் இதயங்களை இணைப்போம்’ நிகழ்ச்சியை தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தொடங்கி வைத்தார். திருச்சி சமயபுரத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இணையத்தால் இதயங்களை இணைப்போம் நிகழ்ச்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகத்தில் இருந்து 2100 பேர்கள் பங்கேற்றார்கள்.

  

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 14..11.2026 (சனிக்கிழமை) அன்று காலை 11 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இணையதள சந்திப்பு நிகழ்ச்சி, திருச்சி சமயபுரம் சுங்கச் சாவடி அருகே உள்ள எமரால்டு பேலஸ் திருமண மண்டபத்தில் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. சனிக்கிழமை காலை 11 மணிக்கு, நிகழ்ச்சிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தலைமையேற்று கோடியேற்றி வைத்தார்.

நிகழ்ச்சியை மாநில துணைச் செயலாளர் லாலபேட்டை அப்துல் ரஹ்மான், ரப்பானி கிரா அத் ஒதி தொடங்கி வைத்தார்.விழாவிற்கு வந்த அனைவரையும் மாநில துணைச் செயலாளர் ஆடுதுறை ஜமால் முஹம்மது இப்ராஹிம் வரவேற்றார்.

இணையத்தால் இதயங்களை இணைப்போம் நிகழ்ச்சியை தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் தொடங்கி வைத்து பல்வேறு கருத்துக்களை குறித்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவருமான கே. நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை குறித்து பேசினார்கள். தமிழகத்தில் இருந்து 2100 பேர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

விழாவில் இணையத்தால் இதயங்களை இணைப்போம் நிகழ்ச்சியில் வார் ரூம் மற்றும் யூடியூப் சேனல் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது. மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான், நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசியதாவது, ”இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடத்த வேண்டும் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு ஒவ்வொரு மண்டலமாக பிரிக்கப்பட்டு அவர்களை எப்படி செயல்பாட வேண்டும். இந்த நிகழ்ச்சி மூலமாக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை இணையதளம் மூலமாக எப்படி பதிவு செய்யப்பட வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆ. கா. அ. அப்துஸ் ஸமது சிராஜூல் மில்லத் நூறாண்டு விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், “முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் கோரிக்கை வைத்தது அடிப்படையில் ஆ. கா. அ. அப்துஸ் ஸமது சிராஜூல் மில்லத் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்துவதற்கு அரசு முயற்சிகள் செய்து வருகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்வதோடு, அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் எதிர் பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், தேர்தலை எதிர் கொள்வது பற்றி சென்னையைச் சேர்ந்த தேர்தல் வல்லுநர் மணிகண்டன் பேசுகையில், தேர்தலை எப்படி எல்லாம் கையாள வேண்டும்? எப்படி யுத்திகளை எதிர் கொள்வது? என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பேசினார்.

சென்னையைச் சேர்ந்த தேர்தல் வியூகர் பார்த்திபன் பேசுகையில், “சமூக வளைதளங்களில் எப்படி எல்லாம் கட்சியை வளப்படுத்த வேண்டும். தேர்தல் நேரங்களில் சமூக வளைதளங்களில் எப்படி செயல்பட வேண்டும்? இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியும்” என்பதை விரிவாக எடுத்துரைத்துப் பேசினார்.

2 வது அமர்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொருளாளர் எம். எஸ். ஏ. ஷாஜஹான், தேசிய துணைச் செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பாத்திமா முஸப்பர், தேசிய துணைச் செயலாளர் அப்துல் பாசித், சட்டமன்ற கட்சியின் குழுத் தலைவர் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். பி. சையது பாரூக் பாஷா, மாநில செயலாளர் காயல் மகபூப் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.

விழாவில் இணையத்தால் இதயங்களை இணைப்போம் மூலம், எப்படி கட்சியை வளர்த்து கொள்வது? என்ற விவாதம் நடைபெற்றது. விழாவில் இணையத்தால் இதயங்களை இணைப்போம் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் மாநில துணைச் செயலாளர்கள் லாலபேட்டை அப்துல் ரஹ்மான், மேலப்பாளையம் அப்துல் ஜப்பார், தேசிய மாணவரணி துணைத்தலைவர் புளியங்குடி அல் அமீன், தென்காசி மாவட்ட செயலாளர் சையது பட்டாணி, தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகள் சல்மான் முஹம்மது, கோம்பை நிஜாம்தீன், ரஹ்மான் ஹீசைன், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், வடக்கு மாவட்ட செயலாளர் நிஜாம்தீன், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கே. எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் மற்றும் தமிழகத்தில் இருந்து மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், உள்ளிட்ட தமிழகத்தில் இருந்து 2100 பேர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியில் மாநில செயலாளர் புழல் ஷேக் முஹம்மது நன்றி கூறினார்.

  
   Bookmark and Share Seithy.com



செஞ்சி சிறுமியின் குடும்பத்தை விஜய் ஏன் சந்திக்கவில்லை? - நேரில் சென்ற கனிமொழி கேள்வி!
[Saturday 2026-11-14 16:00]

செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் காணாமல் போன 7 வயது சிறுமி ஹேமலதாவை மீட்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை விஜய் ஏன் நேரில் சந்திக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராம குளக்கரை தெருவில் வசிக்கும் வடிவேலு- பவானி தம்பதியினரின் ஏழு வயது மகள் ஹேமலதா. இவர் கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு காணாமல் போனார்.



ஓய்வூதிய திட்டம் 23 ஆண்டுகளுக்கு மேலாக மறுப்பு: அரசு ஊழியர்கள் அதிரடி முடிவு!
[Saturday 2026-11-14 16:00]

பழைய ஓய்வூதிய திட்டம் 23 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்பட்டு வருகிறது.. குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரமாக உயர்த்த வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.இது போன்ற கோரிக்களை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் மாநில அளவில் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டையில் பேட்டி அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் 45-வது ஆண்டு துவக்க விழா மற்றும் கருத்தரங்க நிகழ்ச்சி நடந்தது.



ஜெம் வீரமணி விவகாரம்: வெளியான பகீர் வாக்குமூலம்!
[Saturday 2026-11-14 16:00]

சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், ஏழு போக்சோ வழக்குகள் மற்றும் தற்கொலைக்குத் தூண்டியதாக ஒரு வழக்கு என மொத்தம் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக ஜெம் வீரமணி, காந்தி, மகேந்திர சிம்மன், கணேசன், பார்த்திபன், லாசர், பாபு, சக்திவேல், சீனிவாசன் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தமிழகத்தில் மோசமான நிலைமை: நெல் – அரிசி – பருப்பு வைத்துக்கொள்ள திடீர் கட்டுப்பாடு!
[Saturday 2026-11-14 07:00]

தமிழகத்தில் அரிசி, பருப்பு, நெல் விலைகள் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்ய நெல், அரிசி, பருப்புகளை இருப்பு வைக்க அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கூடுதல் தலைமை செயலாளர் பி அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: நெல் அல்லது அரிசியை மொத்தமாக விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் அதிகபட்சமாக 2 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நெல் அல்லது அரிசியை இருப்பு வைக்கலாம். சில்லரை விலைக்கு விற்பனை செய்வோர் ஒவ்வொரு கடையிலும் அதிகபட்சமாக 8 மெட்ரிக் டன் வரை இருப்பு வைக்கலாம்.



ஸ்ரீவைகுண்டம் முதல் கள்ளக்குறிச்சி வரை: பாலியல் வழக்குகளில் சிக்கிய தவெக நிர்வாகிகள்!
[Saturday 2026-11-14 07:00]

கட்சி ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக ஆச்சர்யப்படுத்தியுள்ளது. தவெக வெற்றிக்கு பெண் வாக்காளர்கள் முக்கிய காரணம். பெண்கள் பாதுகாப்புக்காக முதலமைச்சர் விஜய் சிங்க பெண் படை ஆரம்பித்தார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக தவெக நிர்வாகிகள் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். பெண் கலெக்டர், மகளிரணி நிர்வாகிகள் என தவெக நிர்வாகிகளிடம் யாரும் தப்பவில்லை. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிராக அவர்களின் நிர்வாகிகள் செய்த அட்ராசிட்டி இதோ.



சென்னையில் ஐ.டி இளைஞர்களை குறி வைத்த நைஜீரியன்: மெத்தம்பெட்டமைன் சப்ளை செய்தவர் அதிரடி கைது!
[Saturday 2026-11-14 07:00]

சென்னை தாம்பரம், பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐ.டி ஊழியர்களுக்கு 'மெத்தம்பெட்டமைன்' போதைப்பொருள் விற்று வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை தாம்பரம் அடுத்த பல்லாவரம் பகுதியில் ஐ.டி ஊழியர்களுக்கு மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பல்லாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார், பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க ஐ.டி ஊழியர் ஒருவர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதை கண்டறிந்தனர்.



ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்: விசாரிக்க எனக்கு அதிகாரம் கொடுக்கவில்லை - வன்னி அரசு சொன்ன வார்த்தை!
[Friday 2026-11-13 16:00]

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக விசாரிக்க தனக்கு எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் அறிக்கை கேட்டால், விசாரிக்க தயாராக உள்ளேன் என்று கூறிய வன்னி அரசு, ஆட்சியர் பத்மஜா சட்டத்தின் படி செயல்படுவதாக தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



"சிறுமிக்கு பாலியல் தொல்லை, வெட்கமா இல்லையா?" - விஜய்க்கு இபிஎஸ் கேள்வி!
[Friday 2026-11-13 16:00]

குழந்தைகள் நாளில் திருப்பூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் வீரபாண்டி அருகே 11 வயது சிறுமி கடத்தப்பட்டு , கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் , பெரியபாளையம் அருகே மாணவி மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் இவ்வருட குழந்தைகள் தினத்தை ஒட்டி வரும் செய்திகள் மக்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.



செஞ்சி சிறுமி பெற்றோரின் வங்கிக் கணக்கு, செல்போன்கள் ஆய்வு!
[Friday 2026-11-13 16:00]

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். சிறுமி காணாமல் சென்றது குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்த வழக்கைக் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



ரசகுல்லா என நினைத்து வெடிகுண்டை கடித்த நபர் உயிரிழப்பு!
[Friday 2026-11-13 16:00]

மத்தியபிரதேச மாநிலத்தில், தனக்கு ரசகுல்லா எனக்கூறி வழங்கபட்டை வெடிகுண்டை கடித்த 35 வயதான ராஜேந்திர பரோதியா உயிரிழந்துள்ளார். மத்தியபிரதேச மாநிலம், திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சந்தா கிராமத்தை சேர்ந்த 35 வயதான ராஜேந்திர பரோதியா குடும்பத்தினருடன் உணவருந்தி விட்டு, இரவு நேரத்தில் முற்றத்தில் அமர்ந்து தீ மூட்டியுள்ளார். இரவு 8 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த ராம்பகத் பரோதியா என்ற கிராமவாசி, அவருக்கு அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.



விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்: திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்!
[Friday 2026-11-13 07:00]

அரசு ஊழியர்கள் பலர், விஜய் அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.. நிர்வாகத்தை பொறுத்தவரையில் எம்ஜிஆர் சந்தித்த சிக்கல்களை இப்போது விஜய் சந்திக்கிறார். கட்சியை நடத்துவதைப் பொறுத்தவரையில் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சில சிக்கல்களும் இப்போது விஜய்க்கு இருக்கின்றன என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார். Retroluxe என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பத்திரிகையாளர் மணி, "2026 பொதுத்தேர்தலில் விஜய்க்கு வாக்களித்த அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இன்று விஜய் அரசுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள். இதற்கு உதாரணம் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் பதிவான தபால் வாக்குகள்.



பாலியல் தொல்லை + ஜாதி சொல்லி திட்டுகிறார்: கோவை தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் நிர்வாகி புகார்!
[Friday 2026-11-13 07:00]

கோவை காரமடை தவெக ஒன்றிய செயலாளர் கருப்பசாமி மீது கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவரது ஆசைக்கு இணங்காமல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜாதி ரீதியாக திட்டி கட்சியை விட்டு செல்லும்படி மிரட்டுவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். இதுதொடர்பாக அந்த தவெக பெண் நிர்வாகி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: ''நான் தவெகவில் காரமடை ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றின் செயலாளராக இரண்டரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தேன். தவெகவில் முதல் மீட்டிங் நான் தான் செய்தேன். தேர்தல் முடிந்து ஒரு மாதம் இருக்கும். காரமடை ஒன்றிய செயலாளர் கருப்பசாமி அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டினார்.



IPS அருண் உள்பட 7 போலீஸ் அதிகாரிகள் வழக்கில் சேர்ப்பு: ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் ட்விஸ்ட்!
[Friday 2026-11-13 07:00]

பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான 'போக்சோ' வழக்கில் இன்று சிறப்பு புலனாய்வு குழுவினர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த குற்றப்பத்திரிகையில் 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அருண் உள்பட 2 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆவார்கள். இதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு: 'ஜெம் கிரானைட்ஸ்' தொழிலதிபரான ஜெம் வீரமணி 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



எஸ்பி வேலுமணிக்கு சிக்கல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிய மத்திய அரசு கிரீன் சிக்னல்!
[Thursday 2026-11-12 18:00]

மிக நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் எஸ்பி வேலுமணி. தற்போது அதிமுக எம்எல்ஏவாக உள்ளார்.



அம்பை தொகுதியில் நானே களமிறங்குவேன்: விஜய்க்கு கண்டிஷன் போட்ட ஹரி நாடார்!
[Thursday 2026-11-12 18:00]

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக சீமான் அறிவித்துள்ள நிலையில், அதே தொகுதியில் தானும் போட்டியிடுவேன் என்று ஹரி நாடார் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ள ஹரி நாடார் அது நிறைவேற்றப்படாவிட்டால் களமிறங்குவது உறுதி என்றார். ஹரி நாடார் வைத்த கோரிக்கை என்ன? என்பது பற்றிய விரிவான விவரங்களை பார்க்கலாம். தென்காசி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் இசக்கி சுப்பையா.



ரூ.3,230 கோடியில் டெல்லியில் அமைய உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்!
[Thursday 2026-11-12 18:00]

டெல்லியில் ரூ.3,230 கோடி மதிப்பீட்டில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை திறக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகை அருகே உள்ள ரெய்சினா ஹில் பகுதியில் வடக்கு மற்றும் தெற்கு தொகுதி கட்டிடங்கள் உள்ளன. இங்கு செயல்பட்டு வந்த பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அமைச்சக செயலகங்கள், புதிய இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், இங்கு உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை இந்தியா திறக்க உள்ளது.



தவறு செய்த எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு. க ஸ்டாலின்!
[Thursday 2026-11-12 18:00]

தவெக ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள்ளேயே, அக்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்துள்ள தீவிரமான குற்றச்சாட்டுகள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ், மாவட்டப் பெண் ஆட்சியர் ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்கு அத்துமீறிச் சென்று தொந்தரவு கொடுத்ததாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



"எதிர்க்கட்சி TRAPல் சிக்க வேண்டாம், கடும் நடவடிக்கை எடுப்பேன்" - விஜய் வார்னிங்!
[Wednesday 2026-11-11 16:00]

ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்தடுத்து புகார்களும் சர்ச்சைகளும் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். "எதிர்க்கட்சியினர் உங்களுக்கு விரிக்கும் TRAPலோ.. வலைகளிலோ யாரும் சிக்கிவிடக் கூடாது. மக்கள் பணியில் ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள்; தவறான பாதையில் யார் சென்றாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பின்னணி என்ன? தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், அண்மைக்காலமாக கட்சியின் சில முக்கியப் பிரதிநிதிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.



"எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன" - தமிழக அரசு விளக்கம்!
[Wednesday 2026-11-11 16:00]

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சிறப்பு அதிகாரிகள் நியமித்த உத்தரவை எதிர்த்து செங்கல்பட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி என்.செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ”ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்த வேண்டும் என்ற அரசியல் சட்டப் பிரிவு மீறப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டித்தது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது” என்று மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.



தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய நபர் மீது துப்பாக்கிச்சூடு: ஜனாதிபதியின் பாதுகாவலர் என தகவல்!
[Wednesday 2026-11-11 16:00]

பட்டாசு வெடிக்கும் பிரச்சினையில் துப்பாக்கியால் சுடப்பட்ட நபர், ஜனாதிபதியின் பாதுகாவலர் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர் ஒருவரை, பட்டாசு வெடிக்கும் பிரச்சினையில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் அவரது பக்கத்து வீட்டுக்காரர். உத்தரப்பிரதேசத்திலுள்ள கோபல்பூர் கடானா என்னுமிடத்தைச் சேர்ந்தவர் சௌரப் தோமர் (26). குடும்பத்துடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் சௌரப்.


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா