Untitled Document
November 7, 2026 [GMT]
ஆபரேசன் துரைமுருகன்: 2வது ஃபைலை ஓபன் செய்த விஜய்?
[Saturday 2026-11-07 08:00]

பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க நான் 400 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது விஜய் அரசு. தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டு 4000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக கூறி தொழிலதிபர் ரத்தினம் வீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்திருக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க நான் 400 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக கூறி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது விஜய் அரசு. தமிழகத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக மணல் அள்ளப்பட்டு 4000 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றதாக கூறி தொழிலதிபர் ரத்தினம் வீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்திருக்கிறது. இதில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  
தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் 28 இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி சட்டவிரோதமாக ஆற்று மணல் அள்ளப்பட்டதாக எழுந்த புகாரில், சுமார் ரூ.4,730 கோடி மதிப்பிலான முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், தமிழகத்தின் 28 ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட 196.37 ஹெக்டேர் பரப்பளவுக்கு பதிலாக, சுமார் 987.10 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அகழ்வு நடைபெற்றதாகக் கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வு இதன் மூலம் சுமார் 23.64 லட்சம் யூனிட் மணல் சட்டவிரோதமாக அள்ளப்பட்டிருக்கலாம் என்றும், அதன் மதிப்பு ரூ.4,730 கோடி என்றும் அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சேகரித்த ஆதாரங்கள் மற்றும் அளித்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியது. மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் எஸ். ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. அறப்போர் இயக்கமும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக புகார் அளித்து ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது. மணல் அகழ்வில் அனுமதிக்கப்பட்ட எல்லைகளை மீறியது, அரசு வருவாய்க்கு ஏற்பட்ட இழப்பு, அரசு அதிகாரிகளின் பங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விசாரணையின் கீழ் உள்ளன. திமுக ஆட்சி சட்டவிரோத மணல் அகழ்வால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன், ஆறுகளின் இயற்கையான நீரோட்டம், நிலத்தடி நீர்மட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக திமுக ஆட்சிக் காலமான 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இந்த முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கு பதிவு மணல் எடுத்துச் செல்ல வழங்கப்படும் அனுமதி சீட்டுகள் போலியாக தயாரிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ட்ரோன்கள், செயற்கைக்கோள் படங்கள், ஜியோ ஸ்கேனிங் உள்ளிட்டவை மூலம் ஆய்வு நடத்தப்பட்ட நிலையில் ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரிகாலன், திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டவர் மட்டுமல்லாது திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மாஜி தலைமை பொறியாளர்கள் முத்தையா, ராமமூர்த்தி உள்ளிட்ட 14 அரசு ஊழியர்கள் 10 தனி நபர்கள் உள்ளிட்ட 28 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று திண்டுக்கல்,சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், வேலூர் உள்ளிட்ட 34 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. துரைமுருகன் இந்த சோதனையில் 825 ஆவணங்கள், 11 டிஜிட்டல் சாதனங்கள், 3 வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை துறையில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 400 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அடுத்த அஸ்திரமாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வழக்கில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட்ட செவிலியர்!
[Saturday 2026-11-07 17:00]

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்ட நிலையில், ஜெனரேட்டரும் பழுதானதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு செவிலியர் ஊசி போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் கருங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.



தீபாவளி பண்டிகை கொண்டாட்டமா? - மீண்டும் கனமழை எச்சரிக்கை!
[Saturday 2026-11-07 17:00]

நாடு முழுவதும் நாளை (08-11-26) தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதேகாரணமாகவே, கடந்த இரண்டு நாட்களாகவே சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் வாகன நெரிசல் மிகுந்த பகுதியாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இந்த வாகன நெரிசல், பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களுக்கு பெரும் சிரமாக மாறியுள்ளது.



"பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம்" - முழுமையான விசாரணை வேண்டி போராட்டம்!
[Saturday 2026-11-07 17:00]

கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனிடையே, புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு என்பது மட்டுமல்லாமல் தவறான தரவுகள் அடங்கிய போலியான புத்தகங்களும் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ரூ.2000 கோடி வெற்றி மடிக்கணினி திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
[Saturday 2026-11-07 17:00]

வெற்றி மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள முதல்வர் விஜய், யாருக்கெல்லாம் மடிக்கணினி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவ, மாணவிகளின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் வகையில், வெற்றி இலவச மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், மீன்வளம் உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.



"பெரியார் பேரைச் சொல்லி ஏமாத்திட்டாங்களே" - வேதனையுடன் பேசிய செங்கோட்டையன்!
[Saturday 2026-11-07 08:00]

கோவையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் மிகப்பெரும் முறைகேடு நடந்திருப்பதாக வெளியாகி உள்ள தகவல் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் பெரியாரின் புனித பெயரை சொல்லிக் கொண்டு பெரியார் நூலகத்தில் இப்படி நடைபெறுவது உண்மையில் வேதனை அளிக்கிறது எனவும், இதில் முறைகேடு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி இருக்கிறார் அமைச்சர் செங்கோட்டையன். கோவை காந்திபுரத்தில் தி.மு.க ஆட்சியில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட பெரியார் அறிவுலகம் கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.



சீனாவை மிஞ்சும் இந்தியாவின் இமாலய ரயில் திட்டம்!
[Saturday 2026-11-07 08:00]

இந்த உலகில் அதிசயங்கள் மற்று வியக்க வைக்கும் இடங்கள் பல உள்ளது. அதில் மிக முக்கியமான இடங்களில் ஒன்று தான் இந்தியாவின் லடாக். உலகின்மிக உயரமான இடங்களில் ஒன்றான லடாக்கில் இந்தியா செய்யும் போகும் சம்பவம் பக்கத்தில் உள்ள சீனாவையே மிளர வைக்க போகிறது. ஆம்.. இமயமலையில் உலகின் மிக உயரமான ரயில் நிலையத்தை லடாக்கில் இந்தியா உருவாக்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17,244 அடி உயரத்தில் இந்த லடாக் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. சீனாவின் 'டாங்குலா' ரயில் நிலையத்தை இந்த ரயில் நிலையம் முறியடிக்கும் என்கிறார்கள்.



மனைவியின் தலையை மடியில் வைத்துக்கொண்டு காளி கோயிலில் அமர்ந்த கணவர்!
[Friday 2026-11-06 16:00]

மேற்கு வங்கத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, அவரது தலையை கையில் எடுத்துக்கொண்டு காளி கோயிலுக்கு சென்றாராம் கணவர்.. அங்கே என்ன நடந்தது தெரியுமா? மனைவியின் தலையை தன்னுடைய மடியில் வைத்து கொண்டாராம்.. பக்கத்தியே அவர்களது 2 குழந்தைகளும் உட்கார்ந்திருந்தார்களாம். இந்த கோலத்தை பார்த்து மொத்த உறவினர்கள் ஆடிப்போய் விட்டார்கள்.. என்ன நடந்தது?



கரூரில் த.வெ.க. பெயரில் பணம் வசூல் செய்த நபர் பிடிப்பு!
[Friday 2026-11-06 16:00]

கரூரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகளிடம், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரைக் கூறி கட்டாய வசூலில் ஈடுபட்ட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நபர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதி ஈஸ்வரர் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில், எதிர்வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு வணிகர்கள் வந்து தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.



தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30 கோடி பேரம்: முன்னாள் துணை மேயர் மன்னன் கைது!
[Friday 2026-11-06 16:00]

தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா முன்னாள் துணை மேயர் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அதிமுக நிர்வாகி மன்னன் தன்னை அணுகியதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Friday 2026-11-06 16:00]

வங்கக்கடலில் வருகிற 13ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வானிலை மையம் கூறுகையில்.., அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பாதை காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், வருகிற 13ஆம் தேதி வாக்கில் வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.



தீபாவளி பண்டிகை: ரேஷன் கடைகளுக்கு இன்று லீவு இல்லை!
[Friday 2026-11-06 07:00]

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக வரும் திங்கள்கிழமை அன்று விடுப்பு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாகவும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாகவும் நடைமுறையில் இருந்து வருகிறது.



மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் திருப்பரங்குன்றம் விவகாரம்!
[Friday 2026-11-06 07:00]

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தர்கா நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. சுமார் 1,050 அடி உயரமுள்ள திருப்பரங்குன்றம் மலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், மலை உச்சி பகுதியில் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவ்லியா தர்காவும் அமைந்துள்ளன. தர்காவுக்கு அருகே காசி விஸ்வநாதர் கோயிலும், அதற்கு கீழே உச்சி பிள்ளையார் கோயிலும் உள்ளன.



புயல் நேரத்தில் மீனவர்களை கடலுக்குள் செல்ல அனுமதித்தது யார்? - தவெக அரசுக்கு உதயநிதி கண்டனம்
[Friday 2026-11-06 07:00]

ஆந்திராவில் சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள் கரை ஒதுங்கிய நிலையில், புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி தந்தது யார்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: முரசு புயல் நேரத்தில் நடுக்கடலில் சிக்கி மாயமான சென்னை காசிமேடு மீனவர்கள் 9 பேரின் உடல்கள், ஆந்திர கடலோர பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். அந்த மீனவச் சகோதரர்களை இழந்து தவிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



செஞ்சி சிறுமி மாயம்: உளவுத்துறையை களமிறக்கிய விஜய்!
[Thursday 2026-11-05 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 25 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.



நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள்: ஆந்திராவில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
[Thursday 2026-11-05 16:00]

முரசு புயலின் போது காணாமல் போன மீனவர்கள், ஆந்திராவில் அவர்களது உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, ‘முரசு’ புயலாக மாறியது. இந்த புயல் கடந்த 2ஆம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி, நவம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே தெற்கு ஆந்திரக் கடற்கரையைக் கடந்தது.



விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? - முதல்வருக்கு உதயநிதி கேள்வி!
[Thursday 2026-11-05 16:00]

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, ரூ. 75,000 வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முழுமையாக எப்போது தள்ளுபடி என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.



அஜித் குமார் லாக் அப் மரணம்: விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
[Thursday 2026-11-05 16:00]

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண் ஒருவரின் 9.5 சவரன் தங்க நகையும், ரூ.2500 பயணமும் திருடப்பட்டதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் காவல் பணியில் இருந்த 29 வயது அஜித் குமார் தனிப்படை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் அடுத்த நாளே அஜித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.



STAR 3.0 திட்டத்தில் மாற்றம்: 4 வகை பத்திரங்களுக்கு புதிய வசதி!
[Thursday 2026-11-05 07:00]

தமிழகத்தில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த கொண்டுவரப்பட்ட STAR 3.0 திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஒருபக்கம் 4 வகையான குடும்ப சொத்து பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்து, ஒரு மணி நேரத்தில் அசல் பத்திரத்தைப் பெறும் வசதி அறிமுகமாகியுள்ளது. இன்னொருபக்கம், புதிய வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள் வெப்சைட்டில் விடுபட்டுள்ளதால் பல மாவட்டங்களில் பொதுமக்களால் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி முறைகேடு புகார்: இன்று ஜாமீன் கிடைக்குமா?
[Thursday 2026-11-05 07:00]

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் 177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னை அமைந்தகரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



இன்று முதல் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு: எங்கே கிடைக்கும் தெரியுமா?
[Thursday 2026-11-05 07:00]

தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ் அறிவித்துள்ளது. அன்றாட சமையலுக்கு தேவையான 10 வகையான காய்கறிகளை ஒரே தொகுப்பாக ரூ.100-க்கு வாங்கலாம். "வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு" என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த சலுகை விற்பனை, இன்றைய தினம் தொடங்குகிறது. இந்த தொகுப்பில் என்னென்ன காய்கறிகள் கிடைக்கும், எங்கே வாங்கலாம், எத்தனை நாட்களுக்கு விற்பனை நடைபெறும் என்பதைப் பார்க்கலாம். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை ஆரம்பமாகிறது.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா