Untitled Document
November 5, 2026 [GMT]
இன்று முதல் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு: எங்கே கிடைக்கும் தெரியுமா?
[Thursday 2026-11-05 07:00]

தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ் அறிவித்துள்ளது. அன்றாட சமையலுக்கு தேவையான 10 வகையான காய்கறிகளை ஒரே தொகுப்பாக ரூ.100-க்கு வாங்கலாம்.

தமிழக அரசு பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ் அறிவித்துள்ளது. அன்றாட சமையலுக்கு தேவையான 10 வகையான காய்கறிகளை ஒரே தொகுப்பாக ரூ.100-க்கு வாங்கலாம். "வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு" என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் இந்த சலுகை விற்பனை, இன்றைய தினம் தொடங்குகிறது. இந்த தொகுப்பில் என்னென்ன காய்கறிகள் கிடைக்கும், எங்கே வாங்கலாம், எத்தனை நாட்களுக்கு விற்பனை நடைபெறும் என்பதைப் பார்க்கலாம். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை ஆரம்பமாகிறது.

  

வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்தத் தொகுப்பு இன்று நவம்பர் 5ம் தேதி முதல் பொதுமக்களுக்குக் கிடைக்கும். 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் 3 நாட்களுக்கு இந்த விற்பனை நடைபெற உள்ளது. தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வாங்க வேண்டும் என்பதற்காகவே கூட்டுறவுத்துறை இப்படியொரு ஏற்பாட்டை செய்துள்ளது. இதற்காக நேற்று முன்தினம் கூட்டுறவுத்துறை சார்பில் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. இதன்படி, 10 வகையான காய்கறிகள் அடங்கிய ஒரு தொகுப்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவுப் பண்டகசாலைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்களில் இந்தத் தொகுப்புகள் கிடைக்கும். சென்னையில் மட்டும் கூடுதலாக 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலமும் விற்பனை செய்யப்பட உள்ளன. 3 நாட்கள் மட்டுமே விற்பனை இந்த சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை இன்று தொடங்கி நவம்பர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது, இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு மட்டுமே இந்தச் சலுகையைப் பயன்படுத்தி காய்கறிகளை வாங்க முடியும். எனவே, இந்தத் தொகுப்பை வாங்க விரும்புபவர்கள் இந்த 3 நாட்களுக்குள் அருகில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்குச் செல்லலாம்.

இந்த தொகுப்பில் சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் முக்கியமான 10 வகையான காய்கறிகள் இடம்பெறுகின்றன. அதன்படி, அரைக்கிலோ பெரிய வெங்காயம், அரைக்கிலோ தக்காளி, கால் கிலோ கத்தரிக்காய், கால் கிலோ உருளைக்கிழங்கு, தலா 200 கிராம் கேரட் மற்றும் பீன்ஸ் வழங்கப்பட உள்ளன. இதனுடன் 100 கிராம் பச்சை மிளகாய், 100 கிராம் எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள தேங்காயும் இடம்பெறும். ஆக, சமையலுக்குத் தேவையான வெங்காயம், தக்காளி தொடங்கி தேங்காய், இஞ்சி, எலுமிச்சை வரை 10 வகையான பொருட்களும் ஒரே தொகுப்பில் கிடைக்க உள்ளன. ஒவ்வொன்றையும் தனித்தனியாக வாங்குவதற்கு பதிலாக, இந்த தொகுப்பை ரூ.100 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.

ஒருவருக்கு ஒரு தொகுப்பு மட்டுமே இந்த விற்பனையில் சில கட்டுப்பாடுகளையும் கூட்டுறவுத்துறை விதித்துள்ளது. அதன்படி, ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும். மேலும், ஒரு தொகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.100 மட்டுமே பொதுமக்களிடம் வசூலிக்க வேண்டும். இதைவிடக் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பணம் வசூலிக்கக் கூடாது என்று விற்பனை நிலையப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் இடம்பெறும் 10 வகையான காய்கறிகளின் கொள்முதல் விலையை உரிய குழு நிர்ணயிக்கும். காய்கறிகளைக் கொள்முதல் செய்வதற்கான விலை மட்டுமல்லாமல், அவற்றை தொகுப்பாக வழங்குவதற்கான செலவுகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

குறிப்பாக, ஒவ்வொரு தொகுப்புக்கும் சுற்றுச்சூழலுக்கேற்ற பை-க்கான செலவாக ரூ.2.50 கணக்கிடப்பட்டுள்ளது. காய்கறிகளின் கொள்முதல் விலை, அரசால் நிர்ணயிக்கப்பட்ட ரூ.100 விற்பனை விலை, விநியோகத் தொகை மற்றும் கூட்டுறவு கல்வி நிதிக்கான ரூ.2.50 போன்றவற்றை கணக்கிட்டு விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ஒரு தொகுப்பின் விலை ரூ.100 மட்டுமே என்பதுதான். பைக்கான செலவு உள்ளிட்ட கணக்கீடுகள் தனியாக இருந்தாலும், விற்பனை நிலையங்களில் பொதுமக்களிடம் ரூ.100-க்கு மேல் வசூலிக்கக் கூடாது எனத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் தீபாவளிக்கு தேவையான காய்கறிகளை சலுகை விலையில் வாங்க விரும்புபவர்கள் இன்று நவம்பர் 5 முதல் 7-ம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.!!!

  
   Bookmark and Share Seithy.com



செஞ்சி சிறுமி மாயம்: உளவுத்துறையை களமிறக்கிய விஜய்!
[Thursday 2026-11-05 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 25 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.



நடுக்கடலில் மாயமான தமிழக மீனவர்கள்: ஆந்திராவில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
[Thursday 2026-11-05 16:00]

முரசு புயலின் போது காணாமல் போன மீனவர்கள், ஆந்திராவில் அவர்களது உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, ‘முரசு’ புயலாக மாறியது. இந்த புயல் கடந்த 2ஆம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் மேலும் தீவிரமடைந்து தீவிர புயலாக மாறி, நவம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் நரசாபூர் இடையே தெற்கு ஆந்திரக் கடற்கரையைக் கடந்தது.



விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது? - முதல்வருக்கு உதயநிதி கேள்வி!
[Thursday 2026-11-05 16:00]

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, ரூ. 75,000 வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முழுமையாக எப்போது தள்ளுபடி என்று முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.



அஜித் குமார் லாக் அப் மரணம்: விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
[Thursday 2026-11-05 16:00]

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண் ஒருவரின் 9.5 சவரன் தங்க நகையும், ரூ.2500 பயணமும் திருடப்பட்டதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் காவல் பணியில் இருந்த 29 வயது அஜித் குமார் தனிப்படை பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் அடுத்த நாளே அஜித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.



STAR 3.0 திட்டத்தில் மாற்றம்: 4 வகை பத்திரங்களுக்கு புதிய வசதி!
[Thursday 2026-11-05 07:00]

தமிழகத்தில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த கொண்டுவரப்பட்ட STAR 3.0 திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஒருபக்கம் 4 வகையான குடும்ப சொத்து பத்திரங்களை ஆன்லைனில் பதிவு செய்து, ஒரு மணி நேரத்தில் அசல் பத்திரத்தைப் பெறும் வசதி அறிமுகமாகியுள்ளது. இன்னொருபக்கம், புதிய வீட்டுமனைகளுக்கான சர்வே எண்கள் வெப்சைட்டில் விடுபட்டுள்ளதால் பல மாவட்டங்களில் பொதுமக்களால் பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



அன்பில் மகேஷ் மீது ரூ.100 கோடி முறைகேடு புகார்: இன்று ஜாமீன் கிடைக்குமா?
[Thursday 2026-11-05 07:00]

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்த புகாரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் 177 பள்ளி நிர்வாகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், இன்று அவருடைய ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ம் தேதி சென்னை அமைந்தகரையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



"என் அம்மாவே என்னை தப்பா பேசுறாங்க" - இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி!
[Wednesday 2026-11-04 16:00]

கபடி விளையாட்டு வீரர்கள் பயனடைய வேண்டும் என்று நான் பணம் கொடுத்தேன். ஆனால் அது குறித்து தவறான கருத்தை எனது அம்மா பரப்பி வருகிறார். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அம்மா சிலரின் தூண்டுதலால் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக என்னால் விளையாட்டில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளை எனது தாய் பரப்பி வருகிறார், அதை யார் நம்ப வேண்டாம். இந்த விவகாரத்தில் அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி அளித்துள்ளார்.



கூண்டோடு தூக்கப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள்: விஜய் அலுவலகத்திலும் புதிய அதிகாரிகள்?
[Wednesday 2026-11-04 16:00]

தமிழக அரசு நிர்வாகத்தில் மிக முக்கியமான மாற்றங்களைச் செய்ய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமைச் செயலகம் முதல் மாவட்டங்கள் வரை பணியாற்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் முதலமைச்சரின் நேரடிச் செயலாளர்கள் குழுவிலும் புதிய முகங்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.



‘தவெகவினர் பணம் வாங்கி எங்களை மிரட்டுகின்றனர்’ - குமுறும் திருவண்ணாமலை கடைக்காரர்கள்!
[Wednesday 2026-11-04 16:00]

திருவண்ணாமலை மாநகரத்தின் புதிய பேருந்து நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வாடகை அதிகமாக இருக்கிறது என பாதிக்கும் மேற்பட்ட கடைகளை ஒப்பந்தத்தின் வழியாக யாரும் எடுக்கவில்லை மூடி வைக்கப்பட்டே உள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதி மற்றும் பேருந்துகள் வெளியேறும் பகுதியில், திடீரென கண்டெய்னர் பெட்டிகளை வைத்து டிசைன் செய்யப்பட்ட மூன்று பெரிய பங்க் கடைகள் முளைத்து பேருந்து நிலைய கடைக்காரர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.



‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ - மத்திய அரசிடம் ஸ்ட்ரிக்டாக கூறிய முதல்வர் விஜய்!
[Wednesday 2026-11-04 16:00]

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் கடந்த ஜூன் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 20 அன்று மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர். அப்போது, டெல்லி காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பேரணி சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது தடியடி நடத்தி வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டனர்.



விஜய்யிடம் பரிசு வாங்கும் 5 மாவட்ட மாணவர்கள்: பெற்றோருக்கும் அழைப்பு!
[Wednesday 2026-11-04 07:00]

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு விருதுகள், ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கு கல்வி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அழைத்து விஜய் பாராட்டி வருகிறார்.



முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்: வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
[Wednesday 2026-11-04 07:00]

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க வேண்டிய சிரமம் இனிமேல்இல்லை. அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மாதந்தோறும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்று (நவம்பர் 4), நாளை (நவம்பர் 5) ஆகிய 2 நாட்களில் இல்லம் தேடி வழங்கப்பட உள்ளன.



புகார் அளித்த சிறுமியை குத்திய போக்சோ குற்றவாளி: கேரளாவில் அதிர்ச்சி!
[Wednesday 2026-11-04 07:00]

கேரளாவில் போக்சோ வழக்கில் பிணையில் வெளிவந்த கைதி புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பெரும்பாவூர் அரக்கப்பாடியைச் சேர்ந்த முகமது ஆதினன் என்ற 22 வயது இளைஞர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த வாரம் பிணையில் வெளியே வந்துள்ளார்.



செஞ்சி சிறுமி: குற்றவாளி பகீர் வாக்குமூலம் - கூட்டாளி அரவிந்தை காட்டுக்கு தூக்கி சென்ற CBCID!
[Tuesday 2026-11-03 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 23 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அரசுப் பள்ளியிலேயே முகாம் அலுவலகம் அமைத்து, தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு, தப்பியோடிய சாமியார், விஷம் குடித்த மாஜி ஊராட்சி மன்ற தலைவர் எனப் பல முனைகளில் விசாரணை சுழன்றடித்தது.



"எங்களுக்கு பாதுகாப்பே இல்ல" - விஜய்யை பார்க்க வந்த பெண் வேதனை!
[Tuesday 2026-11-03 16:00]

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டிவரக்கூடிய நிலையில், ஈரோடு பெருந்துறையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த அவரது ரசிகர்கள், ரசிகைகளே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர். விஜய்யை பார்க்க காத்திருந்த பெண் ஒருவர், "பெண்கள் பாதுகாப்பை மட்டும் மேம்படுத்திக்கொடுங்கள்.. இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற பெயர் எப்போதுமே வரக்கூடாது. கண்டிப்பாக உங்கோளட தங்கச்சிகளுக்கு எல்லா இடத்திலும் பாதுகாப்பு இருக்கனும்" என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.



முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை குடிமகனுக்கு உண்டு: நீதிபதி தீர்ப்பில் கூறிய ஏழு அம்சங்கள்!
[Tuesday 2026-11-03 16:00]

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க 95-ஆவது வட்ட கவுன்சிலரும், கட்சியின் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் நேற்று உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில், முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உண்டு. அதே நேரம் சாதாரண குடிமகனின் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளார்.



சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 73 நிமிடத்தில் பயணம்: புல்லட் ரயிலுக்கு அரசு ஒப்புதல்!
[Tuesday 2026-11-03 16:00]

சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் போது பயண தூரம் 73 நிமிடமாக குறையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்​ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு - மும்பை இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்​ணவ் நேற்று முன் தினம் கொடியசைத்துத் தொடங்கி வைத்​தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் புல்லட் ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.



டாஸ்மாக் கடைகள் மூடியதுமே மனமகிழ் மன்றங்களில் திரண்ட குடிமகன்கள்!
[Tuesday 2026-11-03 07:00]

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. ஒருபக்கம் பார் நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்றால், இன்னொருபக்கம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தனியார் மனமகிழ் மன்றங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு விவகாரங்களிலும் கவனம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் என்ன? தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான முந்தைய அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது.



அதி தீவிர புயலாக கரையக் கடந்த முரசு புயல்: ஆந்திராவில் பலத்த மழை!
[Tuesday 2026-11-03 07:00]

வங்கக் கடலில் உருவான முரசு புயல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ஆந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடந்த 31 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), நவம்பர் 1 ஆம் தேதி முரசு புயலாகவும் வலுப்பெற்றது.



முரசு புயலால் கொட்டும் கனமழை: கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
[Tuesday 2026-11-03 07:00]

கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முரசு புயல் கரையை கடந்த நிலையில் கடலூர் பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா