Untitled Document
November 3, 2026 [GMT]
அதி தீவிர புயலாக கரையக் கடந்த முரசு புயல்: ஆந்திராவில் பலத்த மழை!
[Tuesday 2026-11-03 07:00]

வங்கக் கடலில் உருவான முரசு புயல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ஆந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடந்த 31 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), நவம்பர் 1 ஆம் தேதி முரசு புயலாகவும் வலுப்பெற்றது.

வங்கக் கடலில் உருவான முரசு புயல் அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ஆந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது 120 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் கொட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது கடந்த 31 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), நவம்பர் 1 ஆம் தேதி முரசு புயலாகவும் வலுப்பெற்றது.

  

இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் தீவிர புயலாக மாறியது. தொடர்ந்து இந்த புயல் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே ஓங்கோல் அருகே நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலைக்குள் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு 1 மணியளவில் முரசு புயலின் முன்பகுதி கரையை கடக்க ஆரம்பித்தது.

இதனால் 90 முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. முதலில் இந்த புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதி தீவிர புயலாகவே கரையை கடக்க ஆரம்பித்தது. இன்று அதிகாலையில் முரசு புயலானது அதி தீவிர புயலாக கரையை கடந்தது. ந்திராவின் நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே முரசு புயல் கரையை கடந்தது. கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் கனமழையும் கொட்டியது.

சுமார் 120 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. அதிகாலை 4 மணியளவில் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று தாமதமாக காலை 6 மணியளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திரா மட்டுமின்றி வடதமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

  
   Bookmark and Share Seithy.com



செஞ்சி சிறுமி: குற்றவாளி பகீர் வாக்குமூலம் - கூட்டாளி அரவிந்தை காட்டுக்கு தூக்கி சென்ற CBCID!
[Tuesday 2026-11-03 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 23 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார். உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அரசுப் பள்ளியிலேயே முகாம் அலுவலகம் அமைத்து, தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு, தப்பியோடிய சாமியார், விஷம் குடித்த மாஜி ஊராட்சி மன்ற தலைவர் எனப் பல முனைகளில் விசாரணை சுழன்றடித்தது.



"எங்களுக்கு பாதுகாப்பே இல்ல" - விஜய்யை பார்க்க வந்த பெண் வேதனை!
[Tuesday 2026-11-03 16:00]

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டிவரக்கூடிய நிலையில், ஈரோடு பெருந்துறையில் முதல்வர் விஜய்யை பார்க்க வந்த அவரது ரசிகர்கள், ரசிகைகளே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளனர். விஜய்யை பார்க்க காத்திருந்த பெண் ஒருவர், "பெண்கள் பாதுகாப்பை மட்டும் மேம்படுத்திக்கொடுங்கள்.. இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்ற பெயர் எப்போதுமே வரக்கூடாது. கண்டிப்பாக உங்கோளட தங்கச்சிகளுக்கு எல்லா இடத்திலும் பாதுகாப்பு இருக்கனும்" என்று தனது கோரிக்கையை முன்வைத்தார்.



முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை குடிமகனுக்கு உண்டு: நீதிபதி தீர்ப்பில் கூறிய ஏழு அம்சங்கள்!
[Tuesday 2026-11-03 16:00]

தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க 95-ஆவது வட்ட கவுன்சிலரும், கட்சியின் சென்னை மாவட்ட மகளிரணி அமைப்பாளருமான சுதா தீனதயாளனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி என். ரமேஷ் நேற்று உத்தரவிட்டார். அவரது தீர்ப்பில், முதலமைச்சரை விமர்சிக்கும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உண்டு. அதே நேரம் சாதாரண குடிமகனின் உரிமையை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கும், காவல்துறைக்கும் உண்டு என்று கருத்து தெரிவித்துள்ளார்.



சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு 73 நிமிடத்தில் பயணம்: புல்லட் ரயிலுக்கு அரசு ஒப்புதல்!
[Tuesday 2026-11-03 16:00]

சென்னை - பெங்களூர் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் போது பயண தூரம் 73 நிமிடமாக குறையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்​ணவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு - மும்பை இடையேயான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்​ணவ் நேற்று முன் தினம் கொடியசைத்துத் தொடங்கி வைத்​தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் புல்லட் ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.



டாஸ்மாக் கடைகள் மூடியதுமே மனமகிழ் மன்றங்களில் திரண்ட குடிமகன்கள்!
[Tuesday 2026-11-03 07:00]

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. ஒருபக்கம் பார் நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்றால், இன்னொருபக்கம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தனியார் மனமகிழ் மன்றங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு விவகாரங்களிலும் கவனம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் என்ன? தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான முந்தைய அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது.



முரசு புயலால் கொட்டும் கனமழை: கடலூர் தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
[Tuesday 2026-11-03 07:00]

கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முரசு புயல் கரையை கடந்த நிலையில் கடலூர் பகுதியில் கனமழை கொட்டி வருகிறது.



திமுகவிடம் காட்டிய உக்கிரம் தவெக அரசு மீது இல்லையே? - அண்ணாமலையின் விமர்சனத்தை கவனித்தீர்களா!
[Monday 2026-11-02 16:00]

வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது என வி த லீட்ர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.



முதல்வர் விஜய் திறந்து வைத்த புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் என்ன வசதிகள்?
[Monday 2026-11-02 16:00]

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், புதுக்கோட்டை சத்யமூர்த்தி சாலைல் 23 கோடியே 25 லட்சம் செலவில் புனரமைத்து கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலைத்தை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான குடிநீர், நவீன கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் காத்திருப்பு அறைகள், பார்க்கிங் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.



"விசாரணைக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்” - கே.என்.நேரு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
[Monday 2026-11-02 16:00]

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது. ஏற்கெனவே தன் தரப்பு வாதங்களை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.



நள்ளிரவு கரையை கடக்கும் முரசு புயல்: தமிழகத்தில் வெளுக்கும் கனமழை!
[Monday 2026-11-02 16:00]

முரசு புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பதால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை வெளுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – நரசாப்பூர் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.



முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை பயணம்!
[Monday 2026-11-02 07:00]

புதுக்கோட்டைக்கு முதல் முறையாக இன்று அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக இன்று இந்த பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நெருங்கி வரும் முரசு புயல்: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
[Monday 2026-11-02 07:00]

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் சென்னையில் திங்கள்கிழமை (நவம்பர் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல வலுப்பெற்ற புயலாக மாறியது. இந்த புயலுக்கு முரசு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது இது சென்னையில் இருந்து சுமார் 420 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.



ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு: அடுத்தடுத்து கைதாகும் நபர்கள்!
[Monday 2026-11-02 07:00]

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜெம் வீரமணியின் காவலாளி சீனிவாசனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இரண்டு போக்சோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான வழக்கு குறித்த விவரங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைப்பதாக இருக்கிறது.



திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!
[Sunday 2026-11-01 18:00]

"கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை திமுகவின் கனிமொழி தெளிவுபடுத்த வேண்டும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், காவல்துறை அதிகாரிகள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



தியாகராய நகரில் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம்: ஒரேயடியாக குவிந்த மக்கள்!
[Sunday 2026-11-01 18:00]

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தியாகராயர் நகர் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். வார இறுதி விடுமுறை என்பதால் இன்று மக்கள் வருகை அதிகரித்துள்ளதால், அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி இருக்கிறது. மதங்களை தாண்டி பல்வேறு தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது.



100 தூய்மை பணியாளர்களுக்கு தனுஷ் நற்பணி இயக்கத்தினர் தீபாவளி பரிசு!
[Sunday 2026-11-01 18:00]

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் 100 மகளிர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடையான புடவைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் நற்பணி இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் வசந்த் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டலச் செயலாளர் தனசேகரன், வேலூர் மாவட்டச் செயலாளர் விஜய் சாரதி, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் பாலு, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் ராம்கி, திருப்பத்தூர் மாவட்டப் பொருளாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புடவைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



வங்கக்கடலில் உருவானது முரசு புயல்: தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
[Sunday 2026-11-01 18:00]

தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் இன்று (நவ.1) காலை 11.30 மணிக்கு முரசு புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.. அந்தமான் நிகோபார் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு வளிமண்டல சுழற்சி உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.



செஞ்சி சிறுமியின் தாய் செய்த செயல்: திகைத்துப்போன கிராமம்!
[Sunday 2026-11-01 07:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் படுக்கையறையில் தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, அதிகாலையில் மாயமானார். உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.



தமிழ்நாடு நாள் இன்று: திமுக, அதிமுக ரெண்டையும் ஏற்ற தவெக அரசு!
[Sunday 2026-11-01 07:00]

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் நாள் 'தமிழ்நாடு நாள்' எனக் கொண்டாடப்படும் என தவெக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 1, ஜூலை 18 என தமிழ்நாடு நாள் தொடர்பாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இருவேறு நிலைப்பாடு கொண்டிருக்கும் நிலையில் இந்த 2 நாட்களையுமே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளது தவெக அரசு. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் பல பகுதிகளில் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன.



தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?
[Sunday 2026-11-01 07:00]

தமிழகத்தில், 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு மறுவரையறை பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2025 ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சோ்ந்த அதிகாரிகளை, சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா