Untitled Document
November 2, 2026 [GMT]
திமுகவிடம் காட்டிய உக்கிரம் தவெக அரசு மீது இல்லையே? - அண்ணாமலையின் விமர்சனத்தை கவனித்தீர்களா!
[Monday 2026-11-02 16:00]

வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது என வி த லீட்ர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது என வி த லீட்ர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

  

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு தற்போது ஜிடிபி வளர்ச்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர்ந்துள்ளன. ஆனால் தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன, இதுபற்றி வி த லீட்ர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை சமூக வலைதளப்பதிவில் கூறுகையில், "கடந்த ஆறு மாதங்களாக, தமிழகத்தின் ஜிஎஸ்டி (GST) வருவாய் நிலை, மாநிலத்தின் பொருளாதார நிலை, தவெக அரசின் நிதி முன்னுரிமைகள், நிலையான வருவாயை உருவாக்குவதில் அரசின் அணுகுமுறை ஆகியவை குறித்து பல முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ஜிஎஸ்டி வருவாய், அக்டோபர் மாதத்தில் ஓரளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பது மட்டுமே சிறிய ஆறுதல். அதுவும் ஒற்றை இலக்க வளர்ச்சியாகவே உள்ளது. பண்டிகைக் காலம், பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு என, பொருளாதார நடவடிக்கைகள் இயல்பாகவே அதிகரிக்க வேண்டிய சூழலிலும், வரி வசூலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படாதது கவலையளிக்கிறது. கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டின் ஜிஎஸ்டி வருவாயை ஒப்பிடும்போது, ஐஜிஎஸ்டி பகிர்வை இதற்கான காரணமாக முன்வைப்பது பொருத்தமானதல்ல. ஏனெனில், ஐஜிஎஸ்டி புதிதாகக் கொண்டுவரப்பட்டதல்ல. தமிழ்நாட்டிற்கு இணையான பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வலுவான ஜிஎஸ்டி வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன.

இந்த வேறுபாட்டைத் தவெக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் வருவாயைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத் துறைகளிலும் அரசின் மூலதனச் செலவினங்கள் எந்த அளவிற்கு மேற்கொள்ளப்படுகின்றன என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். கடந்த ஆறு மாதங்களாகப் பல்வேறு அரசுத் துறைகளில் மூலதனச் செலவினங்கள் மந்தமடைந்துள்ளதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது. அரசின் மூலதனச் செலவினங்கள் குறையும்போது, அதன் மூலம் வேலைவாய்ப்புகள், ஒப்பந்தப் பணிகள், தொழில் நடவடிக்கைகள், வணிகம் என, பல வகையான பொருளாதாரப் பங்களிப்பும் பாதிக்கப்படுகிறது. இது மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியையே பலவீனப்படுத்தும்.

இந்தியாவின் மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதத்தைக் கொண்டுள்ள தமிழகம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், தொழில்துறையின் மொத்த மதிப்புக் கூட்டலில் (Gross Value Added - GVA) தமிழகத்தின் பங்களிப்பு வெறும் 10.26 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் தேசிய அளவில் மூன்றாவது இடத்திற்குத் தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பும், இந்தியாவின் உற்பத்தித் துறை GVA-வில், தமிழகத்தின் பங்களிப்பு 10.3 சதவீதமாகத்தான் இருந்தது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் பங்களிப்பு ஏறக்குறைய அதே நிலையில் நீடிப்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒரு காலத்தில் தமிழகத்திற்குப் பின்னால் இருந்த மாநிலங்கள் இன்று வேகமாக முன்னேறி, வளர்ச்சி இடைவெளியைக் குறைத்து வருகின்றன.

தமிழக அரசின் மாநிலத் திட்டக்குழு வெளியிடும் மாவட்ட அளவிலான பிராந்திய ஏற்றத்தாழ்வு அறிக்கைகள் (Regional Imbalance Reports) மட்டுமே மாநிலத்தின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிடாது என்பதை இதற்கு முன் நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். அந்த அறிக்கைகள் மாநிலத்தின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டும் ஒரு கருவி மட்டுமே. வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கெனத் தனித்துவமான பொருளாதாரத் திட்டங்கள், சிறப்புத் திட்டங்கள், அரசின் நேரடி கண்காணிப்பு ஆகியவற்றைச் செயல்படுத்துவதுதான் உண்மையான தீர்வாக அமையும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சமமாகப் பரவுவதற்கான திட்டமிடல் அவசியம்.

வகுப்பில் முதலிடம் பெறும் மாணவனுக்குப் பாராட்டும் ஊக்கமும் தேவைதான். ஆனால், கடைசி இடத்தில் இருக்கும் மாணவனுக்குத்தான் கூடுதல் கவனமும் சிறப்புப் பயிற்சியும் அதிகம் தேவை. அதுபோலவே, ஏற்கெனவே வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் வளர்ச்சியைத் தொடர்வதுடன், பின்தங்கிய மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த உண்மையைத் தவெக அரசு எவ்வளவு விரைவாக உணர்ந்து செயல்படுகிறதோ, அவ்வளவு நல்லது." இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். இந்நிலையில் வி த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பாஜக மாநில தலைவராக இருந்த காலத்தில், ஆளும் கட்சியாக இருந்த திமுகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் தற்போதைய தவெக அரசை அண்ணாமலை அந்த அளவிற்கு விமர்சிப்பது. மிகவும் மென்மையாக அணுகுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



முதல்வர் விஜய் திறந்து வைத்த புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் என்ன வசதிகள்?
[Monday 2026-11-02 16:00]

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், புதுக்கோட்டை சத்யமூர்த்தி சாலைல் 23 கோடியே 25 லட்சம் செலவில் புனரமைத்து கட்டப்பட்டிருக்கும் புதிய பேருந்து நிலைத்தை இன்று திறந்து வைத்துள்ளார். இந்த பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான குடிநீர், நவீன கழிப்பறைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் காத்திருப்பு அறைகள், பார்க்கிங் வசதி போன்ற பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.



"விசாரணைக்கு உட்பட்டு தான் ஆக வேண்டும்” - கே.என்.நேரு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
[Monday 2026-11-02 16:00]

கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது. ஏற்கெனவே தன் தரப்பு வாதங்களை கேட்காமல் சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் குறிப்பிட்டிருந்தார்.



நள்ளிரவு கரையை கடக்கும் முரசு புயல்: தமிழகத்தில் வெளுக்கும் கனமழை!
[Monday 2026-11-02 16:00]

முரசு புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்பதால், தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை வெளுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் – நரசாப்பூர் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.



முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை பயணம்!
[Monday 2026-11-02 07:00]

புதுக்கோட்டைக்கு முதல் முறையாக இன்று அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக இன்று இந்த பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நெருங்கி வரும் முரசு புயல்: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
[Monday 2026-11-02 07:00]

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் சென்னையில் திங்கள்கிழமை (நவம்பர் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல வலுப்பெற்ற புயலாக மாறியது. இந்த புயலுக்கு முரசு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது இது சென்னையில் இருந்து சுமார் 420 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.



ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு: அடுத்தடுத்து கைதாகும் நபர்கள்!
[Monday 2026-11-02 07:00]

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜெம் வீரமணியின் காவலாளி சீனிவாசனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இரண்டு போக்சோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான வழக்கு குறித்த விவரங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைப்பதாக இருக்கிறது.



திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!
[Sunday 2026-11-01 18:00]

"கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை திமுகவின் கனிமொழி தெளிவுபடுத்த வேண்டும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், காவல்துறை அதிகாரிகள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



தியாகராய நகரில் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம்: ஒரேயடியாக குவிந்த மக்கள்!
[Sunday 2026-11-01 18:00]

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தியாகராயர் நகர் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். வார இறுதி விடுமுறை என்பதால் இன்று மக்கள் வருகை அதிகரித்துள்ளதால், அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி இருக்கிறது. மதங்களை தாண்டி பல்வேறு தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது.



100 தூய்மை பணியாளர்களுக்கு தனுஷ் நற்பணி இயக்கத்தினர் தீபாவளி பரிசு!
[Sunday 2026-11-01 18:00]

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் 100 மகளிர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடையான புடவைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் நற்பணி இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் வசந்த் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டலச் செயலாளர் தனசேகரன், வேலூர் மாவட்டச் செயலாளர் விஜய் சாரதி, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் பாலு, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் ராம்கி, திருப்பத்தூர் மாவட்டப் பொருளாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புடவைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



வங்கக்கடலில் உருவானது முரசு புயல்: தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
[Sunday 2026-11-01 18:00]

தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் இன்று (நவ.1) காலை 11.30 மணிக்கு முரசு புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.. அந்தமான் நிகோபார் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு வளிமண்டல சுழற்சி உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.



செஞ்சி சிறுமியின் தாய் செய்த செயல்: திகைத்துப்போன கிராமம்!
[Sunday 2026-11-01 07:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் படுக்கையறையில் தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, அதிகாலையில் மாயமானார். உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.



தமிழ்நாடு நாள் இன்று: திமுக, அதிமுக ரெண்டையும் ஏற்ற தவெக அரசு!
[Sunday 2026-11-01 07:00]

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் நாள் 'தமிழ்நாடு நாள்' எனக் கொண்டாடப்படும் என தவெக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 1, ஜூலை 18 என தமிழ்நாடு நாள் தொடர்பாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இருவேறு நிலைப்பாடு கொண்டிருக்கும் நிலையில் இந்த 2 நாட்களையுமே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளது தவெக அரசு. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் பல பகுதிகளில் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன.



தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?
[Sunday 2026-11-01 07:00]

தமிழகத்தில், 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு மறுவரையறை பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2025 ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சோ்ந்த அதிகாரிகளை, சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.



அழகிரி மகளுக்கு எதிரான வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
[Saturday 2026-10-31 16:00]

சென்னைஅடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளரை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கயல்விழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் வாபஸ் பெற்ற நிலையில், தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், 4 வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அடையார் சாஸ்திரி நகர் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் கருவியால் வெட்டிய ஹேமந்த் யார்?
[Saturday 2026-10-31 16:00]

அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்ட வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் 21 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள பள்ளி புகுந்து மாணவியை வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு மண்டல் மாவட்ட பரிஷத் உயர்நிலை பள்ளியில் உள்ளது. இந்த பள்ளியில் அய்யவரிபள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.



தமிழ்நாட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்: போக்சோ வழக்கில் கைதான முதியவர் தப்பியோட்டம்!
[Saturday 2026-10-31 16:00]

சென்னை புழல், தேனி சிறையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று நள்ளிரவு கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்து அதிர்ச்சி தரும் சம்பவமாக போக்சோ வழக்கில் கைதான நபர் ஒருவர், காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.



திருமணத்தை மீறிய உறவு: கொலை செய்து புதைக்கப்பட்ட இளைஞன்!
[Saturday 2026-10-31 16:00]

கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில் செல்வி என்பவரது மகன் பிரசாந்த் (19). எழில்செல்வி சென்னையில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் பணி பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரசாந்த் தனது மாமா ரமேஷ் என்பவருடன் வீடுகளுக்கு டைல்ஸ் போடும் வேலை பார்த்து வந்தார். கடந்த 27ஆம் தேதி சென்னையில் உள்ள தனது தாயைப் பார்க்க செல்வதாக தாய்மாமனிடம் கூறிவிட்டு வந்த பிரசாந்த், மறுநாள் 28ஆம் தேதி தனது நண்பருக்கு வீடியோ கால் செய்து தன்னை அடிப்பதாக கதறி உள்ளார். அதன் பிறகு அவரது தொலைபேசி அனைத்து வைக்கப்பட்டு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் மாயமாகியுள்ளார்.



மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்த போது மின் தடை ஏன்?
[Saturday 2026-10-31 05:00]

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து இரு முறை மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று மாலை 5.35 மணிக்கு வந்தார். அங்கு அவர் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது மணி 6.25- ஆக இருந்தது.



அன்பில் மகேஸ் கைது குறித்த கேள்வி: யோசிக்காமல் எடப்பாடி சொன்ன பதில்!
[Saturday 2026-10-31 05:00]

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் மோசடி நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தர சுமார் 100 கோடி முதல் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்த குற்றச்சாட்டு எழுந்தது.



விஜய்யின் பெரியம்மா முதியோர் இல்லத்தில் வசித்தது ஏன்?
[Saturday 2026-10-31 05:00]

தமிழக முதல்வர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகரன், சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது 92-வது வயதில் வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் முதல்வரின் பெரியம்மா முதியோர் இல்லத்தில் ஏன் வசித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்! தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் சகோதரர் ராஜசேகரனின் மனைவி அமல் ராஜசேகரன். இவர் சென்னையில் உள்ள தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா