Untitled Document
November 2, 2026 [GMT]
இடைத்தேர்தலில் சீமானுக்கு திமுக ஆதரவா?
[Friday 2026-10-30 16:00]

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார்.

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்தார்.

  

சீமான் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சீமானிடம் அது குறித்து கேட்டபோது, "நான் எப்போதும் பொது வேட்பாளர். அனைத்து சாதி, மதத்திற்கான பொதுவேட்பாளர் நாம் தமிழர் கட்சி" என பதிலளித்தார்.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, தேர்தல் தேதி அறிவிக்கட்டும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை பயணம்!
[Monday 2026-11-02 07:00]

புதுக்கோட்டைக்கு முதல் முறையாக இன்று அரசு முறைப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விஜய் முதல்முறையாக இன்று இந்த பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



நெருங்கி வரும் முரசு புயல்: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!
[Monday 2026-11-02 07:00]

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் சென்னையில் திங்கள்கிழமை (நவம்பர் 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல வலுப்பெற்ற புயலாக மாறியது. இந்த புயலுக்கு முரசு என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது இது சென்னையில் இருந்து சுமார் 420 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.



ஜெம் வீரமணி வழக்கில் பரபரப்பு: அடுத்தடுத்து கைதாகும் நபர்கள்!
[Monday 2026-11-02 07:00]

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி மீது தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். ஜெம் வீரமணியின் காவலாளி சீனிவாசனை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்துள்ளனர். இரண்டு போக்சோ வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ஆர். வீரமணி (84) மீதான வழக்கு குறித்த விவரங்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர வைப்பதாக இருக்கிறது.



திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!
[Sunday 2026-11-01 18:00]

"கடந்த திமுக ஆட்சியில் காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை திமுகவின் கனிமொழி தெளிவுபடுத்த வேண்டும்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், காவல்துறை அதிகாரிகள், மண்டல அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



தியாகராய நகரில் திடீரென கட்டுக்கடங்காத கூட்டம்: ஒரேயடியாக குவிந்த மக்கள்!
[Sunday 2026-11-01 18:00]

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், சென்னையின் முக்கிய வணிகப் பகுதியான தியாகராயர் நகர் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள் மற்றும் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வருகின்றனர். வார இறுதி விடுமுறை என்பதால் இன்று மக்கள் வருகை அதிகரித்துள்ளதால், அப்பகுதி முழுவதும் கூட்ட நெரிசலாகக் காணப்படுகிறது. இந்தியாவில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி இருக்கிறது. மதங்களை தாண்டி பல்வேறு தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது.



100 தூய்மை பணியாளர்களுக்கு தனுஷ் நற்பணி இயக்கத்தினர் தீபாவளி பரிசு!
[Sunday 2026-11-01 18:00]

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் 100 மகளிர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடையான புடவைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனுஷ் நற்பணி இயக்கத்தின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் வசந்த் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மண்டலச் செயலாளர் தனசேகரன், வேலூர் மாவட்டச் செயலாளர் விஜய் சாரதி, ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் பாலு, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் ராம்கி, திருப்பத்தூர் மாவட்டப் பொருளாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு புடவைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.



வங்கக்கடலில் உருவானது முரசு புயல்: தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்?
[Sunday 2026-11-01 18:00]

தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் இன்று (நவ.1) காலை 11.30 மணிக்கு முரசு புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.. அந்தமான் நிகோபார் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு வளிமண்டல சுழற்சி உருவானது. இது படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.



செஞ்சி சிறுமியின் தாய் செய்த செயல்: திகைத்துப்போன கிராமம்!
[Sunday 2026-11-01 07:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டுப் படுக்கையறையில் தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, அதிகாலையில் மாயமானார். உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.



தமிழ்நாடு நாள் இன்று: திமுக, அதிமுக ரெண்டையும் ஏற்ற தவெக அரசு!
[Sunday 2026-11-01 07:00]

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் நாள் 'தமிழ்நாடு நாள்' எனக் கொண்டாடப்படும் என தவெக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 1, ஜூலை 18 என தமிழ்நாடு நாள் தொடர்பாக அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் இருவேறு நிலைப்பாடு கொண்டிருக்கும் நிலையில் இந்த 2 நாட்களையுமே தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதாக அறிவித்துள்ளது தவெக அரசு. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டின் பல பகுதிகளில் மொழி வாரியாக மாநிலங்களை பிரிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன.



தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?
[Sunday 2026-11-01 07:00]

தமிழகத்தில், 37 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில், வார்டு மறுவரையறை பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2025 ஜனவரி 5 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையைச் சோ்ந்த அதிகாரிகளை, சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.



அழகிரி மகளுக்கு எதிரான வழக்கில் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
[Saturday 2026-10-31 16:00]

சென்னைஅடையாறில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளரை கன்னத்தில் அறைந்தது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கயல்விழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் அவர் வாபஸ் பெற்ற நிலையில், தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், 4 வாரத்தில் இந்த வழக்கு தொடர்பாக இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அடையார் சாஸ்திரி நகர் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் கருவியால் வெட்டிய ஹேமந்த் யார்?
[Saturday 2026-10-31 16:00]

அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்ட வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் 21 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள பள்ளி புகுந்து மாணவியை வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு மண்டல் மாவட்ட பரிஷத் உயர்நிலை பள்ளியில் உள்ளது. இந்த பள்ளியில் அய்யவரிபள்ளி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார்.



தமிழ்நாட்டில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்: போக்சோ வழக்கில் கைதான முதியவர் தப்பியோட்டம்!
[Saturday 2026-10-31 16:00]

சென்னை புழல், தேனி சிறையைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று நள்ளிரவு கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அடுத்து அதிர்ச்சி தரும் சம்பவமாக போக்சோ வழக்கில் கைதான நபர் ஒருவர், காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.



திருமணத்தை மீறிய உறவு: கொலை செய்து புதைக்கப்பட்ட இளைஞன்!
[Saturday 2026-10-31 16:00]

கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த எழில் செல்வி என்பவரது மகன் பிரசாந்த் (19). எழில்செல்வி சென்னையில் உள்ள நடிகை ராதிகா சரத்குமார் வீட்டில் பணி பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரசாந்த் தனது மாமா ரமேஷ் என்பவருடன் வீடுகளுக்கு டைல்ஸ் போடும் வேலை பார்த்து வந்தார். கடந்த 27ஆம் தேதி சென்னையில் உள்ள தனது தாயைப் பார்க்க செல்வதாக தாய்மாமனிடம் கூறிவிட்டு வந்த பிரசாந்த், மறுநாள் 28ஆம் தேதி தனது நண்பருக்கு வீடியோ கால் செய்து தன்னை அடிப்பதாக கதறி உள்ளார். அதன் பிறகு அவரது தொலைபேசி அனைத்து வைக்கப்பட்டு அவரை தொடர்பு கொள்ள முடியாமல் மாயமாகியுள்ளார்.



மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் வந்த போது மின் தடை ஏன்?
[Saturday 2026-10-31 05:00]

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது அடுத்தடுத்து இரு முறை மின் தடை ஏற்பட்டது ஏன் என்பது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், இன்று மாலை 5.35 மணிக்கு வந்தார். அங்கு அவர் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது மணி 6.25- ஆக இருந்தது.



அன்பில் மகேஸ் கைது குறித்த கேள்வி: யோசிக்காமல் எடப்பாடி சொன்ன பதில்!
[Saturday 2026-10-31 05:00]

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் மோசடி நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், இது தொடர்பான கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சில முக்கிய கருத்துகளை கூறியுள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் தர சுமார் 100 கோடி முதல் 400 கோடி ரூபாய் வரை மோசடி செய்த குற்றச்சாட்டு எழுந்தது.



விஜய்யின் பெரியம்மா முதியோர் இல்லத்தில் வசித்தது ஏன்?
[Saturday 2026-10-31 05:00]

தமிழக முதல்வர் விஜய்யின் பெரியம்மா அமல் ராஜசேகரன், சென்னை நீலாங்கரையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது 92-வது வயதில் வயது மூப்பு காரணமாகக் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதேநேரம் முதல்வரின் பெரியம்மா முதியோர் இல்லத்தில் ஏன் வசித்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்! தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் சகோதரர் ராஜசேகரனின் மனைவி அமல் ராஜசேகரன். இவர் சென்னையில் உள்ள தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்களுக்கு சூப்பர் நியூஸ்!
[Friday 2026-10-30 16:00]

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதைவிட 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.



தேனி கைதிகள் தப்பியது எப்படி?
[Friday 2026-10-30 16:00]

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியது எப்படி என்பது குறித்தும் அவர்கள் தப்பிக்க மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்தும் அந்த 17 பேர் மீது என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தும் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா விளக்கமளித்துள்ளார். தேனி மாவட்டம், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 17 சிறை கைதிகள் கடந்த 26-ஆம் தேதி இரவு தப்பி ஓடிய நிலையில் 17 கைதிகளையும் போலீசார் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து க.விளக்கு காவல் நிலையத்தில் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா செய்தியாளர்களை சந்தித்தார்.



வலுவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் எங்கெல்லாம் மழை?
[Friday 2026-10-30 16:00]

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும், அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுபெறும்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா