Untitled Document
October 25, 2026 [GMT]
தனுஷுக்கு அர்ஜுன் மூர்த்தி ஆலோசகரா? - பாஜக போட்ட கணக்கு!
[Friday 2026-10-23 16:00]

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்தத் தகவலை தனுஷ் தரப்பும், நற்பணி மன்ற நிர்வாகிகளும் மறுத்துள்ளனர். இதுகுறித்து பிரத்யேக ஒன்று தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்..!!

  

முன்னணி நடிகரான தனுஷ் அரசியலில் களமிறங்க போவதாக கடந்த சில நாட்களாகத் தகவல்கள் பரவி வருகின்றன. தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றி, ரசிகர்களை ஒருங்கிணைத்து வரும் தனுஷ், அரசியல் கட்சி தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் பேசப்படுகிறது.

குறிப்பாக, "தமிழக எழுச்சிக் கழகம்" என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாக தகவல்கள் பரவி, அரசியல் களத்தை சூடாக்கி விட்டது..

அதுமட்டுமல்ல, இந்த பரபரப்புக்கு நடுவில், தனுஷ் 2 நாட்களாக டெல்லியில் தங்கியிருந்து, தமிழக அரசியலில் களமிறங்குவதற்கான சாத்தியக்கூறுகள், எதிர்காலத் தேர்தல் திட்டங்கள், கட்சியை முறைப்படி தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும், தேசிய அளவிலான முக்கிய பிரமுகர்களையும் அரசியல் வியூக நிபுணர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கு நடுவில், தனுஷின் ரசிகர் மன்றம் பயன்படுத்தும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடியும், பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியது..

அந்த கொடி அரசியல் கட்சியின் கொடியை போலவே இருப்பதாக பேசப்பட்ட நிலையில், அது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருப்பதாக ரசிகர் மன்றத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது... இப்படி தனுஷின் அரசியல் வருகை குறித்த பல்வேறு தகவல்கள் றெக்கை கட்டி பரந்து வரும் சூழலில்தான், நமக்கு தற்போது கிடைத்துள்ள எக்ஸ்க்ளூசிவ் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

அதாவது, தனுஷ் கட்சி தொடங்கிவிட்டதாகவும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாகவும் பரவும் தகவல்களை அவரது தரப்பும் நற்பணி மன்ற நிர்வாகிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இதுகுறித்து நாம் அவர்களிடம் பேசியபோது, "தனுஷிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை, அரசியலுக்கு வருவது குறித்து அவர் முடிவெடுத்தால் அதை அவரே நேரடியாக அறிவிப்பார்.. தனுஷ் தனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து நலத்திட்டப் பணிகளில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். தேர்தல் ஆணையத்தில் எந்தக் கட்சியையும் அவர் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை" என்று நம்மிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இப்படி தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் ஒருபுறம் தொடரும் நிலையில், அவருக்கு அரசியல் ஆலோசகராக யார் நியமிக்கப்படுவார் என்ற விவாதமும் தற்போது வெடித்து கிளம்பியுள்ளது.

அன்று ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது, அவருக்கு ஆலோசகராக பாஜக பிரமுகர் அர்ஜுன் மூர்த்தியை அக்கட்சி அனுப்பி வைத்தது. இப்போது அதே அர்ஜுன் மூர்த்தியை தனுஷின் அரசியல் ஆலோசகராக நியமிப்பது குறித்து ரஜினியிடம் பாஜக தேசியத் தரப்பிலிருந்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கு ரஜினி, "எந்த முடிவையும் இப்போது முடிவு செய்ய வேண்டாம்" என தெரிவித்திருக்கிறாராம். அப்படியானால் தனுஷ் அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த பிறகே ஆலோசகர் நியமனம் குறித்த நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன...!!

  
   Bookmark and Share Seithy.com



விஜய் ஆட்சிக்கு வந்ததும் "லியோ தாஸ்"ஆக நினைக்கும் குற்றவாளிகள்: எடப்பாடி விமர்சனம்!
[Sunday 2026-10-25 06:00]

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, சமூக நீதி சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் தற்போது நடக்கும் கொலைகளை எல்லாம் பார்க்கும் போது, முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகள் எல்லாம் தங்களை 'லியோ தாஸ்'ஆக நினைத்துக் கொண்டு வலம் வருகின்றனரோ? என்று சந்தேகிக்க தான் தோன்றுவதாக அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. கொலைகள், கொள்ளைகள் நடப்பதாகவும், பெண்கள், குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் அளவுக்கு தவெக ஆட்சி இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.



அரசியல் களத்திற்கு ரெடியாகும் தனுஷ்?
[Sunday 2026-10-25 06:00]

நடிகர் தனுஷ் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த சில நாட்களாகவே தகவல் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாகவே தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில் நாளை சென்னை ஓஎம்ஆரில் தனது நற்பணி இயக்கத்தை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள், உறுப்பினர்களை தனுஷ் நேரில் சந்திக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தனுஷ் உரையாற்றுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.



வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை மையம் எச்சரிக்கை!
[Sunday 2026-10-25 06:00]

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 26 ஆம் தேதி அதி தீவிர புயலாக மாறலாம் என்றும், இந்த புயல் வரும் 28 ஆம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே புயல் கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.



5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தயாராகும் திமுக!
[Saturday 2026-10-24 14:00]

5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அந்தந்த தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கே.என்.நேரு, செந்தில் பாலாஜி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இந்த ஆலோசனையில் பங்கேற்று இருக்கின்றனர். இதன் மூலமாக திமுகவின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டதாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்துவிட்டது. இரு தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றாலும், திமுக 2வது இடத்தை பிடித்து ஆச்சரியம் கொடுத்தது. அதேபோல் சட்டசபைத் தேர்தலில் இரு தொகுதிகளிலும் வென்ற அதிமுக, இடைத்தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.



ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு எஸ்ஐடி மீண்டும் சம்மன்!
[Saturday 2026-10-24 14:00]

ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெம் வீரமணிக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் இந்த வழக்கில் தினந்தோறும் ஒரு அப்டேட் வந்து மக்களை அதிர வைக்கிறது. அந்த வகையில் வீரமணியின் மகள் அர்ச்சனா, சிங்கப்பூர் செல்லவிருந்தாராம்.



மண் சரிவில் சிக்கிய ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்: வேண்டுகோள் விடுத்த நீலகிரி மாவட்ட ஆட்சியர்!
[Saturday 2026-10-24 14:00]

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கனமழை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (24-10-26) ஆரஞ்ச் நிற அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாட்டத்தில் நேற்று இரவு முதலே இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.



தமிழகத்தில் அடுத்த பரபரப்பு சம்பவம்: டியூஷன் சென்ற சிறுவன் திடீரென மாயம்!
[Saturday 2026-10-24 14:00]

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 8 தனிப்படை அமைக்கப்பட்டு சுமார் 10 நாட்களுக்கு மேலாக அந்த சிறுமியை போலீசார் தேடி வந்தும், தற்போது வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



"மேயர் பிரியாவுக்கு இதே வேலையா போச்சு" - கடுகடுத்த செங்கோட்டையன்!
[Saturday 2026-10-24 07:00]

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை, நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் களம் அடியோடு மாறியுள்ளது. சென்னையில் தவெகவினரை நிவாரண பணிகளுக்கு திமுக மேயர் பிரியா தடையாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



'கொடைக்கானலுக்கு வராதீர்கள்' - திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்!
[Saturday 2026-10-24 07:00]

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மழையின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. எனவே, கொடைக்கானலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக வெள்ளி அருவியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அருவியை தாண்டி வாகனங்கள் மேலே வர முடியாதபடியும், மேலிருந்து கீழே இறங்கும் வாகனங்கள் கீழே இறங்க முடியாதபடியும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.



போலீஸ் கிடுக்கிப்பிடி கேள்வி: மயங்கி விழுந்த ஜெம் வீரமணி மகள்!
[Saturday 2026-10-24 07:00]

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்ல முயன்ற ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை எஸ்ஐடி போலீசார் இன்று விமான நிலையத்தில் மடக்கி பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் திடீரென்று மயங்கினார். இதையடுத்து அவரை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தமிழகத்தின் முன்னணி தொழிலதிபராக வலம் வந்த 82 வயது நிரம்பிய ஜெம் வீரமணி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளை மிரட்டி பாலியல் தொல்லை அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கோவை மாணவர் மரணம்: நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை ஏற்க தயங்குகிறதா தவெக அரசு?
[Friday 2026-10-23 16:00]

கோயம்புத்தூரில் பட்டியல் சமூக மாணவர் ஒருவர் சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடுகளை களைய, முன்னாள் நீதிபதி சந்துரு கொடுத்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். அரசு இதை அமல்படுத்த தயங்குகிறதா? என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது. கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் அகிலன் எனும் மாணவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். ஓரிரு நாட்களுக்கு முன்னர் வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார், யாரெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுவீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.



தூத்துக்குடியில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண் கொலை: தவெக அரசுக்கு கனிமொழி கேள்வி!
[Friday 2026-10-23 16:00]

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39). இவர்களுக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14), பிளெசெட் ராஜா (10) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் சரமாரியாகத் தாக்கியது. இதில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் மகன் பிளெசெட் ராஜா ஆகியோர் படுகாயமடைந்தனர்.



ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் மும்பை விமான நிலையத்தில் கைது!
[Friday 2026-10-23 16:00]

ரூ.1.83 கோடி மதிப்புள்ள தங்க பசை கடத்திய இலங்கையர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில், உளவுத்தகவலின் அடிப்படையில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) சோதனை நடத்தியது. புதன்கிழமை நடைபெற்ற இந்த சோதனையில், போர்டிங் கேட் எண் 65-க்கு அருகிலுள்ள லிஃப்டில் விமான நிறுவன ஊழியர் ஒருவரிடம் தங்கப் பசை உள்ள 3 நீள்வட்ட வடிவ பொட்டலத்தைக் கொடுத்த இலங்கை பயணி ஒருவரை CISF அலுவலர்கள் இடைமறித்தனர்.



அரசின் திட்டங்களை விமர்சனம் செய்தால் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!
[Friday 2026-10-23 07:00]

அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது எனவும், மீறி விமர்சிக்கும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



அரசு மருத்துவமனையில் பறிபோன பிஞ்சு உயிர்: கண்ணீருடன் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை!
[Friday 2026-10-23 07:00]

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் மருத்துவமனையில் போதிய கருவி இல்லை என்று கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு கண்ணீருடன் அந்த குழந்தையின் தாத்தா, இந்த மருத்துவமனையில் 150 வகை நோய்களை கண்டறியும் கருவி இல்லையாம். அதை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைப்பதாக கூறினார்.



"உடலை வாங்க மாட்டோம்" - கோவை மாணவரின் பெற்றோர் திட்டவட்டம்!
[Friday 2026-10-23 07:00]

சாதி ரீதியாக பேசிய ஆசிரியர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோவை மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர். கோவையில் பட்டியலின மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், அவரது பெற்றோரிடம் பீளமேடு காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவரின் பெற்றோர் ஆசியர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் அகிலனை, சக மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சாதி பெயரை சொல்லி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.



மர்மமாய் மயமான செஞ்சி சிறுமி: தாய் பக்கம் திரும்பிய சிபிசிஐடி விசாரணை வளையம்!
[Thursday 2026-10-22 16:00]

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே இரண்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போன விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணையின் வேகம் அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள ஆலம்பூண்டி அடுத்த நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு மற்றும் பவானி தம்பதியின் மகள் ஹேமலதா என்ற இந்த சிறுமி, கடந்த 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலையில் அவரது வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.



”இரு கைதிகள் தப்பிய விவகாரம்” - 6 காவலர்கள் சஸ்பெண்ட்!
[Thursday 2026-10-22 16:00]

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து சுரேஷ் (41) மற்றும் சுதீப் போகதி (21) ஆகிய இரு கைதிகள் அடுத்தடுத்து தப்பினர். மிக அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட சிறையாகக் கருதப்படும் புழல் சிறையிலிருந்து, அடுத்தடுத்து இரண்டு கைதிகள் தப்பிய விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.



தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
[Thursday 2026-10-22 16:00]

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.



ரேஷன் அரிசிக்குப் பதில் வங்கி கணக்கில் பணம் வரவு: அரசு அறிவிப்பு!
[Thursday 2026-10-22 16:00]

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாத இலவச அரிசிக்கான பணம் ரூ.35.71 கோடி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 20 கிலோவும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 10 கிலோவும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் மொத்தம் 2.54 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆனால், கடந்த 6 மாதங்களாக இலவச அரிசி வழங்கப்படவில்லை.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா