Untitled Document
June 22, 2026 [GMT]
பரந்தூர் விமான நிலையத்தால் ஓசூர், ராமேஸ்வரம் விமான நிலையங்களுக்கு சிக்கல்?
[Saturday 2026-06-20 07:00]

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் அளித்தும் இந்த திட்டம் கைவிடப்படும் நிலை ஏற்பட்டால், ஒசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைப்பது கேள்விக்குறியாகும் என பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணியர், சரக்கு போக்குவரத்து என ஏராளமானோர் அங்கு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. அது போல் பயணிகளை விமான நிலையத்தில் விடுவதற்கும் பிக் கப் செய்வதற்கும் நிறைய கால்டாக்சிகளும், கார்களும் வருவதால் போக்குவரத்தும் நெரிசல் ஏற்படுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் அளித்தும் இந்த திட்டம் கைவிடப்படும் நிலை ஏற்பட்டால், ஒசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைப்பது கேள்விக்குறியாகும் என பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணியர், சரக்கு போக்குவரத்து என ஏராளமானோர் அங்கு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் நெரிசல் ஏற்படுகிறது. அது போல் பயணிகளை விமான நிலையத்தில் விடுவதற்கும் பிக் கப் செய்வதற்கும் நிறைய கால்டாக்சிகளும், கார்களும் வருவதால் போக்குவரத்தும் நெரிசல் ஏற்படுகிறது.

  

இதனால் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கலாம் என முடிவு செய்து, அதை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பது என உறுதியானது. இந்த பரந்தூரில் கிராம மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தி விமான நிலையத்தை அமைப்பதால் அந்த பகுதி மக்கள் மாதக்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதாவது 5320 ஏக்கர் நிலங்கள் தேவைப்படுகிறது. இதற்கான திட்ட செலவு 29,150 கோடி ரூபாயாகும். தனியார் வசம் உள்ள 3774 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணி கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியது.

அந்த வகையில் இதுவரை 1750 ஏக்கர் நிலம் பெறப்பட்டுள்ளது. நிலம் எடுக்க போராடிய மக்களை தவெக தலைவர் விஜய், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் "வளர்ச்சி என்பது முக்கியம்தான், ஆனால் வாழ்வாதாரம் என்பது அதைவிட முக்கியம்" என கூறி பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுமாறும் அப்போதைய திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அது போல் சட்டசபை தேர்தலிலும் அவர் தேர்தல் வாக்குறுதியாக பரந்தூர் விமான நிலையம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் தவெக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இந்த நிலையில் டிட்கோ எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல்பாடு குறித்து கடந்த மாதம் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டப்பணிகளை நிறுத்தி வைக்குமாறு விஜய் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு வேறு இடத்தில் அமைக்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தும் கைவிடப்படுகிறது என்பதே இதன் பொருளாகும்.

இதுகுறித்து சில அதிகாரிகள் கூறியிருப்பதாவது: நிர்மல் குமார் கூறுவதை பார்த்தால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றே தெரிகிறது. இதனால் ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையம் அமைக்கும் பணிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிப்பது என்பது கேள்விக்குறியாகும். இந்த திட்டங்களுக்காக உழைத்த அதிகாரிகளின் உழைப்பும் வீணாகும் நிலை உள்ளது. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



தனியாருக்கு போகும் தூய்மைப் பணி: போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்!
[Monday 2026-06-22 16:00]

ஈரோடு உட்பட 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று (22.06.2026) காலை முதல் வேலைநிறுத்தம் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் (Commissioner) மற்றும் நகர் நல அலுவலர் (CHO) உள்ளிட்டோருடன் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளர் சங்கம் (ஏஐடியுசி) செயலாளர் ஆர்.மணியன், திமுக மாநகர் மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணியம், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பெரியார் நகர் மனோகரன், விசிக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள், மாமன்ற‌ துணைத் தலைவர், மாமன்ற எதிர்கட்சித் தலைவர், மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற‌ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேச்சு வார்த்தையின்‌ நிறைவில் பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டன.



திருவள்ளூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அளித்த அறிக்கை!
[Monday 2026-06-22 16:00]

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக வாயுக்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது இந்நிலையில் இது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டப்பேரவை விதி 110ன்கீழ் அறிக்கை அளித்தார். அதில், “திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் நேற்று (21.06.2026) உணவுகளை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில், உள்ள பைப்லைன் வால்வில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.



வீட்டில் சிசிடிவி கமெராக்களை பொருத்திய கணவன்: கண்ட அதிரவைத்த காட்சி!
[Monday 2026-06-22 16:00]

ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான நிலையில், அவரை கண்காணிக்க தன் வீட்டில் சிசிடிவி கமெராக்களை பொருத்தியுள்ளார் அவரது மகன். ஆனால், அந்த கமெரா காட்சிகளில், தன் தந்தை தன் மனைவியால் கொல்லப்படுவதை நேரடியாக காண நேர்ந்ததால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் அவர்! இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்ச்சி நகரில் வழ்ந்துவரும் Dr குப்தா (Dr KP Gupta), ஒரு பிரபல ஹோமியோபதி மருத்துவர் ஆவார்.



"ஸ்டாலினை தூக்கி ஏறிய ஆசைப்படும் கனிமொழி" - நாஞ்சில் சம்பத் பேச்சு!
[Monday 2026-06-22 16:00]

திமுக தலைவர் பதவியில் இருந்து ஸ்டாலினை தூக்கி ஏறிய கனிமொழி ஆசைப்படுவதாக, நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தவெகவின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், "இப்போது 6 மாத காலம் ஆட்சி தாங்குமா என அண்ணன் ஸ்டாலின் கேட்கிறார். நாஞ்சில் சம்பத் மிகுந்த கவலையுடன் சொல்வேன். நீங்கள் 6 மாத காலம் திமுக தலைவராக இருக்க முடியுமா என்று யோசியுங்கள். உங்கள் கட்சியிலேயே உச்சகட்ட குழப்பம் அரங்கேறி உள்ளது.



தூத்துக்குடியில் சுழல் காற்று வீசியது ஏன்? - வானிலை ஆய்வு மையம் விளக்கம்!
[Monday 2026-06-22 07:00]

தூத்துக்குடி விமான நிலையம் அருகே இன்று திடீரென வித்தியாசமான சூறாவளி காற்று வீசியது. இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகின. தூசி எழும்பி புனல் போன்று சுழல் காற்று வீசியது ஏன் என சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடியில் இன்று காலை முதல் பிற்பகல் வரை கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென சுமார் 3 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் மாறத் துவங்கியது. பின்னர், வாகைகுளம் விமான நிலையம் அருகே டொர்னடோ (Tornado) என்று அழைக்கப்படும் வெளிநாடுகளில் அடிக்கடி உருவாகும் சுழல் காற்று வானத்துக்கும் நிலத்துக்கும் இடையே ராட்சத அளவில் உருவானது.



முதல்வராக விஜய்யின் முதல் பிறந்தநாள் இன்று: சட்டசபையில் பெண்களுக்கு சர்பிரைஸ்?
[Monday 2026-06-22 07:00]

முதல்வர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் சட்டசபையில் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசியல் வருகை மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய், மே 10, 2026 அன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். மேலும் கண்டறிக இலங்கை செய்தி தொகுப்பு TV & Video உள்ளூர் செய்தி சேவை விளையாட்டு செய்தி புதுப்பிப்பு முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இதுவாகும்.



திமுக, அதிமுக கட்சியினர் தவெகவில் இணைவது ஏன்? - அமைச்சர் CTR நிர்மல் குமார் விளக்கம்!
[Monday 2026-06-22 07:00]

மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைவது ஏன் என்பது குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். குறுக்கு வழியில் வர நினைத்தது பிடிக்காமல், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் எங்களுடன் இணைக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலை உடைத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ளது.



அமோனியா வாயுக்கசிவு சம்பவம்: மாவட்ட ஆட்சியர் கவிதா ஆய்வு!
[Sunday 2026-06-21 17:00]

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.



அமோனியா வாயுக்கசிவு சம்பவம்: முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!
[Sunday 2026-06-21 17:00]

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்துள்ள மஞ்சகரணையில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயக்கமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாய், மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததால் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் வாயு கசிவு: 7 பேர் உயிரிழப்பு!
[Sunday 2026-06-21 17:00]

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமைந்துள்ள கண்ணிகைபைர் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் அண்ட் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட எதிர்பாராத அமோனியா கசிவு விபத்தில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.



6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
[Sunday 2026-06-21 17:00]

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்.



அதிர்ஷ்டவசமாக ஹார்முஸ் நீரிணையை கடந்த 3 இந்திய எண்ணெய் கப்பல்கள்!
[Sunday 2026-06-21 07:00]

இந்தியக் கொடியுடன் பயணித்த Desh Vaibhav, Desh Vibhor, Sanmar Herald ஆகிய மூன்று பெரிய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்துள்ளன. இவை மொத்தம் 8.6 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் மற்றும் 94 இந்திய மாலுமிகளுடன் இந்தியாவை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கின்றன.



தமிழகத்தில் அரிசி விலை உயர்வு!
[Sunday 2026-06-21 07:00]

கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வரத்து குறைந்துள்ளதால் தமிழகத்தில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ 10 உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வட இந்தியர்களுக்கு கோதுமை முக்கியம் என்பதை போல் தென்னிந்தியர்களுக்கு அரிசி முக்கிய உணவாக பார்க்கப்படுகிறது. ஏழை எளிய மக்கள் ஒரு வேளை உணவையாவது சாப்பிட வேண்டும் என்பதால் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. மேலும் கண்டறிக Rail Freight உள்ளூர் செய்தி சேவை தமிழ் செய்தி சந்தா உலக செய்தி தொகுப்பு அது போல் கோதுமையும் வழங்கப்படுகிறது. தமிழகத்தின் நெற் களஞ்சியம் தஞ்சை மாவட்டத்தில் அரிசி உற்பத்தி நடைபெறுகிறது. அது போல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் நெல் விளைவிக்கப்படுகிறது.



நாடு முழுக்க இன்று நடைபெறும் நீட் தேர்வு!
[Sunday 2026-06-21 07:00]

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று, ஜூன் 21-ம் தேதி, நாடு முழுவதும் நடைபெறுகிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் லீக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று மறுதேர்வு நடைபெறுகிறது. இந்தத் தேர்வை எவ்வித முறைகேடுகளும் இன்றி, பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் நடத்தத் தேசிய தேர்வு முகமை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய போட்டித் தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் நீட் தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. முழுவதும் சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்.



தவெகவில் இணைந்த நடிகர் மன்சூர் அலிகான்!
[Saturday 2026-06-20 15:00]

நடிகர் மன்சூர் அலிகான் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் எதிர்பாராத வெற்றியை பெற்று, விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மாற்று கட்சியை சேர்ந்த பலரும் அந்த கட்சியில் இணைந்து வருகின்றனர். அதிமுகவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்ததை தொடர்ந்து, அதிமுக முன்னாள் எம்.பி, திமுக முன்னாள் எம்.எல்.ஏ என பலரும் இணைந்தனர்.



நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் அமைப்பு போராட்டம்!
[Saturday 2026-06-20 15:00]

நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு நாளை நாடு முழுவதும் மீண்டும் மறு நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.



மகன் எடுத்த தவறான முடிவு: காப்பாற்றச் சென்ற தந்தையும் பலியான சோகம்!
[Saturday 2026-06-20 15:00]

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், இளைஞர் ஒருவர் கோபத்தில் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முடிவு செய்த நிலையில், அவரைக் காப்பாற்றச் சென்ற தந்தையும் உயிரிழந்த சோகம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்திலுள்ள உத்யோக் நகர் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஷ்ரவன் ஜெய்ஷ்வால் (55). அவரது மகன், ராகேஷ் ஜெய்ஷ்வால் (24). நேற்று இரவு 11.00 மணியளவில் இருவரும் மோட்டார் சைக்கிளில் சந்தைக்குச் சென்றுள்ளனர்.



தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
[Saturday 2026-06-20 15:00]

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., கிழக்கு விதர்பா முதல் தமிழ்நாடு பகுதிகள் வரை தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு மிதமான மழை தொடரும்.



மாணவியுடன் வந்த காதலன்: பின்னாடியே வந்த 2 நண்பர்கள் - நடந்தது என்ன?
[Saturday 2026-06-20 07:00]

தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவியை பைக்கில் அழைத்துச் சென்ற காதலன், அவரது நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ஆத்திக்காடு கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகன் சஞ்சய் (20). இவர் பெயிண்டராக உள்ளார். மேலும் கண்டறிக இலங்கை செய்தி தொகுப்பு தமிழ் செய்தி சந்தா விளையாட்டு செய்தி புதுப்பிப்பு இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகி வந்தாராம்.



முதல்வர் விஜய் திணறுவது வெளியே தெரிஞ்சிடும்னு ‘லைவ்’ கட் பண்ணீங்களா? - எச்.ராஜா கேள்வி!
[Saturday 2026-06-20 07:00]

சட்டப்பேரவை நேரலையை நிறுத்தியதற்கு முதல்வரின் திணறல் வெளிப்பட்டு விடும் எனும் பயம்தான் காரணமா? என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். கத்திரிக்காய் முத்தினால கடைக்கு வந்தே தீரும்.. அப்புறம் எதற்கு இந்த ரகசிய செட்டிங் எல்லாம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் எவ்விதத் தடையுமின்றி, முழுமையாக நேரலை செய்யப்படும் என்று தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய், தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதியாகவே அளித்திருந்தார்.


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா