Untitled Document
June 17, 2024 [GMT]
“இந்தியா கூட்டணி அழுது புலம்புகிறது” - பிரதமர் மோடி விமர்சனம்!
[Thursday 2024-05-23 18:00]

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, ஐந்து கட்டமாக 430 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தலை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆறாம் கட்டத் தேர்தல் நாளை மறுநாள் (25-05-24) 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-05-24) மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

  

இந்த நிலையில், ஹரியானா மாநிலம் பிவானி பகுதியில் இன்று (23-05-24) பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், “மேற்கு வங்கத்தில் ஓபிசி சான்றிதழ்களை ஒரே இரவில் இஸ்லாமியர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் வழங்கியுள்ளனர். கடந்த 10-12 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஓபிசி சான்றிதழ்களையும் உயர்நீதிமன்றம் செல்லாததாக்கியுள்ளது.

1962 இல், நேருவால், சீனாவின் கைகளில் அடிபட்டோம். ஆனால், காங்கிரஸ் அந்தத் தோல்விக்கு நமது ராணுவத்தையே காரணம் என்று கூறினார்கள். அந்தக் குடும்பம் இன்றும் நமது ராணுவத்தை இழிவுபடுத்த வாய்ப்புகளை தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் பழிவாங்கும் எண்ணத்தில் ரூ.500 வீசி ஒரே பதவி ஒரு ஓய்வூதியம் (OROP) செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

இந்தியா கூட்டணியின் நோக்கத்தை நாட்டு மக்கள் ஏற்கெனவே புரிந்து கொண்டுள்ளனர். அதுதான் அவர்களின் நிலை. வெறும் 5 கட்டங்களிலேயே இந்தியக் கூட்டணியின் முருங்கை வெடித்து, மூன்றாம் கட்டத்துக்குப் பிறகு அழுது புலம்ப ஆரம்பித்ததைப் பார்த்திருப்பீர்கள்.ஏன் தேர்தல் ஆணையம் இப்படி செய்கிறது? தேர்தல் ஆணையம் ஏன் இப்படி செய்கிறது? என்று” எனத் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



வியாபாரியை வழிமறித்து 30 லட்சம் ரூபாய் வழிப்பறி: 4 பேர் கைது!
[Monday 2024-06-17 06:00]

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் காதர்பேட்டை மசூதி தெருவைச் சேர்ந்தவர் பராஸ் அகமது (29). இவர் ஆம்பூரில் பழைய இரும்பு மற்றும் தோல்பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் பலர் இவருடைய கடையில் இருந்து இரும்பு, தோல்பொருட்களை தவணையில் வாங்கி செல்வதும், அதற்கான பணத்தை சில நாட்களில் பராஸ் அகமது நேரில் சென்று வசூலிப்பது வழக்கம்.



சிறுமியிடம் பாலியல் மிரட்டல்: வட மாநில வாலிபர் கைது!
[Monday 2024-06-17 06:00]

சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியிடம் ஆன்லைன் மூலம் பழகி செல் போனில் இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய ஆந்திர மாநில வாலிபரை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.



நடு சாலையில் காரை வழிமறித்து தாக்குதல்: கொள்ளை முயற்சி தொடர்பான பகீர் வீடியோ!
[Monday 2024-06-17 06:00]

கோவையில் நடு சாலையில் காரை மறித்து பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மதுக்கரை எல்என்டி பைபாஸ் அருகே இரவு நேரத்தில் கேரள பதிவெண் கொண்ட காரை நடுசாலையிலேயே கார் ஒன்று வழிமறித்து நின்றது. திடீரென அந்த காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர்கள் சிலர் வழிமறிக்கப்பட்டு நின்ற வானகத்தில் இருந்தவர்களை கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் தாக்க முயன்றனர்.



‘ஆமைகளின் எண்ணிக்கை உயர்வு’ - வனத்துறை சாதனை!
[Sunday 2024-06-16 08:00]

தமிழ்நாட்டின் 1076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் வரலாற்று ரீதியாக ஆமைகள் கூடு கட்டுவதற்காக வருகை தருகின்றன. ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை, ஹாக்ஸ்பில் ஆமை, லாக்கர்ஹெட் ஆமை மற்றும் லெதர்பேக் ஆமை ஆகிய ஐந்து வகையான கடல் ஆமைகள் தமிழக கடற்கரைக்கு வருகை தருகின்றன. இவற்றில், முக்கியமாக ஆலிவ் - ரிட்லி ஆமைகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. அவை கூடு கட்டுவதற்கும் மற்றும் அவற்றின் தீவனமாகவும் தமிழ்நாட்டின் தென்பகுதியான கோரமண்டல் கடற்கரை அறியப்படுகின்றன, அதேசமயம் மற்ற வகை ஆமைகள் தற்போது கூடு கட்டுவது அரிதாக உள்ளன.



“தமிழ்நாடு என்றைக்குமே திராவிடக் கோட்டை” - முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
[Sunday 2024-06-16 08:00]

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு நிறைவு, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, மக்களவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என ‘முப்பெரும் விழா’ கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று (15.06.2024) நடைபெற்றது.



'திமுக வெற்றிக்காக பாடுபடுவோம்' - முத்தரசன் பேட்டி!
[Sunday 2024-06-16 08:00]

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அதிமுக இந்த இடைத் தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது.



விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பு!
[Saturday 2024-06-15 17:00]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை 10 ஆம் திகதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போது வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக சார்பிர் யார் களமிருங்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வந்தது.



திமுக பேச்சாளரை ஆவேசமாக விமர்சித்த குஷ்பு!
[Saturday 2024-06-15 17:00]

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு தொடர்வேன் என்று நடிகை குஷ்பு ஆவேசமாக தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சௌந்தரராஜன் குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இந்நிலையில், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.



பல ஆண்டுகளாக ஒரே மொபைல் எண் வைத்திருந்தால் தனி கட்டணமா?
[Saturday 2024-06-15 17:00]

நீண்ட நாட்களாக செல்போன் எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வைத்திருந்தால் தனி கட்டணம் வசூலிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தியாவில் 120 கோடிக்கும் அதிகமானோர் மொபைல்போன் இணைப்புகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனை முறைப்படுத்த பல்வேறு நெறிமுறைகளை டிராய் (TRAI) வகுத்து வருகிறது.



21 முறை ஓம் ஸ்ரீராம் எழுதிய பின்னரே பொறுப்பேற்ற இந்திய அமைச்சர்!
[Saturday 2024-06-15 17:00]

21 முறை ஓம் ஸ்ரீராம் எழுதிய பின்னரே மத்திய அமைச்சராக எம்.பி.கே.ராம்மோகன் நாயுடு பொறுப்பேற்று கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 543 இடங்களில் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. கடந்த ஜூன் 9 -ம் திகதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் சேர்ந்து புதிய அமைச்சரவையில் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.



'30 ஆண்டு கால சேவைக்கான பலன் 2026ல் கிடைக்கும்'- புஸ்ஸி ஆனந்த் பேச்சு!
[Saturday 2024-06-15 06:00]

கடந்த 30 ஆண்டுகளாக செய்து வந்த மக்கள் சேவைக்கான பலன், 2026 ம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக கிடைக்கும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட அலுவலகத்தின் திறப்பு விழா கருங்கல்பாளையம் அருகில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



எடியூரப்பா வழக்கில் திடீர் திருப்பம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Saturday 2024-06-15 06:00]

பா.ஜ.க மூத்த தலைவரான எடியூரப்பா, கர்நாடகா மாநிலத்தின், முதல்வராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். இவர் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது கடந்த மார்ச் 15ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.



காதலியின் கழுத்தை வெட்டி கையில் பிடித்தபடி வீடியோ: பதைபதைக்க வைக்கும் சைக்கோ கொலை!
[Saturday 2024-06-15 06:00]

உத்தரப்பிரதேசத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகராக இருந்து வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலியின் தலையை வெட்டி சிரித்த முகத்துடன் அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட சைக்கோ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



அயோத்தி ராமர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Friday 2024-06-14 18:00]

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில், இந்த புகழ்பெற்ற கோவிலுக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாத அமைப்பு மிரட்டல் வந்தது. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை இடிப்போம் என பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு (Jaish-E-Mohammed) எச்சரித்ததாக ஓடியோ செய்தி கசிந்துள்ளது.



வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: தமிழிசை வீட்டிற்கே சென்று பேசிய அண்ணாமலை!
[Friday 2024-06-14 18:00]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அப்போது, தோல்வி குறித்து பேசிய தமிழிசை மற்றும் அண்ணாமலை எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.



ஓராண்டை நிறைவு செய்த செந்தில் பாலாஜியின் சிறை பயணம்!
[Friday 2024-06-14 18:00]

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஓராண்டாக சிறையில் உள்ளார். கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.



ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் 7 தமிழர்களின் உடல்கள்!
[Friday 2024-06-14 18:00]

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 7 பேரது உடல்கள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. குவைத்தின் மங்காப் நகரில் புதன்கிழமை (ஜூன் 12) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் இந்தியா வந்தடைந்தது.



குவைத் தீ விபத்து: இந்தியர்களின் உடல்களை கொண்டுவர விரைந்த ராணுவ விமானம்!
[Friday 2024-06-14 06:00]

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 41 இந்தியர்கள் மரணமடைந்துள்ள நிலையில் அவர்களின் உடல்களை தாயகம்கொண்டுவர விமானப் படை விமானம் குவைத் விரைந்துள்ளது. குவைத்தின் தெற்கே அமைந்துள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். குறித்த குடியிருப்பில் ஒரு சமையல் அறையில் திடீரென்று தீப்பற்றியதை அடுத்து கட்டிடம் முழுவதும் மளமளவென தீ பரவியதில் 49 பேர் மரணமடைந்தனர்.



சபாநாயகர் தேர்தல் திகதி அறிவிப்பு: தக்கவைக்க முயலும் பாஜக!
[Friday 2024-06-14 06:00]

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 09.06.2024 அன்று நடைபெற்றது.



ஆறு மாதத்தில் 1,371 கிலோ குட்கா பறிமுதல்: 202 நபர்கள் கைது!
[Friday 2024-06-14 06:00]

தேனியில் கடந்த ஆறு மாதத்தில் 1,371 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 202 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் புதிதாக காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்ற பிறகு, கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனையைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கைகள் கஞ்சா தடுப்பிற்காக கதிரேசன் உதவி ஆய்வாளர் தலைமையிலும், குட்கா புகையிலை தடுப்பிற்காக பாஸ்கரன், உதவி ஆய்வாளர் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா