Untitled Document
November 8, 2026 [GMT]
சீன் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்!
[Sunday 2026-11-08 06:00]

வாரா வாரம் தமிழ் சினிமாவில் நிறைய புத்தம்புதிய படங்கள் வெளியாகிறது. இந்த வாரம் 3 பெரிய படங்கள் ரிலீஸ் ஆனது, ராமாயணா, சீன் மற்றும் மூக்குத்தி அம்மன். ஒவ்வொரு படமும் ஒரு விதமான கதைக்களத்தை கொண்டது. தற்போது நாம் இந்த பதிவில் சூர்யாவின் சீன் படம் குறித்து ஒரு விஷயத்தை காண்போம். ரோமாஞ்சம், ஆவேசம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் இயக்குனர் ஜித்து மாதவன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து எடுத்துள்ள திரைப்படம் சீன்.

வாரா வாரம் தமிழ் சினிமாவில் நிறைய புத்தம்புதிய படங்கள் வெளியாகிறது. இந்த வாரம் 3 பெரிய படங்கள் ரிலீஸ் ஆனது, ராமாயணா, சீன் மற்றும் மூக்குத்தி அம்மன். ஒவ்வொரு படமும் ஒரு விதமான கதைக்களத்தை கொண்டது. தற்போது நாம் இந்த பதிவில் சூர்யாவின் சீன் படம் குறித்து ஒரு விஷயத்தை காண்போம். ரோமாஞ்சம், ஆவேசம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் இயக்குனர் ஜித்து மாதவன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து எடுத்துள்ள திரைப்படம் சீன்.

  

மேலும் இதில் நஸ்ரியா நஸீம், நஸ்லென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். வழக்கமாக மாஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சூர்யாவை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு இந்த படம் முற்றிலும் வித்தியாசமான சூர்யாவை பார்த்திருப்பார்கள்.

படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த ஒரு வித்தியாசமான திரைக்கதையாக அமைந்திருக்கிறது என்ற விமர்சனங்கள் நிறைய வந்துள்ளன.

நேற்று (நவம்பர் 6) படம் வெளியாகிவிட்டது, இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் தமிழகத்தில் நேற்று முதல் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் பேராதரவுடன் ஓடிக் கொண்டிருக்கும் சீன் முதல் நாள் உலகளவில் ரூ. 36 கோடிக்கு மேல வசூலித்துள்ளதாம்.

படம் வசூல் வேட்டை செய்ய தொடங்கிய நிலையில் இப்படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் என விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது சூர்யாவிற்கு சீன் படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.com



ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த The Odyssey திரைப்படத்தின் HD Print!
[Sunday 2026-11-08 16:00]

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம் The Odyssey. இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி 1.8 பில்லியன் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், வருகிற நவம்பர் 17-ஆம் தேதி இப்படம் அதிகாரப்பூர்வமாக ஓடிடியில் வெளிவரவிருந்த நிலையில், இணையத்தில் கசிந்துள்ளது.



2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!
[Sunday 2026-11-08 16:00]

வருகிற 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவிலிருந்து வெளியாகப்போகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தீபாவளி, பொங்கல் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு என்ன புதிய திரைப்படம் வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை, அப்படத்தை முதல் நாள் முதல் ஷோவில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.



25-வது நாளில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-11-08 16:00]

ஜெயிலர் 2 கடந்த மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இன்று ஜெயிலர் 2 வெளியாகி 25-வது நாள். இதுவரை இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.



"இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்யப்போகிறேன்" - த்ரிஷா போட்ட பதிவு!
[Sunday 2026-11-08 06:00]

தமிழ் சினிமாவின் குயினாக கொண்டாடப்படும் த்ரிஷா என்ன செய்தாலும் டிரெண்ட் தான். எங்கு சென்றாலும், என்ன புகைப்படம் வெளியிட்டாலும் த்ரிஷாவிற்கான வரவேற்பு வேற லெவலில் இருக்கும். கடைசியாக அவர் ஒரு பிரபலத்தின் திருமணத்திற்கு சென்றிருந்தார். அந்த திருமணத்திற்காக த்ரிஷா அணிந்த நகை எல்லாம் இப்போது அவரது பெயரில் டிரண்ட் ஆக தொடங்கிவிட்டது. கடைசியாக த்ரிஷா நடிப்பில் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்து பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அடுத்து த்ரிஷா நடிப்பில் ஒரு தெலுங்கு படமும், மலையாள படமும் வெளியாக இருக்கிறது.



"மக்கள் என் பக்கம்" - தனுஷ் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி பேச்சு!
[Saturday 2026-11-07 08:00]

ஓம் பட நிகழ்ச்சி மேடையில் தனுஷ் பேசும்போது தன் மீது இருக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். நடிகர் தனுஷின் ஓம் படம் வரும் நவம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் ஏராளமான தனுஷ் ரசிகர்கள் கலந்துகொண்டனர். என்ன பேசலாம்.. நம்ம எது பேசினாலும் எதாவது சொல்லுவாங்க . நம்ம பேசாமலும் இருக்க முடியாது. அதனால பேசுவோம்.



கமலின் அடுத்த படம் "சண்டியர்": மீண்டும் தொடங்கும் சர்ச்சை?
[Saturday 2026-11-07 08:00]

நடிகர் கமல்ஹாசன் அடுத்து இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது இன்று அறிவிக்கப்பட்டு என நேற்று தெரிவித்திருந்தனர். இந்த படத்திற்கு சண்டியர் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வந்து இருக்கிறது.



பாலிவுட் தீபாவளி பார்ட்டியில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள்!
[Friday 2026-11-06 16:00]

வருகிற நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருக்கும் நிலையில், பாலிவுட் திரையுலகினர் ஒன்றுதிரண்டு பார்ட்டி வைத்து அதனை கொண்டாடியுள்ளனர்.



தமிழகத்தில் முதல் நாளில் ராமாயணா படம் செய்துள்ள வசூல்!
[Friday 2026-11-06 16:00]

இதிகாசப்படங்கள், வாழ்க்கை வரலாறு, தெய்வங்களின் கதைகள் என எல்லா மொழிகளிலும் நிறையப் படங்கள் வெளியாகியிருக்கிறது. அதைப்போன்ற படங்கள் எத்தனை முறை வெவ்வேறு குழுவை வைத்து எடுக்கப்பட்டாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறும். அப்படி பாலிவுட் சினிமாவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்திய இதிகாசப் படம் தான் ராமாயணா. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.



மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி: திரைவிமர்சனம்!
[Friday 2026-11-06 16:00]

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி. வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த தீபாவளிக்கு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு இரவில் புரியாத புதிராக கனவுகள் வருகின்றன. இந்த கனவில் வரும் அமானுஷ்யங்கள் நயன்தாராவை மயிலாஞ்சி என்கிற ஊருக்கு போக சொல்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், மயிலாஞ்சி தனது அம்மாவுடன் செல்ல முடிவு செய்கிறார்.



திருமணத்திற்கு ஒன்றாக சென்ற CM விஜய் - த்ரிஷா!
[Friday 2026-11-06 07:00]

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த சமயத்தில் அவரது விவாகரத்து வழக்கு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவரது மனைவி சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து வழக்கை பதிவு செய்திருந்தார். அது இணையத்தில் கசிந்து மிகப்பெரிய சர்ச்சை ஆனது. விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சர் ஆன பிறகு சமீபத்தில் தான் சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார்.



அரசியலுக்கு வருகிறாரா வனிதா விஜயகுமார்?
[Friday 2026-11-06 07:00]

நடிகை வனிதா விஜயகுமார் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. பிக் பாஸ் சர்ச்சைகள் தொடங்கி அவரது மூன்றாவது திருமண சர்ச்சை வரை பலவும் பெரிய அளவில் பேசப்பட்ட ஒன்று. தற்போது வனிதா படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பிசியாக நடித்து வருகிறார்.



மொத ராத்திரி பட ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்!
[Thursday 2026-11-05 16:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெற்றிப்பெறும் என்ற பேச்சுக்கே இப்போதெல்லாம் இடமில்லை. அப்படி இந்த வருடம் இளம் கலைஞர்கள் நடிக்க குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெளியான திரைப்படம் தான் மொத ராத்திரி. அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடிக்க வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவான இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.



ராமாயணா திரை விமர்சனம்!
[Thursday 2026-11-05 16:00]

இந்திய சினிமாவின் உச்சமாக ரூ 2000 கோடி பட்ஜெட்டில் நமித் மல்கோத்ரா தயாரிப்பில் நிதிஷ் இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளிவந்துள்ளது இந்த பிரமாண்ட படைப்பான ராமாயண எப்படியுள்ளது? பார்ப்போம். ராமாயணம் பல வெர்சனில் பல காலங்களில் நாம் பார்த்து இருப்போம், தற்போது இந்த காலத்திற்கு ஏற்றவாறு விஷ்வல் விருந்தை பொருத்தி எடுத்துள்ளனர். இந்த கதை இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோருக்கும் தெரிந்த கதை தான், இதில் நாங்கள் சொல்ல புதிதாக ஏதுமில்லை.



ஜெயிலர் 2 வெளிவந்த 21 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்!
[Thursday 2026-11-05 16:00]

ஜெயிலர் 2 நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்து ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடி தீர்த்த படம். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 17வது இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி ரஜினி திரைப்பயணத்தில் மேலும் ஒரு மைல் கல் படமாக அமைந்துள்ளது.



"சூர்யாவின் படங்களை நிராகரிக்கவே இல்லை" - விளக்கம் கொடுத்த நஸ்ரியா!
[Thursday 2026-11-05 07:00]

நடிகர் சூர்யாவின் சீன் படம் வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த படத்தில் நஸ்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, இதற்குமுன் நஸ்ரியா மூன்று முறை என்னுடைய படங்களில் நடிக்க மறுத்திருக்கிறார் என மேடையில் தெரிவித்தார்.



ஜெயிலர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி!
[Thursday 2026-11-05 07:00]

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2 படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்து இருக்கிறது. 800 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை படம் ஏற்கனவே கடந்துவிட்டது. மேலும் படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.



பொங்கல் ரேஸில் குவியும் படங்கள்!
[Wednesday 2026-11-04 16:00]

பொங்கல் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகை. அதை விட 3 நாட்களுக்கு மேல் விடுமுறை வரும் பண்டிகை. இந்த பண்டிகையை சினிமாகாரர்கள் யாரும் தவறவிட மாட்டார்கள். எப்படியாவது தங்கள் படங்களை ரிலிஸ் செய்து விட வேண்டும் என போட்டி போடுவார்கள். அந்த வகையில் பொங்கல் விருந்தாக பிரமாண்டமாக வரவிருந்த தர்மன் படம் தற்போது தள்ளி போனதால் பல படங்கள் பொங்கலுக்கு குவிந்து வருகின்றன.



சீன் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-11-04 16:00]

சீன் திரைப்படம் வருகிற 6-ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் சீன். ஆவேசம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த ஜீது மாதவன் படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.



ராமாயணா இத்தனை கோடிகள் வசூல் செய்தால் தான் வெற்றி பெறுமா?
[Wednesday 2026-11-04 16:00]

இந்திய சினிமாவே இதுவரை பார்த்திராத பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம். ரூ. 2000 கோடி பட்ஜெட்டை தாண்டி இப்படத்தை நிதேஷ் இயக்க ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் முன்பதிவு தற்போது தொடங்கி ரூ. 70 கோடிகளை தாண்டியுள்ளது, அதிலும் வெளிநாடுகளில் இந்த படத்திற்கு நல்ல புக்கிங் நடந்து வரும் நிலையில், தற்போது ஷாக்கிங் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.



அஜித் மகளாக நடிக்கிறாரா ஸ்ரீலீலா?
[Wednesday 2026-11-04 07:00]

அஜித் அடுத்து நடிக்க இருக்கும் டேர் டெவில் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் நடிகை ஸ்ரீலீலாவும் கலந்துகொண்டார். ஷாலினி அஜித் தயாரிக்கும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கின்றனர்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா