ஆகத்து 30 - அனைத்துலக காணாமல் போனோர் நாள்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
April 28, 2024 [GMT]

ஆகத்து 30 - அனைத்துலக காணாமல் போனோர் நாள்!
[Tuesday 2016-08-30 22:00]

  

எங்கே எங்கள் கவிதைகள்?
கிழித்து விட்டீர்களா...
எங்கே எங்கள் சிரிப்புகள்?
பற்கள் கழட்டி வீட்டீர்களா..
எங்கே எங்கள் பூக்கள்?
வாடச் செய்தீர்களா..
எங்கே.. எங்கே.. எங்கே...
தோளாடு தோளாய் கதையாடிய
நண்பன் அவனெங்கே?
விழியோடு மெய் உணர்த்திய
கணவன் அவனெங்கே?
கூலிக்கு 'போய்ட்டு வருகிறேன்' என்று
'வருகிறேன்' என்பதை மறந்த என் அப்பாவெங்கே?
கற்பனையில் கரைசேர்ந்து காதல் பேசிய
காதலன் அவனெங்கே?
ஓர் மார் பாலளித்து..பாதியிலே போன
அம்மா நீயெங்கே?
நிர்வாண சீருடையில் அக்காளும் தங்கையும் தொலைத்த
மானமெங்கே?
பிரியமான இசையே.. உன் சத்தம்
நித்தம் ஒலிக்குதே செவியோரம்
நீயெங்கே இசைப்பிரியாவே?
சந்தன மார்பில் துவக்கை ஏந்தி
புரட்சி துவக்கிய தம்பி பாலசந்திரனெங்கே?
கடை வீதியா நானளஞ்சேன்
சர்காருக்கு மனு போட்டேன்
தினம் தினம் பிணமா புரண்டேன்
உன் மூச்சிசை கேட்காம தூக்கம் கூட வரலியே..
மண்ண கேட்டு வந்தவகள
மண்ணுக்கு உரமாக்கிடாகளா?
உரிம குரல் எழுப்பியவகள
உசிர தான் எடுத்தாகளா?
வந்திடு ராசாவே!! என் ராசாத்தியே!!
கைகோர்த்து நாடுவோம் நாடு கேட்டு..

தோழர் அகிலன், இளந்தமிழகம்

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா