ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
June 22, 2026 [GMT]

ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


  

அவர்களின் கண்ணீரைப் போக்கி சமூகத்தில் அவர்களும் வாழ்வை இயன்ற வரை பிறரைப் போல் தாமும் வாழந்திட வேண்டும் எனும் நல் நோக்குடனும் சீரிய சிந்தனையுடனும் திரு.செந்தில் குமரன் அவர்கள் கருணையுள்ளம் கொண்டு தமது சுய வாழ்வின் விருப்புகளுக்கு அப்பால் பல ஆண்டுகளா கடினமாக உழைத்து அந்த நலிவுற்றோர் நல் வாழ்வுக்காக இடையறாது தொடர் பணி செய்து வருவது யாவரும் அறிந்த ஒன்றே.

நீண்ட காலமாக தமக்கே உரித்தான "மின்னல் இசை" எனும் அவரது இசைப்பயணங்களின் மூலம் இயல்பாகவே அமைந்த அவரது குரல் வளத்தினை மூலமாகக் கொண்டு இசை பிரியர்களை மகிழ்வித்தும், பின் நிவாரணம் என்னும் இசை நிகழ்வுகளினூடாக ஈழத்தில் இடர் உற்றிருக்கும் அந்த மக்களுக்காக மேடைகள் தோறும் உள்ளங்களை உருக்கும் சிந்தனைப் பாடல்களைப் பாடி சிறுகச் சிறுகச் சேர்க்கும் பொருள் வளங்களைத் திரட்டி அவை பயனாள மக்களைச் சென்றடைவதற்கான பிற செலவுகள் அனைத்தையும் தமது சொந்த பணத்தின் மூலம் குடும்ப சகிதம் தாமே ஈடு செய்து பல விதமான வாழ்வாதார மேம்பாடுகளை இங்கிருந்தும் தாய் நிலத்து மக்கள் முன்னேற சமுகமளித்தும் தொடர் தொண்டாற்றி அவர்களை வருவதுவும் தமிழ் சமூகம் அறிந்த ஒன்றே.

கால ஓட்டத்தில் பெரும் பொருட் செலவினை ஏற்படுத்த வல்ல குணப்படுத்லுக்கு சவாலாக இருக்கக்கூடிய தீவிர நோய்களுக்கு நோகளுக்கு ஆளாகி நின்று தவிக்கும் நோயாள மக்கள் பெருகி வரும் நிலையினை அவதானித்த திரு.செந்தில் குமரன் அவர்கள் கடந்த ஓர் ஆறு ஏழு ஆண்டுகளாக நலிவுற்ற அந்த மக்கள் வாழும் ஊர்ப் பகுதிகள் பலவற்றிலும் இம்மக்கள் முகங் கொடுக்கும் மருத்துவ தேவைகளுக்கும் அவற்றிற்கு ஏற்ற வகையில் அங்குள்ள பல மருத்துவ மனைகளில் குறிப்பிட்ட சிகிச்சைப் பிரிவுகளும், அவற்றிற்கான உபகரணங்கள், இயந்திரங்கள், தேவைக்கேற்ப இல்லாதிருப்பதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உயிரிழப்புகளை கருத்தில் கொண்டும்.

அக்குறைகளை சரி செய்து மக்கள் உயிர்களை முடிந்த வரை காத்திடும் நோக்குடனும் "நிவாரணம்" எனும் ஓர் உயிர்காப்பு அறக்கட்டளை ஊடாக உயிர் காக்கும் இதய சத்திர சிகிச்சைகள், குருதி சுத்திகரிப்பு நிலையங்கள், நோயுற்றோருக்கான வாழ்வாதாரங்கள் என பல மருத்துவம் சார்ந்த உதவிகளை நல்லிதயம் கொண்ட கொடையாளராகிய அன்பிற்குரிய தமிழ் மக்களின் பேருதவியுடன் அரும்பாடு பட்டு நிவர்த்தி செய்து அவற்றில் வெற்றி கண்டு வருவதுவும் கண்கூடே. கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் கிளிநொச்சி மாவட்டத்தில் இவரது அமைப்பின் நடமாடும் மருத்துவ திட்டம் ஊடாக முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட பல நோயாளிகளுக்கு அவர்கள் வீட்டிற்கே சென்று சேவைகள் வழங்குவதன் மூலம் அவர்களின் போக்குவரத்து நிதி நெருக்கடிகளை தவிர்த்து நோயாளர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் பெரும் பயனை வழங்கி வருகிறது. செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு சமீபத்தில் மார்க்கம் முல்லை என்று பெயர் சூட்டி மாஞ்சோலை மருத்துவமனையில் ஒரு அவசர இதய சிகிச்சை பிரிவு ஒன்றிற்கான நிதியினை வழங்கி வைத்தனர். அந்த நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வின் சிறப்பு அதீதியாக இலங்கைக்கான கனடிய தூதுவரான திரு எரிக் வால்ஸ் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசியது நிவாரண அமைப்பின் மனித நேய செயற்பாடுகளுக்கு கிடைத்த மிகப்பெரிய மிகப்பெரிய அங்கீகாரம் என்பது சிறப்பு .

இந்த மனித நேய சேவை எனும் நீள் பயணத்தின் ஒரு மைல்க்கல்லாக தமது மனித நேசிப்பிற்காக தாய்த்தமிழகத்திலும் எமது தமிழ் மண்ணிலும் ஒட்டு மொத்த தமிழினத்தின் உள்ளங்களிலும் அன்பையும் அபிமானத்தையும் பெற்று நிலைத்திருக்கும் அமரர் மக்கள் திலகம் பொன்மனச் செம்மல் MGR அவர்களின் பெயரால் 2018 முதல் ஆண்டு தோறும் "MGR 101, 102, 106" எனும் இசை மாலை ஒன்றை ஒழுங்கமைத்து எமது உள்ளூர் கலைஞர்களையும் மனித நேயத்தின் பால் பரிவு கொண்ட பிற இசை வல்லுனர்கள் பாடகர்கள் போன்றோருடனும் கை கோர்த்து தமது கம்பீரக் குரலால் மக்கள் வெள்ளத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி எம் மக்களின் ஆறாத்துயர் துடைத்திட அதனூடே அரும் பாடுபட்டு நிதி சேர்த்தன் பயனாக இருதய நோய் முற்றி உயிருக்காக போராடி நின்ற எம் ஊர் உறவுகளில் இது நாள் வரை 105 இளம் உயிர்களை அறுவைச் சிகிச்சைகள் மூலம் காப்பாற்றி அவர்களையும் அவர் சார் குடும்பத்தினரையும் முகம் மலர வாழ வைத்த செயல்கள் வார்த்தைகளால் விளக்கிட முடியாதவை.

அத்தோடு தமது உடல் நலக்குறைகளின் இயலாமை காரணமாக குறிப்பாக சிறுநீரக வருத்தம் முற்றி ரத்த சுத்தீகரிப்பினால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலையில் உள்ள, தொழில் வாய்ப்போ வருவாயோ பெறும் வகையற்றோரின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளாக பால் தரக்கூடிய ஆடு மாடுகள் கோழிப் பண்ணைகள் தையல் நிலையம் மற்றும் சிறு கைத்தொழில் மூலம் அன்றாட வாழ்வை நகர்த்தும் உள்ளூர் தயாரிப்புகளுக்கான சிறு தொழில் இயத்திர ஆலைகள் போன்ற எண்ணற்ற உதவித்திட்டங்கள் மூலம் வாழ்வாதார வழிமுறைகளை ஏற்படுத்தி அவர்கள் கண்ணீரைத் துடைதிட்டதில் இவரது நிவாரண அமைப்பின் பங்கு இணையற்றது எனில் மிகையல்ல எனலாம்.

பெருந் தொற்று காலமாகிய 2020-2021 காலப்பகுதிகளில் MGR Night போன்ற பொது சமூக நிகழ்வுகள் இல்லாததனால் அந்த அமைதி நிலையிலும் Online போன்ற வலைத்தள வழிமுறைகள் ஊடாக ஜனவரி 2021 இல் "பொங்கு மனிதம்" எனும் ஒரு மெய்நிகர் இசை நிகழ்வூடாகவும் மனிதநேய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தி அதனூடே பெற்றுக் கொண்ட $130,287.14 டொலர் நிதிகளை பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்காக ஏழு மாவட்டங்களிலும் உலர் உணவும் வழங்கி பல சத்திர சிகிச்சைகளையும் பல சவால்களுக்கிடையே நிவாரண அமைப்பு செய்து முடித்திருந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முற்பகுதியில் MGR 106 எனும் மாபெரும் இசை நிகழ்வின் ஊடாக $236.658.58 டொலர்களை சேகரித்து வழங்கி இந்த உயிர்காப்பு செயல் வடிவம் உச்சத்தைத் தொட்டிருப்பது உயிர்ப்போர் வாழ்வாதாரப் போர் புரியும் நமது மண் வாழ் மக்களுக்கான மறுவாழ்வின் கலங்கரை விளக்கம் என்றே சொல்ல வேண்டும்.

நிவாரணம் எனும் இந்த நலன் காப்பு அமைப்பின் அதி உச்ச பண்பாக மேற் கூறிய வரவு செலவு அனைத்திற்குமான ஒரு சதம் பிசகாத ஆண்டறிக்கை கணக்கு அட்டவணைப் படுத்தப்பட்டு வழங்குனர் பெயர், வழங்கிய தொகை அவற்றை பெற்றுக் கொண்ட பயனாளிகள் தம் நோய்களுக்கு செலவான தொகை, பயனாளிகளின் பெயர்கள் போன்ற அனைத்து தரவுகளும் தமது முகநூல் ஊடாகவும் ஏனைய சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் அனைவரும் காணும் வண்ணம் பதிவேற்றப் பட்டிருப்பது அவரது இந்த இறை நிகர் பணிக்கான சான்றாகின்றது என்றே சொல்வேன்.

மகாத்மா காந்தியை கெளதம புத்தரை சுவாமி விவேகானந்தாவை அன்னை தெரேசாவை மேன்மை சொல்லும் இன்றைய மனித வர்க்கம் குறிப்பாக நமது ஈழ சமூகம் தமது துறை சார் செய்தி ஊடகங்களோ சமூகவலைத் தளங்களோ அன்றி ஊர் சங்கங்களோ அமைப்புக்களோ இவ்வாறான மனிதம் தழைக்க தமது வாழ்நாளை அர்ப்பணித்து செலாற்றும் திரு.செந்தில் குமரன் போன்றோரை தமது நிறுவனங்கள் வாயிலாக உரிய முறையில் நன்றியறிதலையோ அன்றி இச்செயற்பாட்டு வளர்ச்சிக்கான ஊக்கமோ ஆக்கமோ கொடுக்கின்றோமா என்றால் பதில் கேள்விக்குறியாகவே தெரிகிறது. இதே வேளை எமது ஈழ சமூகத்திற்கோ அல்லது தங்கள் தமிழ்நாடு சமூகத்திற்கோ ஒரு சதத்திற்கும் பயனற்ற தமிழக திரைப்பட நடிகர்களையும் பாடகர்களையும் சாமரம் வீசி தூக்கி வைத்து கொண்டாடும் எம் சமுகத்தில் உள்ள சில ஊடகங்கள் மற்றும் மனிதர்களின் செயல் வெட்கத்தின் உச்சம்.

இந்நிலை மாறவேண்டும்
இதயங்கள் நெகிழ வேண்டும்
இளைய தலைமுறை செந்தில் குமரன்கள் இவ்வாறான வழிகாட்டிகளின் அடியொற்றி மனிதம் காக்க தோள் கொண்டு அணிவகுக்க வேண்டும்.

வாழ்க நிவாரணத்தாய்
வாழ்க செந்தில் குமரன்
வாழ்க கொடையாள மக்கள்
வாழ்க மனித நேயம்.

"உள்ளம் தேறிச் செய்வினையில் ஊக்கம் குன்றாது உழைப்போமேல் பள்ளம் உயர் மேடாகாதோ பாறை பொடியாய்ப் போகாதோ"

இப்படிக்கு
நிவாரணத் தாயின்
சிறுத் தொண்டன்
க.இராசநாதன்.
28-09-23.

  
   Bookmark and Share Seithy.com


கனடாவின் புதிய போர் விமானத் தயாரிப்புத் திட்டம்:அவ்ரோ (Avro) காலத்து நினைவுகளும் அமெரிக்காவிற்கு ஏற்படும் சவால்களும்
[Wednesday 2026-02-25 21:00]

கனடாவின் வான்வெளிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் சாப் (Saab) நிறுவனம், தனது கிரிப்பன் (Gripen E) போர் விமானங்களை கனடாவிலேயே முழுமையாகத் தயாரித்து, 7-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இது கனடாவை மீண்டும் ஒரு உலகளாவிய போர் விமான உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாகும். அவ்ரோ (Avro) பாரம்பரியமும் கசப்பான நினைவுகளும் கனடா போர் விமானங்களைத் தயாரிப்பது இது முதன்முறை அல்ல. 1950-களில் கனடா "அவ்ரோ ஆரோ" (Avro Arrow) என்ற அதிநவீன போர் விமானத்தைத் தயாரித்து உலகையே வியக்க வைத்தது. ஆனால், பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கனடாவின் அவ்ரோ (Avro Canada) நிறுவனம் தயாரித்த விமானங்கள் உலகெங்கும் பரவின.


முன்னோர்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் விதைத்த "கல்வி" எனும் விதை!
[Monday 2026-01-05 07:00]

உலக வரலாற்றில் ஒரு இனம் அதன் அறிவுத்திறனுக்காகவும் பொருளாதார செழுமைக்காகவும் வேட்டையாடப்பட்ட கதைகள் பல உண்டு. அதில் முதன்மையானது ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்த கதி. இன்று அதே வரலாற்றுப் பக்கங்களை ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் புலனாகின்றன. ஜேர்மனியில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். வங்கித்துறை, மருத்துவம், சட்டம் என அனைத்து உயர் பதவிகளிலும் யூதர்களே கோலோச்சினர்.


உலகின் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா! Top News
[Monday 2026-01-05 07:00]

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இன்று வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள், வெறும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, இது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' அமைப்பைக் காப்பதற்கான ஒரு சர்வதேச சதுரங்க வேட்டை எனவும் கூறலாம். முதலில் பெற்றோ-டாலர் (Petrodollar) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மாமன் விதைத்த நஞ்சு, மருமகன் வளர்த்த வஞ்சகம், தமிழரசுக்கட்சியின் துரோகம்: இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!
[Wednesday 2025-12-03 07:00]

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.


இது ஒரு புதிய நெருக்கடி அல்ல: பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய அரசியல் விளையாட்டு!
[Thursday 2025-11-20 07:00]

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக தமிழ், சிங்கள செய்தி ஊடகங்கள், சமூகவலைத்தள கருத்துகள் மூலம் அதன் இறுதிக்கட்டமே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், அதன் ஆரம்பம், இடைநிலை கட்டங்களில் என்ன நடந்தது என்ற விளக்கம் எனக்கில்லாதபடியினால் அதனை பெற, இணையத்தில் இருந்த தகவல்களை தொகுத்து நான் வாசிக்க தயாரித்த "short notes" இது. திருகோணமலை சிலை விவகாரம் ---ஒரு சிலையையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உலகம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எங்கோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நம் நாட்டின் 'சிஸ்டம்' மட்டும் ஏன் இப்படி தேங்கிப் போயிருக்கிறது? இதுதான் மாற்றவே முடியாத நமது விதியா?


கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை- நிரந்தர எதிரிகளும் இல்லை! - கனடா நக்கீரன்
[Friday 2022-07-22 22:00]

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கொண்டு கொடுக்குமாம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சனாதிபதி இரணில் விக்கிரமசிங்க அவர்களைப் பொறுத்தளவில் வியாழன் பட்டையிலும் வெள்ளி துலாவிலும் இருக்கின்றன.


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா