Untitled Document
April 19, 2024 [GMT]
 
வெற்றி வாகை சூடியது யாழ் இளைஞர் அணி - வடக்கு ஆளுநர் கலந்துகொண்டார்! Top News
[Monday 2023-02-13 21:00]

தம்புள்ளை அணியை 11 ஓட்டங்களால் வீழ்த்தியது யாழ்ப்பாண மாவட்ட இளையோர் அணி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட இளையோர் அணிகளுக்கும், தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக் கிடையிலான சினேகபூர்வ கிரிக்கெட் போட்டி 50/50 ஓவர் அடிப்படையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.


யாழில் இடம்பெற்ற மாபெரும் முத்திரை கண்காட்சி! Top News
[Monday 2023-02-13 21:00]

இன்றையதினம் முத்திரை மற்றும் நாணயக் கண்காட்சி இளவாலை சென் ஜேம்ஸ் தேவாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. அருண்பணிச்சபை மற்றும் புனித ஞானப் பிரகாசியார் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த முத்திரை கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை பிறப்மிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் வாமணன் அவர்களது முத்திரைகள் மற்றும் நாணயங்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டன.


கிளிநொச்சி பெண்கள் வாழ்வுரிமைச்சங்கம் அமைப்பினரால் மல்லாவியில் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு! Top News
[Thursday 2023-02-09 21:00]

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைச்சங்கம் அமைப்பினரால் மல்லாவியில் இன்றைய தினம் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுள் 25 குடும்பங்களுக்கான தலா ஒரு குடும்பத்திற்கு 10000 பெறுமதியான உலருணவு பொருட்களே இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன.


ஆர்ப்பாட்ட பேரணி - முல்லைத்தீவு! Top News
[Wednesday 2023-02-08 06:00]

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரெழுச்சி போராட்டம் நேற்றைய தினம் முல்லைத்தீவு பண்டாரவன்னியன் சிலையிலிருந்து ஆரம்பமாகி பேரணியாக முல்லைத்தீவு அலம்பல் சந்தியினை சென்றடைந்து குருந்தூர் மலை ஆக்கிரமப்பினை எதிர்தும் தொடர்சியாக அலம்பில் துயிலுமில்லத்திலும் நினைவேந்தலை மேற்கொண்டு பேரணியாக நீராவியடியை சென்றடைந்து ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டு திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல்கொடுத்து, தற்சமயம் தென்னைமரவாடியினூடாக திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது.


டுசில்டோர்வ் (Düsseldorf) யேர்மனி, நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! Top News
[Wednesday 2023-02-08 06:00]

சிறீலங்கா சிங்கள இனவாத அரசு தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளை, தாயகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் இந்த நாள் எமது “கரிநாள்” என மாபெரும் கண்டனப் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள். யேர்மனிய நாட்டிலும் தலைநகர் பேர்லின் (Berlin)உட்பட பிராங்போர்ட் (Frankfurt), முன்சன் (München), டுசில்டோர்வ் (Düsseldorf) ஆகிய நகரங்களில் யேர்மன் ஈழத்தமிழர் மக்களவையினால் 04.02.2023 அன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூசம்! Top News
[Monday 2023-02-06 18:00]

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்று அருள்பாலிக்கும் ஸ்ரீ நாகபூசணி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் வீற்று அருள்பாலிக்கும் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேசக, ஆராதனைகள் என்பன இடம்பெற்றன.


ஸ்ரீ லங்காவின் சுதந்திரநாளினை எதிர்த்து லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! Top News
[Sunday 2023-02-05 07:00]

லண்டனில் அமைந்துள்ள ஸ்ரீ லங்காவின்வின் தூதரகத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழ் மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட புலம்பெயர் தமிழ் அமைப்புகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டமானது காலை 11.00 அளவில் தொடங்கியது.


இலண்டனில் புலிக்கொடியுடன் வெடித்தது போராட்டம்! Top News
[Saturday 2023-02-04 20:00]

இன்றையதினம் இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு தினமாக இலங்கையில் வடக்கு கிழக்கில் அனுஷ்டித்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்த போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக இலண்டனில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


முன்னணியின் கறுப்பு தின போராட்டம்! Top News
[Saturday 2023-02-04 20:00]

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இருப்பினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்கள் பல்வேறு போராட்டங்களை இன்று முன்னெடுத்து வருகின்றனர். அந்தவகையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பெப்ரவரி4 தமிழர்களின் கரிநாள் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.


நல்லூரானின் நெற் புதிர் அறுவடை விழா இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது! Top News
[Saturday 2023-02-04 16:00]

தைப்பூசத்திற்கு முதல்நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும், சிவாச்சாரியாரியும் முதலாவது புதிரை அறுவடை செய்ய மட்டுவிலில் உள்ள ஆலயத்திற்கு சொந்தமான வயலுக்கு செல்வர்.


தியாக தீபத்தின் தூபியில் தாலி கட்டி புது வாழ்வை ஆரம்பித்த தம்பதிகள்! Top News
[Friday 2023-02-03 21:00]

யாழ்ப்பாணத்தில் புதுமணத் தம்பதிகள், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் தாலி கட்டி இன்றையதினம் புது வாழ்வை ஆரம்பித்துள்ளனர். தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர்.


யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கலந்துரையாடல்! Top News
[Tuesday 2023-01-31 06:00]

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து ஆர்பாட்ட பேரணி மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள நிலையில் நேற்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள மதகுருமார் ,உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர்.


பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பு! Top News
[Sunday 2023-01-29 20:00]

எதிர்வரும் நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனபடுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை மட்டகளப்பு மாவட்டத்தில் உள்ள மதகுருமார், உட்பட்ட சிவில் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.


கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு மங்கையர்க்கு தனியரசி விருது! Top News
[Sunday 2023-01-29 20:00]

கலாநிதி சுவர்ணா நவரத்தினத்திற்கு மங்கையர்க்கு தனியரசி விருது வழங்கி யாழ் இந்து சமயப் பேரவை கௌரவித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.


அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலக அரையாண்டுத் தேர்வு 2022-2023! Top News
[Sunday 2023-01-29 20:00]

யேர்மனியில் தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையோடும் இலக்கோடும் 100க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வை மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் சிறந்த பொறிமுறைகளைக் கடைப்பிடித்து 28.01.2023 சனிக்கிழமை நிறைவேற்றியுள்ளது.


மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நூலகத் திறப்பு! Top News
[Sunday 2023-01-29 16:00]

ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பானது (Sri lanka unites) சிறுவர்களுக்கான நூலகம் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்றைய தினம் மன்னார் பெரிய பண்டிவிரிச்சான் பகுதியில் நூலகத் திறப்பு மேற்கொள்ளப்பட்டது.


தென்மராட்சி சர்வதேச ஒன்றியத்தின் கெளரவிப்பும் நிகழ்வு! Top News
[Sunday 2023-01-29 16:00]

"கல்விக்கு கை கொடுப்போம்" எனும் தொனிப்பொருளில் தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள், சேவையாளர் கெளரவிப்பும் உயர்தர மாணவர்களுக்கு உதவு தொகை வழங்கும் நிகழ்வும் யாழ். தென்மராட்சி அறவழி போராட்ட குழுவின் அலுவலகத்தில் நேற்று (28) காலை 9 மணிக்கு இடம்பெற்றது.


யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பொங்கல்! Top News
[Sunday 2023-01-29 16:00]

யாழ். பல்கலைக்கழக வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் நிகழ்வு வலிகாமம் வலய கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் கஜலக்சன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாழின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.


றகமா நிறுவனத்தின் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்த்திட்டம்! Top News
[Saturday 2023-01-28 06:00]

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க றகமா நிறுவனத்தினரால் மாந்தை கிழக்கு பிதேசத்திற்குட்பட்ட நான்கு குளங்களிற்க்கு (ஒட்டறுத்தகுளம், வண்டிகட்டு குளம், பாலப்பாணி குளம், கிடாப்பிடித்த குளம்) நேற்று (27.01.2023) நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு! Top News
[Friday 2023-01-27 19:00]

இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு இந்திய கலாசார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 74 வது குடியரசு தின விசேட நிகழ்வு இந்திய கலாச்சார மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம் பெற்றது.


இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது! Top News
[Thursday 2023-01-26 16:00]

யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலய அலுவலகத்தில், இந்தியாவின் காவல்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையோடு ஆரம்பமாகியகுடியரசு தின நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ். இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் அவர்களினால் இந்திய நாட்டின் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ். இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டதோடு இந்திய காவல் படையினரால் நாட்டுப்பண் இசைக்கப்பட்டது.


யாழில் உயிரிழந்த ஓய்வுபெற்ற தமிழ் இராணுவ அதிகாரிக்கு 21 வேட்டுக்கள் முழங்க மரியாதை! Top News
[Thursday 2023-01-26 07:00]

யாழ். - கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலம் 21 வேட்டுக்கள் முழங்க இன்றையதினம் மரியாதை செலுத்தப்பட்டது. இவர் கடந்த 1958ஏஆம் ஆண்டு இராணுவத்தில் கடமையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் மூப்பு காரணமாக கடந்த 23.01.2023 அன்று கீரிமலையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தார்.


குருநகரில் ஆயிரக்கணக்கான மக்களின் பாராட்டை பெற்ற கலைவிழா! Top News
[Thursday 2023-01-26 07:00]

குருநகர் புனித யாகப்பர் ஆலய யோசவ்வாஸ் இளையோர் மன்றத்தின் 30வது ஆண்டடை முன்னிட்டு நடாத்திய கலைவிழா நேற்றையதினம் மாலை 5.30மணியளவில் குருநகர் கலையரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. குருநகர் யோசவ்வாஸ் இளையோர் மன்ற தலைவர் விக்ரர்குமார் சுரேன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மனித முன்னேற்ற நடு நிலைய இயக்குனர் அருட்பணி இயூஜின் பிரான்சிஸ் அடிகளாரும், கௌரவ விருந்தினர்களாக யாழ் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநரும் புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தையுமான அருட்பணி அருளானந்தம் யாவிஸ் அடிகளாரும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தை அருட்பணி தயதீபன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தனர்.


பொங்கல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு! Top News
[Tuesday 2023-01-24 18:00]

யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஏற்பாட்டில் பொங்கல் நிகழ்வு நேற்று முன்தினம் (22.01.2023) யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பூங்கா திடலில் இடம்பெற்றது. மாநகர ஆணையாளர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.


விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவசிலை திறப்பு! Top News
[Tuesday 2023-01-24 18:00]

சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் எற்பாட்டில் முன்ன உடுவில் கிராம சபைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் முதலாவது தலைவருமான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவசிலை திறப்பு நிகழ்வு இன்று சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.


ஹற்றன் நேஷனல் வங்கியினால் மாங்குளம் உயிரிழை அமைப்பிற்கு உபகரணங்கள் கையளிப்பு! Top News
[Tuesday 2023-01-24 18:00]

யாழ் ஹற்றன் நேஷனல் வங்கிக்கிளையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி இன்றைய தினம் வடமாகாணத்திற்கு வருகை தந்திருந்த ஹற்றன் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜொனதன் அலஸ் அவர்கள், இன்றைய தினம் காலை மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு இருக்கும் மாற்று திறனாளிகளுடன் கலந்துரையாடியிருந்தார்.


நவ மங்கை நிவாசத்தில் கலை மன்றம் அறநெறி வகுப்புகள் ஆரம்பிப்பு! Top News
[Monday 2023-01-23 18:00]

யாழில் அமைந்துள்ள நவமங்கை நிவாசத்தில் அறநெறி வகுப்பு மற்றும் கலை மன்றம் ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். கோப்பாய் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடையே இந்து சமய ஒழுக்கங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக அறநெறி மற்றும் கலா மன்றம் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.


அமெரிக்கா பொங்கல் விழாவில் மாதிரி வாக்கெடுப்பு! Top News
[Saturday 2023-01-21 21:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், சங்கம் குளோபல் USA உம் இணைந்து நாடாத்திய பொங்கல் விழா மாலை 6.00மணிக்கு அகவணக்கம், தமிழ் தாய் வாழ்த்து, மங்கல விளக்கேற்றல் ஆகியவற்றுடன் ஆரம்பமானது. பாடல், நடனம், பேச்சு, கவிதை, தாயகப் பாடல்கள் என்பன சிறப்பாக இடம்பெற்றன. இந்த நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. உருத்திரகுமாரன், சங்கம் குளோபல் USA சார்பாக திரு. ந. இராஜேந்திரா ஆகியோரின் உரைகள் இடம்பெற்றிருந்தன.


பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் தமிழ் மரபுத் திங்கள் - தை பொங்கல் நிகழ்வு! Top News
[Friday 2023-01-20 18:00]

தை மரபுத் திங்கள் மற்றும் தை பொங்கல் விழாவினை கடந்த பல வருடங்களை போன்று மிகவும் சிறப்பான முறையில் 17 ஜனவரி 2023 அன்று பிரித்தானிய பாராளுமன்றின் உள்ளரங்கத்தில் (Jubilee Hall) பிரித்தானிய தமிழர் பேரவையினால் நிகழ்த்தப்பட்டது. உலகளாவியரீதியிலும் குறிப்பாக பிரித்தானியாவிற்கும் தமிழ் மக்களின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி சிறிலங்காவில் இன அழிப்பிற்கு ஆளாகி வரும் தமிழ் மக்களை சர்வதேசம் தலையிட்டு பாதுகாக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர்.


யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா! Top News
[Thursday 2023-01-19 06:00]

யாழ் பல்கலைக்கழக வரலாற்று துறையினரால் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் நேற்று காலை 9மணியளவில் வரலாற்றுத்துறை பேராசிரியர் க.அருந்தவராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் அமைந்துள்ள வைரவர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் பொங்கல் இடம்பெற்று தொடர்ச்சியாக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் வரலாற்றுத்துறையின் நான்கு வருட மாணவர்களுக்கிடையிலும் கலாச்சார விளையாட்டுக்கள் இடம்பெற்று இறுதியாக துறைபேராசிரியர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா