Untitled Document
March 28, 2024 [GMT]
 
காசி புனித தீர்த்தம் வட்டுக்கோட்டை - அராலி குளத்தில் கலப்பு! Top News
[Tuesday 2023-01-17 20:00]

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை நேற்றையதினம் உலகலாவிய ரீதியாக நடைபெற்றது. பொங்கலுக்கு அடுத்த நாளான இன்றையதினம், உழவுத் தொழிலுக்கு அளப்பரிய பணியாற்றிய பசுக்களுக்கும் காளைகளுக்கும் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டை - அராலி உப்புவயல் குளத்தருகில் பட்டிப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.


நூறாவது வேலைத்திட்டங்களை குறுகிய காலத்தில் செய்து முடித்த நெல்மணி உதவும் கரங்கள்! Top News
[Tuesday 2023-01-17 20:00]

நூறாவது வேலைத்திட்டங்களை ஒரு குறுகிய காலத்தில் செய்து முடித்த யாழ்பெருமாள் நெல்மணி உதவும் கரங்கள் ஊடாக வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் தமிழர் திருநாளாம் தைப்பொங்கள் தினத்தை சிறப்பாககொண்டாடுவதற்காக யாழ் நவாலி கேலம் பகுதியில் ஒரு பகுதியாகவும், வவுனியாசிதம்பரநகர்,கற்குலம்,மதுராநகர்,சிவபுரம், கிடாச்சூரி,தவசிபுரம் ஆகியகிராமப்பகுதிகளில் இன்னொரு பகுதியாகவும் மொத்தம் நூறு பொங்கள்பொதிகள் வழங்கபட்டது என்பதை தெரிவிக்கின்றோம்.


நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தின் உணவு பரிமாற்றச் சங்கம் பொங்கல் பொதிகள் வழங்கல்! Top News
[Friday 2023-01-13 21:00]

சனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக , உணவு பரிமாற்றச் சங்கங்கள் பிரதேச செயலக ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றன. உணவு வங்கி அல்லது உணவுப் பரிமாற்றம் என்பதன் குறிக்கோள்களில் ஒன்றாக உணவுப் பற்றாக்குறையான குடும்பங்களுக்கு அதாவது குடும்பங்களுக்கும் மற்றும் வருமானம் குடும்பங்களுக்கும் உணவுகளை பகிர்ந்து வழங்குதலுமாகும்.


யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வு! Top News
[Thursday 2023-01-12 16:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மலையக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 12.01.2023 வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் மலையக தியாகிகளுக்கான நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக பிரதான நினைவுத்தூபியில் நடைபெற்றது.


யாழ் பல்கலைக்கழக நூல் வெளியீடு! Top News
[Thursday 2023-01-12 16:00]

யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தமிழியற்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி முல்லை முகுந்தினியின் இடர் சுமந்த மேனியர் எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் யாழ் பல்கலைக்கழக தமிழியற்துறை தலைவி ஜெயா தலைமையில் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.


நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல்! Top News
[Wednesday 2023-01-11 06:00]

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.


விவசாயிகளுக்கான பயன்தரு பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டன! Top News
[Wednesday 2023-01-11 06:00]

வலிகாமம் மேற்கு சுழிபுரம் பிரதேச சபையில் இன்றையதினம் விவசாயிகளுக்கான பயன்தரு பயிர்கள் வழங்கி வைக்கப்பட்டன. வலி. மேற்கு பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு இவ்வாறு நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் அவர்களது எண்ணப்பாட்டிற்கு அமைவாக இவ்வாறு நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது விவசாயத்தில் திகழும் 10 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.


ஆறாவது நாளை எட்டிய கவனயீர்ப்பு போராட்டம்! Top News
[Wednesday 2023-01-11 06:00]

அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவாம் இறுதி நாளாகவும் யாழ்ப்பாணம் - நாவற்குழியில் இடம்பெற்றது.


ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவப் பொருட்கள் வழங்கி வைப்பு! Top News
[Wednesday 2023-01-11 06:00]

நேற்று முந்தையை தினம் (09) சந்நிதியான் ஆச்சிரமத்தால் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு 752000.00 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருட்கள் வழங்கப்பட்டன.


தமிழ்த் தேசிய கட்சிகளையும் ஓரணியில் திரளுமாறு வலியுறுத்தி போராட்டம்! Top News
[Tuesday 2023-01-10 06:00]

நேற்று ஐந்தாவது நாளாக யாழ்ப்பாணம் நாவற்குழியில் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இன்றையதினம் யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் அவர்களை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்தனர்.


காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது! Top News
[Tuesday 2023-01-10 06:00]

நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தத்தின் பின்னர் 1981 ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வங்கியின் காங்கேசன் துறை காரியாலயம் நவீனதொழில்நுட்ப வசதிகளுடன் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.


யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியினால் வீடு திறந்து வைப்பு! Top News
[Saturday 2023-01-07 08:00]

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 19 வயதின் கீழ் பெண்கள் அணிக்குள் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணம், சுழிபுரம் - காட்டுப்புலத்தை சேர்ந்த மாணவி கிருசிகாவிற்கு, இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தியாகி அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் இராணுவத்தினரின் சரீர பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இந்த வீட்டிற்கு கடந்த வருடம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.


கனடா மாணவியால் கற்றல் உபகரணங்கள் கையளிப்பு! Top News
[Friday 2023-01-06 06:00]

கனடாவில் உயர்கல்வி பயிலும் யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த தயாபரன் சுவேதிகா என்ற மாணவியின் நிதிப்பங்களிப்பில் மானிப்பாய் கட்டுடை கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சமூக மேம்பாட்டு பிரிவின் ஒழுங்கமைப்பில் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஈழத்து சிதம்பரம் இரதோற்சவம்! Top News
[Friday 2023-01-06 06:00]

வரலாற்று சிறப்புமிக்க ஈழத்து சிதம்பரத்தின் காரைநகர் தின்னபுர சிவன் ஆலயத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் பஞ்சரத தேர் இரதோற்சவம் நேற்று மிகச்சிறப்பாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றுயிருக்கும் தின்னபுர சிவனுக்கும், சிவாபாதசுந்தரிக்கும் விஷேட அபிஷேசக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டவத்தில் வீற்றிருக்கும் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டேஸ்வர் ஆகிய தெய்வங்கள் உள்வீதியுடாக வலம் வந்து பஞ்சரததேரில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நாவற்குழியில் மாபெரும் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது! Top News
[Thursday 2023-01-05 18:00]

05.01.2023 வடக்கு கிழக்கு ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க . தமிழ் அரசியல் கட்சிகளின் வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சிறுபான்மை பிரதிநிதிகளுக்கும் இலங்கை சனாதிபதிக்கும் இடையே நடைபெறவுள்ளதாக அறிகின்றோம்.


தென்னிந்திய திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் புதிய பேராயர் பதவியேற்பு! Top News
[Wednesday 2023-01-04 07:00]

தென்னிந்திய திருச்சபை யாழ். ஆதீனத்தின் 5வது பேராயர் பேரருட்பணி அறிவர் வே.பத்மதயாளன் அவர்கள் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வும் அவரை வரவேற்கும் நிகழ்வும் நேற்றைய தினம் யாழ். வட்டுக்கோட்டை - தென்னிந்திய திருச்சபை தேவாலயத்தில் நடைபெற்றது.


ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் 07 ஆம் நாளுக்கான விஷேட அபிஷேக ஆராதனை! Top News
[Wednesday 2023-01-04 07:00]

வரலாற்று சிறப்புமிக்க யாழ். காரைநகர் ஈழத்து சிதம்பரத்தின் திருவெம்பாவை உற்சவத்தின் 07 ஆம் நாளுக்கான விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று சிறப்பாக இடம்பெற்றன. கடந்த 28.12.2022 அன்று திருவெம்பாவை நிகழ்வு ஆரம்பமாகிய நிலையில் 07ஆம் நாள் உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.


யாழ்- வரணி கரம்பைக்குறிச்சு பாடசாலைக்கு முன்பாக போராட்டம்! Top News
[Wednesday 2023-01-04 07:00]

யாழ்- வரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஸன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது, பேற்றோர்களினனால் பாடசாலை நுழைவாயிலை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை பாடசாலைக்கு மாணவர்கள் எவரும் சமூகமளிக்காத நிலையில் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.


2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 2 Jan 2023 யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது! Top News
[Wednesday 2023-01-04 07:00]

நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகளும் இடம்பெற்றது.


கொழும்பு மாநகர சபை வழங்கிய வாகனங்கள் மானிப்பாய் மாநகர சபைக்கு கொண்டுவரப்பட்டது! Top News
[Sunday 2023-01-01 08:00]

தென்பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் மானிப்பாய் பிரதேசசபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் கடந்த வருட இறுதியில் கொழும்பு மாநகரசபைக்கான நட்புறவு பயணத்தினை மேற்கொண்டனர்.


சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்தின் அங்குரார்ப்பண வைபவம்! Top News
[Saturday 2022-12-31 17:00]

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்தின் அங்குரார்ப்பண வைபவம் இன்றையதினம் (31.12.2022) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இ. விஜயமோகனராசா கலந்துகொண்டார்.


தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்! Top News
[Saturday 2022-12-31 06:00]

கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. அதை சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இது சீனர்களின் உணவுப் பண்பாட்டில் இடம்பிடித்துள்ள பசைத் தன்மைகூடிய ஸ்ரிக்கி றைஸ் (sticky rice) ஆகும். தமிழ் மக்களின் உணவுப் பண்பாட்டில் கடலட்டை எவ்வாறு இல்லையோ, அதேபோன்றே இந்த ரக அரிசியும் இல்லை.


யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவிப்பு! Top News
[Saturday 2022-12-31 06:00]

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார். இந்நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று மதியம் 01.30 மணியளவில் யாழ். மாவட்ட செலயலகத்தின் கேட்போர் கூடத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.


யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒளிவிழா! Top News
[Friday 2022-12-30 06:00]

யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டிற்கான ஒளிவிழா, மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக கணக்காளருமான அ.நிர்மல் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (29.12.2022 ) நடைபெற்றது . நத்தார் தீப ஔியூட்டலுடன் ஆரம்பமான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.


அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் இராஜ் இராஜரட்ணம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்! Top News
[Friday 2022-12-30 06:00]

இதன்படி இராஜ் இராஜரட்ணம் நேற்று முன்தினம் (28) யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர். 2006 ஆண்டில் இராஜ் இராஜரட்ணம் அவர்களின் நிதி உதவியானது இருதய சரித்திர சிகிச்சை பிரிவு எகோ இயந்திரம் உட்பட பல சேவைகளை புதிதாக ஆரம்பிக்க பெரும் உதவியாக இருந்ததென யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு சீன பதில் தூதர் விஜயம்! Top News
[Friday 2022-12-30 06:00]

வட பகுதிக்கு வருகை தந்துள்ள சீன பதில் தூதுவர் ஹூ வோய், தலைமையிலான குழுவினர் யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்து கல்லூரிக்கான உதவித்திட்டங்களை வழங்கி வைத்தனர். பாடசாலைக்கு நேற்று (29) காலையில் வருகை தந்த சீன பதில் தூதுவர் தலைமையிலான குழுவினர் "பாண்ட் வாத்திய" இசையோடு வரவேற்கப்பட்டனர்.


முல்லை. மாவட்டச் செயலகத்தில் சிறப்புற இடம்பெற்ற ஒளிவிழா! Top News
[Wednesday 2022-12-28 18:00]

முல்லை. மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினரின் அனுசரணையுடன் 2022ம் ஆண்டுக்கான ஒளி விழா மாவட்டச் செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (27) செவ்வாய்க்கிழமை காலை 9.30மணிக்கு சிறப்புற இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தினால் தென்மராட்சியில் பல்வேறுபட்ட உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன! Top News
[Wednesday 2022-12-28 18:00]

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மூன்று ஆலயங்கள் மற்றும் பாடசாலைக்கு நிதி மற்றும் கணினி உட்பட்ட உதவித்திட்டங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.


வடமாகாண ரீதியில் நடைபெற்ற ஒளிவிழா! Top News
[Tuesday 2022-12-27 06:00]

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாடலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்தும் ஒளிவிழா நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் இன்று மாலை நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், புனித பேதுரு பாவிலு ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி J.B அன்ரனிதாஸ் இறையாசி வழங்கியிருந்தார்.


கிளிநொச்சியில் தேசிய பாதுகாப்பு தினம்! Top News
[Tuesday 2022-12-27 06:00]

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தேசியக்கொடியினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா