Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
வட மகாணசபைத் தேர்தல் மகிந்தாவோடான தமிழ்மக்களின் கணக்கைத் தீர்க்கப் பயன்பட வேண்டும். - நக்கீரன்
[Tuesday, 2013-06-18 10:25:35]

வட மாகாணத் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற நீண்ட நாள் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. எதிர் வரும் செப்தெம்பர் 07 ஆம் நாளன்று தேர்தல் இடம்பெறும் என்று ஆங்கில ஏடுகளில் செய்தி வந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் வட மாகாண சபைக்கு இதுவரை தேர்தல் நடை பெறவில்லை. கண்ணிவெடி அகற்றுவதில் தாமதம், மக்களை மீள்குடியமர்வு செய்வதில் தடங்கல், வாக்காளர் இடாப்பை நிறைவு செய்வதில் சுணக்கம், அபிவிருத்தித் திட்டங்களை நிறைவு செய்வதற்குக் கால அவகாசம் தேவை என அரசு நொண்டிச் சாட்டுக்களைச் சொல்லிவந்தது. ஆனால் இப்போது தேர்தலைப் பிற்போட அரசிடம் காரணங்கள் இல்லாது போய்விட்டன. அதுதான் உண்மை.

தமிழ் இன உணா்வாளர் மணிவண்ணனுக்கு அவரது இறுதி ஆசைப்படி போர்த்தப்பட்டது தேசியக்கொடியா ! நாம் தமிழர் கொடியா!
[Monday, 2013-06-17 21:53:35]

தமிழின உணர்வாளர், இயக்குனர், நடிகர் எனப் பல பரிமாணங்களை கொண்ட மனிதர்களுள் ஒருவரான மணிவண்ணனின் மறைவு ஒட்டு மொத்த தமிழினத்தையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது என்றால் அது மிகையாகாது. மறைந்த தமிழ் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனின் உடல் நேற்று மாலை சென்னை போரூரில் தகனம் செய்யப்பட்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகளும் , திரையுலகினரும் , தமிழார்வலர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் என பல தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

13 திருத்தத்துக்கான திருத்தம் தமிழருக்கென ஒரு முண்டம் - பனங்காட்டான
[Sunday, 2013-06-16 22:31:39]

'படைத்தவன் படி அளப்பான்' என்ற நம்பிக்கையில் இந்தியத் தலைமையைச் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயத்தமாகின்றது. இது இந்தியாவின் அழைப்பல்ல. கூட்டமைப்பு கேட்டுப் பெறும் ஒரு வாய்ப்பு.
கடந்த வாரக் கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் பார்க்கலாம். இது, 'ஓநாய் வருகிறது. ஓநாய் வருகிறது' என்ற கதை போன்ற சமாசாரம்.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! - நக்கீரன் (பாகம் 2)
[Sunday, 2013-06-16 06:47:29]

அநகாரிக தர்மபாலரைப் பின்பற்றியே பின்னாளில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஏ.இ.குணசிங்கா, கோனார் இராசரத்தினா, மேத்தானந்தா, சிறில் மத்தியூ, ஜே.ஆர். ஜெயவர்த்தனா, டி.பி. விஜயதுங்க, சந்திரிகா குமாரதுங்கா போன்ற அரசியல்வாதிகள் ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடென்றும் நாடும் மக்களும் ஒன்றென்றும் எழுதியும் பேசியும் வந்தார்கள். இன்றும் பேசி வருகிறார்கள். இவர்களில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தனா போன்றோர் கிறித்தவர்களாக இருந்து பின்னர் பவுத்தர்களாக மதம் மாறிக் கொண்ட அரசியல் பவுத்தர்களாவர்.

நெல்சன் மண்டேலா - (மரணத்தின் அழைப்பிதழ்-4) பூநகரான்
[Tuesday, 2013-06-11 22:28:59]

இந்த உலகத்தில் இன்று இரண்டு பேர் உலக கவனத்தை ஈர்ப்பவர்களாக உள்ளனர் - ஒருவர் ஒபாமா மற்றவர் நெல்சன் மண்டேலா இருவருமே வெள்ளை இனத்தவராலும் மதிக்கவும் நேசிக்கவும் படுகிறவர்கள்.. ஆம் , நோய் வாய்ப்பட்டுள்ள 94 வயதான நெல்சன் மண்டேலா என்ற மனிதனிற்காக உலகமே கரிசனை காட்டுகிறது . ஒபாமா நோய் வாய்ப்பட்டாலும் இவ்வளவு கரிசனை எழுமா என்பது கேள்விக்குரியது.

மகிந்தரின் கைகளில் மந்திரக்கோல் - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-06-11 22:25:30]

இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள், தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது. சிங்களத்தின் பொருளாதார வீழ்ச்சி, தமிழ் மக்களை போதையூட்டும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிடும் என்பது தவறு. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் எங்கே குவிக்கப்படுகிறது என்பது குறித்தான தெளிவான செய்திகளை ஈழத்தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதும், அக்கடன்கள் பிரசவிக்கும் சுமைகள், நலிவடைந்துள்ள சமுதாயத்தை மென்மேலும் கீழிறக்கிவிடும் என்பதை ஊடகப்பரப்பில் முன்வைப்பதும், தேவையற்ற விவகாரமாகக் கருத முடியாது.

கடன் பொறிக்குள் சிக்கியுள்ள இலங்கை: - இதயச்சந்திரன்
[Sunday, 2013-06-09 20:27:33]

2005 இல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது. புதிது புதிதாக முறிகளை (bond) விற்பதும், வெளிநாட்டு நிதிச் சந்தையில் கடன் வாங்குவதுமாக இலங்கை திறைசேரியின் பொருளியல் வாழ்வு கழிகிறது. மகிந்த ராஜபக்சவின் எட்டு ஆண்டுகால ஆட்சிக்காலத்தில், உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள், அபிவிருத்தி என்கிற சந்தோசம் தரும் வார்த்தையால் திரையிடப்பட்டுள்ளன.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! - நக்கீரன்
[Saturday, 2013-06-08 11:53:39]

'இலங்கை பவுத்த நாடு, பவுத்தர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு' என்ற கூக்குரல் தென்னிலங்கை சிங்கள - பவுத்த பேரினவாதிகளால் உரத்த குரலில் ஒலிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கள பேரினவாதத்தை கக்கிக் கொண்டிருக்கும் ஜாதிக ஹெல உறுமய, சுதந்திரத்துக்கான தேசிய இயக்கம் போன்ற கடும்போக்கு அமைப்புக்கள் மட்டும் அல்லாது அண்மையில் முளைத்திருக்கும் பொது பல சேனா, சிகல ராவய, இராவண பலய போன்ற அமைப்புக்களும் களத்தில் இறங்கியுள்ளன. இந்தப் பேரினவாத சக்திகளின் போர்க்கோலம் அய்ம்பதுகளில் தனிச் சிங்களத்துக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த வரலாற்றுக் காட்சிகளை நினைவு படுத்துகிறது.

இந்திய இயலாமை பார்த்திருக்க பறிபோகிறது 13வது திருத்தம்! பனங்காட்டன்
[Friday, 2013-06-07 22:29:38]

இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஒன்றோடொன்று தொடர்புற்ற மூன்று விடயங்கள் சமகாலத்தில் நடைபெறுகின்றன. வெளித்தோற்றத்தில் இவை ஒவ்வொன்றும் வெவ்வேறுதுறை சார்ந்தவைகளாகக் காணப்பட்டாலும் அரசாங்கத்தின் நகர்வில் இவை ஒன்றுடனொன்று நெருக்கமான தொடர்புடைய சட்ட மாற்றங்கள். இன்னும் குறிப்பாகச் சுட்டுவதானால், செப்டெம்பரில் நடைபெறப்போவதாகக் கூறப்படும் வடமாகாண சபைத் தேர்தலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.

சீனமயமாகும் இலங்கையின் பொருளாதாரம் - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-06-04 21:34:14]

மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது. விடுதலைப்புலிகள் உடனான யுத்தம் முடியும் வரை, 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற அமெரிக்கப்பொது மொழி ஊடாக எல்லா நாடுகளையும் முரண்பாடுகளின்றி தன் பின்னால் அணிதிரள வைத்தது. யுத்தம் முடிந்தவுடன் பிரச்சினைகள் ஆரம்பமாகின. அமெரிக்கத் தீர்மானம், 'சீபா' ஒப்பந்தச் சிக்கல் என்று பல கோணங்களில் இன்று பிரச்சினைகளை இலங்கை எதிர்கொள்கிறது.

வடக்கில் மண்கவ்வப் போவதை மகிந்த கம்பனி எப்படி விரும்பும்? - பனங்காட்டன்
[Saturday, 2013-06-01 17:48:38]

வட மாகாணசபைத் தேர்தலையும் 13வது அரசியல் திருத்தத்தையும் எதிர்க்கின்ற அனைவருக்கும் மகிந்த ராஜபக்சவின் பூரண ஆசீர்வாதம் இருப்பது பகிரங்க இரகசியம்.

இலங்கையில் மக்களால் தெரிவுசெய்யப்படாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருக்கிறார்.

இலங்கையின் மந்திரிசபையில் இடம்பெறாத மந்திரி அந்தஸ்துள்ள ஒருவர் இருக்கிறார்.

உண்மை என்பது ஊமை தானா? - (மரணத்தின் அழைப்பிதழ் 3 - பூநகரான்)
[Saturday, 2013-06-01 17:45:56]

உள்ளம் என்பது ஆமை...அதில் உண்மை என்பது ஊமை என்றான் கண்ணதாசன். இதன் பொருள், உள்ளத்து உண்மைகள் ஆமைகளின் கால்களைப் போல், உள்ளே முடங்கிக் கிடந்தாலும்..... ...நிரந்தரமாகத் தூங்கி விடுவதில்லை என்பதோடு, சூழ்நிலைகள் சரியாக அமையும் போது காலம் தாழ்த்தியாவது நாட்பட, நாட்பட ஆமைக்கால்கள் போல உண்மைகள் வெளிவரும் என நாம் பொருள் கொள்ள இயலும்.

பவுத்தம் தற்கொலையை அனுமதிக்கிறதா? - நக்கீரன்
[Friday, 2013-05-31 11:29:33]

பவுத்தர்களுக்கு புனிதமான தலமாகக் கருதப்படும் தலதா மாளிகைக்கு முன்னால் அண்மையில் பிக்கு ஒருவர் தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயர் போபித்த இந்திரரத்தின தேரர். கொழும்புக்கு தென் கிழக்கே இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள காகவத்தையில் உள்ள விகாரையில் வாழ்பவர். அகவை 30 மட்டுமே. பவுத்தமத அடிப்படைவாதியான இவர் பல பவுத்த கடும் போக்கு அமைப்புகளில் இருந்திருக்கிறார். சாகும் போது இந்திரரத்தின தேரர் சிங்கள இறாவய (சிங்களவரின் குரல்) என்ற அமைப்பில் இருந்தார். அதற்கு முன்னர் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியில் இருந்திருக்கிறார். மசூதிகள் தாக்கப்பட்ட போது, முஸ்லிம்களது கடைகள் எரிக்கப்பட்ட போது இந்திரரத்தின தேரர் அதில் பங்கு பற்றி இருக்கிறார்.

குருப் பெயர்ச்சியும் அறிவியலும்! - நக்கீரன்
[Wednesday, 2013-05-29 21:58:13]

நாட்டில் ஆண்டில் மூன்று மாதம்தான் மழை பெய்யும். ஆனால் சோதிடர்களது காட்டில் ஆண்டு முழுதும் மழை பெய்கிறது. காரணம் குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, இராகு கேது பெயர்ச்சி என்று ஆண்டு முழுதும் வரிசையாக வந்து கொண்டிருக்கின்றன. இந்த மாதம் பணம் காய்க்கும் மாதம். எந்தச் செய்தித்தாளைப் புரட்டினாலும் குருப் பெயர்ச்சிப் பலன்கள் பற்றிய பக்கக்கள் கண்ணைக் கவர்கின்றன.

மாகாணசபை அதிகாரங்களும் மகாநாயக்க தேரரின் விளக்கங்களும் - இதயச்சந்திரன்
[Wednesday, 2013-05-29 12:03:20]

அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி யார் என்று கேட்டால், அது நிற்சயமாக யாழ் மாவட்ட எம்.பி. சிறிதரன் என்று சிறுவர்களும் கூறுவார்கள். இப்போது விசாரணை என்பது பரிணாமமடைந்து ,கைதுகளாக வளர்ச்சி பெற்று விட்டன. மே 18 ஆம் திகதி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ. கஜேந்திரன் ,அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் உட்பட பலர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர்.

நடிப்பிசையின் துடிப்பு ஓய்ந்தது - (மரணத்தின் அழைப்பிதழ் -2) பூநகரான்
[Sunday, 2013-05-26 08:32:04]

தொட்டிலில் தாலாட்டில் தொடங்கி , காலில்லாக் கட்டிலில் ஒப்பாரியுடன் முடியும் வரை, மனித வாழ்க்கை பல வித இசைகளினது கோர்வையாகவே தொடர்கிறது. குறிப்பாக தமிழரினதும், இந்துக்களினதும் மரபு வாழ்க்கை இசையுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டது. கலைகளிலும் இசையும், நடிப்பும் மொழித் தடையை தாண்டிய உலகப் பொது மொழிகளாகும். அனேகமாக எல்லா மதங்களுமே இந்த ஒலி அலைகளின் உச்சாடனங்களின் அதீத சக்தியை அன்றே உணர்ந்து மந்திரங்களை திரும்பத் திரும்ப ஜெபிக்க வைக்கின்றன.

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஈழத்தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு உறவுப் பாலம்! - நக்கீரன்
[Saturday, 2013-05-25 08:10:25]

தமிழர்களிடை ஒற்றுமை இல்லை, அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டை போல இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைப் பலர் முன் வைக்கிறார்கள். ஒற்றுமை என்பது ஒரு ஒப்பீட்டுச் சொல். நூற்றுக்கு நூறு ஒற்றுமை எந்த இனத்தவரிடமும் இல்லை. ஒற்றுமைக்குப் பெயர் போன யூதர்கள் பற்றி ஒரு பகிடி சொல்வார்கள். பத்து யூதர்கள் இருந்தால் பதினொரு கட்சிகள் இருக்குமாம். எல்லாம் வீட்டுக்கு வீடு வாசல்படி என்று சொன்ன கதைதான்.

தமிழரால் நிராகரிக்கப்பட்டவரின் வசதி கருதிய மறதி - பனங்காட்டன்
[Friday, 2013-05-24 21:37:40]

மிளகாய், வெங்காயத்துக்கான நன்றி கூறலாக கொப்பேகடுவவுக்கு தமிழ் மக்கள் அன்று வழங்கிய வாக்குகளை தமது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கியதாக கனவு காணும் மகிந்த, கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களிலும் அதே தமிழ் மக்கள் தம்மை முற்றாக நிராகரித்ததை மறந்து விட்டாரா?
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், அவர்களோடு சேர்ந்து அந்தந்த நாட்டு மக்களும் இந்த மாதம் பதினெட்டாம் திகதியை தமிழினப் படுகொலை நாளாக அனுஸ்டித்தனர். முன்னைய மூன்று ஆண்டுகளையும்விட இவ்வருட நிகழ்வு உணர்வு கூடியதாகவும், 'அடுத்தது என்ன?' என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அமைந்திருந்தது.

மரணத்தின் அழைப்பிதழ் - பூநகரான்
[Friday, 2013-05-24 20:56:19]

'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரன்மனையை விட்டு வெளியேறி அதிசய மெய்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெய்ஞானிகளும் கூட இதே நிகழ்சசிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள் . ஆனால் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. கருத்தூன்றி அவதானிக்கவில்லை. துறை சார்ந்த தேடலுடன் அவர்களுடைய பார்வைகள் ஆராயவில்லை எனபதே உண்மை. அவ்வாறே எத்தனை இறுதிச் சடங்குகளிற்கு போனாலும் எங்களது துள்ளல்களை நாங்கள் எள்ளளவும் குறைக்காத பிறவிகளாகவே உள்ளோம்.

கார்பரேட் உலகில் தமிழினம் எதிர்கொள்ளும் சவால்கள்: - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-05-21 19:47:23]

கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சிகுன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப்பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது. நிதியியல் முதலாளித்துவ முறைமையும், கட்டமைப்பு ரீதியாக ஆதிக்கம் செலுத்தும் கார்பரேட் முதலாளித்துவமும் இதனால் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றது.

முள்ளிவாய்க்காலின் மூச்சாகி வலியை விஞ்சி எழும் வலிமை: - பனங்காட்டன்
[Thursday, 2013-05-16 21:29:38]

நெஞ்சுக்குள் குவிந்திருக்கும் வலியை விஞ்சியதாக புலம்பெயர் தமிழர் சமூகம் இன்று வலிமை பெற்று உயிர்ப்புடன் செயற்படுவதால், சர்வதேசத்தின் கண்களை கொஞ்சமாவது திறக்கக்கூடியதாக இருந்தது என்பதே நிதர்சனம்.

நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்!
[Wednesday, 2013-05-15 20:46:54]

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும் தமிழ்மக்களின் தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.

முள்ளிவாய்க்கால் ஒரு தொடர்கதை
[Sunday, 2013-05-12 18:31:15]

முள்ளிவாய்க்கால் அது தமிழினத்தால் மறக்க முடியாத துயரங்களும் துன்பங்களும் நிகழ்ந்தேறிய நாள்.அது உரிமைக்காக போராட ஆயுதம் ஏந்தியவர்களின் உடைகள் உருவப்பட்ட நாள்.கழுத்தில் நகைகள் மட்டும் மல்ல நாங்கள் குப்பிகளும் அணிவோம் என இந்த உலகுக்கு எடுத்து காட்டிய வீரத்தமிழிச்சிகளின் உடல்கள் சிதைக்கப்ட்டநாள்.பிள்ளை தந்தையை இழந்த நாள்,தாய் பிள்ளையை இழந்த நாள்,மனைவி கணவனை இழந்த நாள்.மொத்தமாக தமிழன் தன் மண்ணை முற்றாக இழந்த நாள்.

தேர்தல்களில் விற்று வாங்க தேசியம் நுகர்வுப் பொருளல்ல - பனங்காட்டன்
[Saturday, 2013-05-11 11:28:07]

தேர்தல்கள் வரும், போகும். தேர்தல்களில் விற்கவும் வாங்கவும் தமிழ் தேசியம் ஒரு நுகர்வுப்பொருள் அல்ல என்பதை கூட்டமைப்பின் தலைமை புரிந்து நிதானமாக செயற்பட வேண்டும். சர்வதேச அரங்கில் இப்பொழுது அதிகளவில் பேசப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம், தமிழினப் படுகொலை, பொறுப்புக் கூறுல் மறுப்பு என்று இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

தமிழ்நாட்டில் வேலைக்காரியோடு பேசுமொழி எந்த மொழி? - நக்கீரன்
[Monday, 2013-05-06 21:30:34]

புலம்பெயர் நாடுகளில் தமிழ் வாழுமா? வீழுமா என்ற கேள்வி நீண்ட நாள்களாக பட்டிமன்றத்துக்கு உரிய விவாதப் பொருளாக இருந்து வருகிறது.
இதற்குக் காரணம் இருக்கிறது. இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கூலித் தொழிலாளர்களாக வேற்று நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் தங்களது தாய்மொழியான தமிழை இழந்து தங்கள் அடையாளத்தைத் தொலைத்து விட்டார்கள். அவர்களது பெயர்கள் கூட சிதைந்துவிட்டன. இந்த நிலைமை பியூஜி, மொறேஷியஸ், தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள், மடகஸ்கார், றீயூனியன் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. பியூஜி தீவில் வாழும் தமிழர்கள் தாய்மொழி தமிழுக்குப் பதில் இந்தி படிக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள். இந்த முயற்சியில் இந்திய நடுவண் அரசு மும்மரமாக ஈடுபட்டுள்ளது.

அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுகிறதா? - இதயச்சந்திரன்
[Sunday, 2013-05-05 21:07:06]

ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் கடும்போக்கு இராஜதந்திரம் குறித்தும், அதன் இறுக்கமான வெளிப்பாடு பற்றியும் அறிய வேண்டுமாயின் , 80 களின் முற்பகுதியைவிட அக்டோபர் 1997 இலிருந்து பார்ப்பது பொருத்தமாகவிருக்கும். 97 இல், வெளிநாட்டு பயங்கவாத அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளைத் தடை செய்த ஒருதுருவ நாயகன் அமெரிக்கா ( உலக நாயகன் என்று இப்போது சொல்ல முடியாது), 2001 நவம்பரில் பூகோளப் பயங்கரவாதிகள் என்கிற பெயரை அவர்களுக்குச் சூட்டியது. அது மட்டுமல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் வெண்புறா போன்ற தொண்டர் நிறுவனங்களைத் தடை செய்தது. அன்றைய அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரிச்சார்ட் ஆமிரெஜ் தொடக்கம் இன்றைய மேற்குலக இராஜதந்திர கருத்துருவாக்கிகளின் மையமான அனைத்துலக நெருக்கடிக்குழு வரை, 'ஆயுதப்போராட்டத்தைக் கைவிடுங்கள்',' வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை மறந்திடுங்கள் 'என்றுதான் விடுதலைப்புலிகளின் காதுகளில் ஓதிக்கொண்டிருந்தார்கள்.

பூநகரான் பார்வையில் - தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம் ராதிகா சிற்சபைஈசனுடன் ஒரு உரையாடல்:
[Saturday, 2013-05-04 07:31:23]

"ராதிகா" - கனடாப் புலம் பெயர் தமிழரின் சமகால நம்பிக்கை நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் அங்கீகாரம். குறிப்பாக தலைவர் பிரபாகரனின் வன்னி யுகத்தின் முள்ளிவாய்க்கால் முடிவிற்கு பின், மேற்குலகில் மின்னும் ஜனநாயக விடிவெள்ளி ராதிகா. புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து வெளிநாடொன்றின் , தேசியப் பாராளுமன்றத்திற்கு தெரிவான முதலாவது ஈழத் தமிழ் நங்கை நம் தங்கை ராதிகா.

கூட்டைக் கலைப்பது சுலபம் அதனைக் கட்டுவது சிரமம் - பனங்காட்டன்
[Friday, 2013-05-03 22:33:31]

கூட்டைக் கட்டியவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை தெரியும். அவர்களுக்குத்தான் அதன் அத்தியவசியமும் புரியும். அதன் ஆழமும் அகலமும் அறியாமல் வெறும் பதவிகளுக்காக அதற்குள் குடியேறியவர்களுக்கு அது வெறும் கூடாகத் தெரிவதால்தான் இன்னொரு கூட்டைக் கட்டலாமென நினைக்கிறார்கள் போலும்.

வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு! - இதயச்சந்திரன்
[Tuesday, 2013-04-30 23:28:47]

மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர். ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம் ,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது. கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.

மட்டக்களப்பின் புராதன வரலாறு - கோறளைப்பற்று தெற்கு பிரதேசத்தின் தொல்லியல் சின்னங்கள் Top News
[Monday, 2013-04-29 15:13:51]

தேசமொன்றின் வரலாற்றினைக் கூறுவது இலக்கியங்களும் தொல்பொருள் மூலாதாரங்களுமேயாகும். எனினும் இலக்கியங்கள் அது எழுதப்பட்ட காலத்திற்கும் அதனை எழுதியவரின் கற்பனாசக்திக்கும், மனோநிலைக்கும் உட்பட்டவை. எனவே இலக்கியங்கள் வரலாற்றினைக் கூறும் வேளையில் அவை மிகைப்படுத்திக் கூறுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆனால் தொல்லியல் ஆதாரங்கள் அவ்வாறானவையன்று. அவை நம்பகமான வரலாற்றுத் தன்மையினைக் கூறும் இயல்புடையவை. இலங்கையின் ஆரம்பகால வரலாறானது ஐதீகங்களின் அடிப்படையில் அமைந்திருந்தது. எனினும் தொல்லியலில் ஏற்பட்ட வளர்ச்சிநிலை இந்நிலையில் மாற்றங்களை உண்டுபண்ணி ஆதாரங்களுடனான வரலாற்றினைக் கட்டியெழுப்பியது. தமிழர்களின் ப10ர்வீகதேசமான மட்டக்களப்பு வரலாற்றில் தொல்லியல் ஆய்வுக்கான முயற்சிகள் இடம்பெற்றிருந்த போதிலும், அவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு முழுமையான நிலையை அடையாமை கவலைக்குரியது. இங்கு தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமாயின் மட்டக்களப்பு வரலாற்றின் வளர்ச்சிப்படிகளை கண்டுகொள்ளமுடியும்.

INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
TamilsGuid-191012-2013
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
Ramans2011
Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com