Untitled Document
March 29, 2024 [GMT]
சுவிட்சர்லாந்தில் குழந்தைகளின் மரணத்தை தள்ளிபோடும் மருந்து கண்டுபிடிப்பு!
[Wednesday 2018-11-14 17:00]

சுவிட்சர்லாந்தில்


அமெரிக்காவில் வெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள் அதிகரிப்பு: - கவலை தரும் அறிக்கை
[Wednesday 2018-11-14 17:00]

தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக வெறுப்பினால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளன. 2017ஆம் ஆண்டில் மட்டும் 7175 வெறுப்பு குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 2016ஆம் ஆண்டில் இது 6121 என்ற அளவில் இருந்ததாகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் தெரிவிக்கின்றன. கருப்பினத்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரகவே இவ்வகை குற்றங்கள் அதிகளவில் நடப்பதாக அந்த எஃப்.பி.ஐ அறிக்கை விவரிக்கிறது. அதாவது 2017 ஆம் ஆண்டு, கருப்பினத்தவர்களுக்கு எதிராக 2013 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், யூதர்களுக்கு எதிராக 938 குற்றங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளதாகவும் விவரிக்கிறது அந்த அறிக்கை. தற்காலிக அட்டர்னி ஜெனரலான மேத்யூ விட்டேகர் இந்த அறிக்கையை நடவடிக்கையில் இறங்குவதற்கான அறிக்கை என்று குறிப்பிடுகிறார். இந்த குற்றங்களை கண்டித்துள்ள அவர் அமெரிக்க மதிப்புகளை சிதைப்பதாக கூறுகிறார்.


வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
[Wednesday 2018-11-14 17:00]

எல்சால்வேடர் நாட்டை சேர்ந்த இளம்பெண் கோர்டெஸ். இவர் 12 வயது முதல் தனது வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்டார். அதனால் கர்ப்பம் அடைந்தார். தொடக்கத்தில் அவர் அதை அறியவில்லை. கடுமையான ரத்தப்போக்கு மற்றும் வேதனையுடன் துடித்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கருக்கலைப்புக்கு முயன்றதாக சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைவார்: - கருத்து கணிப்பில் தகவல்
[Wednesday 2018-11-14 17:00]

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று 2 ஆண்டுகள் விரைவில் முடிய இருக்கிறது. அமெரிக்க அதிபரின் பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதனால் 2020-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. அமெரிக்காவை பொறுத்த வரை அதிபர் தேர்தல் பணிகள் ஒரு ஆண்டு முன்பே தொடங்கிவிடும்.


சர்வதேச கவுரவத்தை பறி கொடுத்தார் மியான்மர் தலைவர் சூகி!
[Wednesday 2018-11-14 08:00]

மியான்மரில் கடந்த ஆண்டு ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது அந்த நாட்டின் ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அவர்கள் வாழ்ந்து வந்த வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இன மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அந்த இன மக்கள், அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர்.


சீனாவில் இறந்துபோன தனது முதலாளிக்காக 80 நாட்களாக காத்திருக்கும் நாய்: - நெகிழ்ச்சி சம்பவம்!
[Wednesday 2018-11-14 08:00]

சீனாவில் நாய் ஒன்று தனது இறந்துபோன உரிமையாளர் திரும்பி வருவார் என எண்ணி கண்ணீர் மல்க 80 நாட்களாக காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் பியர் வீடியோ இணையதளம், அந்த காட்சி பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த நாயினுடைய உரிமையாளரான பெண்மனி, ஹோட் நகர சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி நேரிட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். அப்போது அந்த இடத்தில் அவரது உடல் இருந்தபோது இந்த நாய், பாதுகாப்பாக நின்றிருந்தது. அன்றை தினம் முதல் தற்போது வரை நாள்தோறும் அந்த பகுதிக்கு வரும் நாய், தனது உரிமையாளர் உயிரோடு வருவார் என்ற நம்பிக்கையுடன் கடந்த 80 நாட்களாக காத்திருக்கிறது.


நியூஸிலாந்தில் 26 அடி நீளமான பிரமாண்ட கடல் புழு கண்டுபிடிப்பு: - வியப்பில் ஆய்வாளர்கள்
[Tuesday 2018-11-13 13:00]

நியூஸிலாந்து நாட்டின் கடல் பகுதியில் சுமார் 26 அடி நீளமுள்ள பிரமாண்டமான கடல் புழு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நியூஸிலாந்தில் எரிமலையால் உருவான வெள்ளைத் தீவு பகுதியில் ஸ்டீவ் ஹாத்வே (56) மற்றும் ஆண்ட்ரூ பட்லே (48) ஆகியோர் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வழுவழுப்பான நிலையில் வெள்ளை நிறத்துடன் பிரம்மாண்ட புழு (gelatinous worm) ஒன்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது.


ஆழ்கடல் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குட்டி சுறா மீன்கள்!
[Tuesday 2018-11-13 13:00]

அயர்லாந்தின் ஆழ்கடல் பகுதியில் ஆயிரம் கணக்கான குட்டி சுறா மீன்கள் வலம் வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேற்கு கடற்கரை பகுதியில் 2500 அடி ஆழத்தில் நூற்றுகணக்கான பூனை சுறாக்களும், ஆயிரக்கணக்கான முட்டை ஓடுகளும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. சுறாக்கள் எப்போதும் குட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மை கொண்டவை.


சுவிட்சர்லாந்தில் 370 கோடிக்கு ஏலம் போன இளஞ்சிவப்பு வைரக்கல்!
[Tuesday 2018-11-13 13:00]

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் மிக அழகிய இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலம் நடைபெற்றது. இதை கிறிஸ்டி, ஏல மையம் நடத்தியது. 10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் ரூ.370 கோடிக்கு (50 மில்லியன் டாலர்) ஏலம் போனது. இது நீள் சதுரவடிவம் கொண்டது. பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.


அலிபாபா ஒன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனை!
[Tuesday 2018-11-13 13:00]

சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் நவம்பர் 11-ந் தேதியன்று சிறப்பு விற்பனையை நடத்துகிறது. பல்வேறு சலுகைகள், அதிரடி விலை குறைப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் நடத்தப்படும் இந்த நிகழ்வில், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனையாகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விற்பனை கடந்த 10-ந் தேதியே பல்வேறு கொண்டாட்டங்களுடன் தொடங்கியது. இந்த விற்பனை தொடங்கிய முதல் 2 நிமிடங்களிலேயே 1.4 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 ஆயிரம் கோடி) அளவுக்கு பொருட்கள் விற்பனையானது.


கச்சா எண்ணெயின் விலை தொடர்வீழ்ச்சி: - உற்பத்தியை குறைக்குமாறு சவுதி அரேபியா மந்திரி ஆலோசனை
[Monday 2018-11-12 18:00]

சவுதி அரேபியா அடுத்த மாதத்தில் இருந்து அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க இருப்பதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் காலித் அல் ஃபலி, தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.


12 மணி நேரத்தில் 11,000 பீட்சாக்கள் தயாரித்து அர்ஜென்டினா கின்னஸ் சாதனை!
[Monday 2018-11-12 18:00]

அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அய்ர்ஸ் நகரில் உலக சாதனை முயற்சிக்காக நூற்றுக்கணக்கான சமையல் கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பீட்சா தயாரிப்பில் ஈடுபட்டனர். இத்தாலியில் 12 மணி நேரத்தில் 10,065 பீட்சாக்கள் உருவாக்கப்பட்டதே இதுவரை உலக சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதற்கான நிகழ்ச்சி அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அய்ர்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சுமார் 400 சமையற் கலைஞர்கள் ஒன்று கூடி பீட்சா தயாரிப்பும் மும்மரமாக ஈடுபட்டனர்.


பாகிஸ்தானில் உணவு விஷமானதால் 2 சிறுவர்கள் பலி: - பிரபல உணவகத்திற்கு சீல்
[Monday 2018-11-12 17:00]

பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள பிரபல உணவகம் அரிசோனா கிரில் ரெஸ்டாரண்ட். இந்த பிரபல உணவகத்தில் ஒரு பெண்ணும், அவரது 2 மகன்களும் உணவருந்தியுள்ளனர். உணவருந்திய சிறிது நேரத்திலேயே 3 பேருக்கும் அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மூவருமே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவப் பரிசோதனையில், அவர்கள் சாப்பிட்ட உணவே அவர்களுக்கு நஞ்சாக மாறியது கண்டறியப்பட்டது. இதனால் தான் மூவரது உடல்நலனும் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.


தீவிரவாத தாக்குதலை தடுக்க உதவிய சாலையோரவாசி: - குவியும் நிதி உதவி
[Monday 2018-11-12 17:00]

கடந்த வாரம் ஆஸ்திரேலியா நாட்டில் ஷாப்பிங் மாலில் புகுந்த ஐஎஸ் தீவிரவாதி ஒருவன், அங்கிருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர். அந்த தீவிரவாதியைப் பிடிக்க போலீஸார் கடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு போக்கு காட்டிய தீவிரவாதி போலீசாரை கத்தியைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தான்.


எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக காங்கோவில் 200 பேர் பலி!
[Monday 2018-11-12 17:00]

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கி உள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களைகண்டுபிடித்த தொல்லியல் ஆய்வாளர்கள்!
[Sunday 2018-11-11 09:00]

நான்காயிரம் ஆண்டு பழமையான பதப்படுத்தப்பட்ட பூனைகளின் உடல்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதுபோல பழங்கால எகிப்தியர்கள் புனிதமாக கருதிய வண்டுகளையும் கண்டுபிடித்துள்ளனர். எகிப்தில் தெற்கு கெய்ரோ பகுதியில் உள்ள 4000 ஆம் ஆண்டு பழங்கால கல்லறையில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.


ஆப்ரிக்காவில் குறைந்துள்ள பெண் பிறப்புறுப்பு சிதைப்பு சடங்கு!
[Sunday 2018-11-11 09:00]

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு செயலானது ஆப்ரிக்காவில் பெரிய அளவில் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த சடங்கு இன்னும் தொடர்வதாகவும் ஆய்வு கூறுகிறது. இது ஒரு வழக்கமாக அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது 'மனித தன்மையற்ற செயல்' என்று கூறி செயற்பாட்டாளர்கள் போராடி வந்தனர்.


ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்பு: - பிரித்தானியா அமைச்சர் ராஜினாமா
[Sunday 2018-11-11 09:00]

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகும் முடிவை இங்கிலாந்து நாடு எடுத்துள்ளது. 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான முறையான நடவடிக்கையை பிரதமர் தெரசா மே எடுத்து வருகிறார்.


சோமாலியா குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு!
[Saturday 2018-11-10 18:00]

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியானது. மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ஜோர்டானில் கனமழை: - வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி
[Saturday 2018-11-10 18:00]

ஜோர்டான் நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், 4000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஜோர்டானில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகியுள்ளன. இடைவிடாது பெய்த மழையால் அந்நாட்டின் தாபா பகுதி கடுமையாக சதேமடைந்துள்ளது.


கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: - 9 பேர் உயிரிழப்பு
[Saturday 2018-11-10 18:00]

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 35 பேரின் நிலை என்ன ஆனது என தெரியவில்லை. கலிஃபோர்னியாவின் வடக்கில் பசிபிக் கடல் தூரத்தில் அமைந்துள்ள மாலிபு என்ற இடத்தில் நேற்று காட்டுத்தீ ஏற்பட்டது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளிலும் தீ பரவியது. இதனால் அங்கிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் தீக்கிரையாகின. ஏராளமான வீடுகள் தீப்பற்றி எரிந்து வருகின்றன. தண்ணீரை பீய்ச்சி அடித்தும், விமானங்களில் ரசாயண பொடியை தூவியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


சீனாவில் செயற்கை நுண்ணறிவால் செய்தி வாசிக்கும் ரோபோ: - செய்தி ஏஜென்சி சாதனை
[Saturday 2018-11-10 08:00]

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு போட்டியாக உலகில் முதன்முறையாக ரோபோ செய்தி வாசிப்பாளரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் வரைலாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் ஆங்கிலத்தில் சரலமாக செய்தி வாசிக்கும் இந்த ரோபோவை சீனாவின் சின்ஹுவா செய்தி ஏஜென்சி அறிமுகம் செய்துள்ளது.


ஆஸ்திரேலிய ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள்!
[Saturday 2018-11-10 08:00]

பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு ஜாங்மோ. இந்த பெண்ணுக்கு 15 மாதங்களுக்கு முன்னர் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவை வயிற்றால் ஒட்டிப்பிறந்தன. நிமா, தவா என்று பெயரிட்டு வளர்க்கப்பட்டு வந்த இந்தக் குழந்தைகள், எதைச்செய்தாலும் சேர்ந்தே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


பாலியல் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண 20,000 பணியாளர்களை நியமித்தது கூகுள்!
[Friday 2018-11-09 18:00]

பாலியல் தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவன செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பணியிடங்களிலும், பொது இடங்களிலும் நடக்கும் பாலியல் தொல்லைகளை மீடு என்ற ஹாஷ் டேக் மூலம் சமூக வலைத்தளங்களில் பெண்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கூகுள் நிறுவனத்திலும் அண்மை காலமாக பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சீன ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்த திபெத்தியர்!
[Friday 2018-11-09 17:00]

திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்தும், புத்த கலாச்சாரத்தை ஒடுக்கும் சீன அரசை கண்டித்தும், தலாய் லாமா நாடு திரும்ப கோரியும் திபெத்தியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து தீக்குளிப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. திபெத் விடுதலைக்காக ஏராளமான புத்த மத துறவிகளும் உயிரை மாய்த்துள்ளனர்.


சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி தஞ்சம் கோர உரிமை இல்லை: - டிரம்ப் நிர்வாகம்
[Friday 2018-11-09 12:00]

குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய விதியின்படி, நாட்டின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நீதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகள் வெளியிட்ட புதிய உத்தரவின்படி குடியேறிகள் தொடர்பான அதிபரின் தடையை மீறும் நபர்களுக்கு புகலிடம் மறுக்க இயலும்.


தென் ஆப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
[Friday 2018-11-09 07:00]

தென் ஆப்பிரிக்காவின் போட்ஸவானா மற்றும் நமிபியா நாடுகளுக்கு இடையில் உள்ள நதி ஒன்றில் நூற்றுக்கணக்கான எருமைகள் நீரில் மூழ்கின. இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில், சிங்கங்களால் துரத்தப்பட்டபோது ஓடியதில் இவை ஆற்றில் மூழ்கியதாக போட்ஸ்வானா அதிகாரிகள் கூறுகிறார்கள்.


வாழ்வில் செல்வம் வெற்றி கிடைக்க மண்டை ஓட்டை அலங்கரித்து வழிபடும் பொலிவியா மக்கள்!
[Friday 2018-11-09 07:00]

பொலிவியாவில் முன்னோர்களை போற்றும் வகையில் மண்டை ஓடு திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொலிவியாவின் லாபாஸ் நகரில் உள்ள மையானத்தில் பாரம்பரிய மண்டை ஓடு திருவிழா கொண்டாப்பட்டது. பொலிவியாவின் லா பாசிலில் உள்ள பழமையான மயானத்தில் மண்டை ஓடு திருவிழா ஆண்டுதோறும் நவம்பரில் கொண்டாடப்படுகிறது.

NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா