Untitled Document
March 29, 2024 [GMT]
'விநோதக் கனவு' நூலின் அறிமுக விழா! Top News
[Sunday 2023-11-12 21:00]

இலங்கை நெய்னார் சமூக நல காப்பகத்தின் ஏற்பாட்டில் செல்வன் எம். எச். ரகீப் அல் ஹாதி எழுதிய 'விநோதக் கனவு' நூலின் அறிமுக விழா 11.11.2023 இல. 63, தெமட்டகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு நிகழ்ந்தது .


எதை நோக்கிப் போகிறது ஈழத்து கலை கலாச்சாரம்? Top News
[Sunday 2023-11-12 13:00]

இயல், இசை, நாடகம், கலையிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஈழத்தமிழர்கள் சளைத்தவர்கள் அல்ல, பல கலை மேதைகள் நம் மண்ணில் இருந்திருக்கிறார்கள், ஏன் இந்திய திரைத்துறையிலும் கூட சாதித்து இருக்கிறார்கள். முதல் முதலில் கிறிஸ்தவ வேதாந்த நூலான Bible தமிழில் மொழிபெயர்த்தவர் இலங்கையை சேர்ந்த ஆறுமுகநாவலர். கலையரசு சொர்ணலிங்கம் ஐயா, A ரகுநாதன் ஐயா போன்ற பல பல கலைஞர்கள் எங்கள் கலைகளை, கலாச்சாரம் சீரழியாமல் வளரவேண்டும் என்று பல ஆண்டுகளாக பாடுபட்டனர். கலை உலகிலும் சரி, திரையுலகிலும் சரி பல தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் துறையை வளர்க்கப் படாத பாடு பட்டுள்ளனர்.


தெஹியோவித்த தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா! Top News
[Sunday 2023-11-12 13:00]

10.11.2023 வெள்ளிக்கிழமை அன்று தெஹியோவித்த தமிழ் மகாவித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூட கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா கேகாலை மாவட்டத்தில் உள்ள தெஹியோவித்த எனும் இடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவருமாகிய கெளரவ மனோ கணேசன் , கனடிய தமிழர் பேரவாயின் இலங்கைக்கான மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் திரு துசியந்தன் துரைரட்ணம் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வின்போது உரையாற்றிய கனடிய தமிழர் பேரவையின் இலங்கைக்கான மனிதாபிமான திட்டங்களின் இணைப்பாளர் திரு துசியந்தன் துரைரட்ணம், இந்த பணிக்காக நன்கொடை வழங்கி உதவிய அனைத்து கனடியர்கள் மற்றும் அமெரிக்க தமிழர்களிற்கு கனடிய தமிழர் பேரவையின் சார்பாக மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 அன்று விடுதலைக் காந்தள் போட்டி நிகழ்வு! Top News
[Thursday 2023-11-09 07:00]

யேர்மன் வூப்பெற்றால் நகரில் 4.11.23 சனிக்கிழமை அன்று தாயக விடுதலைப் பாடலுக்கான விடுதலைக் காந்தள் எனும் மாபெரும் எழுச்சிப் போட்டி நிகழ்வு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டது. முதலில் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கட்கு சுடர் ஏற்றி மலர் தூவி வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு, மங்கல விளக்கேற்றலுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புகள்! Top News
[Friday 2023-11-03 06:00]

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும் கனடாத் தமிழ்க் கல்லூரியும் இணைந்து தமிழ் வளர் மையத்தின் ஊடாக நடத்தும் பட்டப்படிப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன. தமிழ்மொழியில் சான்றிதழ், இளங்கலை, முதுகலை போன்ற பட்டப் படிப்புகளைக் கற்கும் வாய்ப்பு கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்குக் கிடைத்துள்ளது.


துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள்! Top News
[Thursday 2023-11-02 21:00]

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்தில் முதியோர் தின நிகழ்வுகள் இன்று கோலாகலாமாக பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. பிரதேச செயலகத்தின் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தோர் கஜுந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக துணுக்காய் பிரதேச செயலாளர் ச.லதுமீரா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.


நிதி முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் மல்லாவியில்! Top News
[Thursday 2023-11-02 21:00]

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அனுசரணையில் சர்வோதய ஊடாக நிதி முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்றைய தினம் மல்லாவி பகுதியில் இடம்பெற்றது. பொருளாதாரப்பிரச்சனை என்பது கொரோனா காலப்பகுதியில் மிக மோசமாக எம் மக்களை தாக்கியிருந்தது.


யேர்மனி கம்பேர்க் மாநகரில் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வு! Top News
[Tuesday 2023-10-17 06:00]

யேர்மனி கம்பேர்க் மாநகரில் உணர்வெழுச்சியுடன் முதற்பெண் மாவீரர் இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களின் 36ஆவது நினைவு சுமந்த வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் நினைவு கூறப்பட்டது. தமிழ்ப் பெண்கள் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வெழுச்சி நாளில் கம்பேர்க் தமிழாலய நிர்வாகியும் மாவீரர் உத்தமன் அவர்களுடைய சகோதரி திருமதி ராசலட்சுமி ஜெயமனோகரன் அவர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனியின் பேர்லின் மாநிலப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் குமணன் அவர்களால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, இரண்டாம் லெப்டினன் மாலதி அவர்களுடைய திருவுருவப் படத்திற்கு மாவீரர் லெப்டினன் அமலன் மற்றும் மாவீரர் சாந்தகுமார் அவர்களுடைய சகோதரி திருமதி சுதர்சினி பாலகுமார் அவர்களாலும் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி தமிழினி பத்மநாதன் அவர்களாலும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அகவணக்கம், சுடர்வணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டு நினைவுவணக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது.


யேர்மனி ஸ்ருட்காட் நகரில் நடைபெற்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபனுடைய 36 ஆவது நினைவு வணக்க நிகழ்வு! Top News
[Tuesday 2023-10-03 06:00]

01.10.2023 சனிக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரினில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் மற்றும் தமிழீழத்தின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டபம் நிறைந்த மக்களுடன் தியாகதீபத்தின் வணக்க நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.


போக்குவரத்துத்துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்! Top News
[Friday 2023-09-29 21:00]

செப்டம்பர் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமையன்று ஒன்ராறியா மாநில சட்டமன்றத்தில் செய்யப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றங்களின் அடிப்படையில் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் அமைச்சர் பிரப்மீத் சர்க்காரியா ஆகியோருடன் இணைந்து ஒன்ராறியோ வாழ் மக்களுக்காகப் பணியாற்றுவதற்கென போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் பெருமை கொள்கிறேன். இத்தருணத்தில், என் தொகுதியாகிய ஸ்காபரோ - றூஜ் பார்க்கிலுள்ள மக்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் அவர்கள் வழங்கி வரும் ஆதரவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


மல்லாவியில் மகிழ்வு இல்லம் திறந்து வைப்பு! Top News
[Wednesday 2023-09-27 19:00]

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஒளிரும் வாழ்வு சமூக சேவை நிலையத்தில் மகிழ்வு இல்ல கட்டம் இன்று (27-09-2023) திறந்து வைக்கப்பட்டது. மாற்று வலுவுள்ளோர்களின் துயர் துடைக்கும் சமூக சேவை அமையமாக கடந்த தசாப்த காலமாக இயங்கி வரும் ஒளிரும்வாழ்வு சமூக சேவை அமையத்தின் ஓர் அங்கமாக இன்றைய தினம் மகிழ்வு இல்லம் எனும் பெயரில் சமூக சேவை கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்! Top News
[Sunday 2023-09-24 08:00]

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குற்பட்ட பாண்டியன்குளம் மகா வித்தியாலயத்தில் நேற்று (23-09-2023) இலவச மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றிருந்தது. யாழ் மருத்துவ சங்கம் மல்லாவி ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து குறித்த இலவச மருத்துவ முகாமினை நடாத்தியிருந்தது.


யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணம் - 8ஆம் நாள்! Top News
[Friday 2023-09-08 21:00]

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் நாட்டினைக் கடந்து யேர்மனி நாட்டினூடாக பயணத்தை மேற்கொண்டிருந்தது.இன்று காலை (07.09.2023) யேர்மனி டில்லிங்கன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,சார்புறூக்கன் நகரசபையில் சந்திப்பு நடைபெற்றதோடு தொடரும் தமிழின அழிப்பு சார்ந்த மனு கையளிப்பும் நடைபெற்றது. தொடர்ந்தும் அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்கள் கடுமையான வெப்பக்காலநிலைக்கு மத்தியிலும் கடும்சவால்களுக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு! Top News
[Sunday 2023-09-03 10:00]

மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு ஒன்று மல்லாவி பகுதியில் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் மனித உரிமை செயற்பாட்டாளர்களை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்களை இணைத்து அடிப்படை மனித உரிமைகளும் இலங்கையில் உள்ள சட்டங்கள், பரிந்துரை செயற்பாடுகள், தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு நிகழ்வு ஒன்று மல்லாவியில் இடம்பெற்றிருந்தது.


பிரித்தானிய மண்ணில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாதிரி பொது வாக்கெடுப்பு! Top News
[Monday 2023-08-14 21:00]

எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம் என்ற எமது தேசியத் தலைவரின் சிந்தனையை செயலாக்கும் முயற்சியில் தமிழர்கள் ஒவ்வொருவரும் செயலாற்றி வரும் இந்த நேரத்தில் பொது வாக்கெடுப்பிற்கான மக்கள் இயக்கத்தினரால் "Yes to Referendum" மாதிரி பொது வாக்கெடுப்பானது பிரித்தானியாவில் பல இடங்களில் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகின்றது.


புத்தூரில் குமரகுருபரன் விளையாட்டரங்கு திறந்துவைக்கப்பட்டது! Top News
[Friday 2023-08-11 18:00]

புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் விளையாட்டரங்க திறப்புவிழா நேற்று புதன்கிழமை (09.08.2023) மலை குமரகுருபரன் மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்றது. ஸ்ரீ குமரகுருபரன் சனசமூக நிலையத்தின் கனடா கிளையின் நிதிப் பங்களிப்பு முயற்சியின் வாயிலாகக் காணி கொள்வனவு செய்யப்பட்டு அக்காணியில் கந்தர் ஐயாத்துரை மற்றும் ஐயாத்துரை அன்னப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக இவ் விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டு அவை உத்தியோகபூர்வமாக சன சமூகநிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்திடம் கையளிக்கப்பட்டது.


சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பம்! Top News
[Wednesday 2023-08-02 19:00]

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு இன்றைய தினம் ( மாவட்டத்திலேயே முதன்முதலாக) முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் பேராசிரியர் டாக்டர் பேரானந்தராஜா,மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் '- Dr உமாசங்கர், தெல்லிப்பளை பொது வைத்திய நிபுணர் - Dr. நிஷாகன் மற்றும் மல்லாவி வைத்திய அத்தியட்சகர் - Dr. மைத்ரேயி, மல்லாவி பொது வைத்திய நிபுணர் Dr . ருஷாந்தினி மற்றும் மல்லாவி வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம் யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளபட்டது! Top News
[Saturday 2023-07-29 06:00]

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023 திங்கட்கிழமை அன்று எட்டு நகரங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பட்டது.


உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இறுதிவணக்கமும் மதிப்பளிப்பும்! Top News
[Monday 2023-07-24 21:00]

தேசியச் செயற்பாட்டாளராகத் தொடங்கித் தமிழ்க் கல்விக்கழகத்தோடு இணைந்து யேர்மனிய மண்ணிலே வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயரிய இலட்சியத்தோடு கொம்பூர்க் தமிழாலய நிர்வாகியாகிப் பின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டளராகவும் பணியாற்றிய உயர்திரு சின்னத்துரை யோகலிங்கம் அவர்களுக்கான இறுதி வணக்கமும் மதிப்பளிப்பும் மீசவ் (iesau) நகரத்திலே சிறப்பாக நடைபெற்றது.


1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்!- யேர்மனி பேர்லினில் நடைபெற்ற கறுப்பு யூலை நிகழ்வு! Top News
[Monday 2023-07-24 18:00]

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன் நடாத்தி முடிக்கப்பட்ட இவ் இனப்படுகொலையின் போது 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல கோடிகள் பெறுமதியான மக்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கி அழிக்கப்பட்டன.


முல்லைதீவில் செந்தில் குமரனின் மேலுமொரு நிவாரண திட்டம்!
[Thursday 2023-07-20 18:00]

இதய சிகிச்சை பிரிவினை கனடா உயர் ஸ்தானிகர் திறந்து வைத்தார் செந்தில் குமரனின் நிறுவனத்தின் நிதியால் சென்ற வருட இறுதியில் கனடா மல்லாவி இரத்த சுத்திகரிப்பு நிலையம், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாஞ்சோலை மருத்துவமனையில் டொரோண்டோ முல்லை இரத்த சுத்திகரிப்பு நிலையம் என்ற தொடர்ச்சியில் இன்று மாஞ்சோலை மருத்துவமனைக்கு மேலுமொரு வரப்பிரசாதமாக மார்க்கம் முல்லை இதய நோய் சிகிச்சை பிரிவு கனடாவின் இலங்கைக்கான தூதுவரான திரு எரிக் வால்ஷ் நினைவு கல்லினை திறந்து வைத்தார்.


09வது அகவையில் நோக்கி அடியெடுத்து வைக்கும் வவனியா LCDC CAMPUS! Top News
[Sunday 2023-07-09 17:00]

வவுனியாவில் ஆங்கில கல்விக்கென தனித்துவமான இடத்தினை தன்னகத்தே கொண்டு இயங்கி வந்த LCDC CAMPUS இன்றுடன் தனது 9வது அகவையினை நோக்கி அடி எடுத்து வைக்கிறது... சுந்தரலிங்கம் பார்த்தீபன் என்பவரின் தனிப்பட்ட முயற்சியில் 10 மாணவர்களுடன் உருவாகிய இவ் கல்லூரியானது இன்று 1000 திற்கும் மேற்பட்ட மாணவர்களை உள்ளடக்கி ஒரு விருட்சமாக வானுயர்ந்து நிற்கின்றது..


45 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் 05 பேருக்கு உலர் உணவு பொருட்களும் வழங்கல்! Top News
[Monday 2023-07-03 06:00]

சித்திரமேழி பழணியானந்தன் சனசமூக நிலையம் மற்றும் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் ஆகிய இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்,மாந்தை கிழக்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.


துணுக்காய் கோட்ட பாடசாலைகளின் நிலைகளிலே மல்லாவி மத்திய கல்லூரிமுன்னிலை! Top News
[Monday 2023-07-03 06:00]

துணுக்காய் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டிகள் மு/மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் 28/06/2023, 30/06/2023 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இவ்வருடத்தின் துணுக்காய் கோட்ட பாடசாலைகளின் நிலைகளிலே மு/மல்லாவி மத்திய கல்லூரி ஒட்டுமொத்தமாக 446 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்டது.


டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 2023! Top News
[Monday 2023-06-26 18:00]

கடந்த இரு வாரமாக இடம்பெற்ற டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி மிகவும் சிறப்பாக தனது இறுதி நாளை நேற்றைய தினம் சனிக்கிழமை நிறைவுசெய்து முடித்திருந்தார்கள். இரண்டு இல்லங்கள் பங்கேற்ற இவ் விளையாட்டு போட்டியில் எல்லாளன் இல்லமும் சங்கிலியன் இல்லமும் மோதிக்கொண்டன.


மத்திய மாநிலத்திற்கான மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டி - வில்லிச் 2023! Top News
[Wednesday 2023-06-21 18:00]

விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், உள உறுதியையும் புத்துணர்வையும் கொடுப்பவை. அவை போட்டியாக நடாத்தப்படும் போது ஒற்றுமையையும் மனமகிழ்வையும் வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கொடுக்கின்றன. யேர்மனியில் தமிழாலயங்களில் கல்வி கற்கும் எம் சிறார்கள் இப் பண்புகளைச் சிறுவயதிலிருந்தே வளர்த்துக் கொள்வதற்காக, மாவீரர் வெற்றிக் கிண்ண மெய்வல்லுநர் போட்டியைத் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு ஆண்டு தோறும் 5 மாநிலங்களில் நடாத்திவருகின்றது.


வட்டு இந்துவின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் வழங்கி வைப்பு! Top News
[Friday 2023-06-16 06:00]

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சாரணர் துருப்புக்களுக்கான கூடாரங்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் பழைய மாணவனான அருணாசலம் ஆதித்தன் அவர்கள் முன்வந்து இந்த நன்கொடையை வழங்கியிருந்தார்.


ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த தெணியானின் சிலை வடமராட்சியில் திறப்பு! Top News
[Sunday 2023-06-11 07:00]

கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) அவர்களின் முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வும், உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ''ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் - தெணியான்'' நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் - வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி - கொற்றாவத்தையில் அமைந்துள்ள அவர் வாழ்ந்த வீட்டில் நேற்று சனிக்கிழமை (10.06.2023) காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.

Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா