Untitled Document
April 24, 2024 [GMT]
ரிஷாத்தை தேடி !கிழக்கிற்கு விரைந்தது சிஐடி!
[Sunday 2020-10-18 08:00]

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாத் பதியுதீனை நான்காவது நாளாக தேடி வரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், கிழக்கு மாகாணத்துக்கும் குழுக்களை அனுப்பி வைத்துள்ளது.


ரிஷாத்தை பாதுகாக்கிறது அரசாங்கம்!
[Sunday 2020-10-18 08:00]

அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ய உத்தரவிடப்பட்ட ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தினால் பாதுகாக்கப்படுகிறார் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


காங்கேசனில் இரு கடற்படையினருக்கு தொற்று!
[Sunday 2020-10-18 08:00]

காங்கேசன்துறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படையினர் இரண்டு கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.


வயோதிபருக்கு வாள்வெட்டு!
[Sunday 2020-10-18 08:00]

யாழ்ப்பாணம் -புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மினுவங்கொட கொத்தணி - 2ஆயிரத்தை தாண்டியது!
[Sunday 2020-10-18 08:00]

மினுவங்கொட தொற்று கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று இரவு வரை 115 தொற்றாளர்கள் இந்தக் கொத்தணியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டனர்.


மிருக காட்சிசாலைகளை மறு அறிவித்தல் வரை மூட உத்தரவு!
[Sunday 2020-10-18 08:00]

கொவிட் -19 தொற்று காரணமாக நாட்டின் அனைத்து மிருககாட்சி சாலைகளையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். அனைத்து மிருககாட்சி சாலைகளையும் மூடுமாறு பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.மிருக்காட்சி சாலைகளினுள் நுழைவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட மீண்டும் ஆலோசனை! Top News
[Saturday 2020-10-17 18:00]

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவின் அழைப்பின் பேரில், இன்று காலை 10.30 மணியளவில், நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் இந்தக் கூட்டம் ஆரம்பமானது.


ஓமந்தையில் இருவர் வெட்டிக்கொலை! - ஒருவர் படுகாயம். Top News
[Saturday 2020-10-17 18:00]

வவுனியா – ஓமந்தை, மாணிக்கர் வளவுப் பகுதியின் இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர், மாணிக்கர் வளவு பகுதியில் வீடு ஒன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு ஆண்களின் சடலங்களை மீட்டனர்.


மேலும் 73 பேருக்குக் கொரோனா!
[Saturday 2020-10-17 18:00]

மினுவாங்கொட கொரோனா கொத்தணியைச் சேர்ந்த மேலும் 73 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 71 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோப்பாயில் ரிப்பர் மோதி ஒருவர் பலி!
[Saturday 2020-10-17 18:00]

யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில், ரிப்பர் வாகனம் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறப்படுகிறது.


திசை திருப்ப முற்படுகிறார் ரம்புக்வெல்ல!
[Saturday 2020-10-17 18:00]

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டங்களை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திசை திருப்ப முற்படுகிறார் என்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி குற்றம்சாட்டியுள்ளார்.


துப்பாக்கி முனையில் தாக்குதல்- 5 இளைஞர்கள் காயம்!
[Saturday 2020-10-17 18:00]

வவுனியா- செட்டிக்குளம், பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 10.00 மணியளவில் செட்டிகுளம், கிறிஸ்தவ குளம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


விமான நிலையம் வருவோருக்கு பிசிஆர் கட்டாயம்!
[Saturday 2020-10-17 18:00]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்குப் புறப்படும் அனைவரும், 72 மணித்தியாலத்துக்குள் பிசிஆர் சோதனை நடத்தியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
[Saturday 2020-10-17 18:00]

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் உள்ள மேய்ச்சல் தரைக் காணியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு கோரி, மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் என்.விஸ்ணுகாந்தனின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகரில் உள்ள காந்திப் பூங்காவுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.


வாகனங்கள் தீக்கிரை!
[Saturday 2020-10-17 18:00]

கல்முனை சுனாமி வீட்டுத்திட்டத்தின் கிரின் பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் உள்ள வாகனங்களுக்கு மர்ம நபர்கள் நேற்று தீ வைத்துள்ளனர். இதனால் 3 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சிறுவர்களின் 5 சைக்கிள்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.


ஐரிஎன் ஊடகவியலாளருக்கு தொற்று இல்லை!
[Saturday 2020-10-17 18:00]

சுயாதீன தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளருக்கு கொரோனா தொற்று இல்லை என்று இரண்டாவது சோதனையில் தெரியவந்துள்ளது. முதலாவது பிசிஆர் சோதனையில் தொற்று இருப்பதாக தெரியவந்ததை அடுத்து, சுயாதீன தொலைக்காட்சி பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.


மருதங்கேணி, கிருஷ்ணபுரத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்கள்!
[Saturday 2020-10-17 06:00]

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில், இரண்டு கொரோனா சிகிச்சை நிலையங்கள் அவசர அமைக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய, யாழ். மாவட்டத்துக்கான கொரோனா சிகிச்சை நிலையம் மருதங்கேணி பிரதேச மருத்துவமனையில் அமைக்கப்படவுள்ளது.


வெடுக்குநாறி தடை- மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு!
[Saturday 2020-10-17 06:00]

வவுனியா வடக்கு - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் விரைவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


நேற்று 110 பேருக்கு தொற்று!
[Saturday 2020-10-17 06:00]

மினுவங்கொட கொரோனா தொற்று கொத்தணியில் இருந்து மேலும், 110 தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 38 பேர், ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பொம்பியோ வருகை உறுதியில்லை!
[Saturday 2020-10-17 06:00]

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைப் பயணம் இன்னமும் உறுதியாகவில்லை என அமெரிக்க தூதரகத்தை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


6 கிராமங்கள் முடக்கி வைப்பு!
[Saturday 2020-10-17 06:00]

கேகாலை மாவட்டத்தில் உள்ள 6 கிராமங்கள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஈரியகொல்ல, எம்புல்அம்பே, அலவத்த, பிங்ஹேன, பொரளுவ, கிரிவல்லாப்பிடிய ஆகிய 6 கிராமங்களுக்கே இவ்வாறு தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்களுக்கு பிணை நிராகரிப்பு!
[Saturday 2020-10-17 06:00]

முல்லைத்தீவு – முறிப்பு காட்டில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவருக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.


வாள்வெட்டுக்கும்பல் மீண்டும் தாக்குதல்! Top News
[Saturday 2020-10-17 06:00]

யாழ்ப்பாணம்- கோண்டாவில் கிழக்கு - அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று இரவு 8.30 மணி அளவில் இரு மோட்டார் சைக்கிள்களில் முகத்தை மறைத்தவாறு வாள்களுடன் நுழைந்த வாள்வெட்டு கும்பல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.


தொற்று பரவலை தடுக்க ஒத்துழையுங்கள்! - கனடிய பிரதமர் சிறுவர்களுக்கு அழைப்பு
[Saturday 2020-10-17 06:00]

கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு சிறுவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கேட்டுக் கொண்டுள்ளார். பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களை கொண்டாட முடியாத நிலையில் சிறுவர்கள் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.


மணல் மேடு சரிந்து இளைஞன் பலி!
[Saturday 2020-10-17 06:00]

மட்டக்களப்பு - கரடியனாறு, கித்துள் பகுதியில் நேற்று மாலை மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மண் மேடு இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சஹ்ரான் குழு பயன்படுத்திய கார் சிக்கியது!
[Saturday 2020-10-17 06:00]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள முகமது ஹனீபா முகமது அக்ரம் பயன்படுத்தி வந்த கார், காத்தான்குடி றிஸ்வி நகரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


மாநகரசபையில் இருந்து மணியை நீக்க கோருகிறது காங்கிரஸ்!
[Friday 2020-10-16 17:00]

சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகியோரை, யாழ். மாநகரசபையின் உறுப்புரிமையில் இருந்து நீக்குமாறு, உதவித் தேர்தல் ஆணையாளருக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அறிவித்துள்ளது.


20 மீது அடுத்தவாரம் இரண்டு நாட்கள் விவாதம்!
[Friday 2020-10-16 17:00]

20 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம், நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம், 21ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா