Untitled Document
April 18, 2024 [GMT]
சாரதி தூங்கியதால் சீமெந்து லொறி விபத்து!
[Monday 2021-03-29 17:00]

கொக்காவில் பகுதியில் இன்றுஅதிகாலை சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி வீதியின் அருகிலிருந்த மரத்துடன் மோதியதில் சாரதி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இருந்து வருவோருக்கு வவுனியாவில் பிசிஆர் சோதனை!
[Monday 2021-03-29 17:00]

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகிறது.


தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்டவர்களின் வாடிகள் தீக்கிரை!
[Monday 2021-03-29 17:00]

வடமராட்சி கிழக்கு – மணற்காட்டில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தங்கியிருந்த வாடி இனம் தெரியாதவர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.


சந்திரிகாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்!
[Monday 2021-03-29 17:00]

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.


போலி பிசிஆர் சான்றிதழுடன் கனடாவுக்குள் நுழைய முயன்ற 30 பேர் கைது!
[Monday 2021-03-29 07:00]

போலியான கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ்களைப் பயன்படுத்தி கனடாவுக்குள் நுழைய முயன்ற 30 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, கனடா எல்லை சேவை முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.


தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் கைதாவர்!
[Monday 2021-03-29 06:00]

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.


நெடுந்தீவு கள்ளுடன் கனேடியத் தூதுவர்! Top News
[Monday 2021-03-29 06:00]

யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினன் நேற்று நெடுந்தீவுக்குச் சென்று அங்குள்ள புராதன சின்னங்களைப் பார்வையிட்டுள்ளார். அத்துடன், கடும் சூட்டைத் தணிக்கும் வகையில், கள் அருந்தியதாகவும் அவர ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


யாழ். குடாநாடு முடக்கப்படுமா?
[Monday 2021-03-29 06:00]

தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது. எனவே, யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் சுகாதார ஒழுங்கு விதிகளை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என இராணுவத் தளபதியும் கொரோனா கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.


புலம்பெயர் அமைப்புகள் மீதான தடை - ஆராய்கிறது கூட்டமைப்பு!
[Monday 2021-03-29 06:00]

புலம்பெயர் அமைப்புகள் மீது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஆராய்ந்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


1500 நாட்களை எட்டியது போராட்டம்! Top News
[Monday 2021-03-29 06:00]

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான தொடர் போராட்டம் நேற்று 1,500 நாட்களை எட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் நேற்று மதியம் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.


“இந்தியா ஆதரிக்கும் என்று நான் கூறவில்லை”!
[Monday 2021-03-29 06:00]

ஜெனிவா விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என நான் ஒருபோதும் கூறவே இல்லை.நான் தெரிவித்த கருத்து தவறாக விளங்கி கொள்ளப்பட்டுவிட்டது. என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா!
[Monday 2021-03-29 06:00]

யாழ்ப்பாணத்தில் 9 பேர் உள்ளிட்ட 12 பேருக்கு வடக்கில் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும், தாதிய மாணவர் ஒருவருக்கும், வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 4 பேருக்கும் நேற்று தொற்று கண்டறியப்பட்டது.


விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட கிட்டு பூங்கா முகப்பு! Top News
[Monday 2021-03-29 06:00]

யாழ்ப்பாணம் – நல்லூர், கிட்டு பூங்காவின் முகப்பு அடையாளமாகக் காணப்பட்ட ஓலை கொட்டகை நேற்று இரவு 10 மணியளவில் விசமிகளால் தீ வைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு படைக்கு அறிவிக்கப்பட்ட போதும் வாகனம் மற்றொரு இடத்தில் சேவையில் ஈடுபட்டு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு ஏரிந்து நாசமாகியுள்ளது.


காங்கேசன் கடலில் மிதக்கும் மர்ம பதார்த்தம்! Top News
[Monday 2021-03-29 06:00]

காங்கேசன்துறை கடற்பரப்பில் ஆங்காங்கே திரவ பதார்த்தம் மிதப்பதைக் காணமுடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பதார்த்தம் தொடர்பான மாதிரிகள் நாறா நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாண வலய பாடசாலைகளை ஒரு வாரத்துக்கு மூடுமாறு உத்தரவு!
[Sunday 2021-03-28 19:00]

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும், ஒரு வாரத்திற்கு மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


திருநெல்வேலி பாற் பண்ணை பகுதி உயர் கண்காணிப்பு வலயமாக பிரகடனம்!
[Sunday 2021-03-28 19:00]

திருநெல்வேலி, பாற்பண்ணை பகுதி கண்காணிப்பு வலயமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்தப் பிரதேசத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதும் உள்ளே செல்வதும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.


வன்கூவர் நூலகத்துக்குள் கத்துக்குத்தில் பெண் பலி - 5 பேர் காயம்.
[Sunday 2021-03-28 19:00]

வான்கூவர் வடக்கில் பொது நூலகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.


உருத்திரபுரீஸ்வரின் வரலாற்றையும் வழிபாட்டு மரபுகளையும் மாற்றியமைக்க வேண்டாம்!
[Sunday 2021-03-28 19:00]

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலயத்தின் வரலாற்றையும் வழிபாட்டு மற்றும் பண்பாட்டு மரபுகளையும் மாற்றியமைக்க முற்பட வேண்டாம் என ஆலயத்தின் குரு சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஜேர்மனியில் போராட்டம்! Top News
[Sunday 2021-03-28 19:00]

தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக ஜேர்மனியில் தடுப்பு மையங்களுக்கு எதிரே இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புரேன் மற்றும் ப்போர்ஷ்ஹெய்ம் பகுதிகளில் இந்த போராட்டம் இடம்பெற்றது.


புத்தூரில் தனித்திருந்தவர் வெட்டிக் கொலை! Top News
[Sunday 2021-03-28 19:00]

யாழ்ப்பாணம் - புத்தூர், வீரவாணி பகுதியில், வீட்டில் தனித்து வசித்த குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 7 பிள்ளைகளின் தந்தையான துரைராசா சந்திரகோபால் (வயது-52) என்பவரே, கொலை செய்யப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.


குளத்தில் குளித்த சிறுவன் முதலை கடித்து மரணம்!
[Sunday 2021-03-28 19:00]

திருகோணமலை-சம்பூர் இத்திக்குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். தோப்பூர்-பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோணலிங்கம் லேனுஜன் (15 வயது) என்ற சிறுவனே உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.


படைத்தளபதிகள் மீது பயணத் தடைகள் வரலாம்!
[Sunday 2021-03-28 18:00]

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்குப் பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.


முல்லைத்தீவை சேர்ந்த கொரோனா தொற்றாளர் அம்பியுலன்ஸ் வண்டியில் மரணம்!
[Sunday 2021-03-28 18:00]

கொரோனா தொற்றாளர் ஒருவர் வவுனியாவில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அம்பியுலன்ஸ் வண்டியில் அவர் உயிரிழந்துள்ளார். 82 வயதுடைய முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .


திருநெல்வேலி மத்தி - வடக்கு முடக்கப்பட்டது! Top News
[Sunday 2021-03-28 18:00]

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி மத்தி - வடக்கு கிராம அலுவலகர் பிரிவு (J/114) தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி சந்தையில், நேற்று அடையாளம் காணப்பட்ட 127 கொரோனா தொற்றாளர்களில் 51 பேர் குறித்த கிராம சேவையாளர் பிரிவில் வசிப்பவர்களாவர்.


வாகனம் சுத்திகரித்தவர் மின்சாரம் தாக்கி மரணம்!
[Sunday 2021-03-28 18:00]

கிளிநொச்சி - பாரதிபுரம் பகுதியில், இன்று காலை 7.30 மணியளவில் மின்சாரம் தாக்கி ஒரு பிள்ளையின் தந்தையான 39 வயதுடைய இராசலிங்கம் ஜெயபாலன் என்பவர் உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா!
[Sunday 2021-03-28 07:00]

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியுடன் தொடர்புடைய மரக்கறி வியாபாரிகள், கடைகளின் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 127 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


ஜெனிவாவை அச்சமின்றி எதிர்கொள்வோம்!
[Sunday 2021-03-28 07:00]

ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்சவை தோற்கடித்து, செய்த தவறை மீண்டும் செய்யாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்வில் இதனை தெரிவித்தார்.


புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு தடை!
[Sunday 2021-03-28 07:00]

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இது குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு (யூகே), உலக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா