Untitled Document
April 18, 2024 [GMT]
வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நள்ளிரவு முதல் புதிய நடைமுறை!
[Wednesday 2021-09-29 07:00]

வெளிநாடுகளிலிருந்து இருந்து இலங்கை வருபவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால், விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு முகம் கொடுக்க தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


கோட்டா அரசுக்கு எதிராக வீதியில் இறங்குவோம்!
[Wednesday 2021-09-29 07:00]

தேசிய வளங்களை விற்பனை செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் கோட்டாபய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடுவோம்." என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் அபயராம விவகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.


நாரஹேன்பிட்டி வைத்தியசாலை குண்டு - திருமலையில் முன்னாள் போராளி கைது!
[Wednesday 2021-09-29 07:00]

அண்மையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை - உப்புவெளி பகுதியை சேர்ந்த முன்னாள் போராளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


பிரதமர் மஹிந்தவுடன் இந்திய தூதுவர் சந்திப்பு! Top News
[Wednesday 2021-09-29 07:00]

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நேற்று சந்தித்து பேசியுள்ளார். அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள போதிலும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இரு தரப்பும் வெளியிடவில்லை.


கிரான்குளம் விபத்தில் இளைஞன் பலி! Top News
[Wednesday 2021-09-29 07:00]

மட்டக்களப்பு -கிரான்குளம் பகுதியில் நேற்று இடம் பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளர். மட்டக்களப்பு களுதாவளை பகுதியைச் சேர்ந்த 27 வயது மதிக்க தக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


மன்னார் பிரதேச சபை தவிசாளர் தெரிவை இடைநிறுத்தக் கோரி ரிட் மனு தாக்கல்!
[Wednesday 2021-09-29 07:00]

வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டமையை ஆட்சேபித்து, முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இன்று இடம்பெறவுள்ள நிலையில், குறித்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஊரடங்கு காலாவதியான பின்னரே நாட்டை திறக்கும் முடிவு?
[Wednesday 2021-09-29 07:00]

நாட்டைத் திறப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்திலேயே தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, தெரிவித்துள்ளார்.


ஜெபித்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா!
[Wednesday 2021-09-29 07:00]

ஜெபித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பில்லி பிஷப் விமான நிலையத்தை கலங்க வைத்த பொதி!
[Tuesday 2021-09-28 19:00]

ரொறன்ரோ பில்லி பிஷப் விமான நிலையத்தில் காணப்பட்ட பொதி ஒன்றினால், விமான நிலையம், சுமார் 4 மணி நேரம் முடங்கியது. திங்கட்கிழமை காலையில், விமான நிலையத்துக்குள் காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று தொடர்பாக, பொலிசார் மற்றும் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.


ஒன்ராறியோ சுரங்கத்துக்குள் சிக்கிய 39 பேரில் 27 பேர் மீட்பு!
[Tuesday 2021-09-28 18:00]

ஒன்ராறியோவின் சட்பரி சுரங்கத்துக்குள் சிக்கிய 39 சுரங்கத் தொழிலாளர்களில் 27 பேர் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். ஞாயிறு காலை 7 மணிக்கு சுரங்கத்துக்குள் பணிக்குச் சென்ற இவர்கள், அங்கு ஏற்பட்ட விபத்தில் சிக்கி மீள முடியாமல் இருந்தனர். இந்த நிலையில் மீட்புக் குழுவினர் இதுவரை 27 பேரை மீட்டுள்ளனர். எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


யாழ். மாநகரசபையில் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி! Top News
[Tuesday 2021-09-28 18:00]

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு எல்லையிட்டுள்ள இராணுவம்! Top News
[Tuesday 2021-09-28 18:00]

கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று ஆராய்ந்தார்.


திருகோணமலையில் முன்னாள் போராளி வாகனத்தில் கடத்தல்!
[Tuesday 2021-09-28 18:00]

திருகோணமலை- வரோதய நகரில் 39 வயதுடைய மனோகரதாஸ் சுபாஸ் என்பவர் இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளார். ஆயுதங்களுடன் வாகனத்தில் வந்த சிலர் தாம் உப்புவெளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாக வீட்டாரிடம் தெரிவித்துவிட்டு குறித்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர்.


விரும்பாவிட்டால் வெளியே போகலாம்!
[Tuesday 2021-09-28 18:00]

அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறிய அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கத்தில் இருந்து விலகும் நோக்கம் இருந்தால், எந்த நேரத்திலும் அவர்கள் அந்த தீர்மானத்தை எடுக்க முடியும் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.


நேற்று 55 பேர் பலி!
[Tuesday 2021-09-28 18:00]

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 29 பெண்களும் 26 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,786 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 39 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 16 பேரும் மரணித்துள்ளனர்.


ஹரீன் பெர்னாண்டோ தீவிர சிகிச்சைப் பிரிவில்!
[Tuesday 2021-09-28 18:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை பின்னர் ஏற்பட்ட இதயப் பிரச்சினை காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மோசடியை அம்பலப்படுத்திய ஊடகர்களை விசாரணைக்கு அழைத்த சிஐடி!
[Tuesday 2021-09-28 18:00]

வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் அம்பலப்படுத்திய தேசிய பத்திரிக்கைகள் சிவற்றின் பத்திரிகை ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் சிலரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர்.


முழங்காவிலில் 3 கடைகள் தீக்கிரை!
[Tuesday 2021-09-28 18:00]

கிளிநொச்சி- பூநகரி - முழக்காவில் பகுதியில் உள்ள மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன. முழக்காவில் பகுதியில் அமைந்திருந்த குறித்த கடைகள் இன்று நண்பகல் வேளையில் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதன் போது இரு பலசரக்கு வியாபார நிலையம் மற்றும் அலைபேசி நிலையம் என்பன தீக்கிரையாகியுள்ளன. தீ விபத்து சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.


நாயாறு விபத்தில் இளைஞன் படுகாயம்!
[Tuesday 2021-09-28 18:00]

முல்லைத்தீவு - திருகோணமலை வீதி, நாயாறு பகுதியில், நேற்று , மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முல்லைத்தீவு - செம்மலை கிழக்கு, நாயாறு பகுதியைச் சேர்ந்த ஏ.கதீஸ்கரன் (வயது 23) என்ற இளைஞனே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.


அட்டகாசம் செய்த இளைஞன் துப்பாக்கியால் சுட்டு கைது!
[Tuesday 2021-09-28 18:00]

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில், மது போதையில் அட்டகாசம் புரிந்த இளைஞன் ஒருவரை, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில், செபஸ்ரியன் வீதி பகுதியில் உள்ள வீடொன்றில், மது போதையில் இளைஞன் ஒருவர், தாய் மீதும் வீட்டிலிருந்தோர் மீதும் தாக்குதல் நடத்தி, அட்டகாசம் புரிந்துள்ளார்.


3 மாதங்களுக்குப் பின்னர் ஆயிரத்தை விட குறைந்தது தொற்று எண்ணிக்கை!
[Tuesday 2021-09-28 05:00]

நாட்டில் மேலும் 983 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று இனங்காணப்பட்ட இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 514,592 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எண்ணிக்கை குறைந்தாலும் அச்சுறுத்தல் குறையவில்லை!
[Tuesday 2021-09-28 05:00]

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொரோனா வைரஸ் பரவுவதற்கான அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை. எனவே, சுகாதார நடைமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்.


வல்வெட்டித்துறையில் குண்டு மீட்பு!
[Tuesday 2021-09-28 05:00]

வல்வெட்டித்துறைப் பகுதியில் காணி ஒன்றில் இருந்து நேற்று மாலை குண்டு மீட்கப்பட்டுள்ளது. பற்றைக் காணி ஒன்றைத் துப்பரவு செய்த போது வெடிக்காத நிலையில் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த குண்டின் பெயர் அறிய முடியாத வகையில் இருப்பதுடன் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டாக இருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரணைகளில் அறியமுடிகின்றது. சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


சந்திப்புகளை தொடங்கியது ஐரோப்பிய ஒன்றிய குழு!
[Tuesday 2021-09-28 05:00]

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து வழங்குவதா ? இல்லையா? என்பது பற்றிய மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக வந்துள்ள ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, வர்த்தகத்துறைசார் பிரதிநிதிகளுடனான சந்திப்புடன் நேற்று தமது பணிகளை ஆரம்பித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுகீஸ்வர குணரத்ன தெரிவித்தார்.


உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்களுக்கு இடமில்லை!
[Tuesday 2021-09-28 05:00]

உள்ளக விவகாரங்களில் சர்வதேச நிறுவனங்கள் தலையிடுவது அரசியலமைப்பிற்கு முரணாக அமைவதுடன், அரசியல் கட்டமைப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.


தரகுப் பணம் கிடைக்காது என்பதாலேயே எம்சிசியை நிராகரித்தனர்!
[Tuesday 2021-09-28 05:00]

எம்.சி.சி ஒப்பந்தத்தினூடாக நாட்டுக்கு நிவாரணமாக கிடைக்கவிருந்த அமெரிக்க டொலர்களை வேண்டாம் என கூறியவர்கள், கெரவலப்பிடிய மின் உற்பத்தி நிலையத்தை விற்பனை செய்து அதிலிருந்து நேரடியாக அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.


அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்- இறக்குமதி செய்யவும் அனுமதி!
[Tuesday 2021-09-28 05:00]

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாளுடன் டிக் டொக் காணொளி - சிக்கினார் இளைஞன்!
[Tuesday 2021-09-28 05:00]

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா