Untitled Document
April 18, 2024 [GMT]
மேலும் அதிகரிக்கிறது டொலரின் பெறுமதி! இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி
[Tuesday 2022-04-19 21:00]

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா50 சதமாகவும், விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.


தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் Top News
[Tuesday 2022-04-19 21:00]

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னால் முடிந்த பணியை நிறைவாக செய்துநின்ற தமிழ்த்தேசியப்பற்றாளர் ஜோர்ஜ் மாஸ்ரர் (வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம்) அவர்கள் 85வது வயதில் மறைந்த நிலையில், தன்னால் முடிந்தவரை இணைத்துக்கொண்டு சமூகத்திற்கு வழிகாட்டியாக செயற்பட்ட அவரின் நினைவுகளை ஆழ எங்களின் மனங்களில் பதித்துக்கொள்ளுகின்றோம் என தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - அவுஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


போர்க்களமானது ரம்புக்கனை! ஒருவர் பலி – 11 பேர் காயம்! Top News
[Tuesday 2022-04-19 21:00]

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், காயமடைந்த மேலும் 11 பேர் கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பொலிஸ் மோதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.


போராட்டகாரர்கள் நாடாளுமன்றதிற்க்குள் நுழையலாம்: ரணில் எச்சரிக்கை!
[Tuesday 2022-04-19 21:00]

புதிய அமைச்சவையில் நான்கு அமைச்சர்கள் இன்று நாடாளுமன்றுக்கு வரவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார் ஜனாதிபதிக்கு 20வது அரசியலமைப்பின்படி செயற்படமுடியாது அவர், 19 வது திருத்தத்தின் கீழேயே அவர் பதவியில் அமர்த்தப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.


நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள்! சிங்கள பெண்மணி முகநூலில் காட்டம் Top News
[Tuesday 2022-04-19 21:00]

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் மூன்று புதல்வர்களையும், நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சாப்பிடக் காத்திருக்கும் மூன்று அரக்கர்கள் என சிங்கள பெண்மணி ஒருவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலையைல் அடுத்து, ராஜபக்ச குடும்பத்தினரை ஆட்சியை விட்டு விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.


நாமல் ராஜபக்ச சம்பாதித்துள்ள பல பில்லியன்கள் தொடர்பில் தேடி பார்க்க கோரிக்கை: ஹேஸா விதானகே
[Tuesday 2022-04-19 21:00]

நாட்டு மக்களை ஏமாற்றி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் உத்தியை மீண்டும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆரம்பித்துள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் அதற்கு தற்போது வாய்ப்புக்கள் இப்போதைக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதிய அமைச்சர்கள் 17 பேர் நியமனம்!
[Monday 2022-04-18 16:00]

புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் 17 பேர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.


பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்காத பிரதமர்! - தனியாக அமைச்சர்களுடன் சந்திப்பு.
[Monday 2022-04-18 15:00]

புதிய அமைச்சரவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்றுக்காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்​கேற்கவில்லை. எனினும், புதிய அமைச்சர்களை, அலரிமாளிகையில் அவர் தனியாக சந்தித்தார்.


தமிழர்களும் போராடுவதால் என்ன இலாபம்!
[Monday 2022-04-18 15:00]

சிங்கள இளைஞர்கள் யுவதிகள் தங்களது பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும் போது அதில் தமிழ் இளைஞர்கள் பங்குபற்றுவதனால் தமிழ் மக்களுக்கு என்ன இலாபம் என்பதை தெரிந்து கொண்டுதான் போராட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி இல்லை!
[Monday 2022-04-18 15:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில், பல சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.


இன்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் ஜனாதிபதி!
[Monday 2022-04-18 15:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும். வானொலி அலைவரிசைகளிலும் ஒலிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


20ஆம் திகதி தேசிய போராட்ட நாள்! - தொடர் வேலைநிறுத்த முஸ்தீபு.
[Monday 2022-04-18 15:00]

எதிர்வரும் 20ஆம் திகதியை தேசிய போராட்ட நாளாக அறிவித்து அனைத்து பணியிடங்களிலும் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.


19 இந்திய மீனவர்கள் விடுதலை!
[Monday 2022-04-18 15:00]

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக மூன்று சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களுக்கான வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.


அமைச்சரவையில் பெண்களை ஓரம்கட்டினார் ஜனாதிபதி!
[Monday 2022-04-18 15:00]

கோட்டாபய அரசாங்கத்தில் இன்று புதிதாக நியமிக்கப்பட்ட 17 பேர் கொண்ட அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளிக்கப்படவில்லை.


ரயில் மோதி இளைஞன் பலி!
[Monday 2022-04-18 15:00]

கொழும்பில் இருந்து யாழ். நோக்கி சென்ற ரயில் வவுனியா, ஒமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றது.


கப்ராலுக்கு கடிவாளம்!
[Monday 2022-04-18 15:00]

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை அன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு முன்னதாக அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை.


ஜனாதிபதி செயலகத்தின் மீது ஒளிக்கற்றை பாய்ச்சி எதிர்ப்பு! Top News
[Monday 2022-04-18 07:00]

கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்றலில் 9வது நாளாக நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ஜனாதிபதி செயலக கட்டடத்தின் மேற்பகுதிகளில் ஒளிக்கற்றைகளை பாய்ச்சி போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.


இடைக்கால அரசுக்கு தலைமை ஏற்கத் தயார்!
[Monday 2022-04-18 07:00]

மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி தெரிவித்துள்ளார்.


பெற்றோல், டீசல் விலைகளை உயர்த்தியது லங்கா ஐஓசி!
[Monday 2022-04-18 07:00]

பெற்றோல் விலை லீற்றருக்கு 35 ரூபாயாலும், டீசல் விலை லீற்றருக்கு 75 ரூபாயாலும் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து, 92 ஒக்டேன் பெற்றோலின் விலை லீற்றரொன்றுக்கு 338 ரூபாயாகக் காணப்படுவதுடன், ஓட்டோ டீசலின் விலையானது லீற்றரொன்றுக்கு 289 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.


அரசியல் கலப்படம் வேண்டாம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்த கூட்டத்தில் குழப்பம்! Top News
[Monday 2022-04-18 07:00]

தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுவேந்தல் நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் குழப்ப நிலை ஏற்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தினை ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அரசியல் கலப்படம் வேண்டாம் என கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளதுடன் இடையில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.


நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டது ஏன்?
[Monday 2022-04-18 07:00]

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சர்களைப் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது என்பதனாலேயே அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் வைக்கப்பட்டது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.


போராட்டங்களை கண்காணிக்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு!
[Monday 2022-04-18 07:00]

கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மஹிந்த பதவி விலக வேண்டும்!
[Monday 2022-04-18 07:00]

மகாசங்கத்தினரது ஆலோசனைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும். காலி முகத்திடலில் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் மதிப்பளிக்காவிடின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.


ராஜபக்ச குடும்பம் 10 பில்லியன் டொலர் முதலீடா?- உகண்டா நிறுவனம் அறிக்கை.
[Monday 2022-04-18 07:00]

உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழுமத்தின் நிறுவனங்கள் இலங்கையில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. உகாண்டாவில் உள்ள செரினிட்டி குழும நிறுவனங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் 10 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில்,குறித்த நிறுவனம் இந்த கோரிக்கையை மறுத்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.


காலி முகத்திடலில் தமிழில் தேசியகீதம் - குழப்ப முயன்ற பிக்கு!
[Monday 2022-04-18 07:00]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டது.


சண்டிலிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல்! Top News
[Monday 2022-04-18 07:00]

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் வேளை இடம்பெற்ற இத் தாக்குதலில் வீட்டில் படலை, ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களுக்கும் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


உலகமே தமிழ்த் தேசத்தை பிரித்துவிடு! - கனடாவில் வாகனப் பேரணி. Top News
[Sunday 2022-04-17 18:00]

உலகமே தமிழ்த் தேசத்தை பிரித்துவிடு எனக் கோரி மாபெரும் வாகனப் பேரணி கனடாவில் இடம்பெற்றுள்ளது. நேற்று சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு, ஸ்கார்பரோ - மார்க்கம் மற்றும் ஸ்டீல்ஸ் சந்திப்பில் இருந்தும், பிராம்ப்டன் - குயின் வீதி மற்றும் பிரதான வீதி சந்திப்பில் (பிரம்டன் நகரசபைக்கு அருகில்) இருந்தும் வாகனப் பேரணி இடம்பெற்றது.


வேண்டாம் அமைச்சர் பதவி!
[Sunday 2022-04-17 18:00]

புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா