Untitled Document
April 19, 2024 [GMT]
மட்டக்களப்பில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு! Top News
[Thursday 2018-08-23 09:00]

மட்டக்களப்பு - கரடியனாறு, கறுவாச்சோலை பல்லாவெளிக்குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞன் நேற்றுப் பகல் 1 மணியலவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுணதீவு சிறுவாமனை பகுதியை சேர்ந்த 24 வயதையுடைய சிவனேசன் விமல்ராஜ் என்ற இளைஞனே மரணமானவராவார். இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், கரடியனாறு பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு காணிகள்! - நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி
[Thursday 2018-08-23 09:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் அடாத்தாக குடியேறியுள்ள மக்களுக்கு மகாவலி அதிகாரசபை காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியதா என்பது தொடர்பில் நான் எதனையும் அறியவில்லை என்றும், அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் தடுத்து நிறுத்துவேன் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


5 மரணதண்டனைக் கைதிகளை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த முடிவு!
[Thursday 2018-08-23 09:00]

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டதால், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து பாகிஸ்தானிய பிரஜைகளை அந்த நாட்டுக்கு நாடு கடத்த நடவடிக்கைககள் எடுக்கப்படுகின்றன. இது தொடர்பான பேச்சுக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார்.


சாவகச்சேரியில் ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி! - சற்று முன் சம்பவம் Top News
[Wednesday 2018-08-22 20:00]

சாவகச்சேரியில் சற்றுமுன் ரயிலில் அடிபட்டு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் சற்று முன்னர் சாவகச்சேரி, சங்கத்தானை அரசடி சந்தியிலுள்ள ரயி்ல் கடவைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரயில்வே கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற கடுகதி ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காண வேண்டும்! - ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார் மாவை
[Wednesday 2018-08-22 19:00]

இனப் பிரச்சினைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு காணப்பட வேண்டும். ஜனாதிபதி வலுவாகவும், உறுதியானதுமான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லாவிடின் அபிவிருத்தி செய்து பயனில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.


படையினர் வசமுள்ள 12 வீத காணிகளும் விடுவிக்கப்படும்! - என்கிறார் ஜனாதிபதி Top News
[Wednesday 2018-08-22 19:00]

2009 ஆண்டில் இருந்து இன்று வரையான காலப் பகுதியில்- பவடையினர் வசமிருந்த பொதுமக்களின் 88 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னமும் விடுவிக்கப்படாதுள்ள எஞ்சிய 12 வீதமான காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


தாவடியில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் - 3 வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல்!
[Wednesday 2018-08-22 19:00]

யாழ்ப்பாணம்- தாவடிப் பகுதியிலுள்ள வீடுகளுக்குள் இன்று மாலை புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் 3 வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகிறது. மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை.


ஒட்டுசுட்டான் வெடிபொருள் வழக்கில் மற்றொரு முன்னாள் போராளி கைது!
[Wednesday 2018-08-22 19:00]

ஒட்டுசுட்டான் பகுதியில், விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மற்றுமொரு முன்னாள் போராளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் வைத்து, திங்கட்கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.


ஆவா குழுவுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள்! - அவர்களும் வாள்களை காட்டி அச்சுறுத்தல்
[Wednesday 2018-08-22 19:00]

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கொக்குவில் உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் சைக்கிளிலில் வாளுடன் பயணித்த இளைஞர்கள் சிலர் ஆவா குழுவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.


அழைப்பிதழ் கொடுக்க மரண வீட்டுக்குச் சென்ற சுப்பிரமணியன் சுவாமி! Top News
[Wednesday 2018-08-22 19:00]

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, புதுடெல்லியில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கருத்தரங்கிற்கான அழைப்பிதழை ​வழங்கியுள்ளார். இன்று தங்காலைக்குச் சென்ற சுப்ரமணியன் சுவாமி, அங்கு மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள, அவரது சகோதரர் சந்திர ராஜபக்ஷவின் பூதவுடலுக்கும் அஞ்சலி செலுத்தினார்.


மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர், அவரது தாய் உள்ளிட்ட மூவர் கைது!
[Wednesday 2018-08-22 19:00]

உயர்தரப் பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 19 வயதான பாடசாலை மாணவியை பலவந்தமாக கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர், அவரது தாயார் உள்ளிட்ட மூவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முல்லைத்தீவில் சட்டவிரோத சிங்களக் குடியேற்ற வாசிகளுக்கு காணி உறுதிகள்! - நீதிமன்ற உத்தரவை மீறிய அரசாங்கம்
[Wednesday 2018-08-22 19:00]

முல்லைத்தீவு - கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் ஆகிய கிராமங்களில் அத்துமீறி குடியேறிய சிங்களக் குடும்பங்களுக்கு, நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகாரசபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள குடியேற்றவாசிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மீறி மகாவலி அதிகார சபை காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளது.


சுழிபுரம் மாணவி படுகொலை வழக்கில் புதிய திருப்பம்! - சாட்சியாளர் வீட்டில் சப்பாத்துகள்?
[Wednesday 2018-08-22 19:00]

சுழிபுரம் மாணவி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சாட்சியாளர் ஒருவரது மகள் முன்வைத்த கூற்றால், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட சுழிப்புரம் மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் சப்பாத்துகள், தமது வீட்டுக்குள் இருந்ததாக, மேற்படி சாட்சியாளரது மகள், உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.


படகு கடலில் மூழ்கியதில் தத்தளித்த 8 தமிழக மீனவர்கள் மீட்பு - இருவரைக் காணவில்லை!
[Wednesday 2018-08-22 19:00]

நாகபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 10 மீனவர்களுடன் கடலுக்கு சென்ற படகு மன்னார் கடற்பரப்பில் மூழ்கியது. படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த இந்திய 8 மீனவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்டுள்ளனர். எஞ்சிய இரு மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.


யானை தாக்கி ஒருவர் பலி!
[Wednesday 2018-08-22 19:00]

அம்பாறை


இனியும் பொறுமையுடன் இருக்க முடியாது! - பிரித்தானிய தூதரக அதிகாரியிடம் மாவை தெரிவிப்பு
[Wednesday 2018-08-22 09:00]

அர


சுவிசில் கத்திக்குத்து - தமிழ் இளைஞன் கைது!
[Wednesday 2018-08-22 09:00]

சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரில் மோதலில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமைBremgarten பகுதியில் வாழும் தமிழ் குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு வன்முறையாக மாறியது. இரு குழுக்களும் கடுமையாக மோதிக் கொண்டதுடன் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கானார்.


சிங்களத்தில் தான் முதலில் ​எழுத வேண்டும் எனச் சட்டமில்லை!
[Wednesday 2018-08-22 09:00]

பாதாகைகளில் சிங்களத்தில் தான் முதலில் ​எழுத வேண்டும் எனச் சட்டமில்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் காட்சிப்படுத்தப்படும் பதாகைகளில் தமிழ் முதலில் இடம்பெற வேண்டும் என்று கூறியிருந்தார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அமைச்சர் மனோ கணேசன்-


விக்னேஸ்வரன் அரசியலில் இருந்து விலக வேண்டும்! -என்கிறார் சம்பிக்க
[Wednesday 2018-08-22 09:00]

வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஜாதிக ஹெல உரிமைய கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கத்திக் குத்து!
[Wednesday 2018-08-22 09:00]

தெல்


விமான நிறுவனங்களில் நடந்த மோசடி - கோத்தாவுக்கும் அழைப்பாணை!
[Wednesday 2018-08-22 09:00]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா விமான சேவை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி குறித்து ஆராய்வதற்கான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.


வடக்கு, கிழக்கு அபிவிருத்தி செயலணிக் கூட்டத்துக்கு கூட்டமைப்பு எம்.பிக்களுக்கும் அழைப்பு!
[Wednesday 2018-08-22 09:00]

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்திச் செயலணியின் கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு


இந்திய மீனவர்கள் 8 பேர் கைது!
[Wednesday 2018-08-22 09:00]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட நாட்டுப்படகில் தொழில் புரிந்த இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய நிலையில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கற்பிட்டி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சுழிபுரம் மாணவி கொலை- சாட்சியாளர்களை மன்றில் நிறுத்த உத்தரவு!
[Wednesday 2018-08-22 09:00]

சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.


மன்னார் மனிதப் புதைகுழி - சட்ட வைத்திய அதிகாரிக்கு வாய்ப்பூட்டு!
[Tuesday 2018-08-21 17:00]

மன்னார் சதொச வளாகத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வின் போது, இனிவரும் நாள்களில் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டு மீட்கப்படும் மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் குறித்து தகவல் வழங்க முடியாதென, விசேட சட்ட வைத்திய அதிகாரி ஆர்.ஏ.எஸ்.ராஜபக்‌ஷ தெரிவித்தார்.


விஜயகலாவின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானதா? - சட்டமா அதிபரிடம் சபாநாயகர் கேள்வி
[Tuesday 2018-08-21 17:00]

விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா என்பது தொடர்பில் சட்டமா அதிபர் அனுப்பியுள்ள கருத்தில், எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை. ஆகவே இது தொடர்பில், சட்டமா அதிபரின் முடிவினை உடன் அறிவிக்குமாறும் சபாநாயகர் கோரியுள்ளார்.


போருக்குப் பின்னர் உளவியல் பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள்! - முதலமைச்சர் கவலை
[Tuesday 2018-08-21 17:00]

போருக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதோ ஒரு வகையில் உளவியல் பிரச்சினையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை சுகதேகியாக்குவதற்கு எடுத்த முயற்சிகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்கவில்லை என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


காங்கேசன்துறையில் நான்கரை ஏக்கர் காணிகள் இராணுவப் பிடியில் இருந்து விடுதலை!
[Tuesday 2018-08-21 17:00]

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில், காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி காணிகள் பொதுமக்களிடம் இன்று மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை மத்தி ஜே 234 கிரம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியே படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா