Untitled Document
April 19, 2024 [GMT]
மூக்குடைபடுவார் மைத்திரி! - சுமந்திரன்
[Thursday 2019-04-11 09:00]

பத­விக்­கா­லம் குறித்து மீண்­டும் உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் ஜனாதிபதி தரப்பு அபிப்­பி­ரா­யம் கேட்க முய­லு­மா­யின் அது சுத்தப் பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான நட­வ­டிக்­கை­யா­கவே இருக்­கும் என்று, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.


கோத்தாவே சரியான போட்டியாளர்! - மனோ கணேசன்
[Thursday 2019-04-11 09:00]

எமது தரப்புக்கு சவால் விடும் ஒருவரை எதிரணி ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றால் கோத்தாபய ராஜபக்ஷ வருவதே நல்லதாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! - ஜனாதிபதி
[Thursday 2019-04-11 09:00]

நாம் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடுகளும் அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களுக்கிடையே பிளவுகளிருப்பது நாட்டின் முன்னேற்றத்திற்குப் பொருத்தமாக அமையாதென்றும் அவர் குறிப்பிட்டார்.


வீதியோரமாக உறங்கியவரின் கால்களில் ஏறியது டிப்பர்!
[Thursday 2019-04-11 09:00]

வீதி ஓரமாக படுத்திருந்தவரின் கால்களின் மீது டிப்பர் வாகனம் ஏறியதால் அவர் படுகாயமடைந்த நிலையில். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏ9 வீதியில் மாங்குளம்- பனிக்கன் குளம் பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றது.


பெண் அதிகாரிகளை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்திய வலயக் கல்வி பணிப்பாளர்!
[Thursday 2019-04-11 09:00]

யாழ்ப்பாணம்- தீவகக் கல்வி வலய பணிப்பாளர் தனக்கு முன்பாக, இரண்டு பெண் அதிகாரிகளை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இது நாகரீகமற்ற செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் கண்டனம் தெரிவித்துள்ளது.


யோஷிதவுக்கும் திருமணம்!
[Thursday 2019-04-11 09:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் திருமண பந்தத்தில் இணையவுள்ளார். அவருக்கு இந்த வருடத்தில் திருமணத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மஹிந்த குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சட்டத்தரணி வீட்டில் கொள்ளையிட்டவர் சிக்கினார்!
[Thursday 2019-04-11 09:00]

யாழ்ப்பாணம் பிரதான வீதி மடத்தடியில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் கடந்த முதலாம் திகதி இரவு கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.


மண்டைதீவில் 18 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் கடற்படை!
[Wednesday 2019-04-10 18:00]

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக, சுவீகரிக்கப்படவுள்ள காணியை அளவீடு செய்யும் பணி நாளை மேற்கொள்ளப்படும் என நிலஅளவை திணைக்களம் அறிவித்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது.


மத ஒற்றுமையை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி! Top News
[Wednesday 2019-04-10 18:00]

'மதங்களை கடந்த மனிதத்தை நேசிப்போம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதர மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 9 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த விடமாட்டோம்!- 'மொட்டு' சூளுரை
[Wednesday 2019-04-10 18:00]

ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்த தமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான கூட்டணி தொடர்பில் இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது ஏன்? - றோய் சமாதானம்
[Wednesday 2019-04-10 18:00]

இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.


மானிப்பாயில் பட்டப்பகலில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்! Top News
[Wednesday 2019-04-10 18:00]

யாழ்ப்பாணம் - மானிப்பாயில் வாள்வெட்டுக் கும்பல் ஒன்று மூன்று வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளது. இன்று மாலை மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கையிலுள்ள அடுத்தடுத்து இரண்டு வீடுகள் மற்றும் மானிப்பாய் நகருக்கு அண்மையிலுள்ள வீடொன்றின் மீதுமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


யானைக்குத் தாவப் போகிறார் தயாசிறி!
[Wednesday 2019-04-10 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொது ஜனவுடன் மாத்திரமின்றி ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்காவிட்டால், அது அவர்களுக்கு பாரிய விளைவை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா.


விக்னேஸ்வரனுக்கு தவராசா சவால்!
[Wednesday 2019-04-10 18:00]

சுன்னாகம் குடிநீர் மாசு விவகாரத்தை கையில் எடுத்து நான் அரசியல் இலாபம் பெற முனைவதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் என் மீது குற்றம் சுமத்தியுள்ளார் என வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார்.


கோத்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றில் தண்டனை வழங்க வேண்டும்! -சந்திரிகா
[Wednesday 2019-04-10 18:00]

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் அல்லது குடியுரிமை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அத்தனகல ரஜமஹா விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


மனைவியின் முறைப்பாட்டை விசாரிக்க சென்ற பொலிஸாரை நையப்புடைத்த கணவன்!
[Wednesday 2019-04-10 18:00]

அச்சுவேலி பகுதியில் குடும்ப தகராறு குறித்து விசாரிக்கச் சென்ற பொலிஸார் ஒருவர், தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன் -மனைவிக்கு இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு குறித்து, மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.


முகம் கழுவச் சென்ற இளம்பெண் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து மரணம்!
[Wednesday 2019-04-10 18:00]

யாழ்ப்பாணம் – கைதடியில், நேற்று கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் ஒருவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். கைதடி குமரநகரைச் சேர்ந்த கணேசன் ஜெசிக்கா (வயது 18) எனும் பெண்ணே உயிரிழந்தவர் ஆவார். முகம் கழுவுவதற்காகச் சென்ற போதே இளம்பெண் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள், வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.


வெளிநாட்டில் இருந்து வந்த சிறுவன் தாகத்துக்கு மண்ணெண்ணெய் அருந்தினார்!
[Wednesday 2019-04-10 18:00]

தாகத்­தில் சோடா என நினைத்து மண்­ணெண்ணெய் அருந்­திய 6 வய­துச் சிறு­வன் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். நேற்­றுக் காலை கைத­டி­யில் இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது. புலம் பெ­யர் நாட்­டில் இருந்து ஒரு குடும்­பத்­தி­னர் கைத­டிக்கு வந்­துள்­ள­னர். அந்­தக் குடும்­பத்­தைச் சேர்ந்த சிறு­வனே சோடா என்று நினைத்து மண்­ணெண்­ணையை அருந்­தி­யுள்­ளான்.


தென் மாகாண சபையின் பதவிக்காலமும் முடிந்தது!
[Wednesday 2019-04-10 18:00]

தென் மாகாணசபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ​கையெழுத்திட்டுள்ளார். மீண்டும் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் வரை தென் மாகாண சபையின் நிர்வாக நடவடிக்கைகள் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்படும்.


பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் மீது பாய்ந்த போது யாரும் கவலைப்படவில்லை! - கோட்டை நீதிவான்
[Wednesday 2019-04-10 08:00]

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார்.


மாணவிகள் மீது பாலியல் சீண்டல் - யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மறுப்பு!
[Wednesday 2019-04-10 08:00]

யாழ். பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் இடம்பெற்றதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோத்தாவுக்கு எதிரான வழக்கு - களத்தில் இறங்கும் பிரபல சட்டத்தரணி!
[Wednesday 2019-04-10 08:00]

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே நடத்தவுள்ளார். ஊடகவியலாளர் மேரி கொல்வின் படுகொலை வழக்கில் சிரிய அரசாங்கத்துக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்று, 300 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்த வைத்தவரே, சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே ஆவார்.


ஜனாதிபதியின் பதவிக்காலம் - உயர்நீதிமன்றத்தை நாட ஆலோசனை!
[Wednesday 2019-04-10 08:00]

19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றதென மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவது தொடர்பில் ஆலோசித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விக்னேஸ்வரன் தகுதியானவர்!
[Wednesday 2019-04-10 08:00]

தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சி.வி.விக்னேஸ்வரனுக்கு சகல உரிமையும் தகுதியும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார்.


ஓமந்தையில் லொறி குடை சாய்ந்தது - உதவியாளர் காயம்! Top News
[Wednesday 2019-04-10 08:00]

வவுனியா- ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அருகே நேற்று மாலை 5.30 மணியளவில் லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்தார். ஏ9 வீதியூடாக பயணித்துக் கொண்டிருந்த ஓமந்தை பொலிஸாரின் வாகனம் சேமமடு வீதியில், திரும்ப முற்பட்ட போது, அதே பாதையில் பொலிஸாரின் வாகனத்திற்கு பின்புறமாக சென்று கொண்டிருந்த லொறியின் சாரதி திடீரென திருப்ப முற்பட்ட போது, லொறி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.


மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் மிதக்கும் மின்நிலையம்! - கனடா அமைக்கிறது Top News
[Wednesday 2019-04-10 08:00]

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகா வாட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு, மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சுக்கும் கனடியன் கொமர்ஷியல் கோப்பரேஷன் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.


யாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம்!
[Wednesday 2019-04-10 08:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 11 ஆவது பீடமாக, இந்து கற்கைகள் பீடம் உருவாக்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.


14 மாவட்டங்களில் கடும் வரட்சி - வடக்கில் 85 ஆயிரம் பேர் பாதிப்பு!
[Wednesday 2019-04-10 08:00]

14 மாவட்டங்களில் நிலவும் கடும் வரட்சி காரணமாக 4 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது. ஊவா மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களைச் சேர்ந்த 14 மாவட்டங்களில் வரட்சி நிலை தொடர்வதாகவும் இதனால் 99,226 குடும்பங்களைச் சேர்ந்த 4,07,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்தது.

Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா