Untitled Document
March 29, 2024 [GMT]
ஜனாதிபதிக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் போர்க்கொடி - உயர்நீதிமன்றில் மனு!
[Wednesday 2019-05-29 18:00]

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதற்கு எதிராக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.


புலிகளின் போராட்டத்துக்கு அரசியல் நோக்கம் இருந்தது! - ஞானசார தேரர்
[Wednesday 2019-05-29 08:00]

விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்திருந்தால், நாட்டில் 30 வருடகால யுத்தம் நீடித்திருக்காது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


வீடுபுகுந்து தாக்கிய வாள்வெட்டுக் குழு!- ஐவர் படுகாயம் Top News
[Wednesday 2019-05-29 08:00]

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு வாள்வெட்டு கும்பலொன்று வீடு புகுந்து தாக்கியதில், பெண்கள் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கொழும்பு துறைமுகம் இலங்கை- இந்தியா- ஜப்பான் கூட்டாக அபிவிருத்தி! Top News
[Wednesday 2019-05-29 08:00]

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.


சம்பந்தனைச் சந்தித்தார் அவுஸ்ரேலிய தூதுவர்! Top News
[Wednesday 2019-05-29 08:00]

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹெலி நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, நாட்டின் இன்றைய நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளது.


ஒரு பெண்ணுக்கு கருத்தடை செய்திருந்தாலும் கடும் தண்டனை!
[Wednesday 2019-05-29 08:00]

சர்ச்சைக்குரிய குருநாகல் மருத்துவர் ஒரு பெண்ணுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.


பயண எச்சரிக்கையை இந்தியாவும் தளர்த்தியது!
[Wednesday 2019-05-29 08:00]

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை இந்தியா தளர்த்தியுள்ளது. புது டில்லியில் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகப்பேற்ற வைத்தியருக்கு எதிராக 133 முறைப்பாடுகள்!
[Wednesday 2019-05-29 08:00]

கைது செய்யப்பட்டுள்ள மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிபாப்தீனுக்கு எதிராக இதுவரை 133 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்ட தேசிய வைத்தியசாலையில், நேற்றும் 56 முறைபாடுகள் பதிவாகியுள்ளதாகக் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வைத்தியர் ஷாஃபி ஷிபாப்தீன், மகப்பேறுக்காக வந்த தாய்மாருக்கு குழந்தைப் பேறு கிடைக்காமல் செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


ஐஎஸ் அமைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பாரிய போராட்டத்துக்கு ஏற்பாடு!
[Wednesday 2019-05-29 08:00]

ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் நாளை மறுநாள் பாரிய போராட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்.நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் தொழுகைக்காக கூடும் இஸ்லாமியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு பேரணியாக ஐந்து சந்திக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகின்றது.


இனி கையெழுத்திட வேண்டியதில்லை - ரவிகரன், சிவாஜிக்கு உத்தரவு!
[Wednesday 2019-05-29 08:00]

வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டதுடன், இனி மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திடத் தேவையில்லை என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.


வெடிபொருளில் சிக்கிய உழவு இயந்திரம் - சாரதி படுகாயம்!
[Wednesday 2019-05-29 08:00]

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நெத்தலியாற்றுப்பகுதியில் காணியில் உழுது கொண்டிருந்த உழவு இயந்திரம் வெடி பொருளில் அகப்பட்டதில் அதன் ரயர்கள் வெடித்துச் சிதறின. அதில் சாரதி படுகாயமடைந்தார். உழவு இயந்திரத்தின் இரண்டு சில்லுகள் வெடிபொருளுக்குள் அகப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கம் இனியும் தமிழர்களை ஏமாற்றக்கூடாது! - ரணிலிடம் சம்பந்தன் தெரிவிப்பு
[Tuesday 2019-05-28 19:00]

தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை அரசாங்கம் ஏமாற்றக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்தார்.


நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் - மீண்டும் பெயர் மாற்றப்பட்டது! Top News
[Tuesday 2019-05-28 19:00]

பௌத்த பிக்குவால் கணதேவி தேவாலயம் என பெயர் மாற்றப்பட்ட ஆலயம், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு நேற்று பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்த்தினரால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை- அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டோம்!
[Tuesday 2019-05-28 18:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு கூடி அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரானஎ நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் முடிவெடுக்கும் என இலங்கை தமிழசுக் கட்கியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.


ஐஎஸ் தாக்குதல் இந்து - பசிபிக் சமுத்திர பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியுள்ளது! - சிவசக்தி ஆனந்தன்
[Tuesday 2019-05-28 18:00]

ஐஎஸ் தாக்குதல் இந்து சமுத்திர மற்றும் பசிபிக் சமுத்திரப் பிராந்தியங்களின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகத்திற்கு வழங்கிய கேள்வி பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்


வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவிடம் பேசத் தயார்!- பிரதமர் வி.உருத்திரகுமாரன்
[Tuesday 2019-05-28 18:00]

இலங்கைத்தீவு தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையில், தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஏற்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இவ்விடயத்தையொட்டி எம்முடன் உரையாடும் விருப்பம் கொண்டால் அதற்கான ஒரு சிறப்பு தூதுக்குழுவை அனுப்பி தங்களது அரசாங்கத்துடன் பேசுவதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான பயண எச்சரிக்கையை தளர்த்தியது சுவிஸ்!
[Tuesday 2019-05-28 18:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கோரிக்கையைத் தொடர்ந்து, இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தளர்த்தியுள்ளது.


இந்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு வருகிறது!
[Tuesday 2019-05-28 18:00]

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளில் இணைந்து கொள்வதற்கு இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பிற்கு இந்திய உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதத்திற்குப் பின்னர், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஆலய வழிபாட்டில் சமத்துவத்தை வலியுறுத்தி வரணியில் சத்தியாக்கிரகம்! Top News
[Tuesday 2019-05-28 17:00]

ஆலய வழிபாட்டில் சமத்துவத்தை வலியுறுத்தி, வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்கள் இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். முப்பது வருடங்கள் வரை திருவிழா இடம்பெறாது இருந்த இந்த ஆலயத்தில், கடந்த வருடம் இடம்பெற்ற தேர்த் திருவிழா பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.


நுணாவில் விபத்தில் ஒருவர் பலி! -மற்றொருவர் படுகாயம் Top News
[Tuesday 2019-05-28 17:00]

சாவகச்சேரியில், ஏ-9 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நுணாவில் பொதுநூலகத்துக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் மீசாலை மேற்கைச் சேர்ந்த மகேஸ்வரன் சுரேந்திரகுமார் (வயது 45) என்பவரே உயிரிழந்தார்.


சர்ச்சைக்குரிய வைத்தியருக்கு எதிராக குருநாகலில் போராட்டம்! Top News
[Tuesday 2019-05-28 17:00]

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்​னெடுக்கப்பட்டது. குருநாகல் ​போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பிக்குகள் உள்ளிட்ட பலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் குருநாகல் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.


முட்டை விஷமாகியதால் 7 வயது சிறுவன் மரணம்?- சகோதரர்களும் வைத்தியசாலையில்
[Tuesday 2019-05-28 17:00]

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியில் தரம் 2 இல் கல்வி பயின்ற மாணவன், இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர்கள் இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.


பழைய, போலிச் செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும்!- பொலிஸ் எச்சரிக்கை
[Tuesday 2019-05-28 17:00]

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களை பொலிசார் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து தெரிவிக்கையில், “மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் அவற்றை சமூக வலைத்தளங்களில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


மோடியின் உத்தியைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற ஐதேக வியூகம்!
[Tuesday 2019-05-28 07:00]

இந்திய பிரதமர் தேர்தலில் வெற்றிபெற கையாண்ட விதத்தையே ஐக்கிய தேசிய கட்சியும் மேற்கொள்ள முயற்சிக்கின்றது. அதன் பின்னணியே முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


மகப்பேற்று மருத்துவ நிபுணர் மீது இதுவரை 51 பேர் முறைப்பாடு!
[Tuesday 2019-05-28 07:00]

குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக இதுவரை 51 பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்திலும், அளவுக்கதிகமான சொத்துக்களை சேகரித்துள்ளார் என்ற சந்தேகத்திலும், குருணாகல தேசிய மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஷாபி சிகாப்தீன் கைது செய்யப்பட்டிருந்தார்.


வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம்! Top News
[Tuesday 2019-05-28 07:00]

போரினால் பாதிப்படைந்துள்ள வடக்கு கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செயற்வதற்காக பனை அபிவிருத்தி நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


மைத்திரி இனி எம்.பி ஆகக் கூட முடியாது! - சிறிதரன்
[Tuesday 2019-05-28 07:00]

இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.


குருநாகலில் கைதான வைத்தியருக்காக களமிறங்கும் அஸாத் சாலி!
[Tuesday 2019-05-28 07:00]

குருநாகலில் கைது செய்யப்பட்ட வைத்தியர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்தார்.

Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா