Untitled Document
March 29, 2024 [GMT]
தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்!
[Monday 2019-10-28 16:00]

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் கௌரவமாக வாழும் சூழலை நிச்சயம் உருவாக்குவேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.


கிளிநொச்சியில் ஒருவர் அடித்துக் கொலை!
[Monday 2019-10-28 16:00]

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நேற்று ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். காயமடைந்த நபர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சிறையில் உள்ள முன்னாள் புலிகளை விடுவிப்பேன்!- கோத்தா வாக்குறுதி Top News
[Monday 2019-10-28 16:00]

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாகவும், அனைவரும் சமமாக, பாதுகாப்பாக, சௌபாக்கியமாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.


வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் திட்டமில்லை!
[Monday 2019-10-28 16:00]

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.


கல்முனையில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு!- இலக்கு யார்? Top News
[Monday 2019-10-28 16:00]

கல்முனை- நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வெடிக்காத நிலையில், புதிய கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனை கிட்டங்கி சேனைக்குடியிருப்பு- பாண்டிருப்பு வீதியை இணைக்கும் சந்திக்கு அருகாமையில் இன்று காலை கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.


இத்தோடு நிற்காது பயணம்- அடுத்த தேர்தல்களிலும் தொடரும்!
[Monday 2019-10-28 16:00]

எமது கட்சி இந்த தேர்தலுடன் நின்று விடாது, அடுத்துவரும் தேர்தல்களிலும் போட்டியிட்டு இந்த பயணத்தை தொடர்ந்து முன்னுக்கு செல்வதே எமது இலக்கு என்று தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார்.


மினி சூறாவளியினால் நயினாதீவில் பலத்த சேதம்! Top News
[Monday 2019-10-28 16:00]

யாழ்ப்பாணம்- நயினாதீவில் இன்று அதிகாலை வீசிய மினி சூறாவளியினால், பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நயினாதீவு, இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன. ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி வீசப்பட்டுள்ளதுடன் ஆலய வாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறு கடைகளும் காற்றினால் துாக்கி வீசப்பட்டுள்ளன. எனினும் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.


கோத்தாவுக்காக யாழ்., வவுனியாவில் பலத்த பாதுகாப்பு! Top News
[Monday 2019-10-28 16:00]

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக இன்று வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த நிலையில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.


பெண் பொலிசின் சங்கலி அறுப்பு- இருவர் கைது!
[Monday 2019-10-28 16:00]

வவுனியா- பூந்தோட்டம், அண்ணாநகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலுக்குச் சென்ற பெண் பொலிஸ் ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த இரு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.


தமிழ்க்கட்சிகளின் முடிவு இன்று!
[Monday 2019-10-28 07:00]

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


சஜித் வென்றதும் குடும்பமாக சிறை செல்லவுள்ள ராஜபக்சவினர்!
[Monday 2019-10-28 07:00]

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் வெற்றி உறுதியாகியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ரக்வான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், சஜித் வெற்றி பெற்றதும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வரும் வழக்குகள் நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து, ராஜபக்சவினர் அனைவரும், குடும்பம் சகிதமாக சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் கூறியுள்ளார்.


யாழ். விமான நிலையத்தை நீச்சல் தடாகம் என மஹிந்த கிண்டல்!
[Monday 2019-10-28 07:00]

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மூன்றாவது சர்வதேச விமான நிலையம் இன்று நீச்சல் தடாகமாக மாறியுள்ளது என்று கிண்டலடித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


ஐஎஸ் தலைவரை கொன்ற அமெரிக்காவுக்கு ரணில் பாராட்டு!
[Monday 2019-10-28 07:00]

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தலைவர் பக்தாதி கொல்லப்பட்டதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உறுதிப்படுத்திய சற்று நேரத்தில், பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.


இம்முறை மூன்று வகையான வாக்குப் பெட்டிகள்!
[Monday 2019-10-28 07:00]

ஜனாதிபதி தேர்தலில் மரப்பலகையால் ஆன வாக்குப்பெட்டிகளின் பாவனையை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 400 க்கும் குறைவான வாக்காளர்களைக் கொண்ட வாக்கெடுப்பு நிலையங்களுக்கு மாத்திரம் மரப்பலகையால் ஆன வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்படும் என, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னபிரிய தெரிவித்துள்ளார். அவ்வாறான வாக்கெடுப்பு நிலையங்களின் எண்ணிக்கை 340 ஆகும்.


தேசிய பாதுகாப்புக் கேள்விக்குறி!
[Monday 2019-10-28 07:00]

நாட்டின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ளாது சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து, தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தளையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார்.


சங்குகள் பிடித்த 7 மீனவர்கள் கைது!
[Monday 2019-10-28 07:00]

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்ளூர் மீனவர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் பிற்பகல்கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்களிடமிருந்து 70 சங்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


தபால் மூல வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு!
[Monday 2019-10-28 07:00]

தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகளை, அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கையை இன்று பூர்த்தி செய்ய முடியும் என்று தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் 12 ஆயிரம் தபால் மூல வாக்காளர் அட்டைகள் மாத்திரமே விநியோகிக்கப்பட இருப்பதாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான பிரதித் தபால்மா அதிபர் ராஜித ரணசிங்ஹ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 31ம் திகதி, நவம்பர் மாதம் 1ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புக்கள் இடம்பெறவிருக்கின்றது.


உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம்!
[Sunday 2019-10-27 19:00]

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிப்பதற்கான காலஅவகாசத்தை வழங்கும் வகையில்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


உறங்கச் சென்ற முன்னாள் போராளி திடீர் மரணம்!
[Sunday 2019-10-27 19:00]

தீபாவளி தினமான இன்று 3 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி ஒருவர் திடீரென மரணமானார். வவுனியா -பறனாட்டகல் பகுதியில் வசித்து வந்த இவர், இன்று அதிகாலை 12 மணியளவில் தனது மனைவியுடன் உரையாடி விட்டு உறங்கச் சென்றுள்ளார். உறங்கிய சில நிமிடங்களில் அவரின் உறக்கத்தில் மாற்றத்தை உணர்ந்த மனைவி அவரை எழுப்பிய போதும் அவர் எழுந்திருக்கவில்லை.


வவுனியாவில் பீல்ட் பைக்கில் அதிரடிப்படை ரோந்து! Top News
[Sunday 2019-10-27 19:00]

வவுனியாவில் பீல்ட் பைக் ரோந்து நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். வவுனியா நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று காலை முதல் விசேட அதிரடிப்படையினர் 6 பீல்ட் பைக்குகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வப்போது பீல்ட் பைக்கை நிறுத்தி சில பகுதிகளில் காவல் கடமைகளிலும் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி தினமான இன்று விசேட அதிரடிப்படையினரின் இத்தகைய செயற்பாட்டால் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது.


தனித்து வர அச்சமா?- கோத்தாவை மீண்டும் அழைக்கும் சஜித்!
[Sunday 2019-10-27 19:00]

கோத்தாபய ராஜபக்ஷ தனித்து வருவதற்கு அச்சம் என்றால், தனது சகோதரர்களுடன் இணைந்தேனும் பகிரங்க விவாதத்துக்கு வரட்டும் என மீண்டும் அழைப்பு விடுப்பதாக புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹங்வெல்ல நகரில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


முள்ளிவாய்க்காலில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்!
[Sunday 2019-10-27 19:00]

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இன்று உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


கோத்தாவுக்கு மேர்வின் சில்வா சவால்!
[Sunday 2019-10-27 19:00]

தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவைப்படும் நிதியை பெற்றுக்கொள்ளும் வழிமுறை என்ன என்பதை வெளிப்படுத்துமாறு, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்வுக்கு குழுவினருக்கு சவால் விடுத்துள்ளார்.


போட்டியில் இருந்து விலக சிவாஜிக்கு 3ஆம் திகதி வரை காலக்கெடு!
[Sunday 2019-10-27 19:00]

தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், எதிர்வரும் 3ஆம் திகதிக்குள் தேர்தலில் இருந்து விலகாவிட்டால், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோவின் செயலாளர் நாயகம், ஸ்ரீகாந்தா தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.


பிள்ளையானை சிறைக்குச் சென்று சந்தித்தார் மகிந்த!
[Sunday 2019-10-27 19:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மதியம் மட்டக்களப்பு சிறைக்குச் சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை ( பிள்ளையான்) சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அதையடுத்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


16 வயதுக்குட்பட்டவர்களுக்கு உற்சாக பானம் விற்கத் தடை?
[Sunday 2019-10-27 19:00]

16 வயதிற்கு உட்பட்டசிறுவனவர்களுக்கு, காஃபினேட் உற்சாக பானங்கள் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்து கியூபெக் சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகள் இருப்பதற்கான ஆதாரங்களை கியூபெக்கின் சுகாதார அமைச்சகம் கொண்டுள்ள நிலையிலேயே, இந்த விடயம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.


மட்டக்களப்பில் பெண்ணின் சடலம் - நீரோடையில் மீட்பு!
[Sunday 2019-10-27 19:00]

மட்டக்களப்பு- ஏறாவூர், களுவங்கேனி நீரோடையில் இருந்து இன்று பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். களுவங்கேனி முதலாம் பிரிவு மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய மாரிமுத்து ராகினி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இளைஞர்கள் மீது மர்ம கும்பல் சரமாரியான கத்திக் குத்து!
[Sunday 2019-10-27 10:00]

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு, மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத மர்மக் கும்பல், மேற்கொண்ட கத்திக் குத்து தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா