Untitled Document
April 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் யாருக்கும் அடிபணியமாட்டோம்! - மங்கள சமரவீர
[Saturday 2017-04-29 07:00]

தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் விடயத்தில் அரசாங்கம் யாருக்குமே அடிபணியப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தடைச்சட்டம் தவறாக கையாளப்பட்டது உண்மை! - ஏற்றுக் கொள்கிறது அரசாங்கம்
[Saturday 2017-04-29 07:00]

கடந்த காலத்தில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தவறான வகையில் கையாளப்பட்டது என்பதே உண்மை என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.


ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பாக மரணதண்டனைக் கைதியிடம் விசாரணை!
[Saturday 2017-04-29 07:00]

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை தொடர்பில், நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கு குற்றவாளிக்கு தகவல்கள் தெரியுமா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவர் கொலை படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத் தளம்! - திஸ்ஸ விதாரணவின் கண்டுபிடிப்பு
[Saturday 2017-04-29 07:00]

திருகோணமலையில் கடற்படை முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ' இந்தியா, அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. அணு உற்பத்திக்குத் தேவையான யுரேனியத்தை இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இணங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த இரண்டு நாடுகளும் இராணுவ மட்டத்திலும் ஒப்பந்தம் செய்துள்ளன.


புத்தர் சிலை விவகாரம் - சம்பந்தன், ஹக்கீமுக்கு ஜனாதிபதி உறுதி!
[Saturday 2017-04-29 07:00]

மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பில், உரிய முறையில் ஆராய்ந்து அதற்கான பரிகாரம் காணும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


காணி விடுவிப்பு குறித்து ஐ.நா பிரதிநிதிக்கு இராணுவம் விளக்கம்!
[Saturday 2017-04-29 07:00]

நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் வடக்கில் காணிகள் விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளுக்கு இராணுவம் விளக்கம் அளித்துள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பை மையமாகக் கொண்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இராணுவத் தலைமையகத்தில் இராணுவ தலைமை அதிகாரி மகேஸ் சேனாநாயக்கவை சந்தித்தனர்.


தொழில் தேவைக்கு ஏற்ற பட்டதாரிகள் இல்லையாம்!
[Saturday 2017-04-29 07:00]

தற்போது நாட்டில் தொழில் தேவைகளுக்கு ஏற்ற பட்டதாரிகளின் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்காரணமாக சில அரச நிறுவனங்களில் தற்போதும் கூட வெற்றிடங்கள் இருப்பதாகவும் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் கூறினார்.


மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இருவருக்கு விளக்கமறியல்!
[Saturday 2017-04-29 07:00]

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட இருவரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் தந்தையின் நண்பர் உட்பட இருவரே சிறுமியை நேற்றுமுன்தினம் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.


பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு!
[Saturday 2017-04-29 07:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 4 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் பே.பிரேம்நாத், நேற்று உத்தரவிட்டார்.


மாணிக்கமடு புத்தர்சிலை - கிழக்கில் எதிர்ப்பு போராட்டங்கள்! Top News
[Friday 2017-04-28 19:00]

அம்பாறை- இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பகுதியில் சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அங்கு விகாரை அமைப்பதற்கு எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன.


இலங்கை அகதிகள் 46 பேர் நேற்று நாடு திரும்பினர்:
[Friday 2017-04-28 19:00]

தமிழகத்தில் அகதி முகாம்களில் இருக்கின்ற இலங்கை அகதிகள் 46 பேர் நேற்று வியாழக்கிழமை இலங்கைகை வந்தடைந்ததாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஐநாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் அவர்கள் நாடு திரும்பியுள்ளனர். திருச்சியிலிருந்து இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் இலங்கை திரும்பியுள்ளனர்.


பிரபாகரனின் ஆசையை நிறைவேற்றத் தயார்! - ஆனந்தசங்கரி கூறுகிறார்
[Friday 2017-04-28 19:00]

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகி சிவராமின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கிறது என்று, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.


தமிழகத்தில் இருந்து கனேடிய பிரஜைகளான 3 இலங்கையர்கள் கனடாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளனர்:
[Friday 2017-04-28 19:00]

தமிழக சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலங்கையர்கள் இன்று கனடாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளதாக ‘த ஹிந்து’ தகவல் வெளியிட்டுள்ளது. கனேடிய பிரஜைகளான அவர்கள், இணைய குற்றத்தில் ஈடுபட்டதாக சென்னை நகர கியூ பிரிவு தாக்கல் செய்த வழக்கில் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை நிறைவடைந்த நிலையில், தமிழக சிறப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இராணுவ பஸ் மீது கல்வீச்சு - முல்லைத்தீவு வீதிகளில் படையினர் கண்காணிப்பு! Top News
[Friday 2017-04-28 19:00]

முல்லைத்தீவு- மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அருகே இராணுவத்தினரின் பஸ் மீது நேற்றிரவு இனம்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவத்தில், பஸ் முன்கண்ணாடி உடைந்து நொருங்கியது. இதையடுத்து, இன்று முல்லைத்தீவு பிரதான வீதிகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு-கேப்பாபுலவு வற்றாப்பளை முள்ளியவளை தண்ணீரூற்று பிரதான வீதிகளில் இராணுவத்தினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


விளையாட்டு ஒருபோதும் கல்விக்கு தடையாக இருந்தில்லை சங்கவி: - சாவகச்சேரி இந்து மாணவி சங்கவி
[Friday 2017-04-28 19:00]

விளையாட்டு ஒருபோதும் கல்விக்கு தடையாக இருந்தில்லை என சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவி சந்திரசேகரம் சங்கவி தெரிவித்தார். தேசிய மட்ட கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயது பெண்கள் பிரிவில் ஈட்டி எறிதலில் 33.05M பாய்ந்து முதலாமிடத்தினையும்,கோலூன்றி பாய்தல் போட்டியில் 2.8 M பாய்ந்து இரண்டாமிடத்தையும்,தட்டு எறிதலில் 29.05M எறிந்து மூன்றாமிடத்தினையும். பெற்று தங்கம்,வெள்ளி,வெண்கலம்.ஆகிய பதக்கங்களையும் பெற்றுள்ளார்.


வித்தியா கொலை வழக்கில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் விடுதலை!
[Friday 2017-04-28 19:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 ஆம், 12 ஆம் சந்தேகநபர்களை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஜோய்மகிழ் மகாதேவன், இன்று விடுவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, இந்த இரு சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியாவில் அன்னாசி அறுவடை விழா! Top News
[Friday 2017-04-28 19:00]

விவசாய திணைக்களத்தின் வவுனியா- முருகனூர் பண்ணையில் அன்னாசி அறுவடை விழா இன்று இடம்பெற்றது. வடமாகாண விவசாய அமைச்சின் நிதியுதவியில், முருகனூர் விவசாய பண்ணையில் தென்னைப் பயிர்செய்கைக்குள் ஊடு பயிராக அன்னாசிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் மூலம் 75 அன்னாசிச் செய்கையாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு செய்கை மேற்கொள்ள வடமாகாண விவசாய அமைச்சின் மூலம் விவசாய திணைக்களத்தால் மானியங்கள் வழங்கப்பட்டிருந்தது.


யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக, பேராசிரியர் விக்னேஸ்வரன் நியமனம்!
[Friday 2017-04-28 19:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அண்மையில், யாழ். பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், விஞ்ஞான பீடாதிபதியான பேராசிரியர் விக்னேஸ்வரன் 14 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்.


சுன்னாகம் பொலிஸ் நிலையக் கொலை - தொகுப்புரை ஒத்திவைப்பு!
[Friday 2017-04-28 19:00]

கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுமணன் என்ற இளைஞன், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கின் தொகுப்புரையை எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் ஒத்திவைத்தார். வட, கிழக்கு மாகாணங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக யாழ். மேல் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவிருந்த, இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


லண்டனுக்கு அகதியாகச் சென்ற இளைஞன் தொழிலதிபராகிச் சாதனை! Top News
[Friday 2017-04-28 19:00]

லண்டனுக்கு அகதியாகச் சென்ற யாழ்.இளைஞர் ஒருவர் தொழிலதிபராகி சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞரே இவ்வாறு லண்டனில் தொழிலதிபராக முன்னேறியுள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அமைச்சர் துமிந்தவின் முன்னாள் மனைவியை மணந்தார் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த!
[Friday 2017-04-28 19:00]

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று மீண்டும் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். முன்னாள் பிரதமர் டீ.எம்.ஜயரத்னவின் மகளான சேனானி ஜயரத்னவையே, அவர் மறுமணம் செய்துள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள அளுத்கமகேவின் இல்லத்திலேயே, இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றது. இதில், குடும்பத்தவர்கள் மாத்திரமே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


நீதிமன்ற உத்தரவைக் கிழித்தெறிந்த பௌத்த பிக்குவைக் கைது செய்யக் கோரி திருகோணமலை சட்டத்தரணிகள் போராட்டம்! Top News
[Friday 2017-04-28 19:00]

நீதிமன்ற உத்தரவை கிழித்தெறிந்த பிக்குவை கைது செய்யுமாறு வலியுறுத்தி திருகோணமலையில் சட்டத்தரணிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலையில் கடந்த 24 ஆம் திகதி மாகாண சபைக்கு முன்பாக இடம்பெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டார்.


கடனட்டை மோசடி செய்த மூன்று இலங்கைத் தமிழர்களை கனடாவுக்கு நாடு கடத்துகிறது இந்தியா!
[Friday 2017-04-28 19:00]

இந்தியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட கனேடிய குடியுரிமை பெற்ற மூன்று இலங்கைத் தமிழர்கள் இன்று நாடு கடத்தப்படவுள்ளனர் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த இலங்கையர்கள் இன்றைய தினம் கனடாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள். வெளிநாட்டில் இருந்து தொழில் அதிபர்களின் கடன் அட்டைகளை போன்று போலிகளை தயாரித்து கடன் அட்டை மோசடியில் குறித்த இலங்கையர்கள் ஈடுபட்டனர்.


ஊடக சுதந்திர பட்டியல் - இலங்கை 141 ஆவது இடத்தில்!
[Friday 2017-04-28 19:00]

ஊடக சுதந்­திரம் குறித்து எல்­லை­க­ளற்ற ஊட­க­வி­ய­லாளர் அமைப்பால் 180 நாடு­களை உள்­ள­டக்கி நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட இந்த ஆண்­டுக்­கான வரு­டாந்த பட்­டி­யலில் இலங்கை 141 ஆவது இடத்­தி­லுள்­ளது. மேற்­படி அமைப்பால் ஊடக சுதந்­திர பட்­டி­யலை உள்­ள­டக்கி வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் ஊடக சுதந்­திரம் ஒரு­போதும் அச்­சு­றுத்­த­லுக்­குள்­ளாக்­கப்­படக் கூடாது என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.


முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்தவர்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நன்றி தெரிவிப்பு!
[Friday 2017-04-28 07:00]

முழுமையான அடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


ஏவுகணைத் தாக்குதல் வழக்கு - முன்னாள் புலி உறுப்பினர் மேன்முறையீடு!
[Friday 2017-04-28 07:00]

விடுதலைப் புலிகளின் ஏவுகணை பிரிவில் உறுப்பினராக இருந்த ஒருவர், தமக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார். இராசதுரை ஜெகன் என்பவரே இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்துள்ளார். பலாலியில் இருந்து ரத்மலானை நோக்கி பயணித்த அன்டனோவ் 32 விமானத்தின் மீது, வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியமைக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


புதிய பதவியை ஏற்கத் தயார்! - சரத் பொன்சேகா
[Friday 2017-04-28 07:00]

நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அவசரகால நிலைமைகளில் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி உருவாக்கும் பாதுகாப்பு சார் பதவியை ஏற்றுக்கொள்ள தான் தாயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் ரயில் மோதி ஒருவர் பலி! Top News
[Friday 2017-04-28 07:00]

மட்டக்களப்பு- திராய்மடுவில் பகுதியில் நேற்றிரவு இளைஞர் ஒருவர் ரயில் மோதி மரணமானார். மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு நோக்கி பயணித்த ரயில் திராய்மடுவில் சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் ஏறாவூர் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உயிரிழந்துள்ளவரின் விவரம் தெரியாதமையினால், இது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
<b>08-04-2017 அன்று  மார்க்கத்தில்  நடைபெற்ற IMHO DINNER NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>01-04-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற PRIMA DANCE NIGHT 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-03-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற  பைரவி நுண்கலைக் கூட இசை அர்ப்பணம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா