Untitled Document
April 20, 2024 [GMT]
தமிழகத்திற்கு அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி: ராதிகா சரத்குமார் புகழாரம்!
[Friday 2024-04-12 18:00]

தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி என்று விருதுநகர் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


"500 நாட்களில் கோயம்புத்தூர் தொகுதியில்இது நடக்கும்" - அண்ணாமலை உறுதி!
[Friday 2024-04-12 18:00]

கோயம்புத்தூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை கோவை பாஜக வேட்பாளரும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை வெளியிட்டார். இதில், 500 நாட்களில் கோயம்புத்தூர் தொகுதிக்கு 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளிகள் மேற்கு வங்கத்தில் கைது!
[Friday 2024-04-12 18:00]

பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் 2 பேர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 1 ஆம் திகதி பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை, ஆனால் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.


விடுதியில் இறந்துகிடந்த ஐஐடி மாணவர்: சிக்கிய குறிப்பு!
[Friday 2024-04-12 18:00]

இந்திய மாநிலம் அசாமில் IIT மாணவர் ஒருவர் விடுதியில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பீகாரைச் சேர்ந்த 20 வயது மாணவர் ஒருவர், அசாமில் உள்ள IIT கவுகாத்தியில் BTech முதலாம் ஆண்டு பயின்று வந்தார். விடுதியில் தங்கியிருந்த குறித்த மாணவர் புதன்கிழமை இரவு தனது அறையில் இறந்து கிடந்துள்ளார். அவருடன் தங்கியிருந்த மாணவர் அங்கு இல்லாத நிலையில், விடுதி பாதுகாவலர்கள் மாணவர் இறந்து கிடந்ததை அறிந்துள்ளனர்.


இரண்டாம் திருமணத்திற்கு பெண் தராததால் ஆத்திரம்: பரமக்குடியில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!
[Friday 2024-04-12 06:00]

பரமக்குடியில் இரண்டாம் திருமணத்திற்கு பெண் தராததால் பெண்ணின் தாயையும் இரண்டு குழந்தைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பரமக்குடியை அடுத்த பொதுவக்குடி பகுதியைச் சேர்ந்தவர் குருவம்மாள். இவருடைய மகள் வனிதா. திருமணமான நிலையில் வனிதா கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தென்னந்தோப்பு பகுதியில் உள்ள சிறிய அளவிலான வீடு ஒன்றில் வசித்து வந்தனர்.


பள்ளிப் பேருந்து விபத்து: மாணவர் சொன்ன பகீர் காரணம்!
[Friday 2024-04-12 06:00]

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்: இறுதிக்கட்டத்தில் போலீஸ் விசாரணை!
[Friday 2024-04-12 06:00]

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இத்தகைய சூழலில் அவர் தலைமறைவானார். அதன்பின்னர் போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.


‘தமிழ்நாடு எதிலும் முதலிடம்’ - மத்திய அரசின் தரவுகளுடன் சுட்டிக்காட்டிய திமுக!
[Thursday 2024-04-11 16:00]

மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைச் சுட்டிகாட்டி திமுக சார்பில், ‘தமிழ்நாடு எதிலும் முதலிடம். ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி’ என்ற தலைப்பின் கீழ் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள், சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள். மகப்பேற்றுக்கு பின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன.


காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது!
[Thursday 2024-04-11 16:00]

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


காரைக்குடியில் அமித்ஷாவின் ரோடு ஷோ திடீர் ரத்து!
[Thursday 2024-04-11 16:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


நாம் தமிழர் சீமானுக்கு தொடரும் பிரச்சனை!
[Thursday 2024-04-11 16:00]

வாக்கு இயந்திரத்தில் ஸ்விட்ச் உள்ள மைக் சின்னத்தை ஓட்டுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி புகார் தெரிவித்துள்ளது. சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.


பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் விதிமீறல்!
[Thursday 2024-04-11 08:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை!
[Thursday 2024-04-11 08:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


மூதாட்டியை கொன்று தங்கச் செயின் பறிப்பு: தப்பிக்க முயன்ற இளைஞருக்கு கால் முறிவு!
[Thursday 2024-04-11 08:00]

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன். இவரது மனைவி பெரியநாயகி (வயது 60) இன்று (10/04/2024) செவ்வாய்க் கிழமை மாலை தன் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மேய்சலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஓட்டிவர சென்றவர் நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை. அதனால் உறவினர்கள் தேடிச் சென்றபோது காட்டுப் பகுதியில் தலையில் பலத்த ரத்த காயத்துடன் பெரியநாயகி இறந்து கிடந்தார்.


தொடர்ந்து அண்ணாமலையை தாக்கும் சீமான்!
[Wednesday 2024-04-10 18:00]

நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணாமலையை தொடர்ந்து தாக்குவதற்கு இது தான் காரணம் என்று பத்திரிக்கையாளர் பிரியன் கூறியுள்ளார். சீமானின் கட்சிக்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிய நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.


“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்!
[Wednesday 2024-04-10 18:00]

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள்.


“பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக்கியது பா.ஜ.க.” - பிரதமர் மோடி!
[Wednesday 2024-04-10 18:00]

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.


பூனையை மீட்க கிணற்றுக்குள் இறங்கிய 5 பேர் உயிரிழப்பு!
[Wednesday 2024-04-10 18:00]

கிணற்றில் விழுந்த பூனையை மீட்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் பூனை ஒன்று விழுந்துள்ளது. அப்போது பூனையை காப்பாற்ற ஒரு நபர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அவர், கிணற்றுக்குள் விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். அவரை மீட்பதற்காக அடுத்தடுத்து 5 பேர் உள்ளே இறங்கியுள்ளனர்.


ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி!
[Wednesday 2024-04-10 06:00]

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.


தமிழகத்தில் ரம்ஜான்: தேதியை உறுதி செய்த தலைமை காஜி!
[Wednesday 2024-04-10 06:00]

ரம்ஜான் என்று அழைக்கப்படும் நோன்பு பெருநாள் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் இந்த நாளில் ஏழை மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்டவற்றை அளித்து ஈகையை வெளிப்படுத்தும் நன்னாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.


பிரச்சாரத்தில் பெண்ணுக்கு முத்தம்: பா.ஜ.க வேட்பாளரால் எழுந்த சர்ச்சை!
[Wednesday 2024-04-10 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.


வீரப்பனை பற்றி உருக்கமாக பேசிய மகள் வித்யா ராணி!
[Tuesday 2024-04-09 18:00]

நல்ல சூழ்நிலையில் நான் வளர்ந்தது போல எனது தந்தையும் வளர்ந்திருந்தால் தவறான வழிக்கு போயிருக்க மாட்டார் என்று வீரப்பன் மகள் வித்யா ராணி உருக்கமாக பேசியுள்ளார். பாஜகவில் இருந்து விலகிய வீரப்பனின் மகள் வித்யா ராணி, மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.


"இது நடந்தால் தேர்தலில் இருந்து விலக தயார்" - சீமான்!
[Tuesday 2024-04-09 18:00]

இந்தியாவில் தற்போது 20 கோடி பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி சீமான் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் கைது: தமிழக அரசியலில் பரபரப்பு!
[Tuesday 2024-04-09 18:00]

பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள்ளார். வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடலூர் சுற்றுவட்டாரத்தில் தங்கர் பச்சான் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.


பணத்திற்காக மாணவியை கடத்தி கொன்று புதைத்த சக மாணவர்!
[Tuesday 2024-04-09 18:00]

புனேயில் பொறியியல் மாணவர் ஒருவர் தனது சக கல்லூரி மாணவியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி பாக்யஸ்ரீ (22). இவர் புனேயில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் திகதி வணிக வளாகத்திற்கு சென்ற மாணவி பாக்யஸ்ரீ மாயமானதாக அவரது பெற்றோர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.


நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு...!
[Tuesday 2024-04-09 06:00]

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது. 2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது.


“ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானம்” - சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு!
[Tuesday 2024-04-09 06:00]

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.


“சீட் தரவில்லை” - காங்கிரஸ் முன்னாள் முதல்வர் அதிரடி அறிவிப்பு!
[Tuesday 2024-04-09 06:00]

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா