Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழர் தாயகப் பெண்களின் நிலை: பிரித்தானிய பாராளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு ! Top News
[Thursday, 2012-08-09 22:15:38]

போருக்கு பிந்திய இலங்கைத்தீவின் இன்றைய சூழலில் தமிழர் தாயகப் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்து பிரித்தானியாவின் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் செயற்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள் முதியோர் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தொடர்சியான சந்திப்புக்கள் வழியே மேற்கொள்ளப்பட்டு வரும் இச்செயற்திட்டம் குறித்து அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்:

அனைத்துலக நெருக்கடிகள் குழுவின் அறிக்கை சம்பந்தமாகவும், 90 000க்கும் மேலான கணவனை இழந்த பெண்களிற்கான வாழ்வாதார நிலைகளையும், கட்டாய பாலியல் துன்புறுத்தல் விடயமாகவும், பாதுகாப்புப் பொறிமுறை சம்பந்தமாகவும் , இறுதிக்கட்டப் போரின்போது நடந்த இனப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை நடாத்த வேண்டும் என்றும், எமது தாயக மக்கள் பாதுகாப்புடனும், சுதந்திரமாகவும் வாழ்வதற் கான வாழ்வுரிமையை வலியுறுத்தியும், அவர்களின் அரசியல் விருப்பத்தை அறிவதற்கான பொதுசன வாக்கெடுப்பொன்றை நடாத்த வேண்டும் என்றும், இந்சந்திப்புக்கள் வழியே முன்னிறுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இப்பிரதிநிதிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இச்சந்திப்புகள் தனிப்பட்ட முறையிலும் பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகவும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்திய வீடுகள் அமைக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம் - இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார்!Top News
[Wednesday, 2013-05-22 19:36:00]

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.



வாழைச்சேனை கல்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Top News
[Wednesday, 2013-05-22 08:57:08]

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கணித பாடம் கற்பிக்கும் சிவநேசன் கேமராஜன் (வயது 30) என்பவரே இவ்வாறு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். அவரோடு இப்பாடசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் மார்கண்டு அகிலன் (வயது 30) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: - முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்தது ! Top News Top News
[Tuesday, 2013-05-21 19:57:07]

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டுநினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம் :



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு தோல்வி - ஏற்றுக்கொண்டார் இந்திய உயர்ஸ்தானிகர்! Top News
[Tuesday, 2013-05-21 15:36:16]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்திய உயர் ஸ்தானிகரக்கு விசேட விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்குமிடையெ இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Top News
[Tuesday, 2013-05-21 09:13:12]

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது . யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும் வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .



மே18 நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறையில் நடைபெற்றது. Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



மெல்பேணில் நடைபெற்று வரும் தமிழர் இனவழிப்பு புகைப்படக் கண்காட்சி! Top News
[Monday, 2013-05-20 08:08:59]

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் ஞாயிற்றுக்கிழமை (19-05-2013) அன்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் (Tamil refugee Council) சேர்ந்த Ron Guy தலைமையில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான எமது மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடக்கம் கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை அவுஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்ந்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.



தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!Top News Top News
[Sunday, 2013-05-19 22:04:59]

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.



பிரான்சில் நடைபெற்ற மே. 18 தமிழின அழிப்பு நினைவு நாள் Top News
[Sunday, 2013-05-19 21:12:43]

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய போராட்டத்தில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.



மெரினாவில நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். Top News
[Sunday, 2013-05-19 20:44:05]

சிங்கள இனவெறியர்களால் இலங்கைத் தீவில் ஈழத்தில் நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நினைவேந்தல் நிகழ்ச்சியாக இன்று 19.05.13 சென்னை மெரினாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வானது மே 17 இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.



தனித் தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் உருத்திரகுமாரனின் மே 18 உரை!Top News
[Sunday, 2013-05-19 20:39:54]

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.


Ramans2011
INNSYS-20120930
Canada Kanthasamy Kovil
TamilsGuid-191012-2013
TDE_Computers2011
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com