Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
மூன்றாவது வாரத்தில் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: Top News
[Sunday, 2012-08-05 10:18:37]

கடந்த மாதம் 22ம் திகதி ஜுலை படுகொலைகளின் நினைவுப் பேரணியை அடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தில் குதித்த திரு. சிவந்தன் கோபி இரண்டுவாரங்களாக தனது போராட்டத்தை தொடரந்து வருகிறார். வார விடுமுறை தினமாதலால் அதிகளவு மக்கள் திரு. சிவந்தன் தங்கியுள்ள கூடாரத்துக்கு அருகில் கூடி அவருக்கு தமது ஆதரவினை வழங்கி வருகின்றன.

அது போல் அவ்வழியே செல்லும் பன்னாட்டு மக்களும் தரித்து நின்று விபரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தவிரவும் ஒலிம்பிக் கிராமத்தின் சுற்று வட்டாரத்திலும், பிரதான தொடருந்து நிலைய வாசலிலும் தமிழ் இளையோர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகிறார்கள்.

இன்று பிரேசில் நாட்டு ஊடகமொன்று திரு. சிவந்தனை நேர்காணல் செய்து அவரது போராட்டம் பற்றிய விபரங்களை கேட்டறிந்தது.

திரு. சிவந்தனின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் தளர்வடைந்துள்ளபோதிலும் அவரை சந்திக்க வரும் மக்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் உரையாடுகிறார்.

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

தனித்தமிழீழம் அமையும் வரை மாணவர் போராட்டம் ஓயாது; தடையை மீறி மெரீனாவில் பேரணி.Top News
[Saturday, 2013-05-18 20:45:17]

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகும், சொந்த மண்ணை விட்டு பல இலட்சம் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஓடிய பின்னரும் ஈழத்தில் மீதமிருப்போர் மேலும் மேலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த வழியில்லாமல் உலகத் தமிழரெல்லாம் மனம் வெதும்பிய நிலையில் தமிழக மாணவர்கள் போராட்டம் எல்லோருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.



இன்று தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு : ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!Top NewsTop News
[Saturday, 2013-05-18 20:35:53]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது. இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.



முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க வவுனியாவில் நினைவு பிரார்த்தனை!Top News
[Saturday, 2013-05-18 20:08:27]

இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவுச் சுடர் ஏற்றலையும் மலர் அஞ்சலியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க வீரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், வினோ ரோதநாதலிங்கம், சிவசக்தி ஆனந்தன்,



டென்மார்க்கில் பாராளமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மனு கையளித்தனர்! Top News
[Saturday, 2013-05-18 08:14:10]

17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக பாராளமன்றம், நோக்கி பேரணியாக வந்தடைந்தார்கள்.



மௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தி​ல் ஈடுபட்டனர்!Top News
[Saturday, 2013-05-18 08:00:22]

நேற்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் எங்கு உள்ள அனைத்து ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க துதராலயங்களை நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கோடியை ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்து முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கோடியில் தமிழ் ஈழம் என்று பொறித்து எல்லோரும் ஏந்தி சென்றனர். அத்துடன் சிறி லங்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!Top News
[Friday, 2013-05-17 22:09:10]

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இளைஞர்களின் சக்தி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையைப் போல இருக்க வேண்டும் !Top News
[Friday, 2013-05-17 21:33:28]

கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல இளைஞர்களின் சக்தி இருக்கக் கூடாது. அது அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையைப் போல இருக்க வேண்டும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்துள்ளார் தடுப்பின்றிச் செல்லும் அழகிய வாகனத்தின் சாரதி தன்னையும் அந்த வாகனத்தையும் அந்த வீதியால் செல்லும் மற்றவர்களையும் தனது சொத்துக்களையும் ஏனையவர்களின் உடமைகளையும் அழிப்பதற்கே பயன்படுத்துவான் தடுப்பின்றிச் செல்லும் வாகனமாக இளைஞர் சக்தி இருந்து விடக்கூடாது. வேகத்துடன் விவேகமும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்;.



தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது !Top News
[Friday, 2013-05-17 21:20:04]

முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குராப்பணம் செய்துவைத்தார்.



குழந்தைகள் மூவரை கிணற்றில் வீசி தானும் தற்கொலைக்கு முயற்சித்த தாய் - வவுனியாவில் சம்பவம்!Top News
[Friday, 2013-05-17 16:45:37]

இலங்கையின் வடக்கே வவுனியா தாண்டிக்குளத்தில் இளம் தாயொருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்ததில், மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தாய் மட்டும் உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பிய தாயிடம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த மூத்த பிள்ளைக்கு 3 வயதாகிறது. மற்றைய இரண்டு பிள்ளைகளும் ஒன்றரை வயதான இரட்டைக் குழந்தைகள் என்று பொலிசார் கூறுகின்றனர். கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த இந்தத் தாய் வவுனியா தாண்டிக்குளத்தில் கணவருடன் வசித்து வந்துள்ளார். கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்து குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டதனால், குடும்பம் வறுமையில் வாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



மின்சார சபை அதிகாரிகளின் கவனயீனம் - யாழில் 5 பேர் பலியெடுப்பு!Top News
[Thursday, 2013-05-16 17:29:44]

வட மாகாணத்தில் இலங்கை மின்சார சபை யாழ் பிராந்திய அதிகாரிகளின் கவனயீனத்தினால், அண்மைக் காலங்களில் குடாநாட்டில் ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அண்மையில் மல்லாகப் பகுதியில் 19 வயது இளைஞன் செல்வராஜா செந்தூரன் மின் கம்பத்திற்கு இடையாக இருந்த மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த போது மின் தாக்குதலுக்கு உட்பட்டு தூக்கி வீசப்பட்டார். அதன்போது, தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருந்த ஆனந்தபுரம் வீடு கண்டுபிடிப்பு!Top News
[Thursday, 2013-05-16 15:18:40]

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முற்றுகைப் போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.



தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு நேற்றையதினம் மாலை பிரதமர் உருத்திரகுமார் அவர்களால் தொடக்கி வைக்கபட்டுள்ளது. Top News
[Thursday, 2013-05-16 10:59:37]

தமிழீழ விடுதலையில் அக்கறைக் கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு நேற்றையதினம் புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சிலவேனியா மாநிலத்தில் Lancaster நகரில் மாநாடு அங்குராப்பண நிகழ்வு பிரதமர் உருத்திரகுமார் அவர்களால் மாலை 7 மணியளவில் தொடக்கி வைக்கபட்டுள்ளது.



கனடாவில் தழும்பகம் நடாத்திய ஓவியக்கண்காட்சி Top News
[Thursday, 2013-05-16 10:47:34]

செவ்வாய்க்கிழமை, மே 14ஆம் நாளன்று தழும்பகம் என்று அழைக்கப்படும் தமிழின அழிப்புக் காட்சியகம் கனடாவின் ஒன்டரியோ மாகாணத்தில் அமைந்துள்ள மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் தனது கண்காட்சி நிகழ்வினை இன்று நடாத்தியது. இதிலே ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக கடந்த 2008 - 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற படுகொலைகளையும் தமிழ் மக்கள் பட்ட இன்னல்களையும் மிகவும் சிறப்பாக எடுத்தியம்பும் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இவ்வோவியங்களை தமிழீழ ஓவியரான s. ராஜன் அவர்கள் வரைந்திருந்தார்.



இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் பங்கெடுப்பு ! Top News
[Wednesday, 2013-05-15 22:32:43]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் நான்காம் ஆண்டு கூட்டுநினைவு நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாட்டில், இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் அவர்கள் பங்கெடுக்கின்றார். டெல்லி தமிழ்வழங்கறிஞர் சங்கத்தின் செயலராகவும் உள்ள வழக்கறிஞர் வே.ராம் சங்கர், இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவாகவுள்ளார். எதிர்வரும் மே-18ம் நாள் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு, இன்று புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சிலவேனியா மாநிலத்தில் மாநாடு அங்குராப்பண நிகழ்வுடன் தொடங்குகின்றது.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எழுச்சி மாநாடு இன்று அமெரிக்காவில் அங்குரார்ப்பணம்! Top News
[Wednesday, 2013-05-15 21:05:37]

தமிழீழ விடுதலையில் அக்கறை கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவில் தொடங்குகின்றது. முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு அமைகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகத் தமிழர்களின் முரறைவாக தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே18 நாள் அமெரிக்க நேரம் மதியம் 12மணிக்கு முரசறையப்படவிருக்கின்றது. இந்நிலையில் சுதந்திர சாசனத்தினை மையமாக கொண்டு அமெரிக்காவின் பென்சிலவேனியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வுடன் இடம்பெறுகின்றது.


TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
TDE_Computers2011
Ramans2011
Suresh-remax-2013-01-01
INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Mahesan supramaniyam 031109
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com