Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
இனப்படுகொலைக்கு உள்ளான நமது இனத்தை பாதுகாக்கக்கூடிய ஒரே வழி தமிழீழ அரசேயாகும் - பிரதமர் வி. உருத்திரகுமார் அறிவிப்பு Top News
[Thursday, 2012-07-12 12:48:34]

இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உள்ளான நமது இலங்கைத் தமிழினம்இ தன்னை தொடர்ந்து பாதுகாக்கக் கூடிய ஒரே வழி நாடு கடந்த தமிழீழ அரசுதான் என்று நிச்சயமாக நம்பியபடியால் நாம் அந்த அரசை நிறுவியுள்ளோம். எனவே நமது நாடு கடந்த அரசை உறுதியான முறையில் வளர்த்தெடுத்து தொடர்ச்சியான ஆதரவைத் தரவேண்டியது தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களது கடமையாகும்.

இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு விசுவநாதன் உருத்திரகுமார் கடந்த 7ம் திகதி சனிக்கிழமை அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் உள்ள பல்டிமோர் நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிபோது தெரிவித்தார். மேற்படி கருத்தரங்கில் நாடுகடந்த அரசாங்கத்தின் சபாநாயகர் கனடா வாழ் திரு பால்ராசன் அனைவரையும் வரவேற்று பின்னர் தமது அரசின் பிரதமர் திரு வி. உருத்திரகுமாரை சபையோருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேற்படி கருத்தரங்கில் கனடாவிலும் அமெரிக்காவிலும் இருந்து சென்றவர்கள் பங்கு கொண்டார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் கனடாவிற்கான அங்கத்தவர் திரு நிமால் விநாயகமூர்த்தி மேற்படி கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். அந்தக் கருத்தரங்கில் திரு உருத்திரகுமார் தொடர்ந்து உரையாற்றுகையில் நாடு கடந்த அரசின் உண்மையான நோக்கங்களை நமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக தமிழ் மக்கள் தற்காலத்து அரசியல் விஞ்ஞானத்திற்கு அளித்த மரியாதை என்றுதான் நான் நாடு கடந்த அரசாங்கத்தை கூறுவேன்.

தமிழ் மக்கள் தாங்கள் சனநாயக விழுமியங்களுக்கு கொடுத்த மரியாதையும் இதுதான். இ;ந்த வகையில் நம்மிடம் சிலர் கேட்பதுண்டு- நாடு கடந்த அரசாங்கம் தாயகத்தில் வாழும் தமிழர்களுக்கா அல்லது புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழர்களுக்கா என்;று. இந்த கேள்விக்கு நான் வழங்கும் பதில் என்னவெனில் ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.

அதே போன்று தமிழீழ அரசு என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்களிலும் முறையே நமது தாயக மக்களும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் உள்ளார்கள் என்பதுதான் உண்மை. ஆத்துடன் தமிழீழம் என்ற கோட்பாட்டை மிகுந்த உயிர்த்துடிப்புடன் பேணிவருவதும் நமது நாடு கடந்த தமிழீழ அரசு என்றுதான் நான் கூறுவேன்.

உதாரணமாக நமது தாயகத்தில் நமது மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணமடைந்த நமது போராளிகள் மற்றும் போராளித் தலைவர்களின் நினைவாக நாம் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யக்கூட இலங்கை அரசு தடை விதிக்கின்றது. ஆனால் இலங்கையில் ஆயுதப் புரட்சி செய்து மரணித்த மக்கள் விடுதலை முன்னணியின் கொல்லப்பட்ட போராளிகளின் நினைவாக இலங்கையில் அரச அனுமதி கிடைக்கின்றது. எனவே இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி மறைந்த போராளிகளுக்கு மரியாதை செய்யவும் அதற்கான நிகழ்வுகளை நடத்தவும் நமது நாடுகடந்த அரசாங்கம் முயன்று வருகின்றது.

மேலும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு உலகில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவோ அன்றி அங்கீகாரமோ இல்லை. இவ்வாறு நமக்கு அங்கீகாரம் இல்லை என்பதை அறிந்து கொண்டு நாம் இயங்காமல் இருந்து விட முடியாது. அந்தந்த நாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு நாம் ஆளாகி விட முடியாது. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நாம் போராடாமல் இருக்க முடியாது.

எமது அரசாங்கத்தோடு யாராவது பேச்சுவார்த்தைகளுக்கு வந்தால் நாம் அந்த பேச்சுவார்த்தையின் போது மிகுந்த அவதானமாக நடந்து கொள்வோம். ஆனாலும் பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால முயற்சியாகவும் தமிழீழத்தை நோக்கிய போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியாகவும் நாம் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளோம் என்;பதையும் நான் எமது தமிழ் மக்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.

முள்ளிவாய்க்காலில் நமது மக்களுக்கு எதிராகவும் நமது போராளிகளுக்கு எதிராகவும் 2009 ம் ஆண்டு கொடிய யுத்தம் நடைபெற்ற போது முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல உலகம் முழுவதுமே போராட்டக் களங்களாக மாறியிருந்தன. தமிழகத்தில் கூட பல போராட்டங்களை நமது உறவுகளுக்காக அங்குள்ள தலைவர்களும் தமிழ் நாட்டு மக்களும் நடத்தினார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.

மேலும் தாயகத்தில் தற்போது அரசாங்கத்தின் நில அபகரிப்புக்கு எத்pராக நடைபெறும் பல போராட்டங்களுக்கு உலகெங்கிலம் பல ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன. இலங்கையில் பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் நமது போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவைத் தருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.

எனவே நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்த்திற்கு புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் பேராதரவைத் தரவேண்டும். ஒரு பலமுள்ள அமைப்பாக நமது அரசு உலகின் கண்களுக்கு தெரியும் ஒரு நாளுக்காக நாம் மேலும் உறுதியுடன் போராட வேண்டும் என்றார்.

மேற்படி கருத்தரங்கைத் தொடர்ந்து திரு உருத்திரகுமார் வட அமெரிக்க தமிழர் சங்கங்களின் பேரவையின் வெள்ளிவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுமார் 1500 பேர் அமர்ந்திருந்த N;மற்படி சபையினர் திரு உருத்திரகுமார் உரையாற்றி முடிந்த பின்னர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர் என்பது இங்கு குறிப்ப்pடத்தக்கது.

(அமெரிக்காவின் பல்டிமோர் நகரிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

கியூபெக் அறிவுச்சோலை கல்வி நிலையத்தின் மூன்றாவது கலைச்சோலை நிகழ்வுகள்!Top News Top News
[Tuesday, 2013-06-18 21:21:12]

கியூபெக் அறிவுச்சோலை கல்வி நிலையத்தின் மூன்றாவது கலைச்சோலை கடந்த 08-06-2013 அன்று சனிக்கிழமை மாலை 7.00 மணியளவில் 100 Sauve .St.Marie Anne High School கலையரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழர் கலை கலாச்சாரவிழுமியங்களை முழுமையாக வெளிக்கொண்டுவரும் வண்ணம் இசை இயல் நாடகமென முத்தமிழையும் மிகவும் அழகாக கலைகள் மூலம் எமது கல்வி நிலைய மாணவர்களைமட்டும் கொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இன்நிகழ்வானது முற்று முழுதாக சிறார்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



லண்டனில் ஆர்ப்பாட்டம் நடாத்திய ஈழத்தமிழர்கள் மீது சிங்களக் குண்டர்கள் தாக்குதல்! Top News Top News
[Tuesday, 2013-06-18 09:29:40]

சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கக் கோரி, லண்டன் ஓவல் துடுப்பாட்ட மைதானம் அருகே போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களை, சிறிலங்கா அரச ஆதரவுக் குண்டர்கள் தாக்கியுள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில், சிறிலங்கா - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான போட்டியின் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டி நடைபெற்ற வேளை சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இதன்போது சிங்கக் கொடியேந்திய சிறிலங்கா அரசு ஆதரவுக் குண்டர்கள், ஈழத்தமிழர்கள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் பெண்கள்,சிறுவர்களும் தாக்கப்பட்டனர். பிரித்தானிய பொலிஸார் சிறிலங்கா அரச ஆதரவாளர்களைத் தடுக்க முயன்றபோது அவர்களுடனும் மோதினர். இதையடுத்து வன்முறையில் இறங்கிய சிங்கக்கொடியேந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.



ஷாங்காய் திரைப்பட விழாவில் நம்மவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு ! Top News
[Monday, 2013-06-17 21:32:55]

கடந்த ஆண்டு கனடாவில் படமாக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி வெளியாகவிருக்கும் லெனின்.எம்.சிவத்தின் இயக்கத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவான A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம் 16வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்படவிழாவின் அதியுயர் விருதான Golden Goblet (தங்கக் குவளை) விருதுக்குப் போட்டியிட உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டமை ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களுக்கும் பெருமை தரும் ஒரு நிகழ்வாகும். லெனின் சிவம் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தினை Eyecatch Multimedia Inc நிறுவன அதிபர் விழணு முரளி தயாரித்திருக்கின்றார்.



தமிழ் மக்களே!... தமிழீழம் அழிந்துவிடவில்லை தற்காலிக தோல்விதான் - கவிப்பேரரசு வைரமுத்து!Top News
[Monday, 2013-06-17 19:26:02]

தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் படைத்த "மூன்றாம் உலகப் போர்" நூல் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிசில் நடைபெற்ற போது கவிப் பேரரசு மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் என்று செத்தது. தமிழ் என்றும் சாகாது. உலகத் தமிழர்கள் இருக்கும் வரை என்றும் வாழும் தமிழ். உலகத்தில் உள்ள 10 மொழிகள் என்றும் அழியாது. அதில் ஒன்று தமிழ் மொழி. தெரிந்து கொள்ளுங்கள்.



மட்டக்களப்பு கொக்குவில் வீரம்மா காளியம்மன் ஆலய பாற்குட பவனி Top News
[Monday, 2013-06-17 16:10:48]

மட்டக்களப்பு கொக்குவில் வீரம்மா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு ஆலய பாற்குட பவனி குழுவினரால் பாற்குட பவனி நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இவ் பாற்குட பவனியானது மட்டக்களப்பு நகரிலுள்ள ஸ்ரீ வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு திருமலை வீதி, ஊறணி வீதி வழியாக நடை பவனியாக ஆலயத்தை சென்றடைந்தது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இப்பாற்குட பவனியில் இறுநூறுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தலையில் பாற்குடம் ஏந்தி தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். அத்தோடு இரு ஆண்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு பறவைக் காவடியினை எடுத்தனர்.



நெதர்லாந்தில் இடம்பெற்ற திருவள்ளுவர் கல்வி கலைக்கழகத்தின் விளையாட்டு விழா. Top News
[Sunday, 2013-06-16 20:15:36]

கடந்த 15-6-2013 சனிக்கிழமை விளையாட்டுத்திடலில் நெதர்லாந்து திருவள்ளுவர்; கல்வி கலைக் கழகத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான வருடாந்த விளையாட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக சில சட்டச்சிக்கல்களால் நடத்தமுடியாமல் இருந்த இப்போட்டிகளில்; இவ்வருடம் எதுவித சட்டசிக்கல்கள் அற்ற நிலையில் பெருமளவான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முதலில் மாணவர்கள், பெற்றோர்கள் என இரு அணிகளாக அணிவகுத்து நிற்க அகவணக்கம் செலுத்தப்பட்டபின் கல்விக்கழகத்தின் பதாகையை இரு மாணவர்கள் பிடித்துச்செல்ல பின்னால் இரு அணிகளும் மைதானத்தை சுற்றி வந்தனர். அதன்பின் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்கள்; வழங்கி கௌரவிக்கப்பட்டனர். போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள் கல்விக்கழகத்தின் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் இப்போட்டிகள் யாவும் சிறப்பாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் திருவள்ளுவர் கல்வி கலைக் கழக நிர்வாகம் அதன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.



மணிவண்ணன் உடல் தீயுடன் சங்கமம்..! Top News Top News
[Sunday, 2013-06-16 17:34:21]

மறைந்த மணிவண்ணன் உடல் சென்னை போரூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இயக்குனர் பாரதிராஜாவின் பிரதான சீடர்களில், மணிவண்ணனும் ஒருவர். "கோபுரங்கள் சாய்வதில்லை" படம் மூலம் இயக்குனர் ஆனார். நூறாவது நாள், அமைதிப்படை போன்ற பல, வெள்ளி விழா படங்களை இயக்கியவர். பாரதிராஜா இயக்கத்தில், ரஜினி நடித்த, கொடி பறக்குது படத்தில், வில்லனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராக, 400க்கும் மேற்பட்ட படங்களில், மணிவண்ணன் நடித்துள்ளார்.



போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு NOW WOW அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையினர் உதவி!Top News
[Sunday, 2013-06-16 08:38:09]

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் (NOW WOW) உதவி மூலம் வாகரை புணாணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள வறிய மாணவர்களுக்கு பாதணி மற்றும் கல்வி உபகரணம் நேற்று வௌ;ளிக்கிழமை வழங்கப்பட்டது. இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்கள் ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நாற்பது மாணவர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை பாதணிகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் ஆகியவை வழங்கப்பட்டது. இவைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் வழங்கப்பட்டது.



பிரபல நடிகர்,இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - புலிக்கொடி போர்த்தி அஞ்சலி! Top News
[Saturday, 2013-06-15 17:06:54]

தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன்(58) மாரடைப்பால் இன்று அவரது வீட்டில் காலமானார். சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று பகல் 12 மணி அளவில் வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து உயிரிழந்தார். மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் இயக்கி உள்ளார்.



உலக சமாதானத்தை உருவாக்குவதற்கான அனுபவ பகிர்வு மாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு Top News
[Friday, 2013-06-14 20:16:26]

துருக்கி, இஸ்தான்புல் நகரில் துருக்கி மனிதவுரிமை அமைப்பு நடாத்திய மகாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, தென் ஆபிரிக்காவில் இருந்து அபிரிக்க நேஷனல் கவுன்சில் பிரதிநிதி,ஐயலாந்தில் இருந்து சின் பைன் அமைப்பு, பாஸ்கு லாண்ட் பிரநிதித்துவ படுத்தி பட்டசுன அமைப்பு கலந்து கொண்டனர். தற்சமயம் துருக்கியில் குர்திஸ்தான் விடுதலை போராட்ட அமைப்பான PKK விற்கும் துருக்கி அரசுக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடாத்தி தோல்வி கண்டிருந்த நிலையில், உலகத்தில் ஏற்கனவே விடுதலை போராட்டங்கள், அதனிடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடாத்திய இன மக்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதும், அதிலிருந்து குர்திஸ்தான் மக்கள் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையில் தமது அடிப்படை விடுதலையை விட்டுக்கொடுக்காது எவ்வாறு செயற்படலாம் என்ற நோக்கில் இந்த மகாநாடு நடைபெற்றது.



போரினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாணவர்களுக்கு இந்து இளைஞர் பேரவையினர் கல்வி உபகரணங்கள் உதவி! Top News
[Friday, 2013-06-14 13:26:31]

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் உதவி மூலம் வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்கள் ஒருவருக்கு தலா 900 ரூபாய் வீதம் 198 மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து இருநூறு ரூபாய் பெறுமதியான பாடசாலை பாதணிகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் ஆகியவை வழங்கப்பட்டது.



வவுனியா அங்காடி வியாபாரிகள் மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதம்!Top News
[Wednesday, 2013-06-12 19:16:01]

வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள அங்காடி வியாபாரிகள் தமக்கு மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக இன்று (12) உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு என புதிய அங்காடி விற்பனை நிலையமானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்டு வவுனியா நகரசபையால் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தில் தற்போது 40 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றக்கு 200 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை இதனால் தமக்கு மாற்றிடம் வழங்குமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.



ஆயர்களின் கருத்தினை அடியோடு மறுத்த மஹிந்த அரசு!Top News
[Wednesday, 2013-06-12 19:09:45]

13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மாற்றங்கள் எதனையும் செய்ய வேண்டாம் என கத்தோலிக்க பேராயர் உட்படலான அரச்சார்பற்ற நிறுவனங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையைச் சிறிலங்கா அரசு உடனடியாகவே நிராகரித்துள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டமூலமானது சிறிலங்கா மக்களின் விருப்பத்துக்கு மாறாக திணிக்கப்பட்ட ஒன்று. மேலும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மதத்தலைவர்களுடனோ அல்லது அரசார்பற்ற நிறுவனங்களுடனோ ஒருமைப்பாட்டிளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறியே சிறிலங்கா அரசு அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக இன்றைய (12) திவய்ன வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.



வட மாகாணத்திலேயே க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு - ஆளுநர் சந்திரசிறி!Top News
[Wednesday, 2013-06-12 15:51:05]

கடந்த வருடம் வடமாகாணம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் திறமையான பெறுபேற்றை பெற்றுள்ளதென வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற யாழ் வலயப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையிலும் யாழ் மாவட்டப் பாடசாலைகள் சராரியான பெறுபேற்றை பெற்றுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தரமான சித்தியை வடமாகாணம் பெற்றுள்ளதெனவும் தெரிவித்தார்.



'சிறை கைதிகளின் உறவினர்கள் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு பகிரங்க மடல்' Top News
[Wednesday, 2013-06-12 11:59:41]

சிறைச்சாலைகளில் பலவருடங்களாக எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கே இந்தக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் பிரதிகள், மன்னார் ஆண்டகைவ வண. இராயப்பு ஜோசப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


RoyaShades-l2011(04-12-11)
Ramans2011
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com