Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
சுவீடனில் சிறப்புற நடைபெற்ற கரும்புலிகள் நினைவு கிண்ண மென்பந்து சுற்றுபோட்டி. Top News
[Thursday, 2012-07-12 09:19:35]

கரும்புலிகள் நாளையொட்டி கரும்புலிகள் மென்பந்து சுற்றுபோட்டி சுவீடன், ஸ்ரொக்கொல்ம் நூர்ஸ்பொரி மைதானத்தில் கடந்த 7ஆம் திகதி மிகவும் சிறப்பாகவும் எழுச்சியாகவும் நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வு அகவணக்கத்துடன் ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து எமது தாயகமண்ணின் தேச விடுதலைக்காக தம்மின்னுயிரை தற்கொடையாக்கிய எம்தேசத்தின் வீரப் புதல்வர்களான கரும்புலிகளை நினைவுகூர்ந்து, அவர்களுக்கான பொதுச்சுடரும் ஏற்றப்பட்டது, தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது.

கரும்புலிகள் கிண்ணம் 8 அணிகள், 8 ஒவர்கள் ,9 போட்டியாளர்கள் கொண்ட சுற்றுபோட்டியாக நடைபெற்றது. இறுதி போட்டியில் சுவீடன் தமிழ் ஜக்கிய விளையாட்டு கழகமும் ஹெல்சிங்பொறி ஈழம் பொய்ஸ் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் சுவீடன் தமிழ் ஜக்கிய விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று கரும்புலிகள் கிண்ணத்தை கைப்பற்றியது.

உலகம் எங்கும் பரந்து வாழ்ந்தாலும் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுக்கும் முகமாக தமிழீழ உறுதியுடன் சுவீடன் தமிழ் இளையோர் அமைப்பு இவ் நிகழ்வை மிக திறமையாக ஒழுங்கு செய்திருந்தது.

- சுவீடன் தமிழ் இளையோர் அமைப்பு -

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது !Top News
[Friday, 2013-05-17 21:20:04]

முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குராப்பணம் செய்துவைத்தார்.



மின்சார சபை அதிகாரிகளின் கவனயீனம் - யாழில் 5 பேர் பலியெடுப்பு!Top News
[Thursday, 2013-05-16 17:29:44]

வட மாகாணத்தில் இலங்கை மின்சார சபை யாழ் பிராந்திய அதிகாரிகளின் கவனயீனத்தினால், அண்மைக் காலங்களில் குடாநாட்டில் ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அண்மையில் மல்லாகப் பகுதியில் 19 வயது இளைஞன் செல்வராஜா செந்தூரன் மின் கம்பத்திற்கு இடையாக இருந்த மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த போது மின் தாக்குதலுக்கு உட்பட்டு தூக்கி வீசப்பட்டார். அதன்போது, தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருந்த ஆனந்தபுரம் வீடு கண்டுபிடிப்பு!Top News
[Thursday, 2013-05-16 15:18:40]

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முற்றுகைப் போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.



தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு நேற்றையதினம் மாலை பிரதமர் உருத்திரகுமார் அவர்களால் தொடக்கி வைக்கபட்டுள்ளது. Top News
[Thursday, 2013-05-16 10:59:37]

தமிழீழ விடுதலையில் அக்கறைக் கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு நேற்றையதினம் புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சிலவேனியா மாநிலத்தில் Lancaster நகரில் மாநாடு அங்குராப்பண நிகழ்வு பிரதமர் உருத்திரகுமார் அவர்களால் மாலை 7 மணியளவில் தொடக்கி வைக்கபட்டுள்ளது.



கனடாவில் தழும்பகம் நடாத்திய ஓவியக்கண்காட்சி Top News
[Thursday, 2013-05-16 10:47:34]

செவ்வாய்க்கிழமை, மே 14ஆம் நாளன்று தழும்பகம் என்று அழைக்கப்படும் தமிழின அழிப்புக் காட்சியகம் கனடாவின் ஒன்டரியோ மாகாணத்தில் அமைந்துள்ள மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் தனது கண்காட்சி நிகழ்வினை இன்று நடாத்தியது. இதிலே ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக கடந்த 2008 - 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற படுகொலைகளையும் தமிழ் மக்கள் பட்ட இன்னல்களையும் மிகவும் சிறப்பாக எடுத்தியம்பும் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இவ்வோவியங்களை தமிழீழ ஓவியரான s. ராஜன் அவர்கள் வரைந்திருந்தார்.



இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் பங்கெடுப்பு ! Top News
[Wednesday, 2013-05-15 22:32:43]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் நான்காம் ஆண்டு கூட்டுநினைவு நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாட்டில், இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் அவர்கள் பங்கெடுக்கின்றார். டெல்லி தமிழ்வழங்கறிஞர் சங்கத்தின் செயலராகவும் உள்ள வழக்கறிஞர் வே.ராம் சங்கர், இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவாகவுள்ளார். எதிர்வரும் மே-18ம் நாள் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு, இன்று புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சிலவேனியா மாநிலத்தில் மாநாடு அங்குராப்பண நிகழ்வுடன் தொடங்குகின்றது.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எழுச்சி மாநாடு இன்று அமெரிக்காவில் அங்குரார்ப்பணம்! Top News
[Wednesday, 2013-05-15 21:05:37]

தமிழீழ விடுதலையில் அக்கறை கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவில் தொடங்குகின்றது. முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு அமைகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகத் தமிழர்களின் முரறைவாக தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே18 நாள் அமெரிக்க நேரம் மதியம் 12மணிக்கு முரசறையப்படவிருக்கின்றது. இந்நிலையில் சுதந்திர சாசனத்தினை மையமாக கொண்டு அமெரிக்காவின் பென்சிலவேனியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வுடன் இடம்பெறுகின்றது.



லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண் யாழில் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது! Top News
[Wednesday, 2013-05-15 19:23:39]

தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. விமானம் வெடித்து சிதறியபோது இந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் இவர் சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலிப் பகுதியில் தற்போதும் உயிரோடு வாழ்ந்து வருகின்றார். இவரது பெயர் குணமணி கோவிந்தசாமி (59 வயது) (547642317V)என்பதாகும். 1998 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கி 42 பயணிகளுடனும் 8 விமானப்படைச் சிப்பாய்களுடனும் லயன் எயார் அன்ரனோவ் 24 ரக இந்த விமானம் பயணித்த போது இரணை தீவுக்கடலில் வீழ்ந்தது. இவ் விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவடிக்கைகள் கடந்த 03ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போதே இந்த அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் கறுப்பு பெட்டி இன்னமும் மீட்கப்படவில்லை.



கல்முனை மரியா தெரேசா சர்வதேச கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டி. Top News
[Wednesday, 2013-05-15 08:11:57]

கல்முனை மரியா தெரேசா சர்வதேச கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த சனிக்கிழமையன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்களும் விசேட அதிதியாக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் லவநாதன் அவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். சிறுவர்களின் விளையாட்டும், இல்ல குடிகளும் போட்டியைக்காண வந்தோரின் கண்களை கவர்ந்திருந்தது.



ஒன்றாய் எழுந்து தமிழினவழிப்பிற்கு நீதி கேட்போம் வாரீர்: Top News
[Tuesday, 2013-05-14 20:52:03]

எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு தனது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது. நாம் அரசாட்சி செய்து தலைநிமிரந்து வாழ்ந்த எமது உயிரினும் மேலான தமிழீழ மண் இன்று சிங்கள பேரினவாதத்தால் அடிமைப்பட்டுள்ளது. வந்தோரை வரவேற்ற எமது தமிழீழ உறவுகள் சொல்லெனா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட வகையில் எமது மக்களின் கருத்துரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை பொருளாதாரவுரிமை மறுக்கப்பட்டு எமது சகோதரிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி எமது சகோதரர்களை துன்புறுத்தி தமிழினவழிப்பை நடாத்தி வருகின்றது.



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிராத்தனை நடத்துவதற்கான கலந்துரையாடல்! Top News
[Tuesday, 2013-05-14 20:25:35]

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த பொதுமக்களை நினைவு கூர்ந்து வவுனியாவில் நடத்தப்படவுள்ள பிராத்தனைக் கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன தலைமை இன்று காலை 10 மணிக்கு வவுனியாவில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் விசேடமாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் வினோ ரோதராதலிங்கம் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான சண் மாஸ்ரர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் கஜன் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பிரான்சில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை வலுவூட்டி ஆடுகளமிறங்கிய வீரர்கள்! Top News
[Tuesday, 2013-05-14 19:52:42]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை கூட்டுநினைவு கொள்ளும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் , முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு வலுவூட்டும் பொருட்டு , பிரான்சில் இடம்பெற்றிருந்த தமிழீழ சுதந்திர சாசன எழுச்சிக்கிண்ணத்திற்கான ஆடுகள சுற்றுப்போட்டி, நம்பிக்கையினை கட்டியெழுப்பும் உணர்வெழுச்சி நிகழ்வாக அமைந்துள்ளது. முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரத்தின் முதற்நாளில் (12-05-2013) இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.



இலங்கை அரசு தமிழருக்கு நன்மை பயக்கும் விதமாக எந்த அரசியல் திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை - கி.துரைராஜசிங்கம்! Top News
[Tuesday, 2013-05-14 18:11:27]

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் போது சட்டங்களில் திருத்தம் தேவை என்பதை செவிமடுத்து காலத்தின் தேவைக்கென அரசியலமைப்புகளை மாற்றியமைத்தார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினத்தவருக்கு நன்மைபயக்கும் வகையில் எந்த அரசியல் திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை நிர்முகப்பிள்ளையார் ஆலய முன்றலில் தந்தை செல்வாவின் 36 வது நினைவு தின நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.



இன்றைய தினம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடப்படவுள்ள NO FIRE ZONE! Top News
[Tuesday, 2013-05-14 11:11:51]

யுத்த சூனியப் பிரதேசம் என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படத்தினை இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திரையிடவும் இது குறித்து விவாதமொன்றை மேற்கொள்ளவும் நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒழுங்குகளை மனித உரிமை கண்காணிப்பகம், சர்வசேத மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச நெருக்கடி குழு ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இவ் ஆவணத் திரைப்படம் திரையிட்டதன் பின்னர் இடம்பெறவுள்ள குழு விவாதத்தில் ஐரோப்பிய நிறுவனங்களின் அலுவலக பணிப்பாளர் நிக்கொலஸ் பெகர், சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் அலன் கீனன், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் பணிப்பாளர் லோட் லீச்ட் உள்ளிட்டோர் விசேட உரை நிகழ்த்தவுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவில் தமிழீழ சுதந்திர சாசனம் முழங்கட்டும்:- பிரதமர் வி.உருத்திரகுமாரன் Top News
[Tuesday, 2013-05-14 11:11:46]

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தியதான நினைவேந்தல் வாரம் உலகத்தமிழ் பரப்பெங்கும் முன்னெடுக்கப்படத் தொடங்கியுள்ள இவ்வேளை தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே-18ம் நாள் சனிக்கிழமை (18-05-2013) அமெரிக்க நியூயோர்க் நேரம்) மதியம் 12 மணிக்கு முரசறையப்பட இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.


Mahesan supramaniyam 031109
INNSYS-20120930
Ramans2011
NIRO-DANCE-100213
Canada Kanthasamy Kovil
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com