Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
லண்டனில் சிறப்புற நடைபெற்ற கரும்புலிகள் நிகழ்வு நாள்! Top News Top News
[Friday, 2012-07-06 15:26:58]

தன் இனம் வாழ புயலாகி, தன் நிலம் மீட்க வெடியாகி, தமிழீழத்தின் விடுதலைக்கான பாதையின் தடை நீக்கிகளாகி, தற்கொடையாளராய் வீரமரணத்தை தழுவிய மாவீரர்களை நினைவு கொள்ளும் வணக்க நிகழ்வு லண்டனில் நடைபெற்றது.

பிரித்தானியாவின் தென்மேற்கு லண்டன் பகுதியின் Mitcham பகுதியில் அமைந்துள்ள North Mitcham Association Ltd மண்டபத்தில் 05.07.2012 நேற்று மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 10:00 மணிவரை மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை திரு.துரைலிங்கம், திருமதி.வாசுகி, திரு.வல்வை தேவன், திரு.தர்மி, ஆகியோர் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்கொடையாளர்களுக்கான நினைவுருவப் படத்திற்கு திரு.மோகன் அவர்கள் ஈகச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்தார்.

தொடர்ந்து மாவீரரான கரும்புலி கப்டன் இளையவளின் திருவுருவப்படத்திற்கு அவரின் சகோதரன் திரு.குமார் அவர்கள் ஈகச்சுடரேற்றி மலர்வணக்க நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வும், தற்கொடையாளர்களின் நினைவும் சுமந்த எழுச்சி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தமிழீழத் திருநாட்டிற்காய் தம்மையே தற்கொடையாக்கிய மாவீரர்களை போற்றி வணங்கும் வணக்கப் பாடலுக்கான நடனமும், மாவீரர்களின் நினைவுக் குறிப்புகளும், சமகால, எதிர்கால தமிழீழ விடுதலைக்கான போராட்ட வழிமுறைச் சுட்டிக்காட்டி, திரு.புலவர், திரு.மாறன், திரு.சங்கீதன் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் திரு.உருத்திராபதி சேகர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.

குறிப்பாக தனது உரையில் கரும்புலிகளின் தியாகங்களைத் தொட்டுச்சென்ற திரு.புலவர் அவர்கள் உரையாற்றுகையில், யுத்தம் முடிந்ததாகக் கூறப்பட்டு இன்று மூன்று வருடங்களை கடந்துள்ள நிலையிலும் சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும், இன்றும் எமக்கான நீதியை, பெற்றுத்தர முன்வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, எமக்கான உரிமைகளை வென்றெடுக்க நாம் தான் தொடர்ந்து போராடவேண்டும் என்பதையே இந் நிலை மீண்டும் எமக்கு உணர்த்தி நிற்கின்றது என்றார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் திரு.உருத்திராபதி சேகர் அவர்கள் கூறிகையில், இன்று எம் தேசம் சந்தித்துள்ள மனித உயிரிழப்புக்கள், கலாச்சார சீர்கேடுகள், நாளாந்தம் இழக்கப்படும் நிலங்கள் என தாயகத்தில் தினமும் திட்டமிட்ட ரீதியிலான தமிழின அழிப்பு நடந்தேறிவருகிறது. இந்த நிலையை நாம் நீடிக்க விடமுடியாது. போராடாமல் விடுதலை இல்லை. மிகவும் அடிமட்டத்திலான போராட்டங்கள் ஆரம்பித்துவிட்டன.

மூன்று ஆண்டுகள் பொறுமை காத்தும் முடியாத நிலையிலேயே இன்று போராட்டங்கள் மீண்டும் துளிர்விடுகின்றன. இது நிச்சயம் வலுப்பெறும். தாயகத்து மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நாம் அனைவரும் ஆதரவு போராட்டங்களை தொடர்ந்து செய்யவேண்டும், தாயக உறவுகளோடு தோளோடு தோள் நிற்கவேண்டும் என்றார்.

நீண்ட விடுதலைப் போராட்டத்தின் வலிகளையும், சாதனைகளையும், மாவீரர்களின் தியாகங்களையும் எடுத்துக்கூறி உரையாற்றிய திரு.மாறன் அவர்கள் கூறுகையில் "தமிழர்மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைக்கு எதிராக நடைபெற்ற விடுதலை வேள்வியில் இளைஞர், யுவதிகளின் தியாகங்கள் வானத்தையே தொட்டு நிற்கும் நிலையில், விடுதலைப் போராட்டம் தம்மிடமே ஒப்படைத்ததாகக் கூறிக்கொள்ளும் புலம்பெயர்ந்து உலகப்பரப்பெங்கும் வாழும் இளையோர், அதற்கேற்றால் போல் காத்திரமான செயற்பாடுகளை அர்ப்பணிப்புக்களினூடாக செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து திரு.மாறன் அவர்கள் கூறுகையில், விடுதலைப் போராட்டத்தின் பலமே மக்கள் தான் என்று தேசியத்தலைவர் கூறியதை சுட்டிக்காட்டி அம்மக்கள் பலம் தொடர்ந்தும் விடுதலை அமைப்புடன் நீடிப்பதனூடாகவே எமக்கான உரிமைகளையும், விடுதலையையும் பெற்றெடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு கடந்த மூன்று வருடங்களாக உலக மாமன்றங்களின் முன்பும், உலக நாடுகள் முன்பும் எமக்கான நீதியை பெற்றுத்தருமாறும், விடுதலை அமைப்புடனான எந்தவகையிலாவது தொடர்பினை ஏற்படுத்துமாறும் கேட்டு நிற்கின்றோம்.

ஆனால் அதற்கான எந்த வாய்ப்புக்களும் இன்றுவரை ஏற்படுத்தப்படவில்லை. எனவே இந் நாளில் மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திடம் அதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தருமாறு வேண்டி நிற்கின்றோம் என்றார்.

தொடர்ந்து திரு.சங்கீதன் அவர்கள் கூறுகையில், நாம் வலிகளோடு நின்றாலும் உறுதியோடு நிற்கின்றோம். மண்ணின் விடுதலைக்காக சமர்க்களமாடி வீரமரணமடைந்து மண்ணுள் வாழும் மாவீரர்களின் தியாகங்களுக்கும் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

அவர்களின் இலட்சியங்களை வென்றெடுக்க வேண்டும். கரும்புலிகளாகி விடுதலையின் வெற்றிக்கு வலுச்சேர்த்து வெடிக்கின்ற இறுதிக் கணங்களில் மக்களிடம் அவர்கள் கூறிச்சென்றது "எம்மை மறக்காதீர்" என்பதே.

ஆகவே அவர்களின் தியாகத்தினூடாக நிறைவேற்றப்படவேண்டிய இலட்சியம் இன்னும் எம்முன்னே உள்ளது. எனவே அதை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளான "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" எனும் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் நூலும், "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் அகரம் அமுதனின் நூலும் விற்பனை செய்யப்பட்டது.

தன் நாட்டிற்காய் உடலோடும், வாகனத்தோடும், படகோடும், விமானத்தோடும் வெடிசுமந்து சென்று எதிரியின் இரும்புக் கோட்டைகளையும், எதிரியின் கடல் கலன்களையும் சிதறடித்த அந்த உயிராயுதங்களின் அற்புத தியாகம், கரும்புலி கப்டன் மில்லருடன் ஆரம்பமாகி 25 ஆண்டுகளின் நினைவு நாளான நேற்று இந்த நிகழ்வு லண்டனில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

இந்திய வீடுகள் அமைக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம் - இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார்!Top News
[Wednesday, 2013-05-22 19:36:00]

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.



வாழைச்சேனை கல்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Top News
[Wednesday, 2013-05-22 08:57:08]

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கணித பாடம் கற்பிக்கும் சிவநேசன் கேமராஜன் (வயது 30) என்பவரே இவ்வாறு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். அவரோடு இப்பாடசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் மார்கண்டு அகிலன் (வயது 30) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: - முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்தது ! Top News Top News
[Tuesday, 2013-05-21 19:57:07]

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டுநினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம் :



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு தோல்வி - ஏற்றுக்கொண்டார் இந்திய உயர்ஸ்தானிகர்! Top News
[Tuesday, 2013-05-21 15:36:16]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்திய உயர் ஸ்தானிகரக்கு விசேட விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்குமிடையெ இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Top News
[Tuesday, 2013-05-21 09:13:12]

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது . யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும் வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .



மே18 நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறையில் நடைபெற்றது. Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



மெல்பேணில் நடைபெற்று வரும் தமிழர் இனவழிப்பு புகைப்படக் கண்காட்சி! Top News
[Monday, 2013-05-20 08:08:59]

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் ஞாயிற்றுக்கிழமை (19-05-2013) அன்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் (Tamil refugee Council) சேர்ந்த Ron Guy தலைமையில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான எமது மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடக்கம் கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை அவுஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்ந்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.



தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையினை முரசறைந்த தமிழீழ சுதந்திர சாசனம் : 110 000 மேற்பட்ட மக்கள் பங்கெடுப்பு ! சிங்கள தேசத்திற்கு பேரிடி!Top News Top News
[Sunday, 2013-05-19 22:04:59]

தமிழர் தேசத்தினை போரில் வெற்றிகொண்டுவிட்டதென்ற மிதப்பில் சிங்கள தேசம் தனது இராணுவ அணிவகுப்புடன் பவனிவந்தவேளை, 1 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கெடுத்துக் கொண்ட தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்பட்டது. 2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையில் இராஜதந்திர களத்தில் தமிழீழ சுதந்திர சானத்தின் முரசறைவு தமிழர் தரப்பின் வரலாற்று முக்கியமிக்கதொரு பெரும் அரசியல் முன்னகர்வாக கருதப்படுவதோடு ஆயிரக்கணக்கான தமிழீழத் தாயக மக்கள் தங்கள் கருத்துக்களை இச்சாசன உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளமை உணர்வெழுச்சியினை ஏற்படுத்தியுள்ளது.



பிரான்சில் நடைபெற்ற மே. 18 தமிழின அழிப்பு நினைவு நாள் Top News
[Sunday, 2013-05-19 21:12:43]

தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். இன்றைய போராட்டத்தில் குர்திஸ்தான் விடுதலை அமைப்பும் பங்கு கொண்டு தமது முழு ஆதரவையும் தெரிவித்தனர்.



மெரினாவில நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். Top News
[Sunday, 2013-05-19 20:44:05]

சிங்கள இனவெறியர்களால் இலங்கைத் தீவில் ஈழத்தில் நடாத்தப்பட்ட தமிழினப் படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நினைவேந்தல் நிகழ்ச்சியாக இன்று 19.05.13 சென்னை மெரினாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வானது மே 17 இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.



தனித் தமிழீழத்தினை வென்றடைவதற்கான தெளிவான நிகழ்ச்சி நிரலை முன்நிறுத்திய பிரதமர் உருத்திரகுமாரனின் மே 18 உரை!Top News
[Sunday, 2013-05-19 20:39:54]

முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன், தனது மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் உரையில் தெளிவாக முன்னிறுத்தியுள்ளார். உலகத் தமிழினம் நோக்கிய தனதுரையின் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுப் பெருநிகழ்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.


TDE_Computers2011
Ramans2011
AJRwindows22.05.13
NIRO-DANCE-100213
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
TamilsGuid-191012-2013
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com