Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
சென்னை - மயிலாப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் முன் சம்பிக ரணவக்கவின் கொடும்பாவி எரிப்பு: Top News
[Thursday, 2012-06-21 21:36:59]

தமிழர்கள் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று பேசிய இலங்கை அரசின் இனவெறி அமைச்சர் சாம்பிக ரணவக்கவைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் இன்று 21-6-2012 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை மயிலாப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் முன், கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 'இந்திய அரசே இலங்கை அமைச்சருக்குக் கண்டனம் தெரிவி! இலங்கைத் தூதரகத்தை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்து! இலங்கையைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!' ஆகிய முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அமைச்சர் சாம்பிக ரணவக்கவின் கொடும்பாவியும், இலங்கைக் கொடியும் எரிக்கப்பட்டன. மாநில நிர்வாகிகள் உஞ்சைஅரசன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், இளஞ்சேகுவேரா, வழக்கறிஞர் பழனிமுத்து, எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் ஆ.விடுதலைச்செல்வன், இர.செந்தில்குமார் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். பின்னர் அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர்.

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

ஷாங்காய் திரைப்பட விழாவில் நம்மவர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பு ! Top News
[Monday, 2013-06-17 21:32:55]

கடந்த ஆண்டு கனடாவில் படமாக்கப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 19ம் திகதி வெளியாகவிருக்கும் லெனின்.எம்.சிவத்தின் இயக்கத்தில் புலம் பெயர்ந்த நாடுகளில் வசிக்கும்கலைஞர்களினால் உருவான A Gun & A Ring என்ற தமிழ்த் திரைப்படம் 16வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்படவிழாவின் அதியுயர் விருதான Golden Goblet (தங்கக் குவளை) விருதுக்குப் போட்டியிட உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டமை ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களுக்கும் பெருமை தரும் ஒரு நிகழ்வாகும். லெனின் சிவம் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தினை Eyecatch Multimedia Inc நிறுவன அதிபர் விழணு முரளி தயாரித்திருக்கின்றார்.



தமிழ் மக்களே!... தமிழீழம் அழிந்துவிடவில்லை தற்காலிக தோல்விதான் - கவிப்பேரரசு வைரமுத்து!Top News
[Monday, 2013-06-17 19:26:02]

தமிழ் மக்களே! தமிழீழம் அழிந்து போய் விட்டது என்று அஞ்ச வேண்டாம். தற்காலிக தோல்வி தான். தர்மம் வெல்லும், தமிழ் வெல்லும் என்று கவிப் பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார். கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள் படைத்த "மூன்றாம் உலகப் போர்" நூல் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிசில் நடைபெற்ற போது கவிப் பேரரசு மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ் என்று செத்தது. தமிழ் என்றும் சாகாது. உலகத் தமிழர்கள் இருக்கும் வரை என்றும் வாழும் தமிழ். உலகத்தில் உள்ள 10 மொழிகள் என்றும் அழியாது. அதில் ஒன்று தமிழ் மொழி. தெரிந்து கொள்ளுங்கள்.



மட்டக்களப்பு கொக்குவில் வீரம்மா காளியம்மன் ஆலய பாற்குட பவனி Top News
[Monday, 2013-06-17 16:10:48]

மட்டக்களப்பு கொக்குவில் வீரம்மா காளியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தை முன்னிட்டு ஆலய பாற்குட பவனி குழுவினரால் பாற்குட பவனி நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இவ் பாற்குட பவனியானது மட்டக்களப்பு நகரிலுள்ள ஸ்ரீ வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு திருமலை வீதி, ஊறணி வீதி வழியாக நடை பவனியாக ஆலயத்தை சென்றடைந்தது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இப்பாற்குட பவனியில் இறுநூறுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தலையில் பாற்குடம் ஏந்தி தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர். அத்தோடு இரு ஆண்கள் தங்களுடைய நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு பறவைக் காவடியினை எடுத்தனர்.



நெதர்லாந்தில் இடம்பெற்ற திருவள்ளுவர் கல்வி கலைக்கழகத்தின் விளையாட்டு விழா. Top News
[Sunday, 2013-06-16 20:15:36]

கடந்த 15-6-2013 சனிக்கிழமை விளையாட்டுத்திடலில் நெதர்லாந்து திருவள்ளுவர்; கல்வி கலைக் கழகத்தின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான வருடாந்த விளையாட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கடந்த இரண்டு வருடங்களாக சில சட்டச்சிக்கல்களால் நடத்தமுடியாமல் இருந்த இப்போட்டிகளில்; இவ்வருடம் எதுவித சட்டசிக்கல்கள் அற்ற நிலையில் பெருமளவான மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முதலில் மாணவர்கள், பெற்றோர்கள் என இரு அணிகளாக அணிவகுத்து நிற்க அகவணக்கம் செலுத்தப்பட்டபின் கல்விக்கழகத்தின் பதாகையை இரு மாணவர்கள் பிடித்துச்செல்ல பின்னால் இரு அணிகளும் மைதானத்தை சுற்றி வந்தனர். அதன்பின் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதக்கங்கள்; வழங்கி கௌரவிக்கப்பட்டனர். போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள் கல்விக்கழகத்தின் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் இப்போட்டிகள் யாவும் சிறப்பாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் திருவள்ளுவர் கல்வி கலைக் கழக நிர்வாகம் அதன் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.



மணிவண்ணன் உடல் தீயுடன் சங்கமம்..! Top News Top News
[Sunday, 2013-06-16 17:34:21]

மறைந்த மணிவண்ணன் உடல் சென்னை போரூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இயக்குனர் பாரதிராஜாவின் பிரதான சீடர்களில், மணிவண்ணனும் ஒருவர். "கோபுரங்கள் சாய்வதில்லை" படம் மூலம் இயக்குனர் ஆனார். நூறாவது நாள், அமைதிப்படை போன்ற பல, வெள்ளி விழா படங்களை இயக்கியவர். பாரதிராஜா இயக்கத்தில், ரஜினி நடித்த, கொடி பறக்குது படத்தில், வில்லனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராக, 400க்கும் மேற்பட்ட படங்களில், மணிவண்ணன் நடித்துள்ளார்.



போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு NOW WOW அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையினர் உதவி!Top News
[Sunday, 2013-06-16 08:38:09]

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் (NOW WOW) உதவி மூலம் வாகரை புணாணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள வறிய மாணவர்களுக்கு பாதணி மற்றும் கல்வி உபகரணம் நேற்று வௌ;ளிக்கிழமை வழங்கப்பட்டது. இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்கள் ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நாற்பது மாணவர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை பாதணிகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் ஆகியவை வழங்கப்பட்டது. இவைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் வழங்கப்பட்டது.



பிரபல நடிகர்,இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - புலிக்கொடி போர்த்தி அஞ்சலி! Top News
[Saturday, 2013-06-15 17:06:54]

தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன்(58) மாரடைப்பால் இன்று அவரது வீட்டில் காலமானார். சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று பகல் 12 மணி அளவில் வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து உயிரிழந்தார். மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் இயக்கி உள்ளார்.



உலக சமாதானத்தை உருவாக்குவதற்கான அனுபவ பகிர்வு மாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு Top News
[Friday, 2013-06-14 20:16:26]

துருக்கி, இஸ்தான்புல் நகரில் துருக்கி மனிதவுரிமை அமைப்பு நடாத்திய மகாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, தென் ஆபிரிக்காவில் இருந்து அபிரிக்க நேஷனல் கவுன்சில் பிரதிநிதி,ஐயலாந்தில் இருந்து சின் பைன் அமைப்பு, பாஸ்கு லாண்ட் பிரநிதித்துவ படுத்தி பட்டசுன அமைப்பு கலந்து கொண்டனர். தற்சமயம் துருக்கியில் குர்திஸ்தான் விடுதலை போராட்ட அமைப்பான PKK விற்கும் துருக்கி அரசுக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடாத்தி தோல்வி கண்டிருந்த நிலையில், உலகத்தில் ஏற்கனவே விடுதலை போராட்டங்கள், அதனிடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடாத்திய இன மக்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதும், அதிலிருந்து குர்திஸ்தான் மக்கள் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையில் தமது அடிப்படை விடுதலையை விட்டுக்கொடுக்காது எவ்வாறு செயற்படலாம் என்ற நோக்கில் இந்த மகாநாடு நடைபெற்றது.



போரினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாணவர்களுக்கு இந்து இளைஞர் பேரவையினர் கல்வி உபகரணங்கள் உதவி! Top News
[Friday, 2013-06-14 13:26:31]

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் உதவி மூலம் வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்கள் ஒருவருக்கு தலா 900 ரூபாய் வீதம் 198 மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து இருநூறு ரூபாய் பெறுமதியான பாடசாலை பாதணிகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் ஆகியவை வழங்கப்பட்டது.



வவுனியா அங்காடி வியாபாரிகள் மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதம்!Top News
[Wednesday, 2013-06-12 19:16:01]

வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள அங்காடி வியாபாரிகள் தமக்கு மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக இன்று (12) உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு என புதிய அங்காடி விற்பனை நிலையமானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்டு வவுனியா நகரசபையால் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தில் தற்போது 40 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றக்கு 200 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை இதனால் தமக்கு மாற்றிடம் வழங்குமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.



ஆயர்களின் கருத்தினை அடியோடு மறுத்த மஹிந்த அரசு!Top News
[Wednesday, 2013-06-12 19:09:45]

13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மாற்றங்கள் எதனையும் செய்ய வேண்டாம் என கத்தோலிக்க பேராயர் உட்படலான அரச்சார்பற்ற நிறுவனங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையைச் சிறிலங்கா அரசு உடனடியாகவே நிராகரித்துள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டமூலமானது சிறிலங்கா மக்களின் விருப்பத்துக்கு மாறாக திணிக்கப்பட்ட ஒன்று. மேலும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மதத்தலைவர்களுடனோ அல்லது அரசார்பற்ற நிறுவனங்களுடனோ ஒருமைப்பாட்டிளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறியே சிறிலங்கா அரசு அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக இன்றைய (12) திவய்ன வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.



வட மாகாணத்திலேயே க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு - ஆளுநர் சந்திரசிறி!Top News
[Wednesday, 2013-06-12 15:51:05]

கடந்த வருடம் வடமாகாணம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் திறமையான பெறுபேற்றை பெற்றுள்ளதென வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற யாழ் வலயப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையிலும் யாழ் மாவட்டப் பாடசாலைகள் சராரியான பெறுபேற்றை பெற்றுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தரமான சித்தியை வடமாகாணம் பெற்றுள்ளதெனவும் தெரிவித்தார்.



'சிறை கைதிகளின் உறவினர்கள் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு பகிரங்க மடல்' Top News
[Wednesday, 2013-06-12 11:59:41]

சிறைச்சாலைகளில் பலவருடங்களாக எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கே இந்தக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் பிரதிகள், மன்னார் ஆண்டகைவ வண. இராயப்பு ஜோசப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து - மன்னாரில் சம்பவம் Top News

[Wednesday, 2013-06-12 11:25:13]

மன்னார் நகரிலிருந்து பிரதான பாலம் வழியாக சென்றுகொண்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்தை விட்டு விலகிச்சென்று கடற்பகுதியினுள் பாய்ந்துள்ளது. மடுவிலிருந்து தலைமன்னார்வரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ரயில் பாதை வேலைக்காக மன்னாருக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த இந்த டிப்பர் ரக வாகனம் பொருட்களை இறக்கிவிட்டு சென்றுகொண்டிருந்தபோதே நேற்று திங்கட்கிழமை மாலை இவ்வாறு விபத்திற்குள்ளானது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த இந்த டிப்பர் ரக வாகனம் பாலத்திற்கு அருகில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த 6 கொங்கிரீட் தூண்களை உடைத்துக்கொண்டு சென்று கடற்பகுதியினுள் பாய்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.



13 ஐ முற்றாக ஒழிக்க சிங்கள பெளத்தர்களின் போராட்டம் தீவிரம் - 29 அமைப்புக்கள் கூட்டணி Top News
[Wednesday, 2013-06-12 09:47:34]

அரசியலமைப்பு ரீதியாக நாட்டை பிரிக்கும் 13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் நாட்டில் சிங்கள பெளத்தர்களின் போராட்டம் வெடிக்குமென்றும் 29 சிங்கள பெளத்த கடும்போக்கு அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. கத்தோலிக்க ஆயர் பேரவை மற்றும் புலி ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் அந்த அமைப்புக்கள் குற்றம் சாட்டின. கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள பெளத்த மகா சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணா தேசிய சங்கம் சம்மேளனம் உட்பட 29 கடும் போக்கு சிங்கள பெளத்த அமைப்புகளைச் சார்ந்த பெளத்த குருமார் உட்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


Ramans2011
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
INNSYS-20120930
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
RoyaShades-l2011(04-12-11)
AJRwindows22.05.13
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com