Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஜெமினி குடும்பத்துடன் ஆலோசனையா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
[Tuesday 2018-02-20 17:00]

பழம்பெரும் நடிகையும், ஜெமினி கணேசன் மனைவியுமான சாவித்ரி வாழ்க்கை சரித்திர படம் நடிகையர் திலகம் பெயரில் உருவாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நிஜவாழ்க்கை கதையான இதில் சாவித்ரிபற்றி ஜெமினி கணேசன் குடும்பத்தினருடன் பேசினீர்களா என்றதற்கு பதில் அளித்தார் கீர்த்தி. அவர் கூறியது: சாவித்ரி எவ்வளவு பெரிய நடிகை, ரசிகர்களிடம் எவ்வளவு புகழ் சம்பாதித்தவர் என்பது எனக்கு தெரியும். அவரது வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.

அவரது கேரக்டரை என்னால் செய்யமுடியுமா என்பதே அதற்கு காரணம். படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே அவர் நடித்த பல படங்களை பார்த்தேன். படப்பிடிப்பு நேரத்தில் அவரைபோல மேக்அப் அணிய மூன்றரை மணி நேரம் ஆகும். சாவித்ரியாக நடிப்பது எனக்கு கிடைத்த பெருமை. சினிமாவில் அவர் எப்படி நடிக்கிறார் என்பதை அவரது படங்கள் பார்த்து தெரிந்துகொண்டாலும் நிஜவாழ்க்கையில் அவரது மேனரிசம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.

அதை தெரிந்துகொள்வதற்காக சாவித்ரி மகளை சந்தித்து பேசினேன். அவர் நிறைய விஷயங்களை எனக்கு தெரிவித்தார். பிறகு 4 பக்கம் கொண்ட பேப்பரில் மேலும் பல தகவல்கள் எழுதி அனுப்பினார். அதை படித்தபோது மேலும் சாவித்ரி பற்றிபுரிதல் ஏற்பட்டது. ஜெமிணிகணேசன் குடும்பத்தினரிடம் சாவித்ரி பற்றி கேட்டீர்களா என்கிறார்கள். அப்படி யாரிடமும் பேசவில்லை. சாவித்ரி மகளுடனே சிறிது நேரம் பேசினேன். இவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா