Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரம்ரனில் களைகட்டிய தமிழ் மரபுத்திங்கள் பொங்கல்விழா: Top News
[Monday 2018-02-05 07:00]

பிரம்ரன் தமிழ் சமூகம் நடாத்திய 6ம் ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் பொங்கல் விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. உலகளாவிய தமிழர்கள் ஒருமித்து, நன்றி மறவாமை என்கின்ற உயரிய நோக்கத்திற்காக ஒரே மாதிரியாகக் கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்புக்குரிய விழா கடந்த 21.1.18 ஞாயிறு அன்று Brampton.Sandalwood Heights S. S அரங்கில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பெருந்தொகையான பார்வையாளர்களுடன் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவினை பிரம்ரன் தமிழ் மூத்தோர் அமைப்புடன் இணைந்து பிரம்ரன் தமிழ் ஒன்றியத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. விழா மிகவும் எழுச்சியுடன் கலை நிகழ்ச்சிகளில் எதுவித தொய்வுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது. விழாக்குழுவினரின் முன்கூட்டிய திட்டமிடலும் நிகழ்ச்சிகளை நேர்த்தியாக நெறிப்படுத்திய விதமும் அவர்களது விழா ஒழுங்கமைப்பு பற்றிய அனுபவத்தை வெளிப்படுத்தியது. மண்டபம் நிறைந்த மக்களின் ஏகோபித்த கரகோசம் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய சிறுவர்களுக்கும் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்த விழாக்குழுவினருக்கும் உற்சாகமாக அமைந்தது எனலாம்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண மற்றும் நகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவின் சிறப்பு அம்சமாக, தமிழ் மரபுத்திங்கள் சம்பந்தமாக பிரம்ரன் தமிழ் அமைப்பால் வெளியிடப்பட்ட சிறப்பு மலரின் பிரதிகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் இசை மற்றும் கிராமியப் பாடல்கள்களுக்கான நடனம் அடங்கிய கலை நிகழ்ச்சியுடன் கிராமிய சூழ்நிலையில் பொங்கல் விழா நடைபெற்றது. 6வது ஆண்டாக நடைபெறும் இந்த பொங்கல் விழாவில், நிர்வாகசபை உறுப்பினர்களால் தயார் செய்யப்பட்ட பொங்கலும் சிற்றுண்டிகளும் தாராளமாக வழங்கப்பட்டதுடன் பங்குபற்றிய அனைவரும் விரும்பிப்பெற்று உண்டு மகிழ்ந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தத்தமது சொந்த அலுவல்களையே ஒழுங்காகச் செய்வதற்கு தமக்கு நேரம் போதவில்லையெனப் புலம்பும் இந்த நாட்டு வாழ்க்கைச் சூழலில் இப்படியான பொதுநிகழ்ச்சிகளை எவ்வாறு இவ்வளவு சிறப்பாகச் செய்கின்றார்கள் என்ற ஆச்சரியம் பங்குபற்றியவர்களிடம் இருந்ததை அறியமுடிந்தது. இதற்கு முக்கிய காரணம் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கிடையிலான புரிந்துணர்வும் நட்பும் சகிப்புத்தன்மையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது தமிழ் மொழி மீதான பற்றும் எமது எதிர்காலச் சந்ததிக்குத் தமிழைக் கற்பிப்பதன் மூலம் எமது மொழியையும் கலாச்சாரத்தையும் எந்த விலை கொடுத்தாவது பேணிப்பாதுகாக்கவேண்டும் என்ற பொதுநல நோக்குடைய சமுதாய அக்கறையுமேயாகும் என்பதனை உணரமுடிந்தது.

மேலும் விழாவை மெருகூட்டிய விடயமாக தமிழறிவுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கிய நிகழ்வு அமைந்தது என்றால் அது மிகையல்ல. பலதரப்பு மக்களும் குடும்பத்தோடு கலந்துகொண்டு இந்த பொங்கல் விழாவைச் சிறப்பித்ததுடன் நல்லதோர் விழாவைக்கண்டு ரசித்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா