Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
10 இருதய நோயாளிகளுக்கு இலவச சத்திர சிகிச்சையை செந்தில் குமரனின் நிவாரண நிதியம் ஒழுங்கு! Top News Top News
[Friday 2018-01-26 18:00]

இலங்கையில் இதய நோயினினால் அல்லலுறும் பல உறவுகள், அரசாங்க மருத்துவமனையில் இலவச சிகிச்சைக்கு காத்திருப்பு பட்டியலில் தங்கள் பெயரை பதிந்து விட்டு, பல வருடங்களாக அந்த நோயினால் அவதியுற்று உயிரையும் மாய்த்துள்ளனர்.

அந்த பட்டியலில் சிறு பிள்ளைகளோ ஏராளம். இப்படி காத்திருக்கும் நோயாளிகளின் விவரங்களை கனடா நாட்டிலுள்ள பாடகரும் - மின்னல் முஸிஸின் ஸ்தாபகருமான செந்தில் குமரன் அவர்கள் எடுத்து, அதற்கான நிதியினை இசை நிகழ்வுகளின் ஊடாகவும், நன்கொடைகள் ழூலமாகவும் பொது மக்களிடம் திரட்டி, அவர்களுக்கு கொழும்பில் உள்ள லங்கா மருத்துவமனையில் இலவசமாக சத்திர சிகிச்சையினை வழங்கி வருகின்றார்.

இப்படி அவர் 2017 வரை 28 உயிர்களை காப்பாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நிவாரண திட்டங்களை அடுக்கடுக்காக நிறைவேற்றி வருகின்றார். அந்த ரீதியில் இந்த மாத இறுதிக்குள் 10 நோயாளிகளின் துயர் தீர்க்கும் நோக்குடன் சத்திர சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை 7 நிறைவேறி மிகுதி 3 இந்த வார இறுதி நாட்களுக்குள் நிறைவேற்றப்பட உள்ளது.

பயனடைந்த நோயாளிகளின் விபரங்கள் வருமாறு:

1) தேனுஷன் (4 வயது) - கனகபுரம், கிளிநொச்சி

2) நிதிஷின் (5 வயது) - சுழிபுரம், யாழ்பாணம்

3) தக்சிகா ரவீந்திரன் (15 வயது) - உதயநகர் - கிளிநொச்சி

4) கென்னடி (5 வயது) - பாசையூர், யாழ்பாணம்

5) பிரவீன் (7 வயது) - கைத்தடி, யாழ்பாணம்

6) திருமதி தங்கவேல் ராமஜெயம் - (35 வயது) - கித்துள், மட்டக்களப்பு

7) சுதர்ஷன் (19 வயது) - மண்டூர், மட்டக்களப்பு

8) யதுர்சன் (4 வயது) - பளை, கிளிநொச்சி

9) நிஷாந்தன் (10 வயது) - சாவகச்சேரி, யாழ்பாணம்

10) சகானா (5 வயது) - பருத்தித்துறை, யாழ்பாணம்

இவருடைய திட்டத்தின் மூலம் சிகிக்சை பெற்ற பயனாளிகள் அனைவரையும் இவர் லங்கா மருத்துவமனையில் சந்தித்த நிகழ்வு சமீபத்தில் இடம் பெற்றது. பல சத்திர சிகிச்சையினை இலவசமாக செய்துதவிய இருதய வைத்திய நிபுணர்களான Dr. காந்திஜி மற்றும் Dr . லுஷாந்த, Dr. ரகுராம் அவர்களை செந்தில் குமரன் பாராட்டி பேசியதுடன், மருத்துவ சிகிக்சை செலவினை பெரிதாக குறைத்துதவிய லங்கா மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி Dr பிரசாத் அவர்களுக்கும் நிர்வாகத்திக்கும் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்து கொண்டார்.

இவருடைய நிதி சேர்ப்பின் பாணியே தனி. ஆமாம் வரவு முழுவதும் நிவாரண தேவைகளுக்கு. அதை சேர்க்கும் செலவு முழுதும் தன்னுடையது. இது நிச்சயம் பாராட்டுக்கூறியதே அன்பார்ந்த புலம் பெயர் உறவுகளே இவரது செயல்திட்டத்தை இவரது இனணயத்தளம் ஊடாகபார்வையிட்டு இவரோடுகைகோர்த்து இலவச இருதய சத்திர சிகிச்சைக்கு நிதி உதவி வழங்குங்கள் www.heartsforhuamanity.ca இவரை தொடர்பு கொள்ளவிரும்புவோர் +14162007652 இந்த இலக்கத்திற்க்கு தொடர்பு கொள்ளவும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா