Untitled Document
February 25, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
உறவுக்காரரின் திருமணத்துக்கு ரகசியமாக வந்த நடிகை!
[Thursday 2017-12-07 18:00]

ஐஸ்வர்யாராயின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மங்களூர். படங்களில் நடிக்க பாலிவுட் சென்றவர் அங்கேயே செட்டிலானதுடன் அபிஷேக் பச்சனை மணந்து மும்பை மருமகள் ஆனார். ஆனாலும் சொந்த ஊரை அவர் மறப்பதில்லை. உறவினர்களுடன் தொடர்பில் இருக்கிறார். சமீபத்தில் அவரது உறவினர் இல்ல திருமணம் மங்களூரில் நடந்தது. அதில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் வந்தார். கன்வென்ஷன் அரங்கில் நடந்த விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யாராய் ரசிகர்கள் தொந்தரவு எதுவும் இல்லாததால் டென்ஷன் இல்லாமல் உறவினர்களுடன் பேசியபடி அமர்ந்திருந்தார்.

அவருடனும், மகள் ஆராத்யாவுடனும் செல்பி எடுக்க கேட்டபோது புன்னகையுடன் போஸ் அளித்தார். பின்னர் மும்பை புறப்பட்டு சென்றார். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஐஸ்வர்யாவையும், ஆராத்யாவையும் புகைப்படக்காரர்கள் சூழ்ந்து கொண்டு படம் எடுத்தனர். கடந்த மாதம் நடந்த ஒரு விழாவில் புகைப்படக்காரர்கள் தள்ளுமுள்ளு நடத்தி போட்டோ எடுத்தபோது அதைக் கண்டு ஐஸ்வர்யாராயும் ஆராத்யாவும் பயந்தனர்.

அப்போது குழந்தையை கையோடு அணைத்துக்கொண்டு நடுங்கியபடி கண்ணீர் மல்க பேசிய ஐஸ்வர்யாராய், ‘இதுபோன்று செய்யாதீர்கள், தொழிலுக்கே உரிய கண்ணியத்துடன் நடந்துகொள்ளுங்கள்’ என்றார். அந்த சம்பவத்துக்கு பிறகு தற்போது புகைப்படம் எடுத்தவர்களிடம் பரபரப்பு எதுவும் தென்படாததால் அவர்களுக்கு ஐஸ்வர்யாவும் ஆராத்யாவும் சிரித்தபடி போஸ் அளித்தனர். வழக்கமாக ஐஸ்வர்யா இடுப்பில் தொற்றிக்கொண்டோ அல்லது அவருக்கு பின்னால் ஒளிந்தபடியோ வரும் ஆராத்யா இம்முறை ஐஸ்வர்யாவுக்கு வழிகாட்டுவதுபோல் அவரது கையை பிடித்தபடியும் மற்றொரு கையில் ரோஜாவுடனும் சிரித்தபடி முன்னே நடந்து வந்தார்.

  
  
   Bookmark and Share Seithy.com



பெரியம்மாவான காஜல் அகர்வால்: - திருமணம் எப்போ எனக் கேட்கும் ரசிகர்கள்?
[Saturday 2018-02-24 13:00]

நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால். விமல் ஹீரோவாக நடித்த இஷ்டம் என்ற படத்தில் இவர் நாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு படவாய்ப்புகள் இல்லாததால் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நிஷா அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை: - ரகுல் பிரீத் சிங்
[Saturday 2018-02-24 13:00]

சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.



வைர வியாபாரியுடனான தொடர்பை முறித்துக் கொண்ட பிரியங்கா சோப்ரா!
[Saturday 2018-02-24 13:00]

வைர வியாபாரி நிரவ்மோடி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவருடனான தொடர்பை பிரியங்கா சோப்ரா முறித்துக் கொண்டுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.11,500 கோடி மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இப்போது வருமான வரித்துறையினரும் இதில் தலையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நிரவ் மோடி தற்போது இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.



அனுஷ்கா படத்துக்கு வழக்கு!
[Saturday 2018-02-24 13:00]

சமீபகாலமாக அனுஷ்கா நடித்த பல படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போதும் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய படத்திற்கும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அனுஷ்கா மற்றும் நாகார்ஜுனா நடிப்பில் இன்று வெளிவர உள்ள 'அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன்' திரைப்படத்திற்கு தடை கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



எனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி: - பிரியா வாரியர்
[Friday 2018-02-23 18:00]

‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் கண்ணடித்தும், புருவத்தை உயர்த்தியும் பாடல் காட்சிக்கு நடித்திருந்தார் பிரியா வாரியர். இணைய தளத்தில் இந்த காட்சி பிரபலம் ஆனது. அதில் மகிழ்ச்சியில் திளைத்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் பிரியா. அந்த மகிழ்ச்சியை சிதறடிக்கும் வகையில் பிரியா மீது ஐதராபாத், மும்பை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படியான பாடல் காட்சியில் நடித்திருக்கும் பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டது.



கதாநாயகிக்கு கைகுலுக்கி தாத்தா நடிகர் சேட்டை!
[Friday 2018-02-23 18:00]

கோலிவுட்டில் ஹீரோக்கள் சிலர் வயசானாலும் இளமை முறுக்குடன் உடற்கட்டை பராமரிக்கின்றனர். அதேசமயம் தலையும் தாடியும் நரைத்த மூத்த நடிகர்கள் தாத்தா வேடங்களில் நடிக்கின்றனர். அரசியல், காதல், ஆக்‌ஷன், காமெடி அம்சங்களுடன் உருவாகிறது ‘பதுங்கி பாயணும் தல’. இதன் ஆடியோ வெளியிடப்பட்டது. ஹீரோ மைக்கேல், ஹீரோயின் நைனிகா, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் 70 வயது ராகுல் தாத்தாவுடன் நடிக்கிறார்.



உதட்டை கவ்வி முத்தமிடும் பியா!
[Friday 2018-02-23 18:00]

கோ, கோவா, சட்டம் ஒரு இருட்டறை, கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பியா. நகரத்து பெண்ணாக பல படங்களில் நடித்திருந்தபோதும் பட வாய்ப்பு மிகக்குறைவாகவே வந்துகொண்டிருந்தது. நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று ஆரம்ப கட்டத்தில் நிபந்தனை விதித்துக்கொண்டிருந்தார். இதனால் சகஹீரோயின்களுடன் போட்டிபோட முடியாமல் திணறினார். இரண்டு அல்லது மூன்று நாயகிகளில் ஒருவராகவே நடிக்க வாய்ப்பு வந்தது. கடந்த 2 ஆண்டாக தமிழில் ஒரு படத்தில் கூட அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் சோர்ந்திருந்தவர் விளம்பர படங்களில் வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.



பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா!
[Friday 2018-02-23 18:00]

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, மகாநடி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் படமாக உருவாகி வருகிறது. இதற்காக சாவித்திரியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், அவருடன் இணைந்து நடித்தவர்கள் ஆகியோரிடம் தகவல்கள் திரட்டி நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பத்திரிகை நிருபராக சமந்தா நடிக்கிறார். திரையில் சாவித்திரியின் வாழ்க்கையை அவர் விவரித்துச் சொல்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.



தொடர்ந்து நடிப்பேன்: - பாவனா
[Friday 2018-02-23 18:00]

கன்னடப் பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலனுமான நவீனை திருமணம் செய்துகொண்ட பாவனா, கன்னடத்தில் சிவராஜ் குமாருடன் இணைந்து நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாகிறது. இதையடுத்து தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ள அவர் கூறியதாவது: இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிப்பேன். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. அதுவரை என்னால் காத்திருக்க முடியாது.



கெட்டவார்த்தையில் கேலி செய்தால் நேரடி தாக்குதல்: - நடிகைகள் துணிச்சல் முடிவு
[Wednesday 2018-02-21 17:00]

இணைய தளங்களில் நடிகைகளை கெட்ட வார்த்தையில் விமர்சித்தும், மிரட்டியும், அவர்களை மார்ஃபிங் செய்து ஆபாச படம் வெளியிட்டும் இழிவுபடுத்துகின்றனர். இதனால் பாதிக்கப்படும் நடிகைகள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை கோருகின்றனர். அதன்பேரில் ஒருசிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. ஒரு சில நடிகைகள் பதிலடியாக இணைய தளத்திலேயே அந்த நபர் எப்படி திட்டினாரோ அதேபாணியில் திட்டி தீர்க்கின்றனர்.



தன்ஷிகா நடித்த குறும்படத்திற்கு எட்டு விருதுகள்!
[Wednesday 2018-02-21 17:00]

கபாலி படத்தின் மூலம் பிரபலமான தன்ஷிகா நடித்த சினம் என்ற குறும்படம் கொல்கத்தா திரைப்பட விழாவில் 8 பிரிவுகளில் விருது பெற்றுள்ளது. ஆனந்த மூர்த்தி இயக்கதியுள்ள சினம் குறும்படம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலாச்சார ரீதியில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக இப்படத்தை சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து மேற்குவங்கத்துக்கு பிழைக்க சென்று அங்கு பாலியல் தொழிலாளியாக மாறிய ஒரு பெண்ணின் கதை.



இளைய தளபதியின் நடன அசைவுகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளது: - மேகா ஆகாஷ்
[Wednesday 2018-02-21 17:00]

வளர்ந்து வரும் இளம் நடிகை மேகா ஆகாஷ் தான் ஒரு தீவிர விஜய் ரசிகை என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் நடன அசைவுகள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகர் தனுஷ் ஜோடியாகவும், ஜெயராம் மகன் காளிதாஸ், மற்றும் அதர்வாவுடனும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மேகா ஆகாஷ்.



நெருக்கமாக நடிக்க ஹீரோவுக்கு தைரியம் கொடுத்த ரம்யா நம்பீஸன்!
[Wednesday 2018-02-21 17:00]

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடிக்கும் ரம்யா நம்பீஸன் கதைக்கு தேவைப்படும்போது நெருக்கமான காட்சிகள், முத்தக்காட்சிகளில் நடிக்கிறார். அவர் நடிக்கும் புதிய படம் ‘நட்புன்னா என்னென்னு தெரியுமா’. இதில் ரம்யாவுடன் காதல் காட்சியில் நெருக்கமாக நடிக்க பயந்தார் புதுமுக ஹீரோ கவின். இதுபற்றி பட இயக்குனர் சிவா அரவிந்தன் கூறியது: மூன்று நண்பர்களைபற்றிய கதையாக உருவாகிறது. கவின், ராஜு, அருண்ராஜா காமராஜ் நண்பர்களாக நடிக்கின்றனர். ரம்யா நம்பீஸன் ஹீரோயின்.



தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு நியாயமான முறையில் பதில் அளிக்கும் இஷா!
[Wednesday 2018-02-21 17:00]

ஃபேஸ்புக், டுவிட்டர். வாட்ஸ் அப் என இணைய தள பக்கங்களில் பல சினிமா நட்சத்திரங்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஹீரோயின்கள் சிலர், சமுதாயம், பெண்கள் அவமதிப்பு குறித்து துணிச்சலாக கருத்து சொல்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் சில விஷமிகள் குறிப்பிட்ட நடிகையை திட்டியும், இழிவாக விமர்சித்தும் கருத்து வெளியிடுகின்றனர். யார் இவன், துடக் துடக் துடியா படங்களில் நடித்தவர் இஷா குப்தா. அவரும் விஷமிகளின் விமர்சனத்துக்கு பலமுறை ஆளாகி வருகிறார். இதை தடுப்பது எப்படி என்பது தெரியாமல் தவித்து வந்தார். தற்போது அதற்கான வழியை காண முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.



ஜெமினி குடும்பத்துடன் ஆலோசனையா? கீர்த்தி சுரேஷ் விளக்கம்
[Tuesday 2018-02-20 17:00]

பழம்பெரும் நடிகையும், ஜெமினி கணேசன் மனைவியுமான சாவித்ரி வாழ்க்கை சரித்திர படம் நடிகையர் திலகம் பெயரில் உருவாகிறது. சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நிஜவாழ்க்கை கதையான இதில் சாவித்ரிபற்றி ஜெமினி கணேசன் குடும்பத்தினருடன் பேசினீர்களா என்றதற்கு பதில் அளித்தார் கீர்த்தி. அவர் கூறியது: சாவித்ரி எவ்வளவு பெரிய நடிகை, ரசிகர்களிடம் எவ்வளவு புகழ் சம்பாதித்தவர் என்பது எனக்கு தெரியும். அவரது வாழ்க்கை சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்றதும் எனக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா