Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடா செந்தில் குமரனின் அறக்கட்டளை ஊடாக அக்கறைப்பற்றை சேர்ந்த சசிகலாவிற்கு வெற்றிகரமாக இருதய சத்திர சிகிச்சை நிறைவு! Top News
[Tuesday 2017-10-24 19:00]

25 வயதான சசிகலா தனது 9 வயது முதலே இதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார். இவரது தந்தையான சிவசுப்ரமணியம் தனது மகளின் உயிரை காப்பதற்கு அடிக்கடி அரசாங்கமருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று வைத்தியம் பார்த்தபடியே இருந்துள்ளார். ஆனால் சத்திரசிகிச்சை செய்த இந்த நோயினில் இருந்து முழுமையாக வெளிவர முடியாத நிலைமை ஏனென்றால் அரசாங்க மருத்துவமனையில் இவருக்கு முன் இவரை விட மோசமான நிலைமையில் பலர் நாட்கள் வருடங்களாக உருண்டோடி சசிகலாவுக்கு திருமணமும் ஆகி குழந்தையும் பிறக்கிறது.

சென்ற மாதம் இவரின் நிலைமை சற்று மோசமாக இவரின் அயலவரான க்ரிஸ் கனடா நாட்டில் இருக்கும் செந்தில் குமாரனை பற்றி கேள்விப்பட்டு அவரை தொடர்பு கொண்டு சசிகலாவின் நிலைமையை விளக்குகிறார். ஏற்கனவே இதே போல் 24 சத்திர சிகிச்சை செலவினை தனது நிவாரணம் அறக்கட்டளை ஊடாக பொறுப்பெடுத்து உயிர்களைக் காப்பாற்றிய செந்தில்குமரன் சசிகலாவின் தந்தையாருடன் தொடர்பு கொண்டு முழு மருத்துவ அறிக்கைகளையும் அவர்களது நிதி நிலைமைகளையும் அறிந்து கொள்கிறார்.

இந்த நிலையில் சசிகலாவிற்கு இதயம் வீங்கி பெரிதாகி கொண்டே போகிறது. தனியார் மருத்துவ மனையில் சத்திர சிகிச்சை செய்தாலன்றி சசிகலா உயிர் வாழ்வது கடினம் என்பதனை அறிந்த பின் lanka மருத்துவமனையை அணுகி வழமையாக அவர்கள் சத்திர சிகிச்சைக்கு வசூலிக்கும் தொகையை விட குறைவான தொகையில் செய்து கொடுக்கும்படி கோரிக்கை செந்தில் குமரனால் வைக்கப்படுகின்றது. மொத்தமாக ஒன்பது லட்சம் தேவையென்ற நிலையில் தந்தையாரான சிவசுப்பிரமணியம் தனது காணி ஒன்றை விற்று இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக இரண்டரை லட்சம் கிடைக்கும் என்ற நிலையில், மீதித்தொகையான நாலரை லட்சத்தை செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு பொறுப்பெடுத்து சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக நிகழ்த்தியும் உள்ளது.

சசிகலாவின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கு அவரின் குடும்பத்தார் தங்களது மனம் நிறைந்த நன்றியினை நெகிழ்ச்சியுடன் செந்தில் குமரனிற்கும் அவரோடு துணை நிற்பவர்களுக்கும் நன்கொடையினை வழங்கியவர்களுக்கும் தெரிவித்து கொள்கின்றனர். செந்தில் குமரன் ஒரு நல்ல மனிதாபி மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த பாடகரும் கூட தாயக உறவுகளின் விடிவிற்காய் அயராது பல கலை நிகழ்வுகளை நடாத்தி வசூலித்த கணக்கு விபரங்களை இணையத்தில் (www.heartsforhumanity.ca) வெளியிட்டு சரியான நிதி சேகரிப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் இன்றைய சுயநலம் சூழ்நத உலகில் தன் பொன்னான நேரத்தை பிறர் வாழ கொடுக்கும் செந்தில் குமரனை கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அபிவிருத்தி அமையம் வாழ்த்துவதில் பெருமையடைகின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா