Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கனடிய தமிழர் தேசிய அவையின் அனுசரணையில் எமது சமூகத்தின் ஏற்பாட்டில் பாட்டாளிபுரத்தில் மருத்துவ முகாம்! Top News
[Thursday 2017-09-28 18:00]

26-9-2017 அன்று எமதுசமூகத்தின 10வது வைத்திய முகாம் திருமலைமாவட்டத்தின் பாட்டாளிபுரம் கிராமத்தை சூழவுள்ள 5 கிராமங்களை உள்ளடக்கி 750ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டது ஒருவரலாற்று நிகழ்வாகும். திரு மகேந்திரன் மாணிக்கம் அவர்கள் கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனத் திட்டத்தினூடாக எமது சமூகத்தின் ஏற்பாட்டில் மூதூர் பாட்டாளிபுரத்தில் இம் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவ முகாமிற்கு திருமலை மாவட்ட வைத்தியசாலைகளின் பணிப்பாளர் Dr Ganagabagu VP தலமையில் 15 வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு மாவட்ட வைதிய நிபுணர்கள் 17 பேரும் பல தாதிய உத்தியோகத்தர்களுடன் பல்துறைசார் நிபுணர்களும் 30ற்கு மேற்பட்ட தொண்டர்களும் கலந்து இந்த முகாமினை வெற்றியாக நடத்தியுள்ளனர். 365 நோயாளிகள் பார்வையிடப்பட்டனர்.

கிழக்கு மக்களின் தற்போதய அவலநிலையினை முன்னேற்றகரமா மாற்றும் முயற்சியில் எமதுசமூகத்தின் (OUR SOCIETY) மட்டக்களப்பு திருமலை மக்கள் ஒன்றாக இணைந்து நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மருத்துமுகாமிற்காக உழைத்த தொண்டர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் அதரவளித்த ஊரவர்களுக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையின் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளும் பாராட்டுக்களும். ஐந்து பழங்குடி கிராமங்களை சேர்ந்த மக்களுக்கான சேவையை வழங்கியமைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.

சிறுசிறுகுழுக்களாக விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் காணி, சமூக, பொருளாதார முன்னேற்றம், சுயதொழில்வாய்ப்பு, அரச உதவிகள், தேர்தல் அதற்கான வாக்களிப்பின் அவசியம் போன்றன பற்றிய கலந்துரையாடல்கள் எமது சமூகத்தினால் அதற்கரிய நிபுணத்துவம் வாய்ந்தவர்களால் நடத்தப்பட்டது சிறப்பாக அமைந்திருந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா